அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்! நீண்ட நாட்களாக பொதுப்பணி, மனித உரிமைகள் செயற்பாடு, பெண்ணியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர் அவர் பெண் அரசியல் பிரவேசம் பற்றி பல வருடங்களாக குரல் கொடுத்து வந்தவர். தனது கருத்தியல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற கனவோடு பயணித்த சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர். நளினி ரத்னராஜாவின் கனவு சாத்தியப்படும் தருணமும் கைகூடிவந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்பட்டியலில் பெயரை உள்வாங்குவதாக சில கதையாடல்கள் ஆரம்பமாகின. இந்த கதையாடல் சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவியது. அந்த பரவலோடு நளினிக்கு எதிரான போலிச்செய்திகளும் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. நளினி ஒரு நடத்தை…
-
- 2 replies
- 669 views
-
-
என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம். இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 …
-
- 15 replies
- 1.5k views
-
-
வரம் கொடுப்பாரா பூசாரி? Gavitha / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:14 தங்களை, தாங்களே ஆளத் தகுதி உள்ளவர்களின் கூட்டுணர்வையே, தேசியம் அல்லது ஜனநாயகம் என்று அழைக்கிறோம். தேசியம் என்பதற்குள், அனைத்து இன மக்களுக்குமான பொதுவான பிரதேசம், கலாசாரம், பொருளாதாரம், ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் அடையாளமாகும். இந்த இனம் என்று வரும்போது, பொதுவாக மலையகத்தை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தமிழர்கள், பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகவும் அவர்களைச் சார்ந்தவர்களுமாகவே இருக்கின…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு வைத்து தேர்தல் வியூகங்களை இத்தேர்தலில் முன்னெடுத்துவரும் ஆளும்கட்சி; சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கம் தான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தில் உள்ள தொல்லியல் விவகாரம். இதெற்கென்று யூலை மாதம் ஜனாதிபதி கோத்தபாய அமைத்த தனிச்சிங்களவர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்துக்கான செயலணி போதாதென்று இப்போது கடந்த யூலை 29 அன்று பிரதமர் ராஜபக்ச நாடளாவிய ரீதியில் இயங…
-
- 1 reply
- 2k views
-
-
விகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து- -அ.நிக்ஸன்- தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகக் கூட வந்துவிடக் கூடாதென்ற நோக்கிலேயே 1982இல் ஜே.ஆர் ஜயவர்தனா விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார் என்றொரு கதையுண்டு. ஆனாலும் ஆசன எண்ணிக்கையில் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முறையில் முதன் முதலாக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம். ஆனால் அன்று ஜே.ஆர் நினைத்தைவிட இன்று புதிய புதிய சிங்களக் கட்சிகள் உருவாகி அனைவருமே குறைந்தளவு ஆசனங்களையேனும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.. அத்துடன் முஸ்லிம் மக்கள் தங்களுக்கெனத் தனித்துவமாகக் கட்சிகளை உருவாக்கிப் பலவ…
-
- 0 replies
- 388 views
-
-
இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும் இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த த…
-
- 3 replies
- 568 views
- 1 follower
-
-
இலங்கை நடாளுமற்றத் தேர்தல் 2020 – தமிழர் எடுக்க வேண்டிய நிலை. Posted on August 3, 2020 by சகானா 18 0 காப்புச் விளங்கிய தமிழரது ஆயுதபலம் மௌனிக்கப்பட்டநிலையில் இன்று மிஞ்சியிருப்பதென்னவோ வாக்குச் சக்தி மட்டுமே. அப்படியென்றால் 30ஆண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் வாக்குச் சக்தியைப் பயன்படுத்தவில்லையா(?) என்ற வினா எழுவது தவிர்க்கமுடியாதது. அது யதார்த்தபூர்மானதும் கூட. வாக்குச் சக்தியூடாக தமிழர்தரப்பாக யார் நாடாளுமன்றம் சென்றாலும் தமிழர்கள் தொடர்பான செயல்நிலைக் கையாளுகைத் தரப்பாகவும், சிறீலங்கா அரசுக்கும் அனைத்துலக தரப்புக்கும் ஆணித்தரமாகத் தமிழர் நிலைப்பாட்டை உரைக்கும் தரப்பாகவும், 2009 முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிவரை தமிழீழ விட…
-
- 0 replies
- 661 views
-
-
‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 03 மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட, இறைமை மன்னனிலேயே தங்கியிருந்தது. மன்னனின் முடிந்த முடிவை மறுதலிக்கும் அதிகாரம், எங்கேனும் இருக்கவில்லை. இதனால் மன்னன் வல்லாட்சியாளனாக மாறும் போதும் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போதும் அதைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கவில்லை. ஆகவே, புரட்சியொன்றே அந்த எதேச்சாதிகாரத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே வழியாக இருந்தது. மக்கள் புரட்சி செய…
-
- 2 replies
- 714 views
-
-
இன்றைய பௌர்ணமியும் அரசியல் நிலவும் August 3, 2020 இன்று முதல் பிரசார பணிகள் நிறைவடைகின்றன. இன்று பௌர்ணமி நாளும் கூட. அது மாதாந்தம் வருவதுதான். ஆனால், தேர்தல் கால பௌர்ணமிகள் சிறப்பானவை. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசார பணிகள் முடிந்த மறுநாளும் பௌர்ணமியே. இன்றும் பௌர்ணமியே. இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இன்றைய நேற்றைய பிரச்சினை அல்ல. சுதந்திரத்துக்கு முன்னமே இந்திய வம்சாவளித் தமிழருக்கானதாக வெளிப்பட்டது. சுதந்திரமடைந்ததோடு அவர்களின் வாக்குரிமையைப் பறித்து அந்த வஞ்சம் தீர்க்கப்பட்டது. அடுத்த இலக்காக இலங்கைத் தமிழர்கள் இருந்தார்கள். தரப்படுத்தல் முறைமை மூலம் அவர்களது வளர்ச்சியை தடுக்க நினைத்து அதுவே பின்னாளில் பெரும்போருக்கே வழிவகுத்தது. வடக்…
-
- 0 replies
- 437 views
-
-
முதலாவது சிங்கள – தமிழ் இனக்கலவரமும், சிங்கள மகா சபையும் 1956: (9) – என்.சரவணன் August 3, 2020 பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். முதலாவது தமிழ் சிங்கள கலவரம் 1939ம் ஆண்டு மே 30 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் ‘முஸ்லீம் இளைஞர் சங்கம்’ (Y.M.M.A) கூட்டம் நடைபெற்ற பொது சிறப்பு விருந்தினராக ஜீ.ஜீ.பொன்னம்பலம் அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கவர்ச்சிகரமான உரையில் “சிங்களவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல் என்றும் விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அ…
-
- 0 replies
- 436 views
-
-
அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்கா…
-
- 0 replies
- 388 views
-
-
வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும் August 2, 2020 தாயகன் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் வாக்குகளையும் பாராளுமன்றக் கதிரைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இனவாத,மதவாத,கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஒருமாதமும் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ,எதிர்காலத் திட்டங்கள்,மக்கள்சேவைகள், தொடர்பில் நன்றாக சிந்தித்து தமது வாக்கை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கவே வாக்காளர்களாகிய மக்களுக்கு இந்த இருநாள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமது வாக்குகள்…
-
- 3 replies
- 589 views
-
-
எதிர்காலத்துக்கு வாக்களித்தல்? – நிலாந்தன் August 2, 2020 கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம். பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப் பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப் படுகொலைக்கு எதிரான நீதிதான் என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டத்தரணித் தனமாகப் பேசுகிறார். பரிகார நீதி மட்டுமல்ல நிலைமாறு கால நீதியும் தூய நீதி அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். அரசுகளின் நீதிகள்தான். அரசுகளால் தீர்மானிக்கப்படும் நீதிகள்தான். …
-
- 0 replies
- 549 views
-
-
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா? கே. சஞ்சயன் / 2020 ஓகஸ்ட் 01 வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகா…
-
- 2 replies
- 742 views
-
-
தமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் -கோ. ஹேமப்பிரகாஷ் LL.B. கொவிட்- 19க்குப் பின்னரான காலப்பகுதியில், உலகளாவிய அரசியல், பொருளாதரம் சார் வெளிகள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துப் பயணிப்பதை அவதானிக்கலாம். இருப்பினும், இலங்கையின் சமகாலப்போக்கு, கொவிட்-19க்கு மத்தியிலும் சூடுபிடித்தே காணப்படுகின்றது. இதற்கு வித்திடும் காரணிகளாக, நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதை ஒட்டிய நிகழ்வுகளையும் குறிப்பிடலாம். இம்முறை நடக்க இருக்கின்ற தேர்தலானது, முன்னர் ஒருபோதும் இல்லாத புதிய கொள்கைகள், எண்ணக்கரு சார் எடுத்தியம்பல்களுடனும் நகர்வதை அவதானிக்கலாம். அந்தவகையில், வாக்கு வங்கியின் ஏறுமுகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் இடம்சார் அதாவது, புவியிய…
-
- 0 replies
- 549 views
-
-
தேர்தல் களத்தில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் அரசியற் கொள்கையா? அனுதாப இலக்கா? August 1, 2020 எஸ்தி இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் – 1931ல் சட்டசபை உருவாக்கப்பட்டபோதே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் இப்போது பெண்களாக இருக்கின்றபோதிலும் இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு. முக்கியமாக கடந்த நாடாளுமன்றத்தில் 5.3 வீதமானவர்களே பெண்களாக இருந்தனர். சர்வதேச புள்ளிவிபரத்தின்படி இவ்விடயத்தில் 190 நாடுகளில் இலங்கைக்கு 180வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவது சட்டசபைத் தேர்தல் 1931ல் இடம்பெற்றபோது இந்திய வம்சாவளிப் பிரமாண தமிழ்ப் பெண்ணான லீலாவதி அசரப்பா பலாங்கொட தொகுதியி…
-
- 0 replies
- 355 views
-
-
தோல்வி ஹிட்லரை அசைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதை அவர் ஒரு தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. முந்தய உலகப்போரில் ஜேர்மனி அடைந்ததே அது தோல்வி. பிரிட்டன் அத்தியாயம் என்பது ஒரு சறுக்கல் மட்டும் தான். பெரும் சறுக்கல் கூட இல்லை. சிறு தடுமாற்றம். நடக்கும் போது கால் இடறினால் என்ன செய்வோம்? இடிந்து போயா உட்கார்ந்துவிடுவோம்? என்று பிரிட்டனுடனான போரின் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனது நோக்கங்களில் உறுதியாக இருந்தார் ஹிட்லர். ஏப்ரல் 1941 தொடக்கத்தில் ஜேர்மனி பார்டிக் நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. கிறீஸ், யூகோஸ்லாவியா இரண்டும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. மே மாத இறுதியில் கிரேக்க தீவான கிறெரே (Crete) ஜேர்மனி வசமானது. எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா மூன்றைய…
-
- 0 replies
- 765 views
-
-
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 560 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 809 views
- 1 follower
-
-
பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கள் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் 5.3 சதவீதமும் மாகாண சபையில் 4 சதவீதமும் உள்ளுராட்சி மன்றத்தில் 23.8 சதவீதமாகவுமே (இது பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத கோட்டா வழங்கப்பட்ட பின்னர்) காணப்படுகின்றது. சட்டவாக்கத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். மீயுயர் அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டில் பெண்கள் அதிகளவில் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். மக்கள் பிர…
-
- 0 replies
- 729 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாட்கள் – மனோகணேசன் July 30, 2020 விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த அந்த தருணங்கள் பற்றிய பதிவொன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார் புலிகளும் ரணிலும் மகிந்தவும் நானும் கருணாவும் மௌலானாவும் என்ற தலைப்பில் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போத…
-
- 0 replies
- 738 views
-
-
சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ்வதற்கு ‘அரசாங்கத்துக்கு எதிரான ஆட்சி வேண்டும்’ -எஸ்.எம்.எம்.முர்ஷித் சிறுபான்மை மக்களும், சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஓர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸதான் என, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இவர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் பின்வருமாறு: க…
-
- 0 replies
- 435 views
-