அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…
-
- 0 replies
- 428 views
-
-
கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம் மியான்மாரின் பாதையில் இலங்கை அரசியல் அலசல்: சிவதாசன் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூர…
-
- 0 replies
- 394 views
-
-
கடாபி-இராச்சியத்தில் இருந்து பூச்சியம், 24Share கடைசியில் கேணல் கடாபியை சுட்டுக் கொன்று விட்டார்கள்,இரத்தம் தோய்ந்த நிலையில் மேற்சட்டை கூட இல்லாது ஒரு தெரு நாயை இழுத்து வருவது போல ஒரு நாட்டின் 42 வருட ஆட்சியாளரை இழுத்துவரும் காட்சியை முதல் தடவையாக அல் ஜெசீரா தொலைக் காட்சி ஒளி பரப்பிய வேளையில் சரியாக நான் எனது நண்பனின் வீட்டில் இருந்தேன்,தொலைக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனின் தந்தையால் அக் காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை ஏன் நம்பக் கூட முடியவில்லை,அவரைப் பொறுத்த வரை கேணல் கடாபி ஒரு ஹீரோ,ஒரு ஆதர்சனம் அவரிற்கு மாத்திரமல்ல சுதந்திரம் வேண்டி நின்ற இளமை துடிப்புள்ள,சுய மரியாத…
-
- 4 replies
- 2.5k views
-
-
நான்கு தசாப்த கால லிபியாவின் சர்வதிகார ஆட்சி முறை முடிவுக்கு வந்திருப்பது அந்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்பது ஒரு புறமிருக்க, சர்வதிகாரி கடாபியை கைது செய்த பின்பு சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது. காணொளி ஆதாரத்துடன் வெளி வந்திருக்கும் இந்த செயலுக்கு மேற்க்குலகுகளின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அநேகமாக இது தொடர்பில் மென் போக்கை தான் கடை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் தம் முகத்தில் தாமே சேறடிக்க யார் தான் விரும்புவார்கள். அன்று அடால்ப் கிட்லர் தொடக்கம் இன்று மொகமர் கடாபி வரை நாட்டு ம…
-
- 1 reply
- 1k views
-
-
கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ? -விரான்ஸ்கி முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் …
-
- 1 reply
- 818 views
-
-
கடுமையாக அழுத்தங்களை பிரயோகிக்கப்போகும் ஜெனிவா இலங்கையானது நம்ப கரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயா திக்கத்தை நோக்கிப் பயணிக்கும் செய்ட் அல் ஹுசேன் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டாவிடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லலாம். இவ்வாறு பல நிலைமைகள் ஏற்படலாம் பென் எமர்ஷன் இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர…
-
- 0 replies
- 575 views
-
-
கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…
-
- 0 replies
- 685 views
-
-
மீண்டும் சந்திரிகா அல்லது மைத்திரி தலைவராகலாம் என்கிறார்களே?
-
- 4 replies
- 803 views
- 1 follower
-
-
கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்ற…
-
- 0 replies
- 722 views
-
-
கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை -அதிரன் அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட நினைக்க முடியாத அளவுக்கு, அரசியலின் ஆதிக்கம் வியாபித்திருக்கிறது. திருக்குறளில் பல தலைப்புகளில் அரசியல் விவரிக்கப்பட்டுள்ளது. பொருட்பாலில் அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் 450 குறள்கள் கூறுவதும் அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது. சாணக்கியர், தொல்காப்ப…
-
- 0 replies
- 519 views
-
-
-
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன். திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ? இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்க…
-
-
- 8 replies
- 424 views
- 1 follower
-
-
கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகும் மே தினம் மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை நிரூபிக்கப்போகும் போராக நாளை மறுதினம் கொண்டாடப்படும் மேதினக் கொண்டாட்டம் இருக்கப்போகிறது. கட்சிகள் ஒவ்வொன்றும் தமது மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தின் கொண்டாட்டமாக இம்முறை மேதினக் கொண்டாட்டங்கள் அமையப் போ கின்றன என்பதற்கு அடையாளமாகவே இம்மேதினக் கொண்டாட்டங்கள் களை கட்டி நிற்கின்றன. மேல் மாகாணத்தில் தேசியக் கட்சிகளும் மலையகத்தில் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு எதிர்நிலையில் நிற்கும் கட்சிகளும் அமைப்புக்…
-
- 0 replies
- 521 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
அடுத்த மாதம் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், அதன் போக்கு என்னவோ, கட்சிகளை உடைப்பதற்கான, போராகவே நடந்து கொண்டிருக்கிறது. வரப்போகும் தேர்தல், ஆளும்கட்சிக்கும் எதிரணிக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டியாக அமைந்துள்ள சூழலில், கட்சிகளை உடைத்தும், ஆட்களை இழுத்தும் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற வெறி இருதரப்பினரிடமும் காணப்படுகிறது. இதன் விளைவாக, இப்போது வாக்காளர்களிடம் வாக்குக் கோருவதில் ஆர்வம் காட்டுவதை விட, மறுதரப்பை உடைப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. யார் எப்போது எந்தப் பக்கம் இருப்பார்கள் என்றே அனுமானிக்க முடியாதளவுக்கு, இலங்கை அரசியலில் இப்போது கட்சித் தாவல்கள் நடந்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
கட்சிகளை ஐக்கியப்படுத்தும் ஆகப் பிந்திய ஒரு முயற்சி – நிலாந்தன். நேற்று சனிக்கிழமை (17.11.23) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாண் டிவி குழுமத்தின் அனுசரணையோடு ஒரு சிவில் அமைப்பு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எல்லாக் கட்சிப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அந்த கருத்தரங்கின் நோக்கம். கட்சிகளோடு சமயப் பெரியார்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மொத்தம் எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் வரவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்களும் வரவில்லை. ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர…
-
- 0 replies
- 375 views
-
-
கட்சிகள் பிணக்குறும் இன அழிப்புக்கான விசாரணைக் கோரிக்கைகள் இரண்டும் முரண்பாடானவையா ஒத்திசைவானவையா? 23 Views எதிர்வரும் மனித உரிமைச் சபையின் அமர்வை நோக்கித் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் எவ்வாறு முன்வைக்கப்படவேண்டும் என்ற விடயம் குறித்துத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் உந்துதலில் தேர்தல் அரசியலில் தமிழ்த்தேசிய நிலைப்பாடு கொண்டவையாகத் தம்மை வெளிப்படுத்தும் மூன்று அணிகளும் அவற்றில் பங்குபெறும் கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கைகளைத் தயாரிப்பதற்கான பேச்சுக்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. முதலாவதாக, இன அழிப்புக்கான விசாரணை என்பது தமிழர் தரப்பால் கோரப்படவேண்டும் அல்லது அதுவே அனைத்துக்குற்றங்களுக்குள்ளும் முக்கியத்துவப…
-
- 0 replies
- 615 views
-
-
கட்சிப் பெயர்களும் இனவாதமும் -என்.கே. அஷோக்பரன் இனம், மதம் ஆகியவற்றின் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அரசியல் கட்சிகளை, இனிப் பதிவுசெய்ய மாட்டோம் என்று, இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் அறிவித்திருந்ததாகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இனவாதம் அல்லது மதவாதம் அல்லது இன-மைய அரசியலை மாற்றியமைக்க, கட்சியின் பெயரில் குறித்த இன, அல்லது மதப் பெயரை இல்லாதொழிப்பதுதான் முதற்படி என்ற சிந்தனை ஒன்றில், அறியாமையின் விளைவு; அல்லது, அது வேறுகாரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசி…
-
- 0 replies
- 517 views
-
-
கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…
-
- 0 replies
- 248 views
-
-
கட்ட முடியாத பாலமும் கட்டப்படும் விகாரைகளும் – நிலாந்தன். “இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருக்கிறது, இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது” என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடெல்லி அனந்தா மையத்தில், “இந்தியா-இலங்கை உறவுகள் : இணைப்பை ஊக்குவித்தல், செழிப்பை ஊக்குவித்தல்”என்ற தலைப்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கை–இந்திய நில இணைப்பு மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமு் இலங்கை பொருளாதார ஸ்திரம…
-
- 0 replies
- 331 views
-
-
கட்டப் பஞ்சாயத்து நடத்திய சர்வதேச ரவுடி டிரம்ப்! சாவித்திரி கண்ணன் வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா? ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை …
-
- 0 replies
- 269 views
-
-
கட்டப்பட்ட ஆடுகள் தீபச்செல்வன் ‘திவயின’பௌத்த சிங்களக் கடும் போக்குப் பத்திரிகை. சிங்களப் பேரினவாதிகளின் உளவியலையே அந்தப் பத்திரிகை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் மீதும் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் எப்பொழுதும் அதற்குக் கடும் பயம். விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அது பல வகையான பயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். சிங்கள இனவாத ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதும் சிங்கள மக்களிடத்தில் சிங்கள இனவாதத்தை ஊட்டுவதும் அந்தப் பத்திரிகையின் முதன்மையான பணி. ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடயங்களை எல்லாம் பயங்கரவாதம் என்கிற பெயரில் மாற்றி சித்தரிக்கும் நடவடிக்கையை அது எப்பொழுதும் செய்வதுண்டு. அந்தப் பத்திரிகையில் பாதுகாப்புப் பத்தி என்…
-
- 0 replies
- 632 views
-
-
ஈழத்தமிழர்கள் இப்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியம் என்பதை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்து மீள்கட்டியெழுப்ப வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது 1947 ஆம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க நாம் கட்டமைக்கப்பட்ட தேசியவாதம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் தமிழ் மக்களின் விடுதலை யார் கையில் என்பது தொடர்பான அரசியல் மற்றும் அறிவியல் விளக்கங்களை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளி…
-
- 0 replies
- 500 views
-
-
கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) கட்டலோனியா மாநில அரசாங்கம் 27.10.2017 இல் தனிநாடாக சுதந்திரமான அரசாக பிரகடனம் செய்துள்ளமை உலகம் பூராகவும் இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தற்போதைய சூழ்நிலையில் பிரதான பேசுபொருளாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ஐப்பசி திங்கள் முதலாம் திகதி கட்டலோனியா மாநில அரசாங்கம் அம்மாநில மக்களிடையே தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்தியது. அவ்வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு சட்டவிரோதமானது எனப் பி…
-
- 1 reply
- 531 views
-
-
கட்டலோனியா: நட்டாற்றில் சுதந்திரம் உலக அரசியல் அரங்கில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பிலான நியாயங்கள், மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. கெடுபிடிப்போருக்குப் பிந்தைய, கடந்த மூன்று தசாப்தங்களில், நாடுகள் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகப் பிரிக்கப்பட்ட போது, அவற்றுக்குப் பல்வேறு நியாயங்கள் கூறப்பட்டன. இன்று, மேற்குலகின் புதிய மையமாக உருவெடுத்துள்ள ஐரோப்பாவில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பான வினாக்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பான விவாதங்களை, சட்டவரையறைக்குள் வைத்துக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். சட்டத்துக்கு வெளியேயான அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை நோக்கவோ, அது தொடர்…
-
- 0 replies
- 448 views
-