அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜே.வி.பி விதைத்த விஷக் கருத்துக்கள் இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி ச…
-
- 0 replies
- 298 views
-
-
ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? அ.நிக்ஸன்- ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? 1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்…
-
- 0 replies
- 381 views
-
-
(திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் ) 1. அறிமுகம். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது. இந்தக் கூற்றை அடுத்த கையோடு எனுமாப்போல் விரைவில் ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் இந்தியத…
-
- 0 replies
- 2.7k views
-
-
களமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக் ஷ களமிறக்கப்படுவார், பெயரிடப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அது நடந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உத்தியோகபூர்வமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய சம்மேளனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்…
-
- 0 replies
- 928 views
-
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? - நிலாந்தன் அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டது. அதன் பெயர் “டெலிஸ்” . அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது. முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந…
-
- 0 replies
- 291 views
-
-
நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன் புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம் தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம். மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்…
-
- 0 replies
- 84 views
-
-
-
- 1 reply
- 698 views
- 1 follower
-
-
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் தலைமைகள் எவரும் சிங்களத்துக்கான “தமிழ்த் தலைமையாக” நின்றுபிடிக்கவில்லை. அல்லது அப்படி கையில் கிடைக்கக்கூடியவர்களும் போதிய மக்கள் செல்வாக்குள்ளவர்களாக இருக்கவில்லை. அந்த இடத்தில் விக்னேஸ்வரனை முன்னிறுத்தும் பணி முழுமையாக சாத்தியப்படாமல் தொடர்ந்த நிலையில் இன்று “எழுக தமிழோடு” அவர்களுக்கு கை கூடியிருக்கிறது, முழுமை பெற்றிருக்கிறது. எழுக தமிழின் சுலோகங்களிலிருந்தும், விக்னேஸ்வரனின் வெளிப்பாடுகளிலிருந்தும் சி…
-
- 0 replies
- 467 views
-
-
சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அணுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். சர்வதேச அரசியற்கட்டமைப்பு என்பது அடாவடித்தனம் கொண்டது. எல்லா அரசுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகளோ அல்லது பலம் வாய்ந்த உலக அரசுகளுக்கான கட்டமைப்போ என எதுவும் இல்லாத உலகில் அடாவடித்தனம் கொண்ட சர்வதேச கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது. உலகின் காவல்காரன் என்று எவரும் இல்லாத நிலை என்பது பலம் இல்லாதவன் அடிபட்டு போகவும் பலம் கொண்டவன் வாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கிறது. தற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கருத்தாடல் த.தே.ம.முன்னணி சரியான முடிவுகள் எடுக்கிறதா?கஜேந்திரகுமார்.
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் Bharati November 17, 2020 சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள்2020-11-17T05:59:46+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore இதயச்சந்திரன் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம். அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன. நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க -சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு…
-
- 0 replies
- 728 views
-
-
நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன் நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழு…
-
- 0 replies
- 897 views
-
-
சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம். மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை அழிக்கும் படலம் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, பர்மா (மியன்மார்), பாகிஸ்தான், பலஸ்தீன், எகிப்து என முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் நடக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அந்த வகையில் தற்போது சிரியாவிலும் முஸ்லிம்களை அழிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. முஸ்லிம்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவது ஏன்? தொடர்ந்தும் பல நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போது சிரியாவிலும் அதன் தொடர்ச்சி ஆரம்பமாகியுள்ள…
-
- 0 replies
- 769 views
-
-
காலதாமதமில்லாத அனைத்துலக விசாரணை உடன்தேவை 90 Views இலங்கைத் தீவில் உண்மையும், நீதியும், இழப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு, இனிமேல் முன்னைய நிகழ்வுகள் இடம்பெறாமை உறுதிசெய்யப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் நிலைமாற்று நீதி முறைமையாக தீர்மானம் 30/1 மூலம் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறீலங்கா இந்தப் பரிந்துரைகளுக்கான வழிகாட்டல் தீர்மானத்தில் இருந்து விலகிக்கொண்டது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு முழுவதும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காத வகையில் நடந்து கொண்டுள்ளதை அனைத்துலக மன்னிப்புச் சபை பின்வருமாறு பட்டியலிட்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய ந…
-
- 0 replies
- 561 views
-
-
சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன் 5 Views நூறு வகையான இனக்குழுமங்களைக் கொண்டதும் இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடுமான மியான்மாரில், அங்குள்ள அரசை இராணுவம் கைப்பற்றி விட்டது என்ற செய்தியோடு கடந்த வாரம் விடிந்தது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) அவரது மிக நெருங்கிய சகாவும் மியான்மாரின் அதிபருமான வின் மியின்ற் (Win Myint) ) அவரது கட்சியின் உறுப்பினர்கள், தேசிய சனநாயக சபை (National League of Democracy – NLD) போன்றோர் மியான்மார் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்துவ…
-
- 1 reply
- 414 views
-
-
அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை? தேசிய அரசாங்கத்தின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக அமைந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் மீள்கட்டமைப்பு ஆகியவையாகும். இவ்விடயம் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி கற்ற சிங்களச் சமூகமும் வரவேற்கக்கூடிய நிலைப்பாட்டை அடைந்ததற்கு காரணம் மோசடி மிகுதியாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்துவேஷம், பாகுபாடு போன்ற காரணங்களாலும் நாடு சின்னாபின்னமாகி இருந்தமையாகும். ராஜபக் ஷக்களின் அதிகார மையம் தேசிய அரசின் கைக்கு வந்தவுடன் தமிழ் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். வடகிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிந…
-
- 0 replies
- 565 views
-
-
பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? February 11, 2022 — தொகுப்பு: வி.சிவலிங்கம்— கடந்த 09-2-2022ம் திகதி ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியினர் அநுராதபுரத்தில் பெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். பெருஞ் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அக் கூட்டம் மக்களை நோக்கிய தமது புதிய பயணத்தின் ஆரம்பம் என பல பேச்சாளர்களும் தெரிவித்த போதிலும், விவசாயிகளை அதிகளவில் கொண்டிருக்கும் அப் பிராந்திய மக்கள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் பேச்சுகளுக்கு பெரும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இவர்களின் உரைகளின்போது அவ்வப்போது மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசு, தினேஷ் குணவர்த்தன போன்ற பலரைக் …
-
- 0 replies
- 242 views
-
-
1970's - THE BEGINNING OF THE END OF DEVOTIONAL PATH AND TAMIL MUSLIM CO-EXISTENCE IN THE EASTERN PROVINCE OF SRI LANKA.- V.I.S.JAYAPALAN . 1970கள். கிழக்கில் பக்தி மார்க்கம் மற்றும் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் முடிவின் ஆரம்பம்.- வ.ஐ.ச.ஜெயபாலன் . Jaya Palan என்னுடைய பல்கலைக்கழக நாட்க்களில்தான் எனக்கு கிழக்கு மாகாணத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டது. 1970பதுகளின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்கள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது காசிநாதர் வணசிங்க எஃப் எக் சி நடராசா பிதா சந்திராபெர்ணாண்டோ போன்ற தமிழ் ஆழுமைகளை சந்தித்து முஸ்லிம் மக்கள் பற்றிய அவகளது அவிப்பிராயங்களைக் கேட்டுப் பதிவு செய்தேன். . கிழக்கில் நான் சந்தித்த காசிநாதரின் தலைமுறை தமிழ் முஸ…
-
- 1 reply
- 438 views
-
-
ஏன் எல்லோரும் ரஷ்யாவை தாக்குகிறார்கள்? - அமெரிக்க ஆவணப்படம் ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும். ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா …
-
- 1 reply
- 1k views
-
-
உளவாளி படுகொலை முயற்சி பிளவுபடும் உறவுகள் இங்கிலாந்து தேசத்தின் சாலிஸ்பரி நகரம். நவீன வாழ்க்கையின் பர பரப்புக்கள் இல்லாத, தேவாலயங்கள் நிறைந்த இடம். ஞாயிறு ஆராதனைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டம் குறைந்திருந்த மாலை நேரம். இங்கிருந்த பொது வாங்கில் இரண்டு பேர் சுயபிரக்ஞை அற்ற நிலையில் விழுந்து கிடந்ததை மக்கள் அவதானித்தார்கள். ஒருவர் முதியவர். மற்றவர் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண். பெண்ணின் வாயில் இருந்து நுரைகள் ஒழுகின. கண்கள் திறந்திருந்தன. விரைந்து செயற்பட்ட பொலிஸார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. இதன் விளைவுகள் சர்வதேச அரங்கில…
-
- 0 replies
- 699 views
-
-
அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த, சிறுபான்மையின கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். “அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு, நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி…
-
- 1 reply
- 793 views
-
-
அவலத்தை அரசியலாக்குதல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, தம்மை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இத்தகைய சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல்வாதிகள் விளைகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், தம்மை கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன் கொண்ட, திறமையான தலைவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு…
-
- 0 replies
- 1k views
-
-
புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு! மீராபாரதி புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களே……. இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாத, போராட முடியாத இராணுவ மயப்பட்ட சூழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்பட்ட சூழல். இவ்வாறான பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகள் மற்றும…
-
- 2 replies
- 832 views
-
-
கல்முனையின் சுபீட்சம் நோக்கிETHNIC AND VILLAGE BASED TERRITORIAL PROBLEMS OF KLMUNAIV.I.S.JAYAPALAN.கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது சக மாளிகைக்காடு மற்றும் கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள்.அவர்கள் கல்முனைக் கூட்டுக் குடும்பத்தில் இருந்து நல்லுறவோடு சுமூகமாகத் தனிக்குடித்தனம் போகும் தங்கள் விருப்பத்தை சந்தேகத்துக்கு இடமின்றி தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இப்பிழவுகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமன்றி கல்முனைக்குடி சாய்ந்தமருதுஎன முஸ்லிம்களிடையேயும் அரசியல் மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகி வருகிறது. அடிக்கடி அரசியல் மோதல்களாகவும் உச்சபட்டுகிற இப்பிரச்சினை தொடர்வது கல்முனைக்கு மட்டுமன்றிக் கிழக்கின் எதிர்காலத்துக்கும் நல்ல சகுனமல்ல எ…
-
- 0 replies
- 461 views
-
-
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்…..... தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்! விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்…. குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக…
-
- 2 replies
- 467 views
-