அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் காரை துர்க்கா / 2020 ஜூன் 09 எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) 'சமூக இடைவெளி' ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், 'சமூக இடைவெளி' பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்…
-
- 0 replies
- 417 views
-
-
சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இம்மக்களின் வீட்டுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் முழுமை பெற்றதாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில வீடுகள் அமைக்கப்பட்டதே தவிர வீடமைப்பு தேவை முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் கரிசனையுடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் மலையக மக்களுக்கான வ…
-
- 0 replies
- 531 views
-
-
சமூக ஊடகங்கள் மீதான தடை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியதா? எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் முஸ்லிம்களது வீடுகளை உடைத்தார்கள். பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தார்கள். புனித குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். முடிந்தவரையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சூறையாடி காலி செய்த பின்பே அவற்றுக்கு தீ வைத்தார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் …
-
- 0 replies
- 377 views
-
-
சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்த சமயம், மியன்மாரில் பேஸ்புக் பற்றிய தருஸ்மான் அறிக்கை வெளியானது. மியன்மாரின் கலவரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்சுகி தருஸ்மான் தலைமையிலான ஐ.நா. அதிகாரிகள், தாம் அறிந்த விடயங்களை பகிரங்கமாக அறிவித்தார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பேஸ்புக்கின் வகிபாகம் தீர்க்கமானது என தருஸ்மான் தெரிவித்தார். அவர் பேஸ்புக்கை பயங்கரமான மிருகம் என்று வர்ணித்ததுடன், இந்த சமூக வலைத்தளம் கசப்புணர்வையும், முரண்பாடுகளையும் வெகுவாகத் தீவிரப்படுத்தியதென சாடினார…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூக செயற்பாட்டாளர் முகிலன் விவகாரமும், தொடரும் மர்மங்களும். கருத்தாளர்கள் : ரதன் ரகு Rathan Ragu இரா. பிரம்மா நெறியாளர் : S.J. ராம்பிரஷன் Ram Prashan Broadcast Date : July 10, 2019
-
- 0 replies
- 447 views
-
-
சமூக செயல்பாட்டாளர் ராகவன் அவர்களுடன் கதைப்பமா ...
-
- 0 replies
- 475 views
-
-
சமூக நீதியைப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியம் இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார்கள். பழைய தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே, தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தமிழ்த் தேசியம் குறித்தான தமது கற்பிதங்களை வைத்திருக்கின்றன. ஆய்ந்து நோக்கில், இவர்கள் சொல்கின்றதும் வரையறுக்கின்றதுமான தமிழ்த் தேசியம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பது விளங்கும். தமிழ்த் தேசியம், தமிழ் மக்களை எத்தகையதொரு முட்டுச் சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றி, ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை, வரலாறு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. ஆனால், நாம் அதற்குத் தயாராக இருந்ததில்லை. அதற்கான விலையை, நாம் தொ…
-
- 0 replies
- 476 views
-
-
சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட…
-
- 1 reply
- 520 views
-
-
சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும் மல்லியப்புசந்தி திலகர் இந்த சமூகத் தூரமாதல் (Social distancing) என்ற சொல்லாடலும் செயலும் நமது சமூகத்திற்கு புதியது. இதற்கு “சமூக இடைவெளி” எனும் சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளி (Social Gaps) என்பதை வேறு விதமாக புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இந்த புதிய சூழலில் தூரத்தில் இருந்து ஒருவொருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து கொள்வதன் ஊடாக சமூக இடைவெளியைக் குறைக்க முடியும். ஆனால் அதனை சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் (Social Responsibility). இந்த சமூகப் பொறுப்பு என்பது என்பது நமக்கு புதியதல்ல. ஒவ்வொரு தனிநபர்களும், தனிநபர்கள் பலர் சேர்ந்த அமைப்புகளும் சமூகத்துக…
-
- 0 replies
- 491 views
-
-
சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம் Photo, Eranga Jayawardena/AP மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. பொருளாதாரம் சீர்குலைந்துபோன பின்புலத்தில் நீதி தொடர்பான பிரச்சினை முன்னரங்கத்துக்கு வந்திருக்கிறது. பொருளாதார சீர்குலைவு சில பிரிவினரை பெருமளவுக்கு பாதிக்காமல் இருக்கக்கூடும் என்ற போதிலும் சனத்தொக…
-
- 0 replies
- 199 views
-
-
சமூகத்தில் இடைவெளிகளும் வேண்டும்! இதைத்தான் கொரோனா சொல்கிறதோ? கணபதி சர்வானந்த “எனக்கு நோய் தொற்றின் அறிகுறி தென்படுகிறது. எனவே வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்று கேட்கும் ஒரு பிரஜையை “இங்கு வராதே. உனக்கு நிவாரமளிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று சொல்லும் ஒரு அமெரிக்கச் சுகாதாரக் கட்டமைப்பா?, அல்லது “எனக்கு தொண்டை அரிக்கிறது. காய்ச்சல் விடவில்லை” என்று சொல்லும் ஒரு பிரஜையை “ சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். உடனே அம்புலன்ஸ் கொண்டு வந்துவிடுகிறோம்” என்று சொல்லப்படும் இலங்கை அரசின் சுகதாராக் கட்டமைப்பா? இந்த இரண்டிலும் எது சிறந்தது? எது வலுமிக்கது? இது போன்ற பல விடயங்களைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது கொரோனா. அனைத்துலக நா…
-
- 0 replies
- 426 views
-
-
சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள், சமூக…
-
- 0 replies
- 581 views
-
-
-
- 2 replies
- 763 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையும் எதிரணியின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் உள்ள சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண்பதே எமது குறிக்கோளாகும். அதனை அடையும் இலக்குடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அதனை அடைந்துகொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு உறுதியாக இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய சூழலில் மக்களுடைய தீர்மானம் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் வெளிவரவேண்டியது அத்தியாவசியமானதாகும். அதனடிப்படையில் மக்கள் மிகவும் நிதானமாக சி…
-
- 0 replies
- 432 views
-
-
சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார். அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்ப…
-
- 10 replies
- 1.6k views
-
-
சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப…
-
- 0 replies
- 515 views
-
-
டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்து விட்டார். எனவே அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும். 'புரூட்டஸ் நீயுமா?' என்றொரு வரலாற்றுக் கேள்வி வழக்கிலுண்டு. அதைப் போல் 'சம்பந்தன் நீங்களுமா?' என்ற கேள்வி உலகின் பொரும்பாலான தமிழர்களிடையே எழுந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 7ஆம் திகதி ஆற்றிய ஒரு பகுதி உரை அவர்களின் இதயங்களில் ஈட்டியால் குத்தியதாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட…
-
- 11 replies
- 1.4k views
-
-
சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல தமிழ் ஆயுதக் குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமை…
-
- 1 reply
- 780 views
-
-
சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-3 சம்பந்தன் ஒத்துழைப்பை பலவீனமானதாக கருதவேண்டாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது என்பதற்காக அந்த ஆதரவை பலவீனமாக கருதிவிடக்கூடாது. வேறு வழியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக எண்ணி தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளி விடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது.எவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்கின்றது …
-
- 0 replies
- 636 views
-
-
சம்பந்தனின் கனவு பலிக்குமா? -கார்வண்ணன் திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆணையை கோரி வருகிறது. வடக்கினதும், தெற்கினதும் இன்றைய பிரதான அரசியல் கோசமாக, புதிய அரசியலமைப்பு மாறியிருக்கிறது. ஆனால் இரா.சம்பந்தன் கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும், மகிந்த ராஜபக்ச கூறுகின்ற அரசியலமைப்பு மாற்றமும் ஒரே மாதிரியானவை அல்ல. அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு …
-
- 0 replies
- 462 views
-
-
சம்பந்தனின் கனவைக் கலைத்த கோட்டாவின் உரை புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (18) பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து, ஆற்றிய கொள்கை விளக்க உரை பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற நிலையில், அதை மீட்டெடுப்பது பற்றிய எந்தவித சிந்தனையோ, திட்டங்களோ இல்லாமல், ஜனாதிபதி தன்னுடைய உரையை ஆற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகளும் தென் இலங்கை ஊடகங்களும் விமர்சிக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் எதுவுமே குறிப்பிடாதது, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, இம்முறை தமிழ்த் தேசிய கூட…
-
- 1 reply
- 587 views
-
-
வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க எல்லா விதமான காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்திப்படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசமும் அரசாங்கமும் ஒரு புள்ளியில் கொள்கையளவில் இணக்கம் கண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் எந்த அடிப்படையிலான தீர்வுப் பொதியை வழங்கினாலும், அதற்கு அங்கு வாழும் முஸ்லிம்களின் சம்மதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கின்றது. சிங்கள மக்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும், முஸ்லிம்களை திருப்திப்படுத்தாத எந்த தீர்வும், தமிழர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலத்தை கொண்டு வரமாட்டாது என்பதை எல்லா தரப்பினரும் புரிந்து கொண்ட…
-
- 0 replies
- 811 views
-
-
சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா இன்று ஈழத்தமிழர் அரசியல் என்றால் - அது சம்பந்தன் என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சமீபத்தில் வாசித்த ஆங்கில கட்டுரை ஒன்றில் தமிழர் அரசியல் திருகோணமலையை மையப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையாளர் திருகோணமலை என்று குறிப்பிட்டிருப்பது, இரா.சம்பந்தன் திருகோணமலையை சேர்ந்தவர் என்னும் பொருளிலாகும். அந்தளவிற்கு சம்பந்தனின் தலைமைத்துவம் இன்று உற்று நோக்கப்படுகிறது. எனவே இன்றைய அர்த்தத்தில் சம்பந்தனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையாள முடியாது. எவ்வாறு 2009இற்கு முன்னர் பிரபாகரனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையிலெடுக்க முடியவில்லையோ, அத்தகையதொரு நிலைமையே தற்போது சம்பந்தன் விடயத்தில் …
-
- 1 reply
- 649 views
-
-
சம்பந்தனின் தோல்வி யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு…
-
- 1 reply
- 526 views
-
-
சம்பந்தனின் நகர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் க…
-
- 0 replies
- 318 views
-