அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார். ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது. அரசாங்கத்து…
-
- 1 reply
- 670 views
-
-
-
தமிழ் ஜனநாயக அரசியல் அரங்கைத் திறக்க வேண்டும் வடக்கு மாகாணசபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தமிழ் மக்களிடத்தில் கவலைகளை உண்டாக்கியுள்ளன. கூடவே, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையில் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதற்கான கூட்டுப்பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேரும் என்று சிந்திப்போர் குறிப்பிடுகின்றனர்; உண்மையும் அதுதான். இதனால்தான் அரசாங்கத்தை நோக்கிய தமிழர்களின் கவனக்குவிப்பு திசை மாறி தமிழர் அரசியலின்மீதும் அதை முன்னெடுக்கும் தமிழ் அரசியலாளர் மீதும் குவிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் கொதித்துக் கொண்டிருந்த முரண்பாடு…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை April 12, 2024 — கருணாகரன் — 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்த…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா இவ் வாரக் கட்டுரை டயாஸ்பொறா என்ற எண்ணக்கரு தொடர்பாக சில கோட்பாட்டு நிலைக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளாந்த பாவனையில் அனைத்துவகையான புலம்பெயர் மக்களையும் டயாஸ்பொறா என அழைத்தாலும் கோட்பாட்டு நிலையில் டயாஸ்பொறா என விழிக்கப்படுவோர் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடப்படும் அம்சங்களில் முழுமையாக எல்லாம் பொருந்தாவிடினும் குறிப்பிட்ட முக்கியமான அம்சங்கள் பொருந்திவரின் அவ் வகையான புலம்பெயர் மக்களை டயாஸ்பொறா என அழைக்கலாம் என வாதிடப்படுகிறது. இதனை எல்லா ஆய்வாளர்களும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது. டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer என…
-
- 0 replies
- 178 views
-
-
தமிழ் தரப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் உரிமை கோரிக்கையை தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் விழுந்திருந்தது. மாறிவந்த சர்வதேச சூழலை அதாவது இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடக்கம் நிரந்தர …
-
- 0 replies
- 340 views
-
-
தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.ஒற்றுமை ஏன் தேவை என்றால், வேகமாக தமிழர் தாயகத்திலேயே அவர்களது அடையாளங்களும் இருப்பும் பறிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. 1. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 2. நிரந்தர தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவ்விடயங்களை ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓர் அணியாக செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும்.பலவாறாக பிரிந்து நின்று தீர்வு தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் க…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழ் தேச விடுதலை: நாம் என்ன செய்யலாம்……? ?? நம் முன் உள்ள தெரிவுகள் என்ன…??? ஒரு முன்மொழிவு!. தமிழ் தேச விடுதலைக்கு நாம் (புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்கள்; ) என்ன செய்யலாம்……. இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாதää போராட முடியாத இராணுவ மயப்பட்ட சுழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்…
-
- 1 reply
- 618 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம். இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வ…
-
-
- 4 replies
- 407 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையி…
-
- 1 reply
- 662 views
-
-
தமிழ் தேசிய அரசியலும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதலும் -யதீந்திரா வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதனை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர். இது, அமெரிக்க சிந்தனையாளர் ஜோர்ஜ் சத்நயணாவின் கூற்று. ஆனால் இந்த மொழிபெயர்ப்பு, ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரனுடையது. இதே போன்று வரலாறு தொடர்பில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் கூற்றொண்டு. அதாவது, நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டும்தான். நான் இங்கு கூறவரும் விடயம் நமது அரசியல் வரலாறு தொடர்பானதாகும். வரலாறு என்பது இறந்தகாலமாகும். இறந்த காலம் தொடர்பில் எதற்காக ஒருவர் சிந்திக்க வேண்டும்? நிகழ்காலத்தை வெற்றி…
-
- 1 reply
- 323 views
-
-
இது மோசமான காலம் -இலட்சுமணன் தமிழ் தேசிய இனத்துக்கு மிக மிக மோசமானதொரு காலச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் புதிய புதிய அரசியல் கட்சிகள், உதயமாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த சூழ்நிலையை விட, இன்றைய சூழலில், வடக்கு வாதம், கிழக்கு வாதம், சாதி வாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்ற பூதங்கள் கிளம்பியுள்ளன. இம்முறை, கிழக்கில் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்களில் சூடுபிடித்துள்ளன. தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப் போவதாக, ஏட்டிக்கு போட்டியாகப் பீற்றப்படுகின்றது. ஐக்கியம், ஒற்றுமை பற்றி பேசினாலும், அதற்கான சூழல் இதுவரை கனியவில்லை. கண்ணியமும் செயற்றிறனும் உள்ளவர்களைப் புறந்தள்ள…
-
- 0 replies
- 366 views
-
-
தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம் நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது. எ…
-
- 0 replies
- 315 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடும் !! சுமந்திரனின் கருத்தும்!!
-
- 0 replies
- 625 views
-
-
2009 மே க்கு பிறகு நடந்த பல மாற்றங்கள் பல தமிழர்களின் எல்லைகளை மீறிய செயல்கள் என்பது இலங்கை பிரச்சனைகள் கவனிப்பவர்களுக்கு சொல்லாமே விளங்கும் விடையம் ஆகும். அதே போல நாங்களும் மாற்றங்களை எதிர் பார்த்து செய்த கருமங்கள் பல. ஆனால், மாற்றங்கள் என்னவோ சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது. அத்தோடு கூட்டமைப்பு அரசாங்துடனான பேச்சு, மீள் குடியேற்றம், புலம் பெயர்ந்த உறவுகள் உறவு, சுண்ணாகம் குடி நீர் பிரச்சனைகள்,உட்கட்சி உரசல்கள்.. ....... இன்ன பல விடயங்களில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டிருப்பதும் ஒன்றும் மறைவான விடயம் அல்ல. எனது நண்பர்கள் சிலர் - அதே போல் உங்களுக்கும் இருக்க கூடும்; மேற்குறிப்பிட்ட காரணங்களால் கூட்டமைப்பையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வாருவதற்காகவும், கயேந…
-
- 1 reply
- 666 views
-
-
[size=4] தமிழரின் பூர்விக தாயக நிலங்களில் முக்கியமானதும்,பல்லினப்பரம்பல் கொண்டதுமான கிழக்கின் மாகாணசபை தேர்தல் முடிந்து பெருத்த ஏமாற்றங்களையும்,சலிப்புக்களையும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் தமது பதவி மற்றும் அரசஅதிகார மையங்களுக்கான அடிபனிவினை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின் கேவல முகங்களை வெளிக்காட்டி இன்று கொஞ்சம் ஓய்ந்து போயுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு தேர்தல் களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னான மேற்கொண்ட அரசியல்முதிச்சி அற்ற செயற்பாடுகள் பெருத்த விசனங்களையும், நம்பிக்கையீனங்களையும் புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. முஸ…
-
- 2 replies
- 745 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்துள்ளது! தமிழ் தேசிய கூட்டமைப்பு த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது காட்சி பொருளாகவோ, இல்லையேல் சிலரது சுயநலத்திற்கு வித்திடும் திடலாகவோ இருக்கமுடியாது. தமிழர்களது தாயாக பூமியில் வாழும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மட்டுமல்லாது, தங்களது தாயாக பூமியில் பற்று வைத்து, தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக பல தசாப்தங்களாக சேவை செய்து வரும்புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் த.தே.கூ.ன் சரித்திரத்தில் பின்னி பிணைந்தவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களது இறுதி மூச்சு. இதன் மூலமே தமிழர் தாயாக பூமிக்கு ஓர் உருப்படியான அரசியல் தீர்வை எட்ட முடியும் என…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 3 replies
- 683 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய கடுமையான விமர்சனங்கள்
-
- 1 reply
- 693 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20 …. கூட்டமைப்பு ஏன், எவ்வாறு, உருவாக்கப்பட்டது டி.பி.எஸ்.ஜெயராஜ் ………………………………. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது. இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது. 2001, 2004, 2010, 2015, மற்றும…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழ் தேசிய சபைக்கான கொள்கை நிலைப்பாடு என்ன? - யதீந்திரா படம் | Srilankabrief தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய முடிவுகளின் போது, ஜயா சம்பந்தனே தமிழரசு கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார். ஆனால், தற்ப…
-
- 0 replies
- 385 views
-