அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
என்ன நடக்கப் போகின்றது ஜெனிவாவில்? முத்துக்குமார் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துவிட்டே யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கு அவர் முக்கியமாக யாழ் ஆயர் இல்லம், உதயன் பத்திரிகை அலுவலகம் என்பவற்றிற்கு சென்றதுடன் தனியார் விடுதி ஒன்றில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனையும் சந்தித்திருக்கின்றார். சந்தித்தவர்கள் எல்லோரும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரனை வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர். நிசா தேசாய் பிஸ்வாலின் நடவடிக்கைகளையும்…
-
- 0 replies
- 587 views
-
-
புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா? [Tuesday, 2014-02-18 23:49:01] மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும் தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான் இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த …
-
- 1 reply
- 4.1k views
-
-
கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:- 18 பெப்ரவரி 2014 இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ்…
-
- 1 reply
- 828 views
-
-
‘1999’ மற்றும் ‘கண் அன்ட் றிங் (A Gun and A Ring)’ ஆகிய ஈழத் திரைப்படங்களின் இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்கள் ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிக்காக கனடாவில் இருந்து பரிசுக்கு வருகை தந்திருந்தார். அவரை எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து அவருடன் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஊடக இல்லம்:- ‘கண் அன்ட் றிங்’ திரைப்படத்தின் அனுபவங்கள் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்? லெனின்:- கண் அன்ட் றிங்’ திரைப்படம் புலம்பெயர்ந்த கலைஞர்களின் படைப்பு. இப்படத்தில் குறிப்பாக பரிசில் இருந்து மன்மதன் பாஸ்கி அவர்களும் ஜேர்மனியில் இருந்து தேனுகா கந்தராஜாவும் நடித்துள்ளார்கள். ஏனைய கல…
-
- 3 replies
- 734 views
-
-
(S.Vinoth) காணாமல் போனவர்கள், கண்களுக்கு முன்பாக பிடித்துக்கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது எமக்குத்தெரியாது. ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் யார் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள். கொலை செய்தவர்களும் அவர்கள்தான். நீதி சொல்பவர்களும் அவர்கள்தான். நீதிபதியும் அவர்கள்தான் என்றால் எப்படி உண்மை வெளிவரப்போகுது என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மாந்தை லூர்து அன்னை ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றது. இதன் போது காணமல்போன,கடத்தப்பட்டவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் போது உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ம…
-
- 0 replies
- 399 views
-
-
அரசாங்கத்தின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும் அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன்; முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வினைத்திறன் தமிழத்தேசிய கூட்டமைப்பு- தமிழத்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு ஏன் இல்லாமல்போனது? ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தமது வெற்றிகளை மாத்திரம் தற்போது கருத்தில் எடுத்திருப்பதால் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இந்திய நிலைப்பாடு தொடர்பான விடய…
-
- 0 replies
- 843 views
-
-
சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா? [sunday, 2014-02-09 21:20:05] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தினக்குரல் பத்திரிகை அந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு பாரிய தடைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு சிறிலங…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழர்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன் 09 பெப்ரவரி 2014 ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம். ஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்ச…
-
- 4 replies
- 759 views
-
-
தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்:- 08 பெப்ரவரி 2014 இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எண்ணற்றவர்கள் அவயவங்களை இழந்தும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இதைவிட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் அடியோடு பெயர்த்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டபோதும், யுத்தச் சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பல்வகையான அவமானங்களுக்கு ஆளாகி சுயகௌரவம், தன்மானம் என்வற்றை இழக்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகளுகு;கு மத்…
-
- 0 replies
- 579 views
-
-
தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே …
-
- 3 replies
- 788 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது யார்? முத்துக்குமார் ஜனவரி மாதம் அடுத்தடுத்து தமிழ் அரசியல் சூழலில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமெரிக்க பிரதிநிதிகளின் வடபகுதி விஜயம், அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என அரசதரப்பு தெரிவித்தமை, முஸ்லிம் மக்கள் குழு சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைக் கூற தீர்மானித்தமை, மேல்மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியானமை, ஜனாதிபதி பங்குபற்றிய அரசவிழாவில் விக்னேஸ்வரனும் வடமாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றியமை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும். அமெரிக்க பிரதிநிதி ராப்பின் யாழ் விஜயம் ஜனவரி மாத ஆரம்பத்தில் இடம்பெற்றது. 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள். அரசாங்கத்திற்கு தை பிறந்தால் தலையிடி தொடங்கும் எ…
-
- 16 replies
- 1.2k views
-
-
சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:- 02 பெப்ரவரி 2014 வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்…
-
- 0 replies
- 656 views
-
-
தெற்கில் புயலைக் கிளப்பியிருக்கும் வடமாகாண சபையின் தீர்மானம் - செல்வரட்னம் சிறிதரன்- 01 பெப்ரவரி 2014 இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைக்கு ஒத்தவகையிலான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கோரும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது தெற்கில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. சிங்களத் தீவிரவாத கட்சிகளை மட்டுமல்லாமல்இ பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியையும் அது உசுப்பிவிட்டிருக்கின்றது. வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அந்த சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். தமது எதிர்ப்பு வலிமையற்றது. தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அது எந்தவகையிலும் பாதிக்கப்போவதி…
-
- 1 reply
- 862 views
-
-
ஜெனிவா காச்சல் சிங்கள ஆட்சியாளர்களை தேசங்கள் எங்கும் ஓட வைத்துள்ளது. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே ஆபிரிக்க - இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறி வைத்து தனக்கான பாதுகாப்பு வளையத்தை அமைக்க முயற்சி செய்துவரும் காலத்தில், அவரது துதர்களாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார். தற்போது, மகிந்த ராஜபக்சேயின் செயலாளது லலித் வீரதுங்க அமெரிக்கா சென்றுள்ளார். ஜெனிவா காச்சலால் சிங்கள ஆட்சியாளர்கள் திசை எங்கும் ஓடித் திரிய, இந்திய காங்கிரஸ் கட்சியோ தாங்க முடியாத வயிற்று வலியுடன் துடிக்கின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் காலத்தை அண்டியே, இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், ஏற்பட்ட கிலி காங்கிரஸ் காரர்களுக…
-
- 3 replies
- 1.2k views
-
-
''ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை!'' - ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி. இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவுசெய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழ…
-
- 4 replies
- 2.6k views
-
-
ஒரு மாதிரி election முடிஞ்சிது பாருங்கோ........ இனி உந்த யாழ் தேவி யாழ்ப்பாணம் போகுமோ? இல்லை வவுனியாவோட நிக்குதோ தெரியல்ல பாருங்கோ எண்டாலும் நான் அதில ஒருக்கா ஆசைக்கு ஏறிட்டன் சரி அத விடுங்கோ சனம் தேசியத்த ஆதரிச்சு வாக்கு போட்டாலும் நாங்கள் இன்னும் கவனமா தான் இருக்கோணும் மகிந்தர் இந்த தேர்தல காட்டியே எங்களுக்கு தர வேண்டியத தட்டாமல் இப்பிடியே இழுத்துக்கொண்டு போய்டுவார்......... அங்க தயாகத்தில மக்கள் தங்கள் அரசியல் நகர்வுகள ஒரு பக்கம் மேற்கொண்டாலும் நாங்கள் புலத்தில இருக்குரனாங்களும் ஒரு பக்கத்தால சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்திட்டு இருக்கணும் ரெண்டு கையும் சேர்ந்து தட்டினா தான் ஓசை வரும் பாருங்கோ..... சரி இவள் பிள்ளைய பள்ளிக்கூடத்தால கூட்டிட்டு …
-
- 36 replies
- 3.4k views
-
-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா? அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா? முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக அமையக்கூடும் என்று யாராவது நம்புவார்களாயிருந்தால் அவர்கள் தமிழர்களின் அரசியலோடு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கருதியே அவ்வாறு கூற முடியும். வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரும் அதன் பின் வரப்போகும் இந்தியப் பொதுத் தேர்தலுமே அந்த இரு முக்கிய நிகழ்வுகளாகும். இவையிரண்டும் இந்த ஆண்டைத் திருப்பங்களுக்குரிய ஆண்டாக மாற்றுமா? முதலில் ஜெனி…
-
- 4 replies
- 869 views
-
-
திருக்கேதிச்சரத்தில் மனிதப் புதை குழி ஒன்று கடந்த 26ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. பதிகச் சிறப்பு மிக்க ஆலயத்திலிருந்து சுமாராக முன்னூறு மீற்றர் தொலைவில் ஆலயத்தின் புனிதப் பிரதேசத்தில் அது காணப்படுகின்றது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பெரிய மனிதப் புதைகுழி அது. கண்டுபிடிக்கப்பட்ட காலம், இடம் என்பவற்றின் காரணமாக அது அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் எனப்படுவது ஜெனிவாவை நோக்கிச் செல்லும் ஒரு காலம். இக்காலப் பகுதியில் இப்படியொரு புதை குழி கிண்டப்படுவது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும். அதோடு இது தொடர்பில் ஆகக் கூடியபட்சம் வெளிப்படைத் தன்மையையும், நன்பகத் தன்மையையும…
-
- 1 reply
- 594 views
-
-
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அத…
-
- 3 replies
- 925 views
-
-
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் - செல்வரட்னம் சிறிதரன்:- 25 ஜனவரி 2014 சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நெருக்கடிகளையும் பயன்படுத்தி அரசாங்கம் தனது ஆட்சியதிகாரத்தை நிரந்தரமாக்குகின்ற துணிச்சலான அரசியல் தந்திரத்தைப் பரிசோதிக்க முனைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்வுள்ள அரசுக்கு எதிரான பிரேரணை என்பவற்றுக்கிடையில் இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதைக் காண முடிகின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்களாகப் போகின்றன. யுத்தம் காரணமாக அழிவுக்கு உள்ளாகிய நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டையும் முன்ன…
-
- 0 replies
- 711 views
-
-
தீர்ப்பு: இனப்படுகொலை சேரன் இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடஇந்தியாவில் இருந்து அண்ணளவாக 2500 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையால் நாடுகடத்தப் பட்ட அரசகுமாரன் விஜயனும் கூட்டாளிகளும் இலங்கைக்கு வந்து மலைப்பாங்கான காட்டுப்பகுதியாய் இருந்த தென்னிலங்கையின் பெரும்பகுதியில் வாழ்ந்த பூர்வீக தமிழ்க் குடிமக்களோடு சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து மேலும் வரவழைக்கப்பட்ட பெண்களுடன் பல்கிப் பெருகி காலப்போக்கில் கோட்டே, கண்டி என்ற இரு சிங்கள இராச்சியங்களை உருவாக்கினார்கள். பாளி சமஸ்கிருதம் தமிழ் என்பன கலந்து உருவானதே சிங்கள மொழியாகும். பின்னர் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பவுத்த மதத்தையும் பின்பற்றி சிங்கள பவுத்தர்களாக வாழ்ந்து வந்தார்கள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியான சமதரைப் பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த நாகரீகம் …
-
- 5 replies
- 1.1k views
-
-
மாலதி மைத்ரி வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது. “அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின…
-
- 9 replies
- 908 views
-
-
தமிழர்களும் அனைத்துலக சமுகமும் - நிலாந்தன் 12 ஜனவரி 2014 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' தமிழர்கள் எப்பொழுதும், பெருமையோடு நினைவு கூரக்கூடிய ஒரு வாக்கியம். அது யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும். கணியன் பூங்குன்றனாரின் அந்த வாசகம் ஒரு தீர்க்க தரிசனமும் கூட. ஈழத்தமிழர்கள், யாதும் ஊராகப்போய்விட்டார்கள். ஏறக்குறைய, நாலில் ஒரு; ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து விட்டார். அதாவது, தமிழர்கள் யாதும் ஊராகப் போய்விட்ட்டார்கள். ஆனால், யாவரும் கேளிரா? இல்லை. அங்கே தான் பிழைக்கிறது. தமிழர்கள் யாதும் ஊராகப் போனதுவரை கணியன் பூங்குன்றனாரின், தீர்க்க தரிசனம் பாதியளவில் சரி. ஆனால், யாவரும், தமிழர்களுக்கு கேளிர் அல்ல. அதாவது நண்பர்கள் அல்ல. எல்லாரும் தமிழர்களுக்கு நண்பர்களாக இருந்திரு…
-
- 2 replies
- 791 views
-
-
நான் மீனவர்களை சந்திக்கும் நம்பிக்கையில் சன் றைஸ் கடற்கரைக்கு சென்றேன். மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த கடற்கரை. கடலிற்கு செல்வதற்கு சிறிய கட்டுமரத்துடன் ஒரு குடும்பம் தயாராக இருந்தது. 40வயது மதிக்கத்தக்க ஒருவர் மேலாடையின்றி வெறும் சறத்துடன் மட்டும் கட்டுமரத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் றோச்சர். சிறிது காலத்திற்கு முன்னர் தான் இந்த கடற்கரையை சுனாமி அடித்துச்சென்றது. 250'000 உயிர்களை பலியெடுத்து, 2.5 மில்லியன் மக்களை உடமையற்றவர்கள் ஆக்கியது. சுனாமி அடித்து ஆறு மாதங்களின் பின்னர் சிறிலங்காவில் மீள்கட்டமைப்பு எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக வந்தேன். எனது பயணம் அருகம் குடாவில் (Arugam Bay) தொடங்கியது. இங்கே தான் நான் றோச்சர் கு…
-
- 1 reply
- 1.1k views
-