Jump to content

சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது!


Recommended Posts

டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்து விட்டார். எனவே அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும்.


 'புரூட்டஸ் நீயுமா?' என்றொரு வரலாற்றுக் கேள்வி வழக்கிலுண்டு. அதைப் போல் 'சம்பந்தன் நீங்களுமா?' என்ற கேள்வி உலகின் பொரும்பாலான தமிழர்களிடையே எழுந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 7ஆம் திகதி ஆற்றிய ஒரு பகுதி உரை அவர்களின் இதயங்களில் ஈட்டியால் குத்தியதாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டியலிட்டு சம்பந்தன் குறிப்பிட்டார். ஆனால் அந்த உரைக்கு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புலிகளைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் உலகத் தமிழர்களின் கவலைக்குரிய காரணமாக அமைந்துள்ளது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என இலங்கை அரசு வேண்டுமானால் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி கூறிக்கொள்ளலாம். ஆனால், தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் � அதிலும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக புதல்வர்களை அள்ளிக் கொடுத்த திருக்கோணமலைத் தொகுதியைப் பிரதிநித்துவப் படுத்துபவர் � சம்பந்தன் அவ்வாறு தெரிவிக்கலாமா?

 

நாலும் தெரிந்தவர். அரச பயங்கரவாதத்தினால் எத்தனை ஆண்டுகாலமாக தமிழினம் அல்லற்பட்டு சீரழிந்து வாழ்விழந்து வருகின்றது என்பதையும் அறிந்தவர் அவர். புலிகளில்லாத கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக தமிழர்கள் பல இடங்களில் அடிமைகள் போல் நடத்தப்படுவதை கண்கூடாகக் கண்டுள்ளார்.

 

இலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர், யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததை, இது ஒரு அரச பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சம்பந்தன் அதற்கு எதிர்மறையாக விடுதலைக்காகப் போராடிய ஓர் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று எங்ஙனம் கூற முடியும்?

 

அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சராக இருக்கும் திருமதி. ஹிலாரி கிளின்டன் அம்மையார் ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலின்போது ஏனைய பயங்கரவாத அமைப்புகளின் அட்டவணையில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதை அவருக்கு இப்போது ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

 

நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றின் தீர்ப்பை இங்கு குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து ஆயுதக்கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து மேல் நீதிமன்றம் தமிழர் ஒருவருக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அவர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

 

அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவரையும் நிரபராதி எனத் தீர்ப்பளித்து விடுதுலை செய்தது. �சொந்த வீட்டில் இருப்பவனை அடித்துத் துரத்திவிட ஒருவன் முனைந்தால் சொந்த வீட்டுக்காரன் திருப்பித் தாக்குவது யதார்த்தமானது. ஆயுதங்களோடு அவ்வாறு வரும் ஒருவரை ஆயுதங்களோடு எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாதது. தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதங்களோடு வரும் இராணுவத்தினரை ஆயுதங்களோடு எதிர்கொள்கின்றனர்.

 

எனவே, அதனை பயங்கரவாத நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ததை பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என நியூசிலாந்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தத் தீர்ப்பு உலகின் முன்னணி ஊடகங்கள் யாவற்றிலும் வெளியாகி இருந்ததை சம்பந்தனும் அறிந்திருப்பார். அதேநேரத்தில் ஐரோப்பிய நீதிமன்றிலும் தமிழீழ விடுதுலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பல்ல என்று தீர்ப்பு வழங்குமாறு கோரி இரண்டு மனுக்கள் தாக்கலாக அதனை ஆதரித்து உலகின் பிரபல சட்டத்தரணிகள் வாதாடி வருகின்றனர்.

 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதினால் வழக்கு விசாரணை முடிவு இன்னமும் வெளியாகவில்லை. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் சில தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சாட்டப்பட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ததன் குற்றச்சாட்டு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறான நிலையில், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்காததுடன் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டனர் என சம்பந்தன் குறிப்பிட்டதின் காரணம் அவருக்கே சிலவேளை புரியாதிருக்கலாம். ஏனெனில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு உலகிலுள்ள சகல மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கோரி வருகின்றன. போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு மீறியதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என ஐ.நா. சபையே பகிரங்கமாக அறிவித்துள்ளது.

 

எனவே, அவ்வாறான அரசுடன் எங்ஙனம் ஜனநாயக மனித உரிமைகளைப் பாதுகாக்க போராட முடியும்? ஜனநாயக மனித உரிமை பாதுகாப்பு போராட்டங்கள் மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு அவை படுதோல்வியடைந்த நிலையிலேயே வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியதையும் அவரே சுட்டிக்காட்டுகிறார்.

 

அவர் தமது நாடாளுமன்ற உரையில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கைதட்டலுக்கும் மத்தியில் தெரிவித்தார். முற்றுமுழுதாக அது உண்மைக்கு மாறான தகவல் என இதுவரை அவர் அறியாதிருப்பது வேதனைக்குரியது.

 

திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமொன்று தடைசெய்யப்பட்டது. அதிலும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளரான பிரபல சிங்கள நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகா அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான திரைப்படம் என்பதினாலேயே அது தடைசெய்யப்பட்டது என செய்திகள் கசிந்தும் பி.பி.சி. என்ற பிரபல ஊடகம், அதனைக் கண்டறிந்து உண்மைத் தகவலை அச்சமயம் வெளியிட்டது. அதனை மிகவும் இரகசியமாகவே அன்றைய அரசு வைத்திருக்க முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.பி.சி.யின் தகவலால் அது முடியாது போயிற்று.

 

தமிழீழ விடுதுலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தோல்வியடைந்து வருகின்றது. வெளிநாடுகளின் ஆதரவு புலிகளுக்கு இருப்பதனால் அந்த ஆதரவை முறியடித்து அந்த நாடுகளின் உதவியுடனேயே புலிகளை வெற்றிகொள்ள இலங்கை அரசு இரகசியமாக திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது.

 

வெளிநாட்டமைச்சர் தமிழராக இருப்பதனால், அவரை அரசு மற்றொரு தமிழ்க் குழுவைக் கொண்டு கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அப்படியே புலிகள் மீது சுமத்தி வெளிநாடுகளில் தீவிரமாகப் பரப்புரை செய்கின்றது. வெளிநாட்டமைச்சரையும் புலிகளே கொலை செய்துவிட்டார்கள் என்ற பரப்புரை சாதகமான பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது.

 

பின்பு இந்தியா தலைமையில் ஒன்றிணைந்து வெளிநாடுகளும் போரைத் துவங்கி விடுதலைப் புலிகளின் களத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதுதான் காமினி பொன்சேகாவின் திரைப்படம். யதார்த்தத்துக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் அவர் அன்று அந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தாலும் அதனை வெளியிட அன்றைய அரசு அனுமதியளிக்கவில்லை.

 

மிகப்பெரும் பிரச்சினையிலிருந்து அரசு விடுபட இந்தத் திரைப்படத்தின் மூலம் முக்கிய ஆலோசனையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது செயற்பட வேண்டுமாயின் இந்தத் திரைப்படம் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படக்கூடாது என அரசு முடிவெடுத்திருக்கலாம் என்றும் பி.பி.சி. அப்போது சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

 

அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின், அதேபோன்றதொரு சூழ்நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்ட போதும், பி.பி.சி. இந்தச் சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. மேலும் சில ஊடகங்களிலும் இவ்வாறு வெளியாகியதை சம்பந்தன் எப்படி அறியாமல் இருந்தார் என்பது புரியவில்லை.

 

அவர் அது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை ஆராய்ந்து பார்க்கலாம். கொலைச் சந்தேக நபர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிய முற்படலாம்.

 

அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில்

வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

 

தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவருக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, யாசீர் அரபாத் பாலஸ்தீனர்களுக்கு தனிநாடொன்றைப் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழர்களுக்கு அவ்வாறு பெற்றுக்கொடுப்பார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

 

அந்த உரையின் மீது எழுந்த அரச அழுத்தங்களின் பின்னணியில் சம்பந்தன் தமது உரையை நிகழ்த்தியதாகக் கருதினாலும், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

 

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சம்பந்தன் மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் எவரும் அறிந்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு ஆராய முற்பட்டால், தம்மையும் புலிகளுடன் இணைத்து இலங்கை அரசு கணித்துவிடும் என்ற அச்சமும்

எழலாம்.

 

ஆனால், புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மக்களின் நல்வளர்ச்சிக்காக சேமித்து அனுப்பிய பணத்திலேயே அந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

நானூறு கோடி ரூபாய் செலவில் தமிழர்களுக்கென பூரணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே ஓர் ஏக்கர் பரப்பளவில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பிய நிதியிலிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் திட்டமிட்ட முறையில் கலை, விஞ்ஞான, உயிரியல் உட்பட பல பீடங்களை உள்ளடக்கியதாக இப்பல்கலைக்கழகத்தினை அமைத்துள்ளார். கூடவே, விளையாட்டு மைதானமும், நீச்சல் தடாகமும் மிகச் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

 

ஆஸ்திரேலிய நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளரான முருகர் குணசிங்கம், தாம் கிளிநொச்சிக்கு 2008ஆம் ஆண்டு சென்றபோது இப்பல்கலைக்கழகத்தை நேரில் பார்த்து பெரும் வியப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீதமான கட்டட வேலைகள் பூர்த்தியடைந்த நிலையிலேயே அப்போது இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அபிவிருத்தித் திட்டங்களை புள்ளிவிபரங்களுடன் விளக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். முதல் வெளியிடு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

 

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகைச் செய்கை, குளங்களைப் புனரமைத்து உப உணவுப் பயிர்ச்செய்கை, விவசாயம், நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டம், கரவைப் பசுமாடுகளை உள்ளடக்கிய பிரமாண்டமான பண்ணை, வயோதிபர் விடுதி, கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பூரணத்துவமான மருத்துவ விடுதிகள், வட்டக்கச்சியில் மிகப் பெரிய விவசாயப் பண்ணை உட்பட சுமார் 1,200 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேரில் கண்டுள்ளார்.

 

ஆனால், இன்று இவையெல்லாவற்றையும் இராணுவம் கைப்பற்றி பலனை அனுபவித்து வருவது சம்பந்தனுக்குத் தெரியாது. குறிப்பாக தமிழ் மாணவர் கல்விக்கு பெரிதும் உதவும் பல்கலைக்கழகம் இராணுவத்தினரின் தங்கும் விடுதியாக மாறியுள்ளது.

 

தாயக மக்களின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனுப்பிய பணத்திலேயே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்த இடங்களை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு இராணுவம் வெளியேறிவிட வேண்டும் என ஏன் சம்பந்தனால் கேட்க முடியாது?

 

இவ்வாறு தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட அமைப்பை மிக எளிமையாக � தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யாத சம்பந்தன் � பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் சர்வசாதாரணமாகக் குறிப்பிட்டது ஓர் இமாலயத் தவறு என்பதை இப்போது உணர்கின்றாரா?

 

வட மாகாண சபைத் தேர்தலில் இடம்பெற்று, அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அந்தச் சபையிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்படும் என்ற காரணத்திற்காகவே மாகாணசபைத் திட்டத்தையே இரத்துச் செய்ய அரசு முயற்சிக்கின்றதாக புலம்பெயர் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

 

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத வெற்றிடமொன்று முள்ளிவாய்க்காலின் பின் ஏற்பட்டபோது, அதனை முழுமையாக நிரப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாது என்பதை தமிழர்கள் அறிவர். ஆனால், தாயக நிலைமைகளை வெளிநாடுகளுக்கு அறிவிக்கும் பணியைத் தவிர வேறு எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாது என்பதும் யாதார்த்தமானது.

 

ஆனால், அமெரிக்காவின் தேசிய நலன் சார்ந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லும் அட்டவணை செயற்றிட்டத்துக்கு உதவுவதன் மூலம் ஏதாவது நன்மைகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைக்குமா என முயற்சித்துப் பார்க்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

 

அமெரிக்காவின் ஆலோசனைப் படி சில நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்றார். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் சிறிலங்காவுக்கு எதிரான காய் நகர்த்தல்களுக்கு சம்பந்தனும் உதவி வருகிறார்.

 

1977ஆம் ஆண்டு முதல் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் சம்பந்தன், கடந்த 35 ஆண்டு காலமாக தமிழருக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சேவைகள் எதனையும் செய்யவில்லை. அதேநேரத்தில் அவரின் நாடாளுமன்ற உரை கடந்த முப்பதாண்டு கால தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.

 

எனவே, கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதியுடன் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என புலம்பெயர் ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. அவர் தானாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தற்போது உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராவதற்கு வழிவிட வேண்டும்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும். �நுணலும் தன் வாயால் கெடும்� என்பதைப் போல, தமிழரின் விடுதலையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில் உரையாற்றிய சம்பந்தன் இனிமேல் தமிழரின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

 

- வீ.ஆர்.வரதராஜா

http://www.seithy.com/breifArticle.php?newsID=72103&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமொன்று தடைசெய்யப்பட்டது. அதிலும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளரான பிரபல சிங்கள நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகா அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான திரைப்படம் என்பதினாலேயே அது தடைசெய்யப்பட்டது என செய்திகள் கசிந்தும் பி.பி.சி. என்ற பிரபல ஊடகம், அதனைக் கண்டறிந்து உண்மைத் தகவலை அச்சமயம் வெளியிட்டது. அதனை மிகவும் இரகசியமாகவே அன்றைய அரசு வைத்திருக்க முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.பி.சி.யின் தகவலால் அது முடியாது போயிற்று.

 

தமிழீழ விடுதுலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தோல்வியடைந்து வருகின்றது. வெளிநாடுகளின் ஆதரவு புலிகளுக்கு இருப்பதனால் அந்த ஆதரவை முறியடித்து அந்த நாடுகளின் உதவியுடனேயே புலிகளை வெற்றிகொள்ள இலங்கை அரசு இரகசியமாக திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது.

 

வெளிநாட்டமைச்சர் தமிழராக இருப்பதனால், அவரை அரசு மற்றொரு தமிழ்க் குழுவைக் கொண்டு கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அப்படியே புலிகள் மீது சுமத்தி வெளிநாடுகளில் தீவிரமாகப் பரப்புரை செய்கின்றது. வெளிநாட்டமைச்சரையும் புலிகளே கொலை செய்துவிட்டார்கள் என்ற பரப்புரை சாதகமான பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது.

 

பின்பு இந்தியா தலைமையில் ஒன்றிணைந்து வெளிநாடுகளும் போரைத் துவங்கி விடுதலைப் புலிகளின் களத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதுதான் காமினி பொன்சேகாவின் திரைப்படம். யதார்த்தத்துக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் அவர் அன்று அந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தாலும் அதனை வெளியிட அன்றைய அரசு அனுமதியளிக்கவில்லை.

 

மிகப்பெரும் பிரச்சினையிலிருந்து அரசு விடுபட இந்தத் திரைப்படத்தின் மூலம் முக்கிய ஆலோசனையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது செயற்பட வேண்டுமாயின் இந்தத் திரைப்படம் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படக்கூடாது என அரசு முடிவெடுத்திருக்கலாம் என்றும் பி.பி.சி. அப்போது சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

 

அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின், அதேபோன்றதொரு சூழ்நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்ட போதும், பி.பி.சி. இந்தச் சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. மேலும் சில ஊடகங்களிலும் இவ்வாறு வெளியாகியதை சம்பந்தன் எப்படி அறியாமல் இருந்தார் என்பது புரியவில்லை.

 

அவர் அது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை ஆராய்ந்து பார்க்கலாம். கொலைச் சந்தேக நபர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிய முற்படலாம்.

 

அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

Link to comment
Share on other sites

 அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

 

இதைப்பற்றி மேலதிக தகவல்கள் தேவை.

Link to comment
Share on other sites

கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

 

 

 

ராஜீவையும் புலிகள் கொலை செய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

கதிர்காமரையும் புலிகள் படுகொலைசெய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

அப்போ புலிகள்  என்ன முட்டாள்களா?

 

 

நான் நினைக்கிறேன் புலிகள் பழி தங்கள் மீது விழுந்தாலும் பற்வாயில்லை ஆனால்  புலிகள் ஒரு திறமையான   புத்திசாலித்தனாமன இயக்கம்  இந்தியாவான இந்தியாவின்  பாதுக்காப்பையும் மீறி என்ன நடந்தாலும் பறவாயில்லை என  ராஜீவை போட்டார்கள் என்ர பெயரும்  கடும் பாதுகாப்பில் இருந்த லக்ஷ்மன் கதிர்காமரையே போட்டுத்தள்ளிய சிறந்த  பிஸ்டல் குழுக்கு சொந்தக்காரர் என்ற தற்பெருமையை உலகம் பேச வேண்டும் என்று  செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது

அரசியலை பொறுத்தவரைக்கும் எப்பவோ ஒதுங்கியிருக்க வேண்டிய மனுசன்....ஈழத்தமிழனுக்கு எத்தனையோ கோடூரங்கள் நடந்த பின்னும்...நஷனல்,  வேட்டியோடை இன்னும் .......????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

 

இது மட்டுமில்லை உரிமை கோரப்படாத அனைத்து தாக்குதல்களும் இலங்கை அரசாலே தான் மேற்கொள்ளப்பட்டவை ...............இதைவிட ஒருத்தரும் புலிகளின் போராட்ட வலுவவை கொச்சைப்படுத்த முடியாது 

Link to comment
Share on other sites

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது மட்டுமில்லை உரிமை கோரப்படாத அனைத்து தாக்குதல்களும் இலங்கை அரசாலே தான் மேற்கொள்ளப்பட்டவை ...............இதைவிட ஒருத்தரும் புலிகளின் போராட்ட வலுவவை கொச்சைப்படுத்த முடியாது 
 

 

 

இதைத்தான் முதலில் எழுத நினைத்தேன் பிறகு ஏன் அவசரகுடுக்கையாக இருப்பம் என்று நினைத்துபோட்டு பேசமால் விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

 

அண்ணையை ஒரு கைத்தாங்கலாய் தூக்கிக்கொண்டுபோய் ஒரு இடத்திலை இருத்துங்கோப்பா.....

Link to comment
Share on other sites

ராஜீவையும் புலிகள் கொலை செய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

கதிர்காமரையும் புலிகள் படுகொலைசெய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

அப்போ புலிகள்  என்ன முட்டாள்களா?

 

 

நான் நினைக்கிறேன் புலிகள் பழி தங்கள் மீது விழுந்தாலும் பற்வாயில்லை ஆனால்  புலிகள் ஒரு திறமையான   புத்திசாலித்தனாமன இயக்கம்  இந்தியாவான இந்தியாவின்  பாதுக்காப்பையும் மீறி என்ன நடந்தாலும் பறவாயில்லை என  ராஜீவை போட்டார்கள் என்ர பெயரும்  கடும் பாதுகாப்பில் இருந்த லக்ஷ்மன் கதிர்காமரையே போட்டுத்தள்ளிய சிறந்த  பிஸ்டல் குழுக்கு சொந்தக்காரர் என்ற தற்பெருமையை உலகம் பேச வேண்டும் என்று  செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

 

join.jpg

 

 இதில் பல படங்கள் உள்ளன  :D

Link to comment
Share on other sites

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

 

தமிழர்களுக்கு தலைவனாக இருந்திருந்தால் இலங்கை அரசால் இன்று வரை நடாத்தப்படும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறி (உண்மையை) இருக்க வேண்டும்.மக்களின் வாக்கை பெற மட்டும் பொய் வாக்குறுதிகளை வழங்குவது பின்னர் பிளேட்டை மாற்றுபவர் எப்படி ஒரு இனத்தின் தலைவராக முடியும்??.உண்மை என்பது ஒரு பக்கம் மட்டுமல்ல மற்றைய பக்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.

 

 

கதிர்காமர் அடுத்த பிரதமர் ஆகி விடப்போகிறார் எனத்தெரிந்து புலிகள் கொல்வது போல அவரை கொன்று புலிகளின் மேல் பழியை போட்டதாக சொல்லப்பட்டது. அந்நேரத்தில் கதிர்காமரை கொலை செய்வதால் ஏதாவது அரசியல் லாபம் புலிகளுக்கு கிடைத்திருக்குமா என தெரியவில்லை.

 

சம்பந்தரும் தனது இறுதிக்காலத்தை சிங்களவர்களிடம் சரணாகதி அரசியல் மூலம் களிக்கவே விரும்புகிறார் என்பதும் எந்தவித அரசியல் சாணக்கியம் இவரிடம் இருப்பது போலவும் தெரியவில்லை. மேற்குலகம் சிறிதளவாவது எம்பக்கம் உள்ள போது சிங்கள அரசின் அட்டூளியங்களை தன்னும் சொல்லத்தவறின் இவரின் தகுதி பற்றி மக்கள் அடுத்த தேர்த்தலிலாவது சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நுணாவிலான் சம்பந்தரின் பேச்சை முழுமையாக கேட்கவும் ,புலிகளை சாடிய அழவு அரசையும் சாடியிருக்கின்றார் .அதுதான் உண்மையும் .

Frances Harrison இன் Still counting the dead வாசித்து முடித்துவிட்டேன் .அதை வாசிக்க புலிகளில் இருந்த கோவம் இன்னமும் கூடி விட்டது ( the nun இதை வாசிக்க).

ஆனால் இந்த புத்தகத்தை ஏன் தமிழர்கள் உலகம் முழுக்க கொண்டுதிரிந்து வெளியிடுகின்றார்கள் .காரணம் மக்கள் இப்போ படும் பாடும் ,அரசு செய்யும் அக்கிரமத்தையும் உலகிற்கு எடுத்து காட்டவே இதனால் புலிகள் செய்த அநியாயங்கள் தெரிந்துவிடும் என்பதைபற்றி தமிழனின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவன் நினைப்பதில்லை .கட்டாயம் வாசிக்கவும் .

கையில பிடித்து வைத்துக்கொண்டுதான் தந்தை செல்வாவையும் கொண்டு திரிந்தார்கள் .ஒருவரது சிந்தனையும் செயல்திறனும் தான் முக்கியம் பிசிக்கல் தோற்றமல்ல .புலம் பெயர்ந்து பலர் ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே வாழ்க்கையை முடித்துவிட்டார்கள் என்பதை அவர்கள் பதிவுகள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 MAY, 2024 | 10:19 AM 'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' என்ற தொனியில் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்த வாரம் நாம் நினைவுகூருகிறோம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே எந்தத் திசையிலும் தப்பியோட முடியாமல், தொடர்ச்சியாக அன்பானவர்களை இழந்தவண்ணமாக வெறுங்கையர்களாக எமது மக்கள், உணவில்லாமல், கஞ்சி மட்டும் குடித்தபடி, பாரிய நெருக்கடியிலும் துயரத்திலும் கழித்த நாட்கள் இவை.  துப்பாக்கி, வெடிகுண்டு சத்தங்கள் மௌனித்த பின்பு, தாம் அகப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறியபோது, பலர் அரச படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பல விதங்களில் துன்புறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த உண்மை.  குறித்த வயதெல்லைக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அரச படைகளிடம் சரணடைய வேண்டுமென வற்புறுத்தப்பட்டு தங்கள் உறவினர்களால் அப்படியாகக் கையளிக்கப்பட்டவர்கள் இன்று வரை காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளைப் போல அடைக்கப்பட்டு, ஒன்றரை வருடத்திற்கு மேல் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தனை கொடூரங்களும் உலகமே பார்த்திருக்க அரங்கேற்றப்பட்டு 15 வருடங்கள் இன்று நிறைவடைகின்றன. இன்று வரை இந்த சர்வதேச குற்றங்களுக்காக ஒருவருக்கெதிராகத் தானும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக காணப்படவுமில்லை.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2014ஆம் ஆண்டு OISL என்ற முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்தி, அதன் அறிக்கையை 2015 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலும் அதற்கு முன்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கொடுக்கப்பட்ட  2012 மார்ச் 31 திகதியிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பல சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  2015 அக்டோபர் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரச அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தில் சர்வதேச விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் நீதிபதிகளினுடைய பங்கேற்புடன் நீதிமன்ற பொறிமுறையொன்றை  ஏற்படுத்துவதாக உறுதி கூறப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது.  ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சம்பந்தமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான பொருத்தமானதொரு தருணம் இதுவென்று நான் நினைக்கின்றேன்.  எமது அரசியல் விடுதலைக்கென்றே கால் நூற்றாண்டுக்கு கூடுதலாக ஆயுதப் போராட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. ஆயுத முனையில் அறம் சார்ந்த அரசியல் விடுதலையை பெற முடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், தம் மீது மோசமான அடக்கு முறைகளையும் வன்முறையையும் இலங்கை அரசு பிரயோகித்த பின்னணியில் வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அன்று எடுத்த தீர்மானத்தை இன்று வேறொரு சூழ்நிலையிலிருந்து நாம் மதிப்பிடவோ, குறை கூறவோ முடியாதென்பதை தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன்.  அத்தோடு, அத்தகைய ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வித சுயநல சிந்தனையும் இன்றி எமக்காக செய்த அர்ப்பணிப்புகளும் உயிர்த் தியாகங்களும் எக்காலத்திலும் எமது சமூகத்தில் மிக உயர்ந்த பங்களிப்பாக கருதப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி இருக்கிறேன்.     ஆனால் அத்தகைய தியாகம் மிக்க ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு,  எத்தனையோ பேரிழப்புகளை சந்தித்த பின்பு, மற்றுமொரு முறை ஆயுதம் ஏந்திப் போராடுவதை இலங்கையில் வாழும் எந்தத் தமிழ் மகளும் தமிழ் மகனும் ஒரு தெரிவாக நினைத்துப் பார்ப்பதே இல்லை. அப்படியான பின்புலத்தில் கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று கருதுகிறேன். ஒரு கணம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இக்காலகட்டத்தில் எமது சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை நோக்குவோமாயின், நாம் பாரிய பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். இளையவர்கள் மத்தியிலே பரவலாகி இருக்கின்ற வாள்வெட்டுக்குழுக்கள் போன்ற வன்முறைக் கலாசாரமும், போதைவஸ்து பாவனையும் இதற்கான சான்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவை எமது இளைஞர், யுவதிகளை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகளாகும். ஆட்சியாளர்களே இவற்றை ஊக்குவிக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கும்போதிலும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முதலாவது பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைவர்களிடம் தான் இருக்கின்றது.  வன்முறைக்கும் போதைப் பாவனைக்கும் சினிமா போன்ற வெளிசக்திகள் பெரும் செல்வாக்கை செலுத்தினாலும் கூட, அந்த தாக்கங்களை மழுங்கடிக்கின்ற விதமான செயற்பாடொன்றையும் முன்னெடுக்காதது எமது தவறேயாகும். இந்தப் பின்னடைவுகள் தொடருமாக இருந்தால், அரசியல் விடுதலை ஒன்று எமக்கு கிடைத்தாலும் கூட அதைப் பொறுப்போடு நிர்வகிக்கின்ற திறன் அற்றவர்களாக எமது இளைய சமுதாயத்தினர் மாறியிருப்பார்கள்.  எமது இளையவர்கள் கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் தங்களது அபரிமிதமான திறனை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் கூட அண்மைய காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயம். இது இளைய சமுதாயத்தின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் மூலதனங்களை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கின்றன. இதைப் போலவே பொருளாதார ரீதியில் மிக மோசமாக நலிவடைந்திருக்கும் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகளின் முயற்சிகளின் பயனாக பல செயற்றிட்டங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டாலும் பாரியளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே கண்ணியமாக சுய கௌரவத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர்கள் வாக்களித்த முறை இதனை அம்பலப்படுத்தியது.  மேற்சொன்ன இரண்டு காரணிகளும் எமது அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மாறாக, எமது அரசியல் உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தவை. எமது மக்களுக்கான விடுதலை பாதை என்பது இப்படியான முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானதொரு அணுகுமுறையை கடந்த 15 ஆண்டுகளாக நாம் பின்பற்ற தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.  சென்ற பாராளுமன்ற காலம் 2015 - 2019 மட்டும் இதற்கு சற்று விதிவிலக்கானது. அந்த காலகட்டத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நிலங்கள் விடுவிக்கப்பட்டதும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கும் பொருளாதார மீளெழுச்சிக்குமென முக்கியமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதை நாம் மறந்துவிடலாகாது. ஆனால் அதற்குப் பின்னர் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதையும் பல்வேறு அடக்குமுறைகள் எம்மீது பிரயோகிக்கப்படுவதையும் நாம் நன்கு அறிவோம். இவற்றை தடுப்பதென்பது, நாம் ஒரு தேசமாக இத்தீவிலே தொடர்ந்து வாழக்கூடிய எமது இருப்பை தக்கவைக்கின்ற, "தமிழ்த் தேசியத்தை" பாதுகாக்கின்ற பிரதானமான செயற்பாடாகும். வெற்றுக் கோஷங்களையும், போராட்ட மனநிலையை தூண்டுகின்ற பேச்சுக்களையும் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டும் எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை ஒரு அங்குலம் கூட முன்நோக்கி நகர்த்த முடியாது. நாம் ஒரு தனி தேசமென்பதை உரக்கச் சொல்லுகிற அதேவேளையில் ஒரு தேசமாக வாழ்வதற்கு வேண்டிய அணுகுமுறைகளை நாம் கைவிடக்கூடாது.  தந்தை செல்வாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நாங்கள் வன்முறையையோ அதன் வெவ்வேறு பிரதிபலிப்புக்களையோ முற்றாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எமது இளைஞர் யுவதிகளினதும், போரிலே மடிந்தவர்களினதும் உயிர்த்தியாகங்கள் வீணாக போகாதிருக்க வேண்டுமேயானால் வன்முறைக்கு தூண்டாத எமது அணுகுமுறை தொடர்பாக எமது சிந்தனையிலும் பேச்சிலும் தெளிவு இருத்தல் வேண்டும்.  1957ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபடத் தொடங்கியிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியினருக்கு தந்தை செல்வா கூறிய எச்சரிக்கை: "தமிழ் மக்களுக்கு நல்லது கொண்டுவரப் புறப்பட்ட நாங்கள், நாசம் கொண்டுவந்த கதையாக மாறிவிடும்" என்பது  இன்றைய சூழ்நிலைக்கும் சாலப்பொருந்தும்.  எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிலைத்திருந்து எமது தன்மானத்துக்கும் சுய கெளரவத்துக்கும் ஏற்ற விதமான ஆட்சி மாற்றத்துக்கு சாத்வீக வழியில் போராடுகின்ற அதேவேளையில், தேர்தல் நேரங்களிலும் மற்ற தருணங்களிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உன்னிப்பான இராஜதந்திர நோக்கோடு நாம் கையாள வேண்டும்.  ஒரு ஜனநாயக அமைப்பிலே, எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கின்ற ஒரு தேசம் கைக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய அணுகுமுறை அது. நாம் வலியுறுத்துகின்ற தமிழ் தேசிய பிரச்சினை, இலங்கையின் பிரதானமான தேசிய பிரச்சினை என்பதை இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினருக்கும் நாம் பொருத்தமான முறைகளில் விளங்கப்படுத்த வேண்டும். எம்மை ஒரு தேசமாக அங்கீகரிப்பது தமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்ற உண்மையை அவர்களும் உணரச்செய்தல் வேண்டும்.  எமது போராட்டம் நீதிக்கான போராட்டம்; நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை. எமது போராட்டம் நீண்ட நெடியதானதாக இருந்தாலும், அற வழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டு அதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாக வேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்போம்! https://www.virakesari.lk/article/183290
    • கிராஃபிக்ஸ் அல்ல, நிஜம்! வானில் இந்த அற்புத காட்சி எங்கே, எவ்வாறு தோன்றியது? பட மூலாதாரம்,JOEL SPENCER படக்குறிப்பு,ைகிழக்கு மிட்லாண்ட்ஸின் நார்மன்டன் தேவாலயத்தை அடுத்துள்ள ருத்லாண்ட் வாட்டர் பகுதியில் தோன்றிய துருவ ஒளி. கட்டுரை தகவல் எழுதியவர், நடாஷா பிரெஸ்கியால் பதவி, பிபிசி செய்திகள் 11 மே 2024 பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது. இத்தகைய புவி காந்தப் புயல் நிகழ்வுகள் வானில் துருவ ஒளி தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடைசியாக 2003இல் ஒரு வலுவான புவி காந்தப் புயல் ஏற்பட்டது. உலகின் பல பகுதிகளில் வானில் தோன்றிய துருவ ஒளியின் சில சிறந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,இங்கிலாந்தின் லிவர்பூலில், கிராஸ்பி கடற்கரையில் உள்ள சிலைக்கு மேலே தோன்றிய துருவ ஒளிகள். பட மூலாதாரம்,JOSH WALET/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நெதர்லாந்தின் ஆர்லாண்டர்வீனில் உள்ள மோலன்விர்காங் ஆலைக்கு மேலே இரவு வானில் தோன்றிய துருவ ஒளி. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரிய நகரமான தாராவில் துருவ ஒளிகளால் பிரகாசிக்கும் இளஞ்சிவப்பு வானம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள மிடில்டனில் வானில் தோன்றிய துருவ ஒளி பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,ஸ்காட்லாந்தின் வடக்கு குயின்ஸ்ஃபெரியில் உள்ள ஃபோர்த் பாலத்திற்கு மேலே ஊதா மற்றும் பச்சை நிறங்களில் தோன்றிய துருவ ஒளிகள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் மீது தோன்றிய துருவ ஒளி பட மூலாதாரம்,LAURENT GILLIERON/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,சுவிட்சர்லாந்தின் டெய்லென்ஸ் கிராமத்தில் பாப்லர் மரங்களின் வரிசைக்கு மேலே அழகான துருவ ஒளி   பட மூலாதாரம்,PROFESSORMILLER/ WATCHERS படக்குறிப்பு,பிபிசி வானிலை கண்காணிப்பாளர் பேராசிரியர் மில்லர் வேல்ஸில் உள்ள மோல்ட், பிளின்ட்ஷயர் மீது வானத்தில் தோன்றிய துருவ ஒளியைப் படம் பிடித்தார். https://www.bbc.com/tamil/articles/crgy0n0823eo
    • இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.
    • ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 
    • எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.