Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism) 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது. இக்கவிதைகள் இலங்கையில் இன்னும்…

  2. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 03:21 PM கலாநிதி ஜெகான் பெரேரா போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற ந…

  3. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்த…

  4. பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

  5. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யும…

  6. "விலைபோகும் நீதி" "விலைபோகும் நீதி முல்லைத்தீவில் புரியுது தலையாட்ட மறுத்தவனுக்கு பயமுறுத்தல் வேறு! கொலைக்குப் பயந்து நாட்டையே துறந்தான் அலையாத மனமும் திரையில் மறைந்தது!" "அடங்காத வெறியர்களின் ஆட்டத்தை நிறுத்த அறிவாகத் தர்மத்தை எடுத்து உரைத்தானே! அளவாகச் சட்டத்தை நேர்மையாகப் பாவித்தவனுக்கு அசிங்கமான பேச்சே பரிசாகக் கிடைத்ததே!" "புத்தநாடு இதுவென பெருமையாகக் கூறுபவனே புத்தன் போதித்த கொள்கை தெரியுமா? புகழ்மிக்க எங்கள் இலங்கை நாட்டை புற்று நோயாய் மகாவம்சம் கெடுக்குதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாண…

  7. Published By: VISHNU 21 MAY, 2024 | 03:42 AM சிவலிங்கம் சிவகுமாரன் தோட்ட நிர்­வா­கத்­தி­னரால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் மிக மோச­மாக தாக்­கப்­பட்டு வரும் சம்­ப­வங்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் தொழிற்­சங்­கங்­களும் மலை­யக அர­சியல் கட்­சி­களும் தடு­மாறி நிற்­கின்­றன. சம்­பவம் இடம்­பெற்ற பிறகு குறித்த இடத்­துக்குச் சென்று பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளிடம் வாக்­கு­மூலம் கேட்­பதும் அவர்கள் அடித்தால் திருப்பி அடி­யுங்கள் என்று கூறி விட்டு வருவதன் மூலம் தமது கட­மைகள் முடிந்து விடு­கின்­றன என மலை­யக அர­சி­யல்­வா­திகள் நினைக்­கின்­றனர். இரத்­தி­ன­புரி கிரி­யல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தும்­பர தோ…

  8. "யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம…

  9. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது? May 20, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு் முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை அடைந்ததையே நாம் கண்டோம். நாட்டைச் சின்னா பின்னப்படுத்திய போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணங்கத்தீர்வு ஒன்றைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்று தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம் சிந்தனை இருப்பத…

  10. 20 MAY, 2024 | 02:46 PM (டி.பி.எஸ். ஜெயராஜ்) இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான இலங்கைத் தமிழர்கள் 11.1 சதவீதத்தினராக இருந்தனர். மூன்றாவது பெரிய இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்கள் 9.3 சதவீதத்தினராகவும் நான்காவது பெரிய இனத்தவர்களான 'மலையகத் தமிழர்கள்' என்று அறியப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களான இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்திய தமிழர்களும் சனத…

  11. 20 MAY, 2024 | 05:33 PM சிவலிங்கம் சிவகுமாரன் இறுதி யுத்தத்தின் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக கஞ்சி வழங்கும் நிகழ்வை வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல வழிகளிலும் தடைகளையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம், அந்நிகழ்வில் ஈடுபட்ட பெண்களை நடு இரவில் வீடு புகுந்து அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. சில பிரதேசங்களில் கஞ்சி பரிமாறலுக்கு நீதிமன்ற தடையை காரணங்காட்டி வரும் பொலிஸார், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமல் போனோரை நினைவு கூருவதற்கும் தடை விதித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் …

  12. பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. …

  13. Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 06:17 PM முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா, வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட…

  14. மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமி…

  15. "அமைதியின் கதவு திறக்கட்டும்!" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத…

  16. “இது இனப் படு கொலை!” "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!” “விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!” …

  17. "வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலா…

  19. காலம் கோருவது வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே May 16, 2024 — கருணாகரன் — “முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படு…

  20. மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்! -ச.அருணாசலம் வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்? தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான பாலத்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த அக்டோபர் 7 ல் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது நட…

  21. "மன்னிப்பு" [சமாதானம் நிலவ, மன்னிப்பு கேட்பது அவசியம்] "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற…

  22. "கும்மியடி கும்மியடி" "மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன் விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி" "கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி" "விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி" "வந்தேறு குடிகள் தமிழர் அல்ல வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்ம…

  23. "வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்ன…

  24. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.