அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…
-
- 1 reply
- 427 views
-
-
அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந…
-
- 0 replies
- 378 views
-
-
மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது. இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல், மீகநீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும், பல உயிர்களையும் பலிவாங்கிய துர்ப்பாக்கியம் என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எல…
-
- 1 reply
- 765 views
-
-
தொலைந்து வரும் அதிகாரக் கனவு - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை. இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத…
-
- 0 replies
- 525 views
-
-
தாயின் பசி – நிலாந்தன்! March 14, 2021 “ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்ப உதவும் என்று நான் …
-
- 0 replies
- 406 views
-
-
போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ? ரொபட் அன்டனி தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரி வருகின்ற நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காவிடினும் அல்லது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செவிமடுக்காவிடினும் மக்கள் விரக்தி அடைந்துவிடுவதுடன் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு முன்வந்துவிடுவார்கள். காரணம் கோரிக்கைகளின் மூலம் அல்லது வேண்டுகோள்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாத தமது தேவைகளை மக்கள் போராட்டங்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சிப்பதை தவிர்க்க முடியாது. அந்தவகையில் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 246 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் கீழ்வரும் காணொளியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவான நிகழ்வும், அதன் நோக்கமும் சிறிதளவில் விளக்கப்பட்டுள்ளது..! 2:20 நேரக்கணக்கில் இருந்து பாருங்கள்..! http://www.youtube.com/watch?v=gvqE0AMndCc இன்றைய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அதன் ஆரம்ப நோக்கங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் பாதக நோக்கங்கள் எதையாவது காவி நிற்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. குறிப்பாக, புலிகள் உருவாக்கித்தந்த இந்த அமைப்பின் முதுகில் இன்று இந்திய அரசு சவாரி செய்வது ஓரளவு ஊகிக்கக்கூடியது.. இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிந்தால் நன்றாக இருக்கும்.. தேசியத் தலைவருடன் அன்று காட்சி தந்த சம்பந்தன் அவர்கள் புலி அடையாளத்தை படிப்படியாகத் துறந்து வருகிறார் …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும் - கே.சஞ்சயன் ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார். சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா? …
-
- 17 replies
- 2.5k views
-
-
இருமுனைப்போட்டி வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, தமிழ் மக்களுடைய அரசியல் இரு முனைகளில் மிக மோசமாகக் கூர்மை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றது. மரபு வழியாகப் பேணப்பட்டு வந்த அரசியல் தலைமைக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சோதனையாகக் கூட இந்த நெருக்கடியை நோக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் தலைமையை முழு அளவில் ஏற்றுச் செயற்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் வந்திறங்கியது. விடுதலைப்புலிகளின் காலத்தில் பாராளுமன்ற அரசியல் தலைமையாக – ஓர் அரசியல் அலங்கார நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட…
-
- 1 reply
- 577 views
-
-
சோதனைக்களம் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக புதிய அரசிய லமைப்பில் அரசியல் தீர்வு கிட்டுமா என்பது சந்தேக மாக உள்ள நிலையிலேயே புதிய அரசியலமைப்பும் அவசி யமில்லை. அரசியலமைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்க…
-
- 0 replies
- 642 views
-
-
இன்றைய ஆளும் அதிகாரத்தரப்பில் பதவி வகிக்கும் ஒரு கட்சியின் தலைவர் இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை என்பதே தனது கணிப்பு என்று அண்மையில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. "இல்லை பிரச்சினைகள் பலவுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய அவை தீர்க்கப்பட்டாலேயே நாட்டில் சமத்துவம் கட்டிக்காக்கப்படும். தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முடிவுகட்டப்பட வேண்டும்' என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டி, தமது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு உள்ளது. அது தமிழர் தரப்பால் உரியபடி ஆற்றப்படுவதாக இல்லை. இலங்கையின் அரசியலரங்கை ஆராயும்போது, பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் தமிழரல்லாத மற்றைய சிறுபான்மையினத்து அரசியல்வாதிகளுக்கும…
-
- 0 replies
- 475 views
-
-
முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியை, அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவ…
-
- 0 replies
- 646 views
-
-
-
- 8 replies
- 1.3k views
-
-
இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்.. சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா
-
- 1 reply
- 209 views
-
-
வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி June 12, 2022 —கருணாகரன்— “வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம். கடைகளில் “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார். இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும் அந்தப் பொருள் அப்படி உரிய நேரத்தில் வருமென்றில்லை. அதற்கான உத்தரவாதமெல்லாம் முடிந்து விட்டது. அந்தக் காலமே மலையேறி எங…
-
- 0 replies
- 392 views
-
-
கோத்தாவின் வீழ்ச்சி ? -நிலாந்தன்.- ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு பற்றிய பதிவும் அல்ல. கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மஹிந்த மூட்டிய நெருப்பு அவருடைய ஆதரவாளர்களின் வீடுகளை எரித்தது. அவர் பதவி விலக நேர்ந்தது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபை தலைவரும் அடித்தே கொல்லப்பட்டார்கள். இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அப்படி ஒரு ஆபத்து முன்னபொழுதும் வந்ததே இல்லை. மஹிந…
-
- 0 replies
- 430 views
-
-
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3 புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது. இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன். புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழி…
-
- 2 replies
- 1.5k views
-
-
கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும் September 10, 2022 —- ஸ்பார்ட்டகஸ் —- இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூலை 13 நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக 50 நாட்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.2) இரவு திரும்பிவந்திருக்கிறார். தவறான ஆட்சியைச் செய்த அவரை மக்கள் ‘வீட்டுக்கு போ’ என்றுதான் கேட்டார்கள்; நாட்டைவிட்டு போகுமாறு கேட்கவில்லை. ஆனால், போருக்கு முடிவுகட்டி மக்களை பாதுகாப்பாக வாழ வழிவகுத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமை கோரும் அவர் நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்து நாட்டில் இருந்து வெளியேறினார். முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங…
-
- 0 replies
- 257 views
-
-
கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது. இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப…
-
- 0 replies
- 578 views
-
-
போச்சுவார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தமிழனை பிரத்தாளும் சூத்திரத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதி ரணிலை சந்தித்த தமிழ்நாட்டின் முதலமச்சர் விளக்கம் தருவாரா? ரணிலின் ஆட்சிக்காலத்தில் கருணாவை பிரிக்க முயற்சிகள் ஆரம்பித்தது அதில் ரணிலின் பங்கு என்பது ஒன்று இரகசியம் அல்ல. இந்த நிலையில் கருணாநிதி ரணிலை சந்தித்திருக்கிறார். சந்தித்தவர் இது பற்றி விளக்கங்கள் கேட்டாரா? இன்று மேசமடைந்த சூழ்நிலைக்கு கருணாவின் பிரிவினால் ஊக்குவிக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் நிலைப்பாடு ஒரு காரணம் என்பதை உணரமுடியாதவரா கலைஞர் கருணாநிதி?
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்.. யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். சுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று…
-
- 1 reply
- 617 views
-
-
'டம்மியை' நிறுத்துவாரா : மஹிந்த? -சத்ரியன் முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 516 views
-
-
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இலங்கையின் அரசியல் நிலை தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அவர் எழுதிய ஆய்வு இது. இன்றைய அரசு ஒரு பயங்கரவாத அமைப்புப் போன்றே செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார் அவர். அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது. இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது ஏ9 நெடுஞ்சாலை. அதில் படையினரின் கடைசி சோதனைச் சாவடியைத் தாண்டியதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்காக விடுதலைப் புலிகள் ஆவணங்களைச் சோதிக்கும் அலுவலகத்தை அடைந்தோம். இது 2002இல் நடந்தது. அன்று அந்தப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்த எவருமே இரண்டு நாடுகளுக்கு இடையில் த…
-
- 1 reply
- 740 views
- 1 follower
-
-
அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா? ‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சருக்கான விண்ணப்பம் மக்களினால் கோரப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதி: அரச உயர் பதவி ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது. தமது பதவிக்காலத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள், அரச இயந்திரத்திற்கு ஒத்து ஊதியவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் பிறந்தது, கல்வி கற்றது மற்றும் நிரந்தர வசிப்பிடம் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலாயினும் இருத்தல் ஆகாது. இவரிற்கு கடந்த காலங்களில் பங்கர் வெட்டுதல், ஊர்வலங்கள், இடப் பெயர்வுகள், பாண், அரிசி என்பவற்றிற்கு வரிசையில் நின்றிருத்தல், சைக்கிளில் பயணம் செய்திருத்தல், மண்ணெண்ணெய் மற்றும் செக்கில் ஊற்றிய தேங்காய் எண்ணெயில் கல்வி …
-
- 0 replies
- 602 views
-