அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
அய்மன் அல் ஜவஹிரியின் கொலையும் - புவிசார் அரசியல் தாக்கங்களும் By RAJEEBAN 26 AUG, 2022 | 04:25 PM By Sanjay Pulipaka and Shreyas D Deshmuk https://economictimes.indiatimes.com அல்ஹைதாவின் தலைவரானஅய்மன் அல் ஜவஹிரி ஜூலை மாதம் 31 ம் திகதி இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதல் உட்படஅமெரிக்காவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் ஒசாமா பி;ன்லேடனுடன் இணைந்து சூத்திரதாரியாக இவர் விளங்கினார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரி;க்கா படைகளை விலக்கி தலிபான ஆப்கானை கைப்பற்றி ஒருவருடத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ஆட்சியில் மாற்றம் வந்தாலும், தேசிய மனச்சாட்சியில் மாற்றம் வேண்டும்! இலங்கையின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கடந்த புதன் அன்று அரச தரப்பால் கொண்டாடப்பட்டது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அதிகம் இன்றி அமைதியாகவும், எழிமையாகவும் நிறைவேறியிருந்தது. கடந்த வருட கொண்டாட்டங்களோடு ஒப்பிடுகையில், படைத்தரப்புக்கான முக்கியத்துவமும், அணிவகுப்புகளும் மட்டுப்படுத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தமது அரசின் திட்டங்கள், சவாலான விடயங்கள், இனநல்லிணக்கம் என்பவற்றை குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார். “அதிஉத்தம ஜனாதிபதி” போன்ற சொற்பதங்களை பாவித்து தன்னை உயர்வாக முன்மொழிய வேண்டாமென்றும், தனது மனைவியை “முதல் பெண்மணி” என்று அழைக்க வேண்டாமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதா…
-
- 0 replies
- 354 views
-
-
மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா? – நிலாந்தன் July 19, 2020 நிலாந்தன் “உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும் மேலான அரசாட்சிக் கலையைப் பொருத்தவரையில், அதற்குச் சற்றும் தகுதியோ திறமையோ அற்ற மோசடிக் கூட்டமொன்றையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். “ -பிளேட்டோ வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா? என்று. அவர் ஏன் அப்படி கேட…
-
- 0 replies
- 354 views
-
-
13வது திருத்தமும் தமிழ் சமூகமும் டிசம்பர் 26, 2021 இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல…
-
- 0 replies
- 354 views
-
-
எதைச் செய்ய முடியும்? Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட …
-
- 0 replies
- 354 views
-
-
அரசாங்கமும் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன, நாடே... தோற்றுவிட்டது? நிலாந்தன். தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்க…
-
- 0 replies
- 354 views
-
-
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகப் போக்கு காட்டி, இழுத்தடிப்பதில் இலங்கைக்கு நிகர் யாருமே இல்லையென்றே தோன்றுகின்றது. இந்த விடயத்தில் பெரும் கில்லாடிகளாக இலங்கை அரசுகள் செயற்பட்டிருப்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. இலங்கையின் எரியும் பிரச்சி;னையாக இனப்பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்த மோதல்களின் மூலம் இந்தப் பிரச்சினை சர்வதேச மட்டத்திற்கு மேலெழுந்திருந்தது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க யுத்தத்திற்கு முடிவு காண வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறையோடு செயற்பட்டது. அதற்கு ஆதாரமாக உலக பயங்கரவாதப் போக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியோடு அழித்தொழித்தது. ஆயினும் யுத்த மோதல்களுக்கு அடிப்படையான…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள் 30 ஜூலை 2022, 10:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இதேவேளை, சீனாவின் நன்மைகளற்ற திட்டங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களே, இலங்கை பாதாளத்திற்கு வீழ்வதற்கு காரணம் என அமெர…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 354 views
-
-
மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்? April 7, 2025 — கருணாகரன் — உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத…
-
- 0 replies
- 354 views
-
-
சாத்தியமானவையே வெற்றியின் படிகள் January 14, 2025 — கருணாகரன் — உலகத் தமிழர் பேரவையும் (Global Tamil Forum – GTF) சிறந்த இலங்கைக்கான சங்கம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக முன்னெடுத்து வரும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான (இமாலயப் பிரகடனத்தின் அடிப்படையிலான) தொடக்க முயற்சி, இரண்டாம் கட்டத்துக்கு நகரத் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பமாகியிருக்கின்றன. இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் முக்கியமாக, ‘இமாலயப் பிரகடன‘த்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, அதனை அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களை மக்களுடன் நேரில் நடத்தும் நிழ்ச்சிகள் அமைகின்றன. இந்த நடவடிக்கைகளின் பரீட்சார…
-
- 1 reply
- 354 views
-
-
ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்:- கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா? என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் …
-
- 0 replies
- 353 views
-
-
மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் த…
-
- 0 replies
- 353 views
-
-
சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம். அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. …
-
- 0 replies
- 353 views
-
-
ஓராண்டுக்குள் ரணில் தீர்வு தருவாரா? எக்க ராஜ்ய? – நிலாந்தன். அடுத்த ஓராண்டுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் அதை வரவேற்றிருக்கிறார். அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்திருக்கிறது.ரணிலும் கூட்டமைப்பும் மீண்டும் “எக்க ராஜ்ய” என்ற தீர்வைக் கொண்டுவர முயற்சிப்பதாக விமர்சித்திருக்கிறது. முன்னாள் சமாதான தூதுவர் எரிக்.சூல் ஹெய்ம் அண்மையில் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக பொறுப்பை ஏற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகையின் உள்நோக்கம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டது என்ற ஊகம் பரவலாக உண்டு. 2015 ஆம…
-
- 2 replies
- 353 views
-
-
ராஜபக்ஷக்களின் ஐந்து கவசங்கள் 17 Sep, 2022 | 12:33 PM சி.அ.யோதிலிங்கம் ஜெனிவா திருவிழா உச்சக் கட்டத்தைஅடையத்தொடங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையில் 6 நாடுகள் இணைந்துகொண்டு வரவுள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த 13ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 27ஆம் திகதி இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது. எப்போதும் கடைசி நேரத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய முன்வருவதால் இந்திய திருத்தங்களுடன் தான் புதிய பிரேரணை வெளிவருவதற்கு வாய்புகள் இருக்கின்றன. …
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்! எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக தமிழைக் கருதுபவர்கள் அதன் ஆதரவாளர்களாகவும் இறுதி மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் தற்காலிகமாகத் தோற்றம்பெற்ற அரசியல் ஒழுங்கிற்கு ஒட்டுமொத்தமாக இசைவடைந்தவர்கள் எழுக தமிழின் அதிருப்தியாளர்களாகவும் மாறி உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு பெரும் தரப்போ எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இவை தவ…
-
- 0 replies
- 353 views
-
-
ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…
-
- 0 replies
- 353 views
-
-
வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ என்.கே. அஷோக்பரன் இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி, கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன. வௌிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்வதொன்றும் புதிய விடயமல்ல! ஆகவே, சீன நாட்டின் தூதுவரின் வடக்குக்கான விஜயம் பற்றி, தனித்துக் குறிப்பிட வேண்டியது…
-
- 0 replies
- 353 views
-
-
காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்ககூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்- புலம்பெயர் அமைப்புகளுடன் இதுவரை பேச்சுவார்த்தைகளில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகம் Rajeevan Arasaratnam May 26, 2020 காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்ககூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்- புலம்பெயர் அமைப்புகளுடன் இதுவரை பேச்சுவார்த்தைகளில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகம்2020-05-26T10:47:16+00:00அரசியல் களம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்புகளுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல்போனவர்களின் அலுவலகம் தன்னுடைய ஆணைக்க…
-
- 0 replies
- 353 views
-
-
மஹிந்தவின் மீள்வருகையை தடுக்க மைத்திரி எடுக்கும் முயற்சி தேசிய அரசாங்கம் என்ற பெயரில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நாள், நெருங்கி வரும் நிலையில், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்புகின்றனர். ஒப்பந்தம் காலாவதியாகிய உடன், தாம் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சிலர் அண்மையில் கூறியிருந்தனர். டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய…
-
- 1 reply
- 352 views
-
-
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமே இந்த வாரம் பெரிய செய்தியாகிற்று. அவர் அரச தலைவர்களை மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் சிவில் சமூக பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்து சென்றிருக்கின்றார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாகவும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அதற்கு எதிரான பிரேரணையைக்கொண்டு வருவதற்கு உதவிய சக்தியாகவும் அமெரிக்கா இயங்கியதனால் இவருடைய வருகை தமிழ் மக்கள் விசேடமாகக் கவனம் செலுத்தும் வருகையாகி விட்டது. புதிய அரசாங்கத்துடன் தனது நல்லுறவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் பின்னணியில், தமிழ் மக்களின் நலன்களையொட்டி அமெரிக்கா எடுக்கப் போகும் நிலைப்பாடுகள் யாவை என்பதே கேள்வியாகும். இக்கேள்வ…
-
- 1 reply
- 352 views
-
-
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன். adminJanuary 12, 2025 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது? இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது.…
-
- 0 replies
- 352 views
-
-
நெதர்லாந்து தேர்தலும் தேசியவாதத்தின் தாக்கமும்
-
- 0 replies
- 352 views
-
-
2009 ஆம் ஆண்டுக்குப் பி்ன்னரான கடந்த பத்து ஆண்டுச் சூழலில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும் இலங்கைப் படைத் தளங்களைப் பலப்படுத்தினால் பிராந்தியப் பாதுகாப்புக்கு உகந்ததென நம்பும் மேற்குலகம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்த்தேசியக் கட்சிகளின் வார்த்தையில் சொல்வதானால்…
-
- 0 replies
- 352 views
-