அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்ட…
-
- 4 replies
- 1.4k views
-
-
அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும் ஸ்ரீலங்கா அரசியலில் 52 நாட்களாக இடம்பெற்ற குழப்பம் முடிவுக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்த மைத்திரி – ரணில் தலைமையிலான “நல்லாட்சி” அக்டோபர் 26 இல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பு அந்த நல்லாட்சிக்கு முடிவு கட்டியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத்தான் உரியது என சம்பந்தன் என்னதான் முரண்டு பிடித்தாலும் கூட ரணில் அரசாங்கத்தில் அவர் ஒரு “பகிரங்கப்படுத்தாத பங்காளி”யாக தான் இருக்கிறார். கூட்டமைப்பின் தலைமை சொல்லக்கூடிய விஷயங்களை செவிமடுத்து செயல்படுத்தும்…
-
- 0 replies
- 669 views
-
-
மீட்பருக்காகக் காத்திருப்பது - நிலாந்தன் “சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதைஎப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது. மெய்யாகவே, அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – மார்கரட் மீட் கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில், ”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்க…
-
- 3 replies
- 606 views
-
-
நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…
-
- 0 replies
- 237 views
-
-
சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 06:38 போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன. ஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது. போர் உருவாக்கிய கதைகள், பதிலின்றிப் பதில்களை வேண்டி, பல குரல்களாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். முடியாத கதைகளின் களம், போரும் அதன் பின்னரான நிலமுமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிரியாவில் நடைபெற்று வந்த போர், முடிவுக்கு வந்திருக்கிறது. ஐந்து இலட்சத்துக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 06:32Comments - 0 போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன. இது உலகெங்கும் பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மய்யங்கொண்டு, மேற்குலகில் தனது கைவரிசையைக் காட்டி வந்த இஸ்லாமி…
-
- 0 replies
- 929 views
-
-
மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கைப் பொதுமக்கள் முன்னணி சார்பில் அடுத்த தேர்தலில் களமிறங்கப்போகும் அரச தலைவர் வேட்பாளர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சதான் என்பது நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாயிற்று. மகிந்த குடும்பத்தில் இருந்து அதிகார நாற்காலிக்காக வந்திருக்கக்கூடிய மற்றொரு நபராக மீண்டும் குடும்ப ஆதிக்கத்தின் வெளிப்பாடாக வந்திறங்கியிருக்கிறார் கோத்தபாய. மகிந்த அணியிலிருந்து அடுத்த வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எதிர்வுகூறல்களும் நீண்ட நாள்களாகவே இருந்து வந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 455 views
-
-
‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’ காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:55 யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்…
-
- 0 replies
- 636 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 455 views
-
-
அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர் போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண…
-
- 0 replies
- 686 views
-
-
சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 06 , மு.ப. 03:57 எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், …
-
- 0 replies
- 973 views
-
-
[size=3][size=5]அருண்மொழிவர்மன்[/size][/size] [size=3][size=4][/size] [size=4]2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.[/size] [size=4…
-
- 0 replies
- 720 views
-
-
90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் …
-
- 27 replies
- 3.1k views
-
-
‘கஜபா’க்களின் காலம்! இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகா…
-
- 0 replies
- 808 views
-
-
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (…
-
- 0 replies
- 109 views
-
-
சுமந்திரனுடன் ஒரு "கருத்தாடல்" | M. A. சுமந்திரன்
-
- 0 replies
- 667 views
-
-
மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா...? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:22 இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியபட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்த போதிலும், அச்சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு, அவற்றில் ஓர் ஆசனமேனும் கொடுக்கப்படவில்லை. அக்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போ…
-
- 0 replies
- 386 views
-
-
விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும் – மு.திருநாவுக்கரசு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — சீனா — பாகிஸ…
-
- 0 replies
- 365 views
-
-
ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா? கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநாடானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் …
-
- 1 reply
- 738 views
-
-
இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில…
-
- 2 replies
- 1k views
-
-
போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீ வைத்து அழிக்கப்பட்டது. 35 வருடங்களுக்குப் பின்னர் அப்போது நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனா…
-
- 0 replies
- 284 views
-
-
ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! – பனங்காட்டான் பனங்காட்டான் ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம். இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனீவா கால அவகாசம் ஜெனீவாவில் அடுத்தவாரம் கூடவிருக் கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், ‘காலஅவகாசம்’ கோருவதற்கான முயற்சிகளில் அர சாங்கம் இறங்கியிருக்கின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கே, அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங் கள சமரவீர கூறியிருந்தார். எனினும், எவ்வளவு காலஅவகாசத்தை அரசாங்கம் கோரவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், 18 மாத காலஅவகாசம் கோருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியி…
-
- 0 replies
- 602 views
-