Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 ‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது. 1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து, அமோக வெற்றியைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நின்ற இந்திரா காந்தி. பிறகு ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியது. பாரதிய ஜனதாக் கட்சி போன்ற வலுவான தேசியக் கட்சி ஒன்று, அப்போது க…

  2. நியூஸிலாந்து தாக்குதலும் இலங்கை அனுபவமும் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:35 Comments - 0 நியூசிலாந்து பள்ளிவாசல்களில், இம்மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதலானது, இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் மீதான, ‘இஸ்லாமோபோபியா’ அல்லது வெறுப்பு உமிழப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமாகவே கருதப்படுகின்றது. நியூசிலாந்து நாட்டுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும், இது புது அனுபவமாக இருந்தாலும் கூட, உலக முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இது புதுமையான சம்பவமல்ல. இலங்கை, இந்தியா, மியான்மார் தொடக்கம் அரபு நாடுகள் தொட்டு மேற்கத்தேய நாடுகள் வரை, எல்லா இடங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள், இவ்விதமான வன்கொடுமைகளை வரலாறு நெடுகிலும் அனுபவித…

  3. மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எட…

  4. ஜெனீவா 2019 – நிலாந்தன்… March 31, 2019 ‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்த…

  5. யாழ்ப்பாணம்-துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயர்மாற்றம் தொடர்பான எதுசரி எதுபிழை?

    • 1 reply
    • 614 views
  6. சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி. இந்த சூழலில் புதிய பட்டுப்பாதை திட்டம், அது பிறந்த கதை ஆகியவற்றை குறித்து விரிவாக காண்போம். பட்டுப்பா…

  7. தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம் Editorial / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 06:03 Comments - 0 -இலட்சுமணன் போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  8. யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:39Comments - 0 உலகில் நடப்பவை எல்லாம், கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல, வெறும் பெட்டிச் செய்திகளாகவே கடந்து போகின்றன. நமக்குச் சொல்லப்படும் செய்திகளை விட, நமக்குச் சொல்லாமல் விடப்படும் செய்திகள் அதிகம். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், இலங்கையின் உள்நாட்டுப் போர், அவல முடிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கும் இட்டுச் சென்ற போது, உலகம் வாழாவிருந்தது என்பது, தமிழ் மக்கள் பலரது மனக் கவலை. இன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒரு மூலையில், இலங்கையை ஒத்த இன்னொரு மனிதப்பேரவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமறிவோமா?…

  9. ஜெனீவா தீர்மானங்களும் கொழும்பு அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் - வீ.தனபாலசிங்கம் - ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் 2019 பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு குறித்து பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்களோ இல்லையோ கடந்தவாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பற்றி தவறாமல் பேசிவிடுகிறார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அரசாங்கத்தின் பட்ஜெட் யோசனைகளை விமர்சனம் செய்கின்றதை விடவும் ஜெனீவா விவகாரத்தில் அதிக தீவிரம் காட்டி காரசார…

  10. ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த - மைத்திரி பனிப்போர் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:03 Comments - 0 அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஜனாதிபதி மைத்திரிபாலவின் அந்தக் கனவு, நனவாகப் போவதில்லைப் போல் தான் தெரிக…

  11. உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 06:44 Comments - 0 “ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் ‘எள்ளல்’ தொனியிலான உரையாடலையும் தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்ம…

  12. மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது. சீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத…

  13. யாருக்கு வெற்றி? பி.மாணிக்கவாசகம் March 27, 2019 நியாயத்தையும் நீதியையும் நிலைக்கச் செய்வதில் ஐநாவையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்வது அல்லது கையாள்வதில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களின் அணுகுமுறை மிக மிக முக்கியமானது. ஐநாவையும் சர்வதேசத்தையும் உரிய முறையில் கையாள்வதன் ஊடாக மட்டுமே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல், நான்கு பொறிமுறைகளைக் கொண்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த அணுகுமுறை மிக மிக அவசியமாகும். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா மன்றமே வலிந்து முன்வந…

  14. இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும், கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான எதிர்ப்பும் அமைந்­தி­ருக்­கி­றது இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அ…

  15. கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மார்ச் 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:49Comments - 0 நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர். அப்போது, தலைகளுக்கு உரியவர்கள் தட்டிக் கேட்டால், அதிகாரங்களுக்கு உரியவர்களின் கைகள், அடக்குமுறைகளைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றன. இதுவே, இறுதியில் போராட்டக் களங்களை உருவாக்கி விடுகின்றது…

  16. வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள் காரை துர்க்கா / 2019 மார்ச் 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:27 Comments - 0 வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்…

  17. ஜெனிவாவில் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும் Mar 25, 20190 யதீந்திரா ஜெனிவா அரங்கை எவ்வாறு கையாளுவது – கையாள முடியுமா? என்னும் கேள்வியுடன் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களை கடக்க வேண்டியிருக்கும் என்பதையும் எவரும் அறியார். இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்னும் கோரிக்கையுடன், வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் பேரணிகள் இடம்பெற்றிருக்கின்றன. 2012இல் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை வெளிவந்ததிலிருந்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு மார்ச்சிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கும், சர்வதேசத்தை நோக்கிய கோரிக்கைகளுக்கும் எவ்வித பஞ்சமும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் ஜ.ந…

  18. அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:13 Comments - 0 ‘நல்லாட்சி’ என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த, ஒன்றிணைந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், முடிவடையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், மீண்டும் அரசமைப்புத் திருத்தம்; அதனூடான இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டம், அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்திருக்கின்றன. இவ்வாறிருக்கையில், அரசமைப்புத் தொடர்பாக, மேலோட்டமாகவே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமூகம், தற்போது கூடிய கரிசனை காட்டத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை முஸ்லிம்கள், ஒரு நாளும் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் அல்லர். இரண்டு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றோ, அதிக…

  19. அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த கே. சஞ்சயன் / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:02 Comments - 0 மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற…

    • 1 reply
    • 1.1k views
  20. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய எனது நெடுங்கவிதையின் கரு இதுதான். PLOT OF MY LONG POEM UNDER WRITING -TAMILS OF THE WORLD NEVER FORGET THE BACKGROUND OF THE GENOCIDE 2019 . . Home Minister P Chidambaram said the Sri Lankan government's statement meant that it is end and cessation of hostilities which Indian interlocutors had been urging. - India Today 2009-04-27 , பொய்யெனத் தெரிந்தும் யுத்தநிறுத்தம் என உள்நோக்கத்துடன் அமைச்சர் கிண்டலடித்ததை நம்பி மறைவிடங்களால் வெளிவந்த பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொளிக்கபட்ட நிகழ்வை நந்திக் கலம்பகம்போன்ற ஒரு குறுங்காவியமாக எழுதி வருகிறேன். (https://www.indiatoday.in/…/karunanidhi-ends-fast-after-sl-…) …

    • 0 replies
    • 507 views
  21. அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு - பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு…

    • 1 reply
    • 782 views
  22. ஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019 ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது ‘விடியுமாமளவும் விளக்கனைய மாயையா’? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று தளங்களில் ஆராய வேண்டும். முதலாவது ஜென…

  23. விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!! 987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. 'ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்| (Operation Blooming Tulip)என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்தப் படை நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் மிகவும் முக்கியமான ஒரு ரகசியத் தளத்தை நோக்கிததான் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிரு…

  24. கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, பி.ப. 12:08 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன. ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கில் அரசியல் தலைமைகள், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் காலகட்டங்கள் இருந்து வந்துள்ளன. அந்த நிலைமையில், இடைப்பட்ட காலத்தில், மாற்றம் ஏற்பட…

  25. சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரிய…

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.