Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை என். கே அஷோக்பரன் twitter: @nkashokbharan பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, வேதாளத்தின் கேள்விகளும் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனாய், சற்றும் மனந்தளராது, மீண்டும் மீண்டும் கல் செதுக்குவது போல, அது உருப்பெறும் வரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தார்மிகக் கடமையாகிறது. இலங்கையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தற்காப்புத் தேசியமாகவே உருவாகியது. அது, சிங்…

  2. தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்.கே அஷோக்பரன் தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், ‘வேலா, சிலுவையா?’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார். இது ஓரளவுக்கு வௌிப்படையாக நடந்த பிரசாரம். ஆனால், அந்தத் தேர்தலில் பெரும்பான்மை சைவர்கள் நிறைந்த தொகுதியில், குறித்த பாணியிலான பிரசாரத்தை மீறியும், கிறிஸ்துவரான சா.ஜே.வே செல்வநாயகம் வெற்றி பெற்றார். அதன் பின்னர், பகிரங்கமாக சைவ-கிறிஸ்தவ வேறுபாடு ச…

  3. தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 03 பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன. அரச படைகளும் அதன் புலனாய்வுத் துறையும், தமிழ் மக்களை, ஒவ்வொருவராக அலசி ஆராயும் முனைப்பில் ஈடுபட்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான், என்றைக்கும் இல்லாதளவுக்கு, புலிகளுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளுக்கும், எதிரான கட்டுரைகளும் பத்திகளும் தமிழ்ப் பரப்பில் வெளிவர ஆரம்பித்திருந்தன. …

  4. தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…

  5. தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை -இலட்சுமணன் விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரமே சொந்தமானது என, எல்லோரும் நினைக்கிறார்கள். இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்க…

  6. தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது – நிலாந்தன். கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார். ரகுராம் தெளிவான துணிச்சலான நிலைப்பாடுகளை முன்வைத்துப் பேசினார். “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற தீர்வு முன்மொழிவை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் முன் வைத்தார்.தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் பேசினார். ஒரு கட்சி மேடையில், நிகழ்த்தப்பட்ட நி…

  7. (புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார்…

  8. தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 15 யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள். அரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது. இன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்…

  9. ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர்? ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொடுக்கின்றனர். அக்கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த விடயம் ஒரு…

  10. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை. இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடை…

  11. தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்…

  12. அது சரி எங்கடை ஊடகங்கள் ஏன் அரச தரப்பை குறுக்கு விசாரணை செய்து மடக்கி முகத்திரை கிழிக்க முயற்சிப்பது இல்லை?

  13. தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 16 அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த கருத்துகள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி, தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஒரு பகுதி, பருமட்டாகக் கீழ்கண்டவாறு இருந்தது, “...அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற எ…

  14. தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…

  15. அடுத்தது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும் அடுத்தது என்ன? - இந்த சொற்தொடரை இன்று பரவலாகக் கேட்க முடிகின்றது. இவ்வாறு கேள்வி எழுப்புவோரின் இலக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பின் குறியீடாகவும், அதனை வெற்றி கொள்வதற்கான ஸ்தாபன வடிவமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெளித்தெரிந்தது- தெரிகிறது. இதுவே அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைப்பதற்கான காரணமாகும். ஆனால் இவ்வாறு த.தே.கூட்டமைப்பை இலக்குவைத்து வெளிவரும் கருத்து வெளிப்பாடுகள், த.தே.கூட்டமைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருக்கின்றனவா? இதனைப் பார்ப்பதற்கு, முதலில் த.…

  16. அண்மைக் காலமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஎதிரானவிமர்சனங்கள் புலம் பெயர்நாடுகளில்; இயங்கும் தமிழர் அமைப்புக்களிடமிருந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்குஎதிரானவிமர்சனங்கள் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. இங்கிலாந்திலும் வேறுசிலநாடுகளிலும் மேற்படி இருவரினதும் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.புலம் பெயர் தமிழர்கள் சிலமேற்படிதலைவர்களின் படங்களில் ஏறிநின்றுகால்களால் ம்pதித்தசம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகவேஅனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் …

  17. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” …

  18. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். அரசாங்கத்துடன் நட்பைப் பாராட்ட முனைந்தாலே தவறாகப் பார்க்கப்படுகின்ற மனோநிலை, தமி…

  19. தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா? -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியலின் கடந்த 65 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் இருந்து, இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்து வந்த பாதைகளை நோக்கும்போது, அவற்றின் எதிர்வினைகள் பற்றி நன்றாகப் புரியும். இலங்கைத் தமிழ்க் காங்கிரிஸில் ஆரம்பித்த சமஅந்தஸ்துப் பிரச்சினை, 50க்கு 50. அன்றைய ஆட்சியாளர்கள், 50க்கு 48 தான் தருவதாகச் சொல்ல, 50க்கு 50 தந்தால்தான் தீர்ப்பை ஏற்பேன்; இல்லையேல் அதைப் பெறும் முறையில் பெறுவோம் எனச் சவால் விட்டு, கிடைத்ததையும் இழந்தனர். அதன்பின், இலங்கைத் தமிழரசுக்கட்சி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, சமஷ்டி முறையிலான தீர்வை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்…

  20. தமிழ்த் தேசிய தளத்தை பாதுகாப்பதற்கான உபாயம் என்ன? - யதீந்திரா அரசாங்கம் அதன் சிங்கள அடிப்படைவாத வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்துவருகின்றது. ஒரு புறம் ராஐபக்சக்கள் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்வது, மறுபுறமாக வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தை பலவீனப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மேற்படி இரண்டு வேலைத்திட்டங்களிலும், எந்தவொரு சமரசமுமின்றி அரசாங்கம் துரிதமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. சிங்கள அடிப்படைவாதத்தின் குறீடாக எழுச்சியுற்றிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இதற்கு மேல் வேறு எதனையும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இப்போது தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அதாவது தங்களது கட்சிகளின் பெயர்களில் தேசியத்…

  21. தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ Johnsan Bastiampillai / 2020 ஜூன் 20 இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, 'எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்' என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தி…

    • 1 reply
    • 567 views
  22. 03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்ற…

  23. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன? யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியிருந்தனர். இவ்வாறு கோரியவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினர் வவுனியா நகரசபை தலைவர் பதவியில் வெற்றியீட்டியதை மையப்படுத்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கை ஒ…

  24. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan.com யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். எட்டரை ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் ‘திஸ்ஸ விகாரை’ என்ற இந்தப் புத்த விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிக்கலசம் வைக்கும் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின…

  25. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.