Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 01 கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று, சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளை அழைத்து சந்திப்பொன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் முதலாளியும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஊடக நிறுவனத்தின் முதலாளி, 2010 முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வழக்கமாக, ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களும், பிரதானிகளுமே ஜனாதிபதிகளுடனான இவ்வாறான சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவதுண்டு. இது, ஜே.…

  2. தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும் – நிலாந்தன்… சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதை…

  3. தமிழ்த் தேசியமும் கறுப்பு ஜூலையும் இலச்சுமணன் கந்தையா / 2020 ஜூலை 23 இலங்கைத் தமிழ் இனத்துக்கு எதிராக, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தின் உச்சபட்ச ஆசிர்வாதத்துடன், 1983.07.23 அன்று அரங்கேற்றப்பட்ட நாடு தழுவிய, இன வன்முறையாகிய ‘கறுப்பு ஜூலை’ யின் 37 ஆவது நினைவு தினம் இன்றாகும். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, தபால்பெட்டிச் சந்திக்கு அருகில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டதுடன் வீதியில் போவோர் வருவோர் மீது எழுந்தமானத்துக்குத் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்தில் முன…

  4. தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் -இலட்சுமணன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன. இத்தகைய பிற்போக்குத் தனமான நடத்தைகளால் உருவான அரசியல் சூழ்நிலைகளானது, தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான, நீண்ட கால அபிலாசைகளைப் புறந்தள்ளி, நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை இல்லாமல் ஆக்கிவிடும் ஆபத்துகள் நிறைந்தவையாகும்…

    • 1 reply
    • 1.1k views
  5. தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது என்பது அடிப்படை. தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது. ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்…

  6. தமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும் - நிலாந்தன் 16 ஜூன் 2013 கடந்த வாரம் நானெழுதிய கட்டுரையில் பங்களிக்காத் தேசிய வாதிகள் என்ற ஒரு தரப்பினரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இது தொடர்பாகப் பலரும் அபிப்பிராயங்கள் தெரிவித்திருந்தார்கள். இன்று இக்கட்டுரையானது மேற்படி பங்களிக்காத் தேசியவாதிகள் பற்றிய ஒரு விரிவான பார்வையாக அமைகிறது.இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் பாரதியார் நடிப்புச் சுதேசிகள் என்றொரு சொற்றொடரைப் பயன்படுத்தியிருந்தார். நடிப்புச் சுதேசிகள் பற்றிய அவருடைய விளக்கம் எங்களுர் பங்களிக்காத் தேசிய வாதிகளுக்கும் ஓரளவுக்குப் பொருந்தக் கூடியதுதான். ஆனால், கடந்த சுமார் 60 ஆண்டுகால ஈழத்தமிழ் அரசியல் அனுபவம் எனப்படுவது இந்தியச் சுதந்திரப் போராட்ட…

  7. தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா தெற்கின் கடும்போக்குவாதிகளின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு பின்னால் வலுவான இந்திய அழுத்தம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றல்ல. வடக்கு தேர்தல் தெற்கில் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்கள், அதன் அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க, நமது சூழலிலோ அது வேட்பாளர்களை அடிப்படையாககக் கொண்டிருந்தது. தெற்கில் இடம்பெற்றது போன்று 13வது திருத்தச் சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் எவையும் வடக்கில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றவாறு விமர்சித்த சில குழுவினர் கூட, இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் வருகையுடன் தங்கள் வி…

    • 4 replies
    • 931 views
  8. தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும் -சட்டத்தரணி என்.கே. அஷோக்பரன் 2018ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தன்னிச்சையான முறையிலும் அரசமைப்புக்கு விரோதமாகவும் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது, அதற்கெதிராக எழுந்த வலுவான குரலாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் குரல் இருந்தது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இராஜவரோதயம் சம்பந்தன் ஆற்றிய பொறுப்பான பணி, பலராலும் வியந்து பாராட்டப்பட்ட ஒன்று. அவர், தன்னை ஒரு தமிழ்…

    • 4 replies
    • 1k views
  9. தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி by noelnadesan இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம் பிள்ளைகள் பார்த்து விடக்கூடாது என்பது பற்றித்தான் ஜெனிவா நகரத்தினர்…

    • 2 replies
    • 907 views
  10. தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை -புருஜோத்தமன் தங்கமயில் “தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில் ஒன்றாகக் கொள்ளலாம். ஏனெனில், தமிழ்த் தேசியம் என்கிற அரசியல் சித்தாந்தத்தை ஆயுதப் போராட்டங்களில் வழியாக, நான்கு தசாப்தங்களாக முன்னிறுத்திக் கொண்டிருந்த தரப்பொன்று, சடுதியாக அந்தப் போராட்ட வடிவத்திலிருந்து விலக்கப்படும் போது, எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல் இதுவாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசியமும் அதன் அரசியலும், இன்னமும் முள்ளிவாய்க்க…

  11. தமிழ்த் தேசியர்களின் இரட்டைப் போக்கும் தமிழ் மக்கள் பேரவையும்! கலாநிதி சர்வேந்திரா கடந்த வாரம் இளம் நோர்வேஜிய ஆய்வாளர் ஒருவர் தாயக நிலமைகள் குறித்தும் தமிழ் டயாஸ்பொறாவின் தாயக ஈடுபாடு குறித்தும் என்னுடன் கலந்துரையாடினார். இவர் அண்மையில் இரண்டு வாரங்கள் இலங்கைப் பயணம் செய்து பலரையும் சந்தித்து உரையாடி தரவுகள் சேகரித்து வந்தவர். இப் பயணத்தின்போது இவர் சந்தித்து உரையாடிய தமிழர்கள் பலரும் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் வாழ்வுநிலை சார்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசவில்லை எனவும், ஓர் எச்சரிக்கை கலந்த உணர்வுடன்தான் பேசினார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மாறாக இவர் சந்தித்துப் பேசிய சிங்கள சமூகத்தினர் ஆட்சிமாற்றம் குறித்து கூடுதல் மகிழ்வுடன் பேசியதாகவும் த…

  12. தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் December 1, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்த கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக் கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் சம்பந்தப்பட்ட கேள்வியாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள் இந்தத் தடவை ப…

  13. ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அ…

  14. தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள் October 26, 2025 1:00 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித…

  15. தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு December 11, 2025 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத் தரப்புகள் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இந்தச்சந்திப்பு நடந்ததாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்எம். ஏ. சுமந்திரனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தத் தரப்புகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கான புரிந்துணர்வில் இணக்கம் கண்…

      • Like
    • 4 replies
    • 351 views
  16. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்? முத்துக்குமார் ஜனவரி மாதம் அடுத்தடுத்து தமிழ் அரசியல் சூழலில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமெரிக்க பிரதிநிதிகளின் வடபகுதி விஜயம், அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என அரசதரப்பு தெரிவித்தமை, முஸ்லிம் மக்கள் குழு சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைக் கூற தீர்மானித்தமை, மேல்மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானமை, ஜனாதிபதி பங்குபற்றிய அரசவிழாவில் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றியமை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும். அமெரிக்க பிரதிநிதி ராப்பின் யாழ் விஜயம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்றது. 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். அரசாங்கத்திற்கு தை பிறந்தால் தலையிடி தொடங்கும் எ…

  17. வாக்குகளை பெறுவதற்காக பிரபாகரனைப் பற்றி பேசுவது அமைச்சர்களை அல்லது ஜனாதிபதியை சந்திக்கும்போது அரசியல் அமைப்புக்கு அமைவாக பேசி சமாளிப்பது போன்ற இரட்டைவேட அரசியல், 60 ஆண்டுகால போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயல்- உணர்ச்சிவசப்பட்டு வாய்கிழிய பேசாமல், அறிவுபூர்வமாக செய்ய வேண்டிய மூன்று வேலைத் திட்டங்கள்- -அ.நிக்ஸன்- தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை அவ்வாறே தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் சிங்கள கட்சிகளை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் பேசி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம…

  18. கட்டுரை ஆசியரின் இணக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயற்பாடுகளினால் 24 உறுப்பினர்கள் கடுமையான விரக்த்தி மனநிலையில்? உள்ளக ஜனநாயகம் இன்மையால் பரிதவிக்கும் ஏனைய கட்சிகள்- சரியான தலைமை இல்லை என குற்றம் சுமத்தியபோதும் அமைதிகாத்த சம்பந்தன். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று? -அ.நிக்ஸன்- தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவதைதை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவனைத்துச் செல்ல முடியாத சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்தையே செயற்படுத்தி வரு…

  19. தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரப்­போ­கின்­றதா? அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் வரப்­போ­கின்­றதா? என்று தெரி­யாமல் நாட்­டு­மக்கள் குழப்­பத்­தி­லேயே இருக்­கின்­றனர். அர­சி­யல்­வா­தி­களும் மக்­களை குழப்பும் செயற்­பா­டு­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதா­வது ஒரு­நே­ரத்தில் முழு­மை­யான அர­சி­…

  20. தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்! May 30, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலில் எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன் தேவைப்படுகிறார். தமிழரசுக் கட்சியின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கும் சுமந்திரனே தேவையாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களையும் கையாள்வது, பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களோடு தொடர்புகளைப் பேணுவது, அவர்களைக் கையாள்வது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு பேசுவ…

  21. தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா? இலங்கேஸ்வரன் கடந்த 11ம் திகதி தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கு தலைமை வகித்தார். கலந்துரையாடல் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவுசெய்வது தொடர்பான விடயத்தையும், வடமாகாணசபைத் தேர்தலில் ஒருமித்துப் போட்டியிடுவது என்பதையும் பற்றியது. இரண்டாவது அமர்வு கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி பொதுவேலைத் திட்டம், பொது அமைப்பு என்பவற்றை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. ஆனாலும் முதலாவது அமர்வில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றே தகவல்கள் வருகின்றன. சம்பந்தன் ஜனவரி மாத…

  22. தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்- February 21, 2021 இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்…

  23. தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும் இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி, ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான். சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில் இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது. அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள் இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்…

  24. தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? June 12, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையு…

  25. தமிழ்த்தேசியம் வெல்லுமா | இங்கர்சால் நார்வே | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.