அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வ…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
திசைகாட்டிகளின் முள்கள் முகம்மது தம்பி மரைக்கார் முஹம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய இராட்சியத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு, வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி, நிர்வாகம் பற்றி, உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று, இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்” என்று, மகாத்மா காந்தி ஆசைப்பட்டார். ஒருநாள், ஆட்சியாளர் உமர், மேடையில் ஏறிநின்று, “நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக்கூறி, உரையாற்ற ஆரம்பித்தார்.…
-
- 0 replies
- 723 views
-
-
பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கள் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் 5.3 சதவீதமும் மாகாண சபையில் 4 சதவீதமும் உள்ளுராட்சி மன்றத்தில் 23.8 சதவீதமாகவுமே (இது பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத கோட்டா வழங்கப்பட்ட பின்னர்) காணப்படுகின்றது. சட்டவாக்கத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். மீயுயர் அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டில் பெண்கள் அதிகளவில் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். மக்கள் பிர…
-
- 0 replies
- 729 views
-
-
திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்... புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 24 தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களின் ஊடாக, பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவு இதுவரை பெறப்பட்டிருக்கிறது. மரணித்தவர்களை நினைவு கூருதலும் அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒ…
-
- 0 replies
- 460 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஒக்டோபர் 01 தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எழுச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சீனாவின் விடாப்பிடி “இலங்கை ஒரு சிறிய நாடு அல்ல, மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடு, அதனால் தான் இங்கு கூடியிருக்கிறோம்” இவ்வாறு கூறியிருந்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லிங். கடந்த 7ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில், கைத்தொழில் வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே சீனத் தூதுவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், ஹம்பாந்தோட்டையை உள்ளடக்கிய பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனா 99 வருட குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவுள்ள விவகாரம், இலங்கை அரசியலில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…
-
- 1 reply
- 979 views
-
-
”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன? தி. திபாகரன் எங்கெல்லாம் அடக்குமுறை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பெடுக்கும் என்பதை மனிதகுல வரலாறு பதிவாக்குகிறது. இன்று தமிழ் மண்ணில் அத்தகையதோர் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டம் வட கிழக்கு சிவில் அமைப்புக்களின் தலைமையில் ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற கோஷத்துடன் வெடித்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொங்கி பிரவாகித்து ஓடத் தொடங்கிவிட்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் மறுக்கப்படும் போதெல்லாம் தமிழ் தலைவர்களின் அழைப்பிற்கிணங்க எல்…
-
- 2 replies
- 633 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன் 96 Views தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா? கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை. உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்…
-
- 1 reply
- 326 views
-
-
கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…
-
- 0 replies
- 685 views
-
-
-
இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி! இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், ‘சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு – உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும். கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா. உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் சம்பவம் :வெட்கமும் துக்கமும் - மொஹமட் பாதுஷா பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலும் ஒரு எதி;hபாராத தர்மசங்கடமும், நெருக்கடி நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத நெருக்கடிகள் சற்று தளர்வடையத் தொடங்கும் தருணங்களில், எதோ ஒரு திசையில் இருந்து இவ்வாறான ஒரு இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்படுவது அண்மைக்காலங்களில் தொடர் நிகழ்வாகியிருக்கின்றது. 'இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டுள்ளார்' என்ற செய்திக்கும், 'இலங்கையைச் சேர…
-
- 1 reply
- 751 views
-
-
அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தி அதில், இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு வழங்கப்பட்டு விட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காட்ட இந்த அரசாங்கம் எத்தனிக்கின்றது. அதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை இல்லாமல் செய்வதுடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினையை தீர்த்து விட்டதாக கூறி சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாகவுள்ள ஆதரவு நிலையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகிக்றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கே…
-
- 0 replies
- 448 views
-
-
கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம். சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச…
-
- 3 replies
- 978 views
-
-
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. தங்களது நாளாந்த வேலைகளை …
-
- 0 replies
- 355 views
-
-
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, …
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
அரசியல் சுனாமி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமைகள் சீரடைந்திருக்கின்றனவா என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கப்படும் என்ற அறிவித்தல்களும் வெளிவந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஜனாதிப…
-
- 0 replies
- 359 views
-
-
சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும் மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன. எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன. அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின. “சர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது. தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை. இத…
-
- 0 replies
- 4.3k views
-
-
வன்முறை அரசியலும் மிதவாதிகளும் - யதீந்திரா ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள் சாத்வீக (வன்முறை தழுவாத) மற்றும் வன்முறை (ஆயுதம் தாங்கிய) ஆகிய இருவேறுபட்ட வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டிருப்பதே வரலாறு. அந்த வகையில் தமிழர் உரிமைசார் அரசியல் போக்கிலும் மேற்படி இருவேறுபட்ட வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியிலிருந்தே இளைஞர்கள் வன்முறையை நோக்கி பயணித்ததாக ஒரு கருத்துண்டு. ஆனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். அன்றிருந்த மிதவாத தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தை உச்சளவில் முன்னெடுக்கும் ஆற்றலற்றவர்களாக இருந்த நிலையிலேயே, மிதவாதிகள் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் வன்முற…
-
- 0 replies
- 555 views
-
-
ட்ரம்ப் - கிம்மின் சிங்கப்பூர் உச்சிமாநாடு உலக அமைதிக்கான சமிஞ்ஞையாகுமா? கடந்த பல வருடங்களாக பூலோகத்தின் உக்கிரமான நெருக்கடிகளில் குறிப்பாக அரசியல் நெருக்கடிகளுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக வடகொரியாவைக் கூறலாம். டொனால்ட் ட்ரம்புக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோர்ஜ்புஷ் வடகொரியா,ஈரான் ஆகியவற்றை ரௌடி நாடுகள் என குறிப்பிட்டுள்ளார். வடகொரியா அணுஆயுத உற்பத்தியில் இரகசியமாக ஈடுபடுவதும் சர்வதேச நியமங்களுக்கு உட்படுத்திக்கொள்ள மறுப்பதும் அமெரிக்க ஜனாதிபதிகட்கும் ஐ.நா. சபைக்கும் பெரும் தலையிடியை கொடுத்த விடயம் ஆகும். ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்றபின் அவரின் உரத்துப்பேசும் இயற்கை…
-
- 0 replies
- 502 views
-
-
கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வெளித்தள்ளுமா? கடந்த 24ம் திகதி காலைக்கதிர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனைப் பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்…
-
- 0 replies
- 435 views
-
-
மறுக்கப்படும் உரிமைகள்...! பி.மாணிக்கவாசகம் மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன. உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
“ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல் - சமகளம் லோ. விஜயநாதன் தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாய கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றுக்கூடாக தமது தேசவிடுதலை போராட்டத்தை நகர்த்த முற்படுகின்றார்களோ அன்றுதான் அழிவு நிலையில் இருக்கும் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும். இல்லாதுவிட்டால் ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடிகளாக மாறி இப்போதுவரை இலக்கற்ற பாதையில் பயணிப்பதுபோன்றே தொடர்ந்தும் பயணிக்கவேண்டி வரும். இதற்கு சிறந்த உதாரணம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் எனும் நபரின் பிடிக்குள் சிக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாகும். தமிழ் …
-
- 1 reply
- 671 views
-
-
கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு Veeragathy Thanabalasingham on July 23, 2023 Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தல…
-
- 0 replies
- 256 views
-