அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணையானது வலுமிக்கதாக இருக்காது. ஐ.நா தனது விசாரணையின் இறுதியில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் தீர்வெட்டுமாறு கோரும் போது இந்த விசாரணையை ரஸ்யா மற்றும் சீனா மறுக்கும் என்பது நிச்சயமானதாகும். இவ்வாறு THE HUFFINGTON POST UK என்னும் இணையத்தில் பிபிசி முன்னாள் செய்தியாளர் Frances Harrison* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீன அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்…
-
- 1 reply
- 437 views
-
-
இவர்களை மன்னிக்காதீர் == பா.செயப்பிரகாசம் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி! இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'' உயரத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகி யிருந்தவர்கள் அவரை “இவன் ஏன் கத்துகிறான்'' என்று ஏறிட்டுப் பார்த்தனர். “இந்த அறிவிலி யாரிடம் முறையிடு கிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்'' என்றனர். “இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்''. மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரை விட்டார் (மத்தேயு 27 : வசனம் 46,47). நண்பகல் 12 மணிக்கு சிலுவை யிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்ட போது, உதிர்த்த வாசக…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்! தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது. தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது. 2009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தம…
-
- 0 replies
- 641 views
-
-
இலங்கையிற் பிரிவினைப்போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையின்அரசாங்கங்கள் இலங்கையின் சனநாயக விழுமியங்களைச் சிதைக்கக் கூடிய சட்டங்களை இயற்றிக் காலப்போக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்டசனாதிபதி ஆட்சி முறையையும் கொண்டு வந்தன. இவற்றின் நோக்கம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அதிகாரத்தை பேணுவதாகும். ஆனால் இப்பொழுது இலங்கையின் அரசியற்சூழ்நிலை குடும்ப அதிகாரமொன்றைப் பேணுவதற்கானதாகவும் மாறிவிட்டது. 2009 ஆண்டு யுத்தம் நிகழ்ந்த போது சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் தடை செய்திருந்தது. இப்போது புலம் பெயர்தேசத்துத் தமிழர் அமைப்புக்களையும் தடை செய்திருக்கிறது. இந்தத் தடையை இலங்கை அரசு கொண்டு வந்தமைக்கு கீழ்வருவன நோக்கங்களாக இருக்கலாம். · …
-
- 0 replies
- 649 views
-
-
காங்கிரசும் முஸ்லிம்களும் 2002இல் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அப்போது நரேந்திரமோடி அங்கு முதல்வராக இருந்தார். அதனால் அவரும் பாரதீய ஜனதாக்கட்சியும் முஸ்லிம் களுக்கு எதிரானவர்கள்,சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரசுக்கட்சியினரும்,பிறரும் கூறுகின்றனர்.காங்கிரசுக்கட்சியினர் மட்டும்தான் சிறுபான்மையினமக்களின் பாதுகாவலர்கள் என்கின்றனர். ஆனால் 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இடம்பெற்ற கலவரத்தில் டெல்கியில் மட்டும் 3000 வரையிலான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதனை முன்னின்று நடத்திய காங்கிரசுக்கட்சியினரில் பலர் இதுவரை தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவி வருகின்றனர். பலராலும் அறியப்படாமல் அம…
-
- 0 replies
- 628 views
-
-
• “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? "கசப்பான உண்மைகளையும் மறைக்காமல் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியை பெற்று தருவார்கள்"- வியட்நாம் தந்தை கோசிமின் 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசி மின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார். ஆனால் இன்று மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூற…
-
- 15 replies
- 2k views
-
-
"நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்" மகிந்த ராஜபக்ச. [ இந்தப் பதிவை முழுதாக வாசிக்கவும்.அப்போதுதான் விடயங்களைத் தெளிவாக, சரியாக விளங்கிக்கொள்ளமுடியும்.] பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்து…
-
- 0 replies
- 930 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் விலகிச் செல்கின்றதா? முத்துக்குமார் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல,மெல்ல விலகிச் செல்கின்றதா என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என கிழக்கின் முன்னேறிய பிரிவினர் சிலர் நினைப்பதும், உடனடிப் பிரச்சனையாக முஸ்லிம்களுடனான முரண்பாடு இருப்பதால் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அதற்கு முகம் கொடுக்க முடியும் எனக் கருத முற்படுவதும் இச் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்தப் போக்கு ஆரம்பத்தில் கல்முனையில் தோன்றி இன்று மட்டக்களப்பு, திருகோணமலை என கிழக்கு மாகாணம் முழுவதும் பரவுகின்றது. கல்முனையில் தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை மூடப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும்…
-
- 0 replies
- 569 views
-
-
ஒரு சடங்காக மாறிய ஜெனிவா? நிலாந்தன்:- 30 மார்ச் 2014 இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அமைந்துள்ள சமகாலக் கலை, கட்டடக் கலை மற்றும் வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் ஒரு தனிநபர் ஆற்றுகையும் அதன் பின் கலந்துரையாடலும் இடம்பெற்றன. ''உடலே மொழியாக' (Body as language) என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்நிகழ்வில் பண்டு மன்னம்பெரியின் (Bandu Manamperi) ஆற்றுகை முதலில் நிகழ்ந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மேற்படி ஆற்றுகையை பண்டு மன்னம் பெரி ''அயர்ண் மான்' (Iron man) என்று பெயரிட்டிருந்தார். அவ்வாற்றுகையை சிறிது விரிவாகப் பார்ப்பது இக்கட்டுரையின் பேசுபொருளை நன்கு விளங்கிக்கொள்ள உதவும். முதலில் …
-
- 0 replies
- 668 views
-
-
உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சென்ற வருடத்தை விட 13 படிகள் கீழிறங்கி அமெரிக்கா 46 ஆம் இடத்தையும் சிறிலங்கா 165 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வருடம் அமெரிக்காவின் பின்னடைவுக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக சமுக வலைத் தளமான விக்கிலீக்ஸில் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்த முன்னால் இராணுவ வீரருக்கு அமெரிக்க அ…
-
- 5 replies
- 746 views
-
-
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து என். சரவணன் அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்க…
-
- 0 replies
- 809 views
-
-
ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானார். அன்றுமுதல், காங்கிரஸ் கட்சி தமிழகத்தைத் தன் எதிரியாகவே பாவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தன் பிடி முற்றாகத் தளர்ந்துவிடக் கூடாது என்ற சிந்தனையில், நாவில் சிறிது தேனைத் தடவிக்கொண்டது. தமிழகத்தை வீழ்த்தி, அதன்மீத…
-
- 1 reply
- 563 views
-
-
மனித உரிமை மீறல் + போர்க்குற்றம் = இன அழிப்பு மனித உரிமை அமைப்புக்கள் +நாடுகள் +தீர்மானங்கள் +ஐநா +பாதுகாப்புச்சபை -வீட்டோ அதிகாரம்... ....................... .................... = இவை எல்லாம் தாண்டி தமிழர் அழிவிலிருந்து பாதுகாக்கப்படக்கூடிய வழிகள் தெரிகிறதா? கொஞ்சம் பேசலாம் வாங்க..........
-
- 11 replies
- 853 views
-
-
ஆட்டம்: அமெரிக்கா Vs சிறீலங்கா இடம்: ஐநா மனித உரிமைகள் பேரவை. கோப்பை: சிறீலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவது.. இனங்களிடையே புரிந்துணர்வை கட்டி எழுப்பி.. பச்ச மண்ணையும் சுட்ட மண்ணையும்.. ஒன்றாக சிறீலங்கன் என்று ஒட்ட வைக்கும் வெற்றிக்கிண்ணம். (ஈழத்தமிழர்.. தமிழினம்.. இனப்படுகொலை.. தமிழின அழிப்பு.. போர்க்குற்றம்.. காணி சுவீகரிப்பை நிறுத்தல்.. சிறீலங்கா படைவிலக்கல்.. சுதந்திர வாக்கெடுப்பு.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம்.. வடக்குக் கிழக்கு இணைவு.. சுயநிர்ணய உரிமை.. 13+.. போராளிகள்.. அரசியல் கைதிகள் விடுவிப்பும்... புனர்வாழ்வும்.. தமிழீழம்.. இதை எல்லாம் தூக்கி நிரந்தரமாவே குப்பையில கடாசியாச்சு.) முடிவு: 23: 12 என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு வெற்றி. கொசுறு: …
-
- 0 replies
- 624 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர் வலயமான வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் தனது கண்முன்னாலேயே கடத்தப்பட்ட தனது மகனை இவரின் தாயாரான 46 வயதான பேரின்பராணி திருநாவுக்கரசு கடந்த ஆறு ஆண்டுகளாகத் தேடிவருகிறார். சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் காணாமற்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவுகளில் திருநாவுக்கரசுவும் ஒருவராவார். "2008ல் இராணுவச் சீருடை தரித்தவாறு உந்துருளிகளில் வந்த எட்டுப் போல் எனது மகன் கடத்தப்பட்டான்" என திருநாவுக்கரசு, அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்தார். "எனது மகன் நாட்டின் தென்பகுதியிலுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக என்னிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவ…
-
- 0 replies
- 417 views
-
-
மலேசிய விமானம் திசை மாறி காணமல்போய் பதுக்கி வைக்கப்பட்டு திருடப்பட்டு கடத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டு விமானி தற்கொலை செய்து புகை வந்து கடலில் வீழுந்து................ உங்கள் கணிப்பு என்ன? பேசலாம் வாங்கோ.......... இதில் உண்மை இருக்கணும் என்றில்லை உண்மையாகவும் இருக்கலாம் உங்கள் ஆராய்ச்சியாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம் ............. எழுதலாமே........ போன கிழமை எனது மகனைக்கேட்டேன் எங்க போயிற்றுது மலேசிய விமானம் என? அவன் சொன்னான் எங்கட கார் பாங்கிங்கில கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறன் நீங்க பார்க்கலையா என? ஒரு விதத்தில் இது பகிடியாக இருந்தாலும் கனக்க அர்த்தம் அதற்குள் இருப்பதால் சிரிக்க முடியல என்னால்....... …
-
- 38 replies
- 3.7k views
-
-
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது இனப்பிரச்சினையில் இருந்து மதப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் சிறீலங்கா மீதான (இதனைச் சிறீலங்காவிற்கு எதிரானது என்று சொல்வதுதவறு) பிரேரணை அமையவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த 25 நாடுகள் இம்முறையும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் …
-
- 0 replies
- 763 views
-
-
ஒன்றுபட்ட பங்களிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்ற 2009 மே மாதத்தில் இந்தியாவில் ஒரு மக்களவைத் தேர்தல்இடம்பெற்றது.அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தல் இப்போது இடம்பெறவுள்ளது.நடைபெற்ற ஈழத்தமிழின அழிப்பின் விபரங்கள்,பரிமாணங்கள், மக்களுக்குப் பெருமளவு தெரிந்தபின்பு நடைபெறும் தேர்தல் இதுவாகும். தமிழின அழிப்பை முன்னின்று நடத்திய சோனியா காங்கிரசு, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கருணாநிதி திமுக போன்ற கட்சிகளை சனநாயக வழிமுறையில் தண்டிப்- பதற்கு தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது.இந்தியாவில் வேறெவரும் சந்திக்காத இன அழிப்பைச் சந்தித்த தமிழினமக்கள் அதற்குக் காரணமாக இருந்தவர்களை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.ஏனெனில் தமிழ் ஈழப்- பகுதிகளில் இ…
-
- 0 replies
- 446 views
-
-
பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒர…
-
- 0 replies
- 590 views
-
-
ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்களும், நடத்தி முடித்தவர்களும் இன்னும் இந்த உலகின் மதிப்பிற்குரிய மனிதர்களாக எந்த அச்சமுமின்றி உலாவருகின்றனர். இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைத் திருவிழா நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தான் ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறார்கள் என்றும் அதனை நிறைவேற்றுவதற்காகவே தாம் இதுவரை போராடி வருவதாக புலம் பெயர் தமிழ்த் தலைமைகளும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குக் கேட்கும் கட்சிகளும் கூறிவந்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க அரச தலைமையிலான உலகம் போன்றவற்றின் குறைந்தபட்சப் புரிதல்களுமின்றி ஐந்…
-
- 0 replies
- 795 views
-
-
ஜெனிவாத் தீர்மான வரைவும் இனப்பிரச்சனை விவகாரமும் - யதீந்திரா [ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 13:03 GMT ] [ புதினப் பணிமனை ] ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மூன்றாவது தீர்மான வரைவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அது தொடர்பான பல வாதப்பிரதிவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. தமிழ் அரசியல் வாதிகள் சிலரும், தமிழ்க் கருத்தியல் உருவாக்குனர்கள் சிலரும், மிகைபடக் கூறியளவிற்கு எதனையும் நிகழ்த்தக் கூடிய வல்லமையை அத்தீர்மான வரைவு வெளிப்படுத்தவில்லை என்பதே, தற்போதைய தமிழர் ஆதங்கத்திற்கு காரணம். தமிழர் ஆதங்கம் என்பது சரியான ஒன்றுதானா அல்லது இது அவர்களாகவே தங்கள் மீது வலிந்து திணித்துக்கொண்ட அதீத க…
-
- 0 replies
- 448 views
-
-
ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும் தத்தர் பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப…
-
- 0 replies
- 707 views
-
-
கொழும்பிலிருந்து ஜெனிவாவிற்கு உணர்த்தப்படும் செய்திகள்? நிலாந்தன்:- 23 மார்ச் 2014 "ஜெனிவாவை நோக்கி அரசாங்கம் அனுப்ப நினைக்கும் சமிக்ஞை களுக்கான விலையைக் கொடுப்பது தமிழ் மக்கள் தான் என்பதே இங்கு மிகக் கொடுமையான யதார்த்தமாகும்" அண்மை வாரங்களில் வடக்கில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஜெனிவாவை நோக்கித் தெளிவாகச் சில சமிக்ஞைகள் அனுப்பப்படுவதாகத் தெரிகின்றது. முதலாவது சமிக்ஞை - அரசாங்கத்தைத் தண்டிக்க முற்படும் தரப்புக்கள் அல்லது அத்தகைய தரப்புகளிற்கு உதவ முற்படும் தரப்புகள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துக்கள் பற்றியது. இரண்டாவது சமிக்ஞை, அரசாங்கத்தைத் தண்டிக்கும் விதத்திலான ஜெனிவாத் தீர்மானங்கள் ஆயுதமேந்திய தமிழ் அரசியலை ஊக்குவிக்கக் கூடும் என்பது. அதாவது, எந்தவொ…
-
- 0 replies
- 518 views
-