அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? [Tuesday, 2014-02-18 23:49:01] மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும் தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான் இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த …
-
- 1 reply
- 4k views
-
-
புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு! மீராபாரதி புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களே……. இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாத, போராட முடியாத இராணுவ மயப்பட்ட சூழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்பட்ட சூழல். இவ்வாறான பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகள் மற்றும…
-
- 2 replies
- 831 views
-
-
புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம் Published on September 1, 2015-1:28 pm · No Comments புலம்பெயர் தமிழர்கள் என்ற அடைமொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம்மிக்க சக்தியாகவும், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் தாமே என்றும் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. உதாரணமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கடந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்…
-
- 7 replies
- 647 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர் http://www.kaakam.com/?p=1136 இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இ…
-
- 0 replies
- 864 views
-
-
-
- 0 replies
- 245 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா? ரணில் ஜனாதிபதியான பின்னர் ஏற்படும் மாற்றங்கள் — ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது Eelam Tamils என்று சொல்வதில்லை– -அ.நிக்ஸன்- புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமை…
-
- 1 reply
- 498 views
-
-
புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையாக வெற்றியடைந்த பிறகு, எழுப்பப்…
-
- 0 replies
- 331 views
-
-
புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் -01 August 22, 2023 —- கருணாகரன் —- கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் சமூகம் இலங்கையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள், போராட்டத்துக்கான பங்களிப்பாக, போர் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக, சுனாமி மற்றும் கொரோனா கால பேரிடர்களில் துயர் களைவதாக எனப் பல வகையில் இருந்து வருகிறது. மட்டுமல்ல, இந்தப் பாதிப்புகளுக்குட்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூக மேம்பாடு எனப் பலவற்றுக்காகவும் உதவுகிறது. கூடவே துறைசார் அறிவுப் பகிர்தலையும் இப்பொழுது ஆற்றி வருகிறது. இவற்றைப் பற்றி இந்தத் தொடர் விவாதிக்கிறது. புலம்பெயர் சமூகம் இன…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால், திரும்பிப் பார்க்கும்போது, இந்தச் சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை, இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கையாளவும் முடியாது (இது கூ…
-
- 0 replies
- 480 views
-
-
புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா? - யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற்தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது, இந்தச் சொல்லை தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம…
-
- 0 replies
- 827 views
-
-
-
- 2 replies
- 807 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள். இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம். வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என திணைக…
-
- 1 reply
- 425 views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பலதரப்பினருக்குமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறது. ஈழத்திலுள்ள தமிழ் மக்கள், தமிழ் அரசியற்கட்சிகள், இலங்கை அரசாங்கம், புலம்பெயர் தமிழர்கள் என்று எல்லோருக்குமான விசேட செய்திகளை நரேந்திர மோடி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்திகளில் அநேகமானவை இந்தியாவினால் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிரல்’ என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்க…
-
- 3 replies
- 873 views
-
-
புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன் பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு…
-
- 0 replies
- 284 views
-
-
புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், அரசாங்கச் செலவுகளில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது, 200…
-
- 15 replies
- 798 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் எம். எஸ். எம் ஐயூப் இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும் விளக்கமாகக் கூறுவதாயின், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு ஆண்டுகளிலேயே, இவ்வாறு அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, மீண்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்நான்கு சந்தர்ப்பங்களிலும், தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புக…
-
- 0 replies
- 307 views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் 'இனஅழிப்பிற்கு' உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை உலகத்தமிழர்கள் சுட்டிக்காட்ட முனையும் அதேவேளை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது 'போர்குற்றம்' என்பதை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கூறி வருகின்றன. 'போர்குற்றம்' என்றால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம், ஆகக்கூடினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையோ அல்லது நட்டதொகையோ வழங்கப்படலாம் இது இன்னும் ஒருவகையில் சிறிலங்கா அரசியல் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஏற்று கொண்டதாக கருதப்படலாம். ஆனால் 'இனஅழிப்பு' என்று நிரூபிக்கப்பட்டால். த…
-
- 1 reply
- 627 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை சொல்லும் புதிய செய்தி -புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாள்களுக்கு உள்ளேயே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது. குறித்த அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான தடை, ராஜபக்ஷர்களின் கடந்தகால ஆட்சியின் போதும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சிக் காலத்தில், குறிப்பாக 2016ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அமைப்புகள், தனி நப…
-
- 0 replies
- 525 views
-
-
புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது. தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளை…
-
- 0 replies
- 495 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும், அதனைச் சார்ந்த மனித உரிமை அமைப்புக்களும் அண்மைக் காலமாக சிறீலங்கா அரசு மீது மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் என்பது மிகப்பெரும் சவலாக எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதை தற்போதைய சிறீலங்கா அரசு நன்கு அறியும். சுருக்கமாக கூறப்போனால், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா நிம்மதியாக உறங்க முடியாத நிலை ஒன்றே மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா படை அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு கொண்டு வந்த பயணத்தடை ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் இடம்பெற்ற ம…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் சுமந்திரனின் சுத்து மாத்து விளக்கம், அதிக பிரசங்கிகள் தூக்கிப் பிடிக்கும் போக்கும்....
-
- 15 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தேசத்தில் சுமந்திரனை எதிர்ப்பவர்கள் யார்? | செய்திகளுக்கு அப்பால் | பகுதி 01 நன்றி - யூரூப்
-
- 0 replies
- 448 views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள துணை இராணுவக் குழுவினரை வெளியேற்ற அழுத்தம் கொடுப்போம் [செவ்வாய்க்கிழமை, 20 யூன் 2006, 20:02 ஈழம்] [பிரான்சிலிருந்து சி.யாதவன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார். ... ....... எனவே சில உயிரற்றுப் போன …
-
- 3 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் புதியதலைமுறையின் கவனத்திற்கு/For younger generation of Tamil Diaspora/Geneva/ICC/UNHRC
-
- 0 replies
- 721 views
-
-
புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. …
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-