அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இஸ்ரேல் கேட்கும் மன்னிப்புக்குள் மறைந்துள்ள திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 473 views
-
-
இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இவ்வாண்டு 'முள்ளிவாய்கால் வெற்றி' உரையில், 'இந்த நாள், தாய் நாட்டை மீட்டெடுத்த நாள். தாய் நாட்டை மீட்பதற்கான இந்தப் போரில் இலட்சக்கணக்கானோர் பலியானார்கள். உடல் உறுப்புக்களை இழந்தார்கள். இரத்தத்தை, வியர்வையைப் பூமிக்கு அர்ப்பணித்தார்கள். இவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்கா படையினரை சிலர் அனைத்துலக மேடைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தனர். புலிகளுடன் மோதவேண்டாம், அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தரம் ஆலோசனை கூறியது. புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் நாட்டைப் பிரித்துக் கொடுக்கவும் முயற்சித்தனர். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஓர் அங்குலத்தையயேனும் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்' …
-
- 0 replies
- 473 views
-
-
-
முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம் – செல்வரட்னம் சிறிதரன்… ‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார். வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில்…
-
- 0 replies
- 473 views
-
-
மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:34 Comments - 0 -இலட்சுமணன் உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்தான அசாதாரண நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்படுதல்தான், இப்போதைய தேவையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார் என்ற கரும்புள்ளியுடன…
-
- 0 replies
- 473 views
-
-
ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினைஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது. சிங்களத்தின் தமிழர் விரோத செ…
-
- 0 replies
- 473 views
-
-
புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள் யதீந்திரா புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்…
-
- 0 replies
- 473 views
-
-
ஒரு சகாப்தத்தின் முற்றுப்புள்ளி : கேள்விக்குறியாகும் தாய்லாந்தின் எதிர்காலம் சர்வதேச விவகாரம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதெவ் மரணித்து விட்டார். ஏழு தசாப்த காலம் அரியணையில் அமர்ந்திருந்த சகாப்தத்தின் முற்றுப்புள்ளி, ஒரு தேசத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்கு ஆளாகியிருக்கிறது. தமது குடிகளால் தெய்வீகக் குணாம்சம் பொருந்தியவராக மதிக்கப்படும் மாமனிதர். மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு தாய்லாந்து தேசத்தை ஒருமுகப்படுத்தி வைத்த தலைவர் என்ற பெருமைகள் ஏராளம். பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்து, தாய்லாந்தை நடுத்தர அளவிலான வருமானம் ஈட…
-
- 0 replies
- 473 views
-
-
எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Island ஆங்கில ஊடகத்திற்காக நேர்காணல் செய்த NILANTHA ILANGAMUWA* தெரிவித்துள்ளார். அந்நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரனுடன் அண்மையில் நான் மேற்கொண்ட நேர்காணலானது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதி விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. இவர் ஒரு சிறிலங்காத் தமிழ் சட்டவாளரு…
-
- 0 replies
- 473 views
-
-
விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா? யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மன்னாரிலும், மாந்தையிலும் ஏனைய கட்சிகளும் அதே உத்தியைக் கையாண்டுதான் பிரதேச சபைகளைக் கைப்பற்றின. தாம் அப்படி எந்தவோர் உத்தியையும் கையாளவில்லையென்று கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் அது தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தங்களோடு உரையாடியதாக ஈ.பி.டி.பி கூறுகிறது. கிளிநொச…
-
- 0 replies
- 473 views
-
-
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள் February 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள். இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா 2025 ஜனவரி 29 ஆம் திகதி புதன்கிழமை காலமானர். அவரது இறுதிக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் பெருமளவு மக்களின் ப…
-
- 0 replies
- 473 views
-
-
புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின் முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும் 30 Views 1945ஆம் ஆண்டில் 2ஆவது உலகப் பெரும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அனைத்து உலக நாடுகளின் மன்றம் நிறுவப்பட்டது முதல் ஐக்கிய அமெரிக்கா அனைத்துலக பொருளாதார நிறுவனங்களையும், இருதரப்பு பிராந்திய பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளையும், தாராண்மைவாத அரசியல் விதிமுறைகளையும் கட்டி எழுப்பிப் பேணுதல் மூலம் தனது அனைத்துலகு குறித்த அக்கறைகளை வளர்த்து வந்தது. இந்த கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் கூட்டாக ‘அனைத்துலக ஒழுங்குமுறை’ என அழைக்கப்பட்டது. அண்மைக் காலங்களில் வளரச்சியுற்றுள்ள உலக அதிகார மையங்கள் இந்த ‘அனைத்துலக ஒழுங்கு முறை’க்கு சவா…
-
- 0 replies
- 472 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம் -மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோலவே, தற்போதிருக்கின்ற களச் சூழலைப் பயன்படுத்தி, ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம், சட்டத் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆட்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் எடுத்து வருகின்ற எத்தனங்கள், 'சாண் ஏற முழம் சறுக்கும்' நிலைமைகளையே அவதானிக்க முட…
-
- 0 replies
- 472 views
-
-
ஜெனீவாவில் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்யும் காலம் அருகில்.! ராஜபக்ஷக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி (Meritocrazy) என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத் தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மெரிட்டோகிரசி என்பது ‘மெரிட்’ அதாவது தகமை அடிப்படையில் அல்லது தகுதி அடிப்படையில் ஒருவர் ஆட்சியைப் பிடிப்பது. தகுதி என்றால் என்ன? யுத்தத்தை வென்றதால் கிடைத்த தகுதிதான். அதுதான் யுத்த வெற்றி வாதம். அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம். யுத்த வெற்றிதான் ராஜபக்ஷக்களின் அரசியல் முதலீடு. அதை வைத்தே கோட்டாபய ஜனாதிபதியாக வந்தார். 2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்க…
-
- 0 replies
- 472 views
-
-
ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல... ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அப்பத்தை உண்டுவிட்டு அடுத்த நிமிடம், “நான் அவர்களுடன் ஒன்றுமில்லை” என்று, தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சிக்கான முயற்சி, 2015 ஜனவரியில் மஹிந்தவைத் தூக்கி எறிந்தது. ஆனால், அதை முறியடிப்பதற்கான முயற்சியிலிருந்து, தான் விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்…
-
- 0 replies
- 472 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்ற…
-
- 0 replies
- 472 views
-
-
முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்” தாயகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன்…
-
- 0 replies
- 472 views
-
-
அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திருத்தச் சட்டமூலம், அடுத்த மாதம் சபைக்கு வரும் என எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 472 views
-
-
ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு லக்ஸ்மன் கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது. உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும். 2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’ என்ற தோரணையிலேயே உரையாற்றியிருக்கிறார். இந்த உரையானது, பொதுஜன …
-
- 0 replies
- 472 views
-
-
2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் - நிலாந்தன் கடந்த மாதம் 19ஆம் திகதி. ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். ‘இன்று நாங்கள் 23 பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்’ என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது படித்துப்பட்டம் பெற்று வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஓர் ஆவிக்குரிய சபை பாஸ்ரரும், ஒரு முஸ்லிம் மாணவரும் அடங்குவர். அவர்கள் கேப்பாபிலவுக்குப்…
-
- 0 replies
- 472 views
-
-
‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான அரசியல்தான், ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல் என்றாகிறது. இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல், “நாம் எதிர் அவர்கள்” என்ற பெருந்திரள்வாத பகட்டாரவாரம் மூலம், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இதன் மூலதனம், இயல்பிலேயே மக்களுக்குள்ள ‘ஸ்தாபன அரசியல்’ மீதான அதிருப்தியாகும். “இவர்களே …
-
- 0 replies
- 472 views
-
-
சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன் சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்…
-
-
- 1 reply
- 472 views
-
-
தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல் - யதீந்திரா தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் …
-
- 0 replies
- 472 views
-
-
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்! February 3, 2025 — கருணாகரன் — தென்னிலங்கை அரசியற் களத்தைக் கலக்கும் NPP யும் அநுர குமார திசநாயக்கவும் வடக்கில் தமிழ்த்தரப்பையும் தடுமாற வைக்கும் உபாயத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்ற வெற்றி NPP க்கும் அநுர குமாரவுக்கும் வடக்கில் தமக்கான அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கான தந்திரோபாய நடவடிக்கையில் அநுர ஈடுபடுகிறார். அதனுடைய வெளிப்பாடுகளே, அவருடைய அண்மைய யாழ்ப்பாண விஜயமாகும். யாழ்ப்பாண விஜயத்தில் அநுர சில வெற்றிகளை உடனடியாகவே பெற்றுள்ளார். 1. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் அநுரவைச் சுற்றி…
-
- 1 reply
- 471 views
-