அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சிறுபான்மைக் கட்சிகளுக்குள் வங்குரோத்து அரசியல் வேண்டாம்’ ப. பிறின்சியா டிக்சி நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தாக்கிப் பேசினால் அல்லது இவர்களை இழுவுபடுத்திப் பேசினால் இந்தப் பகுதி மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள் என்ற வங்குரோத்துநிலை அரசியலை, சிறுபான்மைக் கட்சிகள் விட்டுவிட வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘மரம்’ சின்னத்தில், இலக்கம் 01இல் மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்தார். எதிர்கால சமூகம், ஒட்டுமொத்தமாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான நல்ல கருத்துகளை, மக்கள் மத்தியில் முன்வைத்து, தேர்தல் பிரசாரத்தைச் செய்கின்ற போது, மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகைசார் பெரியவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தவேளை, ஜெனிவாவுக்குத் தாம் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்தின் சொந்தக்காரராக இரா. சம்பந்தன் ஐயா இருந்தார். சம்பந்தனின் தீர்மா னத்தை கூட்டமைப்பில் இருக்கக்கூடிய யாதார்த்த நிலை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எதிர்த்தனராயினும் அந்த எதிர்ப்புகள் பலிதமாகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக் குச் சென்று தமிழ் மக்களின் நிலைமைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும் என பல தடவைகள் வலம்புரி இவ் விடத்தில் கருத்தியம்பியது. என்னசெய்வது! ஒளியைக் கண்டு பயம் கொள்கின்ற பெர…
-
- 0 replies
- 632 views
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி தமிழ் அரச ஊழியரை இனரீதியில் கீழ்மைப்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முற்படவில்லை. மாறாக அவரை சமாதானப்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். ஒரு பிக்கு இனங்களுக்கிடையிலான பகையை தூண்டும் வார்த்தைகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி ஒரு அரச ஊழியரைக் கீழ்மைப்படுத்தும் போது சட்டம் ஒழுக்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அதைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முயலவில்லை. அவர்கள் அந்த பிக்குவுக்குக் கீழ்ப்பட்டவர்களாக…
-
- 0 replies
- 561 views
-
-
ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா? முத்துக்குமார் பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஜெனிவாக்களம் பிசுபிசுத்து விட்டது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது இயலாத்தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டன. ஜெனிவாவிற்கான அமெரிக்க தூதுவர் தங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான் என தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நேரடியாகவே கூறிவிட்டார். பிரேரணை நான்கு முறை வீரியக் குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தமிழக மாணவர் போராட்டம் சற்று முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தால் சிலவேளை பிரேரணை வீரியக் குறைப்பிற்கு உள்ளாகாமல் இருந்திருக்கலாம். உண்மையில் இந்த வருட ஜெனிவாக்களம் ஒரு பண்பு மாற்றத்தினையே வேண்டிநின்றது. அடிப்பது போன்று பிரமையை தோற்று…
-
- 4 replies
- 928 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசவேண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். கல்முனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றார். இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு 18 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. முஸ்லி…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு எதிர்வரும் 06ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைகள் மீதான விவாதம் எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியலமைப்புப் பேரவை நியமித்த ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பு வழிநடத்தல் குழு…
-
- 0 replies
- 497 views
-
-
புத்தர் சிலையும் தமிழீழ மண்பறிப்பும் .! சிங்கள இனவாத அரசாங்கம் அன்று முதல் இன்றைய மணித்துளிகள் வரை புத்த மதம் என்கின்ற தத்துவத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடாத்திக்கொண்டு வருகிறது நிகழ் காலத்தின் தேவை கருதி மீள் வெளியீடாக புத்தர் சிலையும் தமிழீழ மண்பறிப்பும் என்ற கட்டுரையை தாரகம் இணையத்தில் இணைக்கின்றோம் எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் சிறிலங்கா அரசியல் சாசனம் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது. 1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய அரசியல் சாசனத்தின் ச…
-
- 1 reply
- 864 views
-
-
ஜெனீவா: உருளும் பகடைகள் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டது என்று, நம்பச் சொல்கிறவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இன்னமும் ஐ.நாவைக் கைகாட்டும் தமிழ்த் தேசியவாதிகளைப் பார்க்க முடிகிறது. ஜெனீவாவை முன்னிறுத்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் எதுவுமே, மனித உரிமைகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. மாறாக, அவை இலங்கை மீதான செல்வாக்கை நோக்காகக் கொண்டவை. ஜெனீவாவை மையங்கொண்டு உருளும் பகடைகள், தமிழ் மக்களின் மீதோ, இலங்கை ஜனநாயகத்தின் மீதோ அக்கறை கொண்டு உருட்டப்படுபவையல்ல! இ…
-
- 0 replies
- 632 views
-
-
இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன் 23 நவம்பர் 2013 மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது. கொழும்பு மாநாட்டுத் தலையிடி பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொது…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.! இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்க ஒரு சமூகமாக விளங்குகின்றனர். இம்மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சிறப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. இது தொடர்பில் வெளிநாட்டவர்களே பல சமயங்களில் வியந்து பாராட்டி இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இந்திய வம்சாவளி மக்களில் சிலர் தமது தனித்துவத்தையும், சிறப்புக்களையும் உணராது மெதுமெதுவாக பௌத்த கலாசாரத்தை பின்பற்றி சிங்கள மயமாகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் இவர்கள…
-
- 2 replies
- 860 views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - on June 2, 2014 தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அர…
-
- 9 replies
- 1.4k views
-
-
பினணமுறி விசாரணை அறிக்கை ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமா? மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினால் 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு கண்டறிந்திருப்பதாகவும், இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிப்பாக அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை இதுதொடர்பான விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்ப…
-
- 1 reply
- 454 views
-
-
AIADMK to dip toe in Kerala's assembly poll waters (IANS) 10 April 2006 CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts. The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly. K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time…
-
- 0 replies
- 1.4k views
-
-
சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவின் ஐஎன்எஸ் துருவ் (இடது), சீனாவின் யுவான்வாங் 5 (வலது) இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்? உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன. நாட…
-
- 0 replies
- 484 views
-
-
யுத்த நிலை தீவிரமடைந்து வருவதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். என்று யுத்த பீதி அதிகரித்து வருவதால் நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது. புதிய முதலீடுகளை வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நிறுத்திவைக்கத் தொடங்கிவிட்டனர். தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக கிரிக்கெட் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலையும் உரு வாகி யிருக்கிறது. அரச படைகளுக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந் திருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் மட்டுமன்றி நாடு முழுவதுமே முழு அளவி லான யுத்தத்தினுள் சிக் கிக்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும…
-
- 4 replies
- 2k views
-
-
பான் கீ மூனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்தின் எந்தவொரு சக்திக்கும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு வழங்கப்படுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் குறித்த நிபுணர் குழு இலங்கை வர அரசாங்கம் தற்போது அனுமதி அளித்துள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டைவேடம் வெளியாவதாகவும் அவர் சுட்டிக்க…
-
- 0 replies
- 706 views
-
-
முச்சந்தி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு மாறியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகள், இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது, மிகவும் கடினமாகும்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறி…
-
- 0 replies
- 446 views
-
-
தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையி…
-
- 1 reply
- 662 views
-
-
தவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…! சிவ.கிருஸ்ணா- வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ளது. உடனடியாகவே வடக்கு மாகாண சபை மற்றும் ஏற்கனவே பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தினால் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளதுடன், பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழலை ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தம் ஆட்…
-
- 0 replies
- 869 views
-
-
தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல் ஜனநாயகம் தன் உண்மை முகத்தைக் காட்டும் போது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். எதை ஆண்டாண்டு காலமாக, ஆதரித்துக் காத்து வந்தார்களோ, அதுவே அவர்களைக் குறிவைக்கும் போது, பாரபட்சமின்றிக் கொன்றொழிக்கும் போது, மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்தத் திகைப்பிலிருந்து அவர்கள் வெளிவரும் முன்னர், அவர்களது எண்ணங்கள் மடை மாற்றப்படுகின்றன. அதிகாரத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சிந்திப்பது ஆபத்தானது. மக்கள் சிந்திப்பதையும் செயற்படுவதையும் ஒன்றிணைவதையும் அனுமதிப்பதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். இதனால்தான், அறிவால் அல்லது ஆயுதத்தால் மக்களது சிந்தனைக…
-
- 0 replies
- 386 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? Digital News Team லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்கள…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கையில் சீனாவின் கை ஓங்குகிறதா? சேது ராமலிங்கம் இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சிகளுக்குள் பெரும் மோதல் வெடித்து அரசியல் நெருக்கடியாக மாறியது. இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கடந்த 26ஆம் தேதியன்று மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைப் பதவி நீக்கம் செய்வதாக எழுத்துபூர்வமாக அறிவித்தார். அவருடைய கட்சியையும் கூட்டணி ஆட்சியிலிருந்து விலக்கினார். உடனடியாகப் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பார் என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதே போல ராஜபக்சே பதவி ஏற்று அமைச்சரவையும் நியமித்தார். இது எந்த வகையிலும் இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் தான் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் …
-
- 0 replies
- 662 views
-
-
மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா? Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:15 - தமிழ் மிரரின் விவரணப் பிரிவு ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் தான் இது. மத்தியகாலத் தேர்தல் என்றால்? ஐ.அமெரிக்காவில், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம், இரண்டு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுவது, கீழவையாகக் காணப்படுவதோடு, செனட் என்று அழைக்கப்படுவது, மேலவையாக உள்ளது. இதில், பிரதிநிதிக…
-
- 0 replies
- 500 views
-