அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
22 ஜூன் 2011 ஜே.சி.வெலிஅமுன பகுதி 2 - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இறுதிச் சடங்கும் அரச கைப்பற்றுகையும் அனேகமாக, அரசினுடைய நடவடிக்கைகளில் ஆகத் திகைப்பு ஊட்டுவதாக, கொல்லப்பட்டவரின் 'இறுதிச் சடங்கு' இருக்கிறது. ஒரு சனநாயக சமூகமானது அந்த இறுதிச் சடங்குகளில் என்ன நடந்தது என்பதை மறக்கக் கூடாது என்பது கட்டாயமானதாகும். மீண்டும் சொல்கிறேன், கட்டாயமானதாகும். குறிப்பாக, இனி வரப் போகும் காலங்களில், இதுதான் நடக்கப் போகிறதாக இருக்கலாம் என்பதனால்தான் அதனை மறைக்க வேண்டாம் என்கிறேன். இறுதிச் சடங்குகளை அரச ஊடகங்கள் கையாண்ட முறையானது, போர்ச் செய்திகளை அவை கையாண்ட முறையிலிருந்து வேறுபட்டதாக இல்லை. அச் செய்திகள் அரசுக்கு ஆதரவானதும் ஒரு பக்கச் சார்பானதாகவும்…
-
- 0 replies
- 609 views
-
-
ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…
-
- 0 replies
- 346 views
-
-
முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 01:41Comments - 0 அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள். குறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது. இதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் …
-
- 1 reply
- 554 views
-
-
சம்பூர்: மீள்குடியமர்த்தப்படுவார்களா மக்கள் – ஒரு பார்வை தற்போதைய பீல்ட் மாஸ்ரர் சரத்பொன்சேகா அவர்களுக்கு 2006 சித்திரை மாதம் கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக மறுநாள் பழிவாங்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி நோக்கி சரமாரியான செல், பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அலறியடித்து உடுத்த உடுப்புடன் கையில் எடுத்தவற்றுடன் ஓடிய சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான நம்பிக்கையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நீண்ட இடம் பெயர்வையும் அகதி வாழ்வையும் சந்தித்த இந்த மக்களின் மீள்குடியேற்றம் எவ்வகையில் நிகழப்போகின்றன எ…
-
- 0 replies
- 736 views
-
-
ரஸ்யா மீதான தாக்குதல் போரை மாற்றுமா? | அரசியல் களம் |போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 269 views
-
-
தேரர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்கும் சட்டம், ஒழுங்கு! நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் போன்று சித்திரித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முஸ்லிம்களின் மீது மற்றுமொரு வன்முறை கட்டவிழ்த்து விடக் கூடாதென்பதற்காகவுமே முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்கள். முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு ஆளும், எதிர்த் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா சிங…
-
- 0 replies
- 531 views
-
-
ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப்; பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக…
-
- 0 replies
- 319 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்…
-
- 0 replies
- 304 views
-
-
தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பது தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கலான விடயமா கவே உள்ளது. வாக்களிப்பதா, வாக்களிக் காமல் விடுவதா என்ற சிந்தனையும் அவர்களை வாட்டுகின்றது என்றே கூற வேண்டும். வாக்களித்தால், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு இதமான தர்க்கரீதியான திருப்தியளிக்கத் தக்க பதில் அவர்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும். இரண்டு பிரதான வேட்பாளர்கள். ஒருவர் கோத்தபாய ராஜபக் ஷ. மற்றவர் சஜித் பிரேமதாச. இவர்களுக்கிடையிலேயே போட்டி தீவிரம் பெற்றிருக்கின்றது. இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பத்…
-
- 1 reply
- 621 views
- 1 follower
-
-
தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும் February 16, 2025 — கருணாகரன் — தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன், சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது. ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தே…
-
- 0 replies
- 469 views
-
-
ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ? கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரி…
-
- 0 replies
- 548 views
-
-
நண்பர்களே எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சூடு பிடிக்கிறது என்று ஆனால் இங்கே கல்முனைப்பகுதியில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை உங்கள் முன் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் தொடர்பான ஆதார பூர்வ தகவல் இது. கல்முனை வேட்பாளர்களில் இருவர் இந்த தேர்தலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் (இவர்கள் பெயரை குறிப்பிடவில்லை ) தேவைப்படின் தரமுடியும் ஒருவர் (BAR) முதலாளி நானறிந்த காலத்திலிருந்து இவருக்கு இது தான் தொழில் . படிப்பறிவு சற்றும் இல்லை . மற்றவர் (road contractor) முதலாமவரோ இவரோடு ஒப்பிடும் பொது பரவாயில்லை அப்படி வடி கட்டிய முட்டாள் (ஆனால் பேராசிரியர் பட்டம் வைத்திருக்கிறா…
-
- 12 replies
- 1.8k views
-
-
புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா? - யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற்தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது, இந்தச் சொல்லை தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம…
-
- 0 replies
- 827 views
-
-
சிதைந்த மாற்றுத் தலைமைக் களம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 10 தமிழ்த் தேசிய அரசியலில், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புகளாலேயே 'நீக்கம்' செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் வேதனையானது. புலிகளுக்குப் பின்னரான காலத்தில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலில், அதிருப்தியுற்ற தரப்புகளும் அப்படித் தங்களைக் காட்டிக் கொண்ட தரப்புகளும் புலம்பெயர் தேசமும், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களத்தைத் திறந்தன. குறிப்பாக, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பி…
-
- 0 replies
- 646 views
-
-
ஓய்வூதியர்களின் நீதி ? – நிலாந்தன் நிலாந்தன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து வருகிறது. அதன் பொருள் இறைச்சிக்கடை அல்லது யுத்த களத்தில் தொகையாகப் பொது மக்களைக் கொல்…
-
- 0 replies
- 708 views
-
-
கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்தைத் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வர…
-
- 0 replies
- 413 views
-
-
புலிகளை முற்றாக அழிக்கும் இந்திய மத்திய அரசு முடிவு
-
- 0 replies
- 443 views
-
-
மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…
-
- 5 replies
- 899 views
-
-
இரு மொழி ஒரு நாடு ஒரு மொழி இரண்டு தேசம் -கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும் ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து…
-
- 3 replies
- 728 views
-
-
பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-5
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
அதிர்ச்சியளிக்கும் அரசாங்கத்தின் வன்போக்கு – செல்வரட்னம் சிறிதரன்:- நல்லாட்சி அரசாங்கத்திலும், நீதியையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படுகின்ற போக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமையையே காண முடிகின்றது. சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பாதுகாப்புத் துறையினரைச் சார்ந்திருக்கின்றது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பு நீதி அமைச்சைச் சார்ந்திருக்கின்றது. எனவே, சட்டத்தையும் நீதியையும் நியாயமான முறையில் நிலைநாட்டுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகக் கருதப்படுகின்றது. ஆனால் மனித உரிமை நிலைமைகளையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடுபற்றியும் நேரில் கண்டறிந்த ஐநாவின் விசேட அறிக்கையாள…
-
- 0 replies
- 507 views
-
-
இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,BASIL RAJAPAKSA'S FACEBOOK இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது. உள்நாட்டிலுள்ள டாலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில்…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-8
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் இனவாதமும். IBC TAMIL INTERVIEW PART 1
-
- 0 replies
- 448 views
-