அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
நாணயம் இல்லாத நாணயம் கடை தெருவில் காய்கறி வாங்கும் போது பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லதுபத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள்முழுதும் உபயோக படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்கு தெரியாமல் யாரால் எவ்வாறு பலமடங்கு குறைக்க படுகிறது என்றோ? நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்க படுகிறதுஎன்பது பற்றியோ சிந்திப்பதில்லை.நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்குஈடாக தங்கத்தை வைத்து கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது பொருளாதாரம்சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில்பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்குஆச்சர்யமாக இருக்கும். நேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன் 06 ஜூலை 2014 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம். அரசாங்கம் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. நாட்டுக்குள்ளிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பவர்களுக்குக் குறிப்பாகச் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதும், ஏற்கனவே, அரச தரப்புப் பிரதானிகளால் நேரடியாகவும் மறைமுக…
-
- 0 replies
- 500 views
-
-
தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல…
-
- 0 replies
- 395 views
-
-
காணாமல்போன "மலேசியன் விமானத்தைதேட" அவுஸ்திரேலியா 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை அண்மைகாலத்தில் அவுதிரேலிய மக்களிடம் ஏற்படுத்தியது. தன்னை ஒரு மனிதாபிமான நாடாக காட்டிக்கொள்ளவே அவுஸ்திரேலியா அவ்வாறு பணத்தை வாரி இறைத்தது எனவும் தனது கடற்படையையும் விமானப்படையையும் உதவிக்கு அனுப்பியது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. எது எவ்வாறெனினும் உலக நாடுகள் ஓடிப்பொய் மலேசியாவுக்கு உதவும் போது அவுஸ்திரேலியாவும் தன் பங்குக்கு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொஞ்சம் "ஓவராகத்தான்" அவுஸ்திரேலியா தன் பங்கை செய்கிறதோ என ஒரு சிறு சலசலப்பு இங்கு எழவே செய்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக "அகதிகள் " விவகாரத்தில் மிகக்கடும்போக்கை தற்போதைய அரசாங்கம் எடுத்துவருக…
-
- 19 replies
- 1.8k views
-
-
தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையிலுள்ள முஸ்லிம் - சிங்கள சமுகங்களுக்கிடையிலான பிரச்சனையில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பொன்று யாழ் முகப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com யாழில் உறுப்பினர் அல்லாதவர்களும் 28-06-2014 வரை இதில் பங்குகொள்ளலாம். வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். http://www.yarl.com/node/8019
-
- 6 replies
- 1.2k views
-
-
''ஆயிரம் சமர்களின் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது' -புத்தர் - மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்தீர்மானத்துக்கமைய மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஓர் அனைத்துலகத் தீர்மானத்தில் அப்படி சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்…
-
- 0 replies
- 704 views
-
-
அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01 [ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 14:56 GMT ] [ புதினப் பணிமனை ] மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி. கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு …
-
- 9 replies
- 1.3k views
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது? எல்.சிவலிங்கம் இலங்கையில் கலவரம் என்பது முதன் முதலில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலோ அல்லது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலோ நடக்கவில்லை. 1883 ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற முதல் கலவரமானது சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலேயே இடம்பெற்றது. அதன் பின்பு அனகாரிக தர்மபால போன்ற சிங்கள மதக் கடும்போக்குவாதிகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தத்தினை முன்னிறுத்திய அதேவேளை, சிங்கவர்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்திய வண்ணம், பெரும்பான்மை சிங்களவர்களிடையே சிறுபான்மை மக்களுக்கு எதிரான கடும்போக்குவாதத்தினை மிகக் கச்சிதமாக உருவாக்கினார்கள். கொட்…
-
- 0 replies
- 875 views
-
-
இலங்கையின் பயங்கரவாதத்துக்கு பலிக்கடா தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் 'FB' என்ற சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைவரங்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வரைந்தமைக்காக இருபது ஆண்டு காலச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம் 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டனில் அஞ்ஞாதவாசம் புரிந்துவருகின்றார். தமிழாக்கம் :- வி.சிவராம். தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்களைத் தாக்கும் இலக்குடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று கருதப்படும் இலங்கையர் இருவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையை அடுத்து, இந்தியாவைத…
-
- 0 replies
- 489 views
-
-
உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்…
-
- 1 reply
- 680 views
-
-
ஒருவரை ஒரு அறையில் கட்டிவைத்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை விடாமல் தொடர்ந்து இரண்டு நாள் பார்க்கவைத்தால், அவர் OSD என்று அழைக்கப்படும் Obsessive-compulsive disorder என்கிற மனநோய்க்கு ஆளாகி விடுவார் போல தெரிகிறது. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக கார்ப்பரேட் சித்தனின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவரை அணுகினேன். காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு …
-
- 1 reply
- 759 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன் இலங்கையில் 9 வீதமான சனத்தொகைப் பரம்பலை நிரப்பிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் 97 வீதமானவர்கள் தமிழ்ப் பேசுபவர்கள். பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கங்களுக்காகவும், பிழைப்புவாத அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காகவும் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் அரேபியர்கள் என்ற புனைவு நீண்டகாலமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. இதற்கான எந்த அடிப்படையுமற்ற நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களாகவிருந்து மதம் மாறிய தமிழ்ப் பேசும் மக்களே என்ற உண்மை பல்வேறு ஆய்வாளர்களால் நிறுவப்பட்டது. 1885 ஆம் ஆண்டில் சட்டவாக்கப் பேரவையில் சேர்.பொன்.இராமநாதன் ஆற்றிய உரையில் இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், முன்னதாகத் தாழ்த்தப்பட்ட இந்துக்களாகவிருந்து மதம் மாறிய…
-
- 6 replies
- 2.6k views
-
-
புலி இளைத்தால் எலி…..? அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது. இதற்கு முன்னர் முல்லைத்தீவில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தின் போதும், இதேவிதமான அழைப்பொன்றை மற்றுமொருவர் அனுப்பியிருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன்- இது மக்கள் போராட்டமல்ல காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டம் என சொல்லுங்கள் என. அவரிற்கு கோபம் வந்துவிட்டது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும், அந்த விவகாரத்தையும் கொச்சைப்படு…
-
- 2 replies
- 1.5k views
-
-
பி.பி.சி. உலக சேவையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்காக கிழக்கில் முஸ்லிம்களைப் பேட்டி கண்டிருந்தார். பல தரப்பட்ட மட்டங்களிலும் அவர் முஸ்லிம்களுடன் உரையாடியிருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கும் வந்தபோது அவர் சொன்னார் ''முஸ்லிம்கள் மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாகக் காணப்படுகிறார்கள்... படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லாத் தரப்பினருடனும் நான் கதைத்தேன். தமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரஙகளில் எதைக் கதைக்க வேண்டும் எதைக் கதைக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அரசியல் மயப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்...' என்று. அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த சம்பவங்களின் பின், இணையப் பரப்ப…
-
- 0 replies
- 643 views
-
-
இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்! -என். சரவணன் படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்று புலிகள் நிராகரித்ததை இன்று நியாயப்படுத்தும் தலைவர்கள் படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் இலங்கை அரசியலமைப்பின் ஏனைய சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக அமையும் என்பதும் ஏற்கனவே இந்த பத்தியில் சொல்லப்பட்ட விடயம். ஆகவே, தமிழ்த்தரப்பு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கு கேள்வியாகும் நல்லிணக்கம், சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்களை தவிர வேறு நகர்வுகள் எதனையும் காணவில்லை. காலம் பிந்திய அரசியல் தெளிவு? 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற…
-
- 0 replies
- 873 views
-
-
தொடரும் நில, கலாச்சார ஆக்கிரமிப்புகள்: புற்றுநோய் உடல் முழுக்கப் பரவ தொடங்கிவிட்டதா? முத்துக்குமார் வடமாகாணசபை செயற்படத்தொடங்கி 7 மாதங்களாகின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் முதன்முதலாக நெருக்கடிகள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றிருக்கின்றார். வடமாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான ரவிகரனும், ஜெகநாதனும் அழைத்ததன் பேரிலேயே அங்கு சென்றதாகக் கூறியிருக்கின்றார். அவர்கள் அழைத்திருக்காவிட்டால் இந்தப்பயணமும் இடம்பெற்றிருக்காது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்களோ அல்லது அதில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரோ செல்லவில்லை. அவர்களுக்கு அழை…
-
- 0 replies
- 512 views
-
-
[மோடியை நோக்கி மகிந்த வளைவாரா? முறிவாரா? நிலாந்தன்- 15 ஜூன் 2014 நரேந்திர மோடியின் வருகைக்குப் பின் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் உஷாரடைந்துவிட்டது தெரிகிறது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறியதே எனினும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. மன்மோகன் சிங்கைப் போல மோடியைக் கையாள முடியாது என்பதை கொழும்பு திட்டவட்டமாக விளங்கி வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் தீவிரமும் அவர்களை கவலையுறச் செய்திருக்கிறது. ஏற்கனவே, மேற்கு நாடுகள் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடர்களில் கொழும்பின் காதை முறுக்கி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகப் போகின்றன. அதுவும் ஒரு குறிபீட்டு முக்கியத்துவம் மிக்க நடவ…
-
- 0 replies
- 674 views
-
-
மோடியின் கையில் '13' - ஜெயலலிதாவின் கையில் தனிநாடு - அவ்வாறாயின் கூட்டமைப்பிடம்? - யதீந்திரா ஜெயலலிதா - மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிர தேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜனாதிபதியும் அவரது வெற்றிக்காக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளால் மகிழ்சியடைந்திருக்கவும் கூடும். அவர்கள் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது இதனை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். அவ்வாறு அவர்கள் சிந்திப்பார்களாயின் அது நிச்சயம் பயனுடைய ஒன்றாகவே அமையும் என்பதில…
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும் 1941 ஆம் வருடம் ஒற்றைக் காற்றாடி பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் புகழ்மிக்க எழுத்தாளர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளரும் இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் கூட. வரலாற்றை நன்கறிந்தவர் என்ற வகையிலும் இலங்கையின் கள யதார்த்தத்தை புரிந்துகொண்டவர் என்ற முறையிலும் அவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கிறார். இந்தியாவில் (அன்றைய பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியா) முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுமோ அதே தீர்வுக்கு இலங்கைத் தமிழர்களும் உரியவர்கள் என்றார். அவர் வேறுயாருமல்ல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் வலது கரம் என்று புகழப்பட்டவரும் இன்றுவரை தமிழர்களால் நேசிக்கப்படும்…
-
- 1 reply
- 908 views
-
-
ஜெயலலிதாவின் தீவிரம் - நிலாந்தன்:- 8 ஜூன் 2014 "ஈழத்தமிழர்கள் தான் ஈழத் தமிழர்களுக்காகச் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் அவர்கள் தமது தலைவர்களை வாக்களித்த மக்களுக்காக சிந்திக்குமாறு தூண்ட வேண்டும்." இந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில் தொடர்புடையவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப்படுவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு மேற்படி தீர்மானமானது சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் உலக பூராகவும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் தனித் தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பையும் கோர வேண்டும்........................ …
-
- 3 replies
- 1.3k views
-
-
செய்தி : இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐந்து யோசனை! - கூட்டமைப்புக்கு சமர்ப்பிப்பு. இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தே இந்த தீர்வு யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாகவு…
-
- 5 replies
- 804 views
-
-
பிரிக்க முடியாத ஈழம் தீபச்செல்வன் தமிழீழம் சாத்தியமற்றது என்று Ôதி இந்துÕ நாளிதழின் ஆசிரியர் ராம் தனது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஈழ மக்களின் போராட்டத்திற்கு எதிராக அவ்வாறு தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழத் தமிழர்களுக்கு தான் விரோதமானவர் அல்ல என்று சொல்லும் ராம் விடுதலைப் புலிகளையே தான் விமர்சிப்பதாகக் கூறுகிறார். ஆனால் தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலமும் இனப்படுகொலையாளியான ராஜபக்சேவின் நண்பனாக இருந்துகொண்டு ஈழ இனப்படுகொலை விடயத்தில் அவரையே விசாரணை செய்ய வேண்டும் என்பதும் ஈழத் தமிழருக்கு விரோதமானதே. தமிழீழம் சாத்தியமற்றது என்பதன் மூலம் ஈழத் தமிழர்களின் அறுபது வருடகால போராட்டம்மீது தனது விரோத ந…
-
- 0 replies
- 1k views
-
-
2009 இல் முள்ளிவாய்க்கால் கடைசி நிமிடம்வரை எதிர்பார்க்கப்பட்டது காங்கிரசின் தோல்வி. அது இன்று நடந்துள்ளது அதுவும் காங்கிரசின் தலைவர்களே ராயினாமா செய்து ஓடும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது... ஈழத்தமிழர் எதிர்பார்த்த ஒன்று எதிர்பார்த்ததைவிட அழுத்தமாக நிறைவேறியுள்ளது......... பேசலாம் வாங்க.......
-
- 10 replies
- 1.6k views
-
-
மோடி அரசுடனான உறவாடலுக்கு விக்னேஸ்வரனே சிறந்தவர் - யதீந்திரா இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான வட்டாரங்களை எவ்வாறு அணுகுவது என்றும் இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம் கூட்டமைப்பின் உயர் பீடத்திடம்மோடி அரசை நெருங்கிச் செல்வதற்கேற்ற போதிய தொடர்புகள் இல்லை என்பதே வெள்ளிடைமலையாகிறது. மோடி அலையொன்று உருவாகிவருவதான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்போது, சம்பந்தன், தமிழ் நாட்டிலு…
-
- 2 replies
- 868 views
-