Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான் November 9, 2021 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகள்: தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் அல்லது அழிந்து செல்லும் நிலைமைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நாங்கள் கடந்த காலத்தில் எழுதியுள்ளபோதிலும், இன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலைமையினையும், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லமுடியும் என்பதையும் எழுதவேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகள் தொ…

  2. வரலாற்றுப் பழியை சுமக்குமா கூட்டமைப்பு? பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்­களின் ஒருங்­கி­ணைந்த கூட்­டத்தில், புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு எதி­ரான முடிவு எடுக்­கப்­பட்ட பின்னர், அர­சாங்­கத்தில் உள்ள தலை­வர்கள் அனை­வரும் ஒற்­றை­யாட்சி புரா­ணத்தைப் படிக்கத் தொடங்­கி­யுள்­ளனர். அஸ்­கி­ரி­யவில் நடந்த மேற்­படி கூட்­டத்தை அடுத்து, கண்­டியில் ஜனா­தி­பதி மாளி­கையில் பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்­கர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து தமது நிலைப்­பாட்டை விளக்­கி­யி­ருந்­தனர். இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கோ, பௌத்த மதத்­துக்­கான முன…

  3. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலையை புரிந்து கொள்வார்களா….? நரேன்- தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்கு பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உள ரீதியாகவும், மனிதாபிமானமாகவும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் மைத்தி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகியது. இந்த கூட்டராங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. போர் முடிந்த நிலையிலும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றி வாதத்தில் மிதந்ததுடன் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே…

  4. கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்:- நிலாந்தன்:- 12 அக்டோபர் 2014 "ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு புலிகள் இயக்கம் அதன்நோக்கு நிலையிலிருந்து TNAஐ ஒரு கட்சியாக பதிவதில் அக்கறை காட்ட வில்லை" ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சின…

  5. Anura Kumara Dissanayaka கூறியது என்ன? | Sri Lanka Politics | Unmaiyin Tharisanam | IBC Tamil சமகால தமிழர் அரசியல் குறித்தான அரசியல் பார்வையை தொட்டுள்ளதாலும், சில கவனத்திற்குரியன என்பதாலும் இணைத்துள்ளேன். நன்றி-யூரூப்

    • 1 reply
    • 399 views
  6.  யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்? முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது. ஆயுத மோதல்களின் பெரும் அழிவுகளை எதிர்கொண்டு அல்லாடுகின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களும…

  7. "வீச்சு" : The Reach !!! அதிகாரப்பகிர்வை நிராகரித்த கோட்டாபய ராஜபக்சவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டும். கருத்தாளர்கள் : பொன் பாலராஜன் நிக்ஸன் அமிர்தநாயகம் நெறியாளர் : உதயன் S. பிள்ளை

  8. புதிய அரசமைப்புக்கான முயற்சியை அரசாங்கம் கைவிடுமா? புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தாம் பதவிக்கு வந்த நாள் முதல், அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்று சந்தேகம் கொள்ளக் கூடிய நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் இலங்கையில் முக்கிய மூன்று பௌத்த பிரிவுகளின் தலைமைப் பிக்குகள், அதாவது மகாநாயக்க தேரர்கள் கூட்டாக எடுத்த முடிவின் காரணமாகவே அந்தச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் கூடிய இலங்கை பௌத்தர்களின் மூன்று முக்கிய நிகாயாக்கள் என்றழைக்கப்படும் ‘சியம் நிக்காய’, ‘ராமஞ்ஞ நிக்காய’ மற்றும் ‘அமரபுர நிக்காய’ ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் நாட்டுக்குப் புதிய அர…

  9. சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும். 14 Views இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதி…

  10. மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…

  11. உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பல…

  12. உக்ரைன் போரும் உலகில் அதன் தாக்கமும் தமிழில்: ஜெயந்திரன் February 26, 2023 உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள முழு அளவிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கும் மில்லியன் கணக்கிலான மக்களின் இடப்பெயர்வுக்கும் எண்ண முடியாத அளவுக்கு வீடுகள், பொது மக்களின் கட்டடங்கள், உட்கட்டுமானங்கள் போன்றவற்றின் அழிவுக்கும் இந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருக்கிறது. உலகில் அறநெறி ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் என்ன நிலையில் ரஷ்யா தற்போது இருக்கின்றது என்பதையும் இது கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஏனென்றால் இந்தப் போருக்கு போதிய தயார் நிலையில் ரஷ்ய இராணுவம் இருக்கவில்லை என்பதையும் அதே நேரம் ர…

  13. பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய, கவர்ச்சிகரமான, இனிமையான வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சூழல் சார்ந்த நுணுக்கமான வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு. இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்தொரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அன்றி வெளிநாட்டு …

  14. ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கையாள்கின்ற பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. யுத்தத்திற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா நகரசபைக்கும் யாழ். மாநகரசபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. முகாமில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாகவும் ஒட்டுமொத்த யுத்தம் தொடர்பாகவும் வன்னி மக்களும் யாழ்ப்பாண மக்களும் எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக இலங்…

  15. இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…

  16. மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன், கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பாரென்ற ஓரளவு உறுதியான நம்பிக்கை, இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு அனுபவமும் திறமையையும் கொண்ட ஒருவர், தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தான், தனது வெற்றியை ஓரளவு உறுதிப்படுத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இம்முறை தேர்தல், ஆச்சரியங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்திய தேர்தலாக இருக்கையில், அவ்விடயத்த…

  17. முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன் May 26, 2025 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று நிறைவடைந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டிருக் கின்றது. குறித்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ்…

  18. ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள். ‘மாற்றம்’ என்ற கோஷத்தினால் மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல் உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட …

  19. குடியரசுத் தேர்தல் பதவிக்கான குதிரையோட்டம் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல், களை கட்டி விட்டது. ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக, இந்தமுறைத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டொக்டர் ராஜேந்திரபிரசாத், பீஹார் மாநிலத்தில் இருந்துதான் தெரிவு செய்யப்பட்டார். இப்போதும் பீஹார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட இருக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த, முதல் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், இந்தமுறை வித்தியாசமான தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. எதிரும் புதிருமாகப் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, ராம்ந…

  20. புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா? தமிழ் மக்களுக்கு சலுகை வழங்க முற்படுவோர், கொல்லப்பட வேண்டும் என்ற மனோநிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. இது, கடந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துகளாலும் அக்கருத்துகளுக்கான அவர்களின் ஆதரவாலும் தெரியவருகிறது. உத்தேச புதிய அரசமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு, அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை விடயத்தில், மஹிந்தவின் அணியினர் வெளியிட்டு வரும் கருத்துகள் மூலமே, அவர்களது இந்த கொலைகார …

  21.  ஐ. நாவின் முகமும் தமிழ் மக்களின் மீட்சியும் - அருட்தந்தை மா. சத்திவேல் இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைப் பேரவையில் 30/1 இல் ‘போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள், துஸ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையுடன் இணைந்து சர்வதேச நீதிபதிகள், பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்’ எனும் பிரேரணை இலங்கையின் அனுசரணையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாண்டு, கடந…

  22. தடை நீக்கமும்... ஜெனிவாவும். – நிலாந்தன்.- புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு தொகை தனி நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கி இருக்கிறது. இந்த தடை நீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முடிவு அல்ல. ஏற்கனவே கோதாபய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க இப்பொழுது சில அமைப்புகளையும் நபர்களையும் தடை நீக்கி இருக்கிறார். இது தொடர்பாக நான் எழுதிய ஒரு கட்டுரை குறித்து கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தார்… ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓரணியாக அல்லது நிறுவனமயப்பட்டு நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் நாட்டில் இருக்கும் தமிழ்த் …

  23. கடப்பாட்டுக்கா, நிலைப்பாட்டுக்கா இந்தியாவின் முன்னுரிமை? பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார். தனிப்பட்ட பயணமாக வந்திருந்தாலும் அவர் வெளிவிவகார அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்திருந்தார். ஆனாலும், அவர்களையெல்லாம் தானாகத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை என்றும், தம்மைச் சந்திக்க விரும்பியவர்களையே சந்தித்தேன் என்ற பாணியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். யாழ். சென்றிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு வடக்கு மாகாண முதலமைச்…

  24. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்

  25. மாற்­றத்­துக்­கான ஆண்டா 2020? மாற்­றத்­துக்­கான ஆண்டா 2020? மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் பிர­கா­ச­மாக உள்­ள­தாக இந்­தி­யா­வி­லி­ருந்து வௌிவ­ரும் பிர­ப­ல­மான செய்­திப் பத்­தி­ரிகையொன்று­ தெரி­வித்­துள்­ளது. பின்­ன­டை­வைச்சந்­தித்­தும் நம்­பிக்­கை­யு­டன் செயற்­பட்டார் மகிந்த கடந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு­விய மகிந்த, அட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.