அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
சிறீலங்கா ரைம் அவுட்… ஐ.நா சபை பணியில் இருந்து சவேந்திர சில்வா வெளியேற்றப்பட்டிருக்கும் செய்தி சற்று முன்னர் உலக ஊடகங்களில் எல்லாம் வெளியாகிவிட்டது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைக் கூட்டத்தில் சிறீலங்கா பொறிக் கிடங்கில் சிக்குப்படப் போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. போர்க்குற்றம் சுமத்தப்பட்டால், சவேந்திர சில்வாவை ஐ.நா பதவியில் வைத்திருக்க முடியாது. ஆகவேதான் வீணான கேள்விகளை சுமந்து நிற்காமல் தந்திரமாக சிறீலங்காவை கை கழுவி விட்டுள்ளது. ஐ.நாவின் இந்தச் செயல் ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான காற்று வீசத்தொடங்கியிருப்பதையே காட்டுகிறது. சவேந்திர சில்வாவுடன் ஐ.நா உறவைத் துண்டித்திருப்பதால் சிறீலங்காவுடன் இந்தியா கை கோர்க்க முடியாத நிலை …
-
- 0 replies
- 577 views
-
-
கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஜெனீவா கூட்டமும்… நாங்க ஜெனீவாக்கு பேசப் போறோம் பெத்தவளே தாயே..! அம்மா நடுச்சுடலை தில்லை வனம் பெத்தவளே தாயே..! நமது கிராமங்களில் காத்தவராயர் கூத்து மேடை ஏறுகிறது என்றால் மேடைக்கு பின்னால் பெரிய பானையில் கள்ளு நிறைத்திருக்கும். கூத்தாட வருவோர் அதில் இருந்து ஒவ்வொரு மிடறாகக் குடித்து குடித்து ஆடிக் கொண்டிருப்பார்ககள். அதிகாலை வரை கூத்துக் கலைஞர்களை களைப்பின்றி வைத்திருக்கும் பணியை பனங்கள்ளு அற்புதமாக செய்யும். இப்படி சொல்வதால் கூத்து கலைஞர்களை கேலி செய்வதாகக் கருதக்கூடாது. நமது வாழ்க்கைக் கூத்தாட்டங்களை விளங்க இதை ஓர் உதாரணமாக எடுக்கிறோம், அவ்வளவுதான். தான் யார், தான் எதற்காக பிறந்திருக்கிறேன் என்ற தேடல்களை ம…
-
- 1 reply
- 834 views
-
-
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…
-
- 0 replies
- 896 views
-
-
சோறா? சுதந்திரமா? மனந்திறந்து பேசுவோமே சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு. இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது. 1970 களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற கருத்தும் சில தமிழர்களால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இந்த அபிவிருத்திப்பாதையில் பயணம் செய்தவர்களில் முக்கியமானவர். இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்…
-
- 23 replies
- 1.7k views
-
-
கிடைத்த சந்தர்ப்பம் தவறிப்போகுமா? -வி. தேவராஜ் ஐ .நா. மனித உமை கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், வாதப் பிரதிவாதங்கள் என்பன சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை தனக்குச் சாதகமாக 27 நாடுகளின் உதவியுடன் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது. கடந்த வருடம் இடம்பெற்ற மனித உமை கூட்டத் தொடரில் தனக்கெதிராக எவ்விதப் பிரேரணையும் கொண்டு வரப்படாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றது. இலங்கையைப் பொறுத்து சர்வதேசரீதியில் எழும் நெருக்கடிகளை அவ்வப்போது சமாளித்துவிட்டு அதற்கான தீர்வைக் காணாது கிடப்பில் போட்டு விடுவது வழக்கம். இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட விவகாரமே தற்பொழுது விஸ்வ…
-
- 0 replies
- 496 views
-
-
திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..? சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் அமெரிக்கா தலைமையில் திசை திரும்பியிருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்கா மீது சுமத்தப்படக் கூடிய குற்றச்சாட்டில் இந்தியாவின் பாத்திரம் என்ன.. இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்த விவகாரத்தில் இந்தியா சிறீலங்காவை ஆதரித்தால்.. உலக அரங்கில் போர்க் குற்றவாளிகளை ஆதரிக்கும் சீனா – ரஸ்யாவோடு இந்தியாவும் உலக அரங்கில் களங்கப்பட்டு நிற்க நேரும். சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் பக்கம் நின்றதுபோல இந்த விடயத்திலும் இந்தியாவும் நின்றால் சிறீலங்கா நேரடியாக சீனாவின் கால்களில் குப்புற விழுந்து இந்தியாவின் நேரடி வில்லனாக மாறும். இரண்டுங் கெட்டானாக நடுவு நிலை வகித்தாலும் ஆபத்து…
-
- 9 replies
- 1.4k views
-
-
தோல்வியை நோக்கிய பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை. இந்தக் கட்டத்தில் கடந்த வாரம் ஐதேகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. இதன்போது கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஐதேக கூறியுள்ளது. அ…
-
- 0 replies
- 476 views
-
-
அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர்தந்திரோபாயமும் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை…
-
- 0 replies
- 515 views
-
-
மாலைதீவு 'அமைதி புரட்சி'யில் வென்றது இந்திய 'சாணக்கியமே' இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலைதீவில் அரங்கேறிய 'அமைதி புரட்சி'யின் காரணமாக அங்கு 'அதிரடி' ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கையை போன்றே நமது நாட்டின் கடல்வழி பாதுகாப்பிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மாலைதீவும் முக்கியமான ஒரு நாடு. அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட நாலு லட்சம் மக்கள் தொகையே உள்ள மாலைதீவில் பரந்து விரிந்து கிடக்கும் 1190 தீவுகளில், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர்; மட்டுமே பிரஜாவுரிமை பெறமுடியும். மேலாக உள்ள ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். முன்பு இலங்கையை சேர்ந்த அலுவலர்களும் பெருகிய வண்ணம் இருந்தனர். சுமார் …
-
- 0 replies
- 791 views
-
-
ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும் ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது. சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது. இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட…
-
- 1 reply
- 575 views
-
-
ஜெனிவாப் போர்க்களம் புஸ்வாணமாகுமா? நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசிற்கு வரத்தொடங்கி விட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தை சிறிதளவுகூட சாதகமான வகையில் அணுகவில்லை என மனிதஉரிமை நிறுவனங்கள் தொடக்கம் மேற்குலக சக்திகள் வரை உறுதியாகக் கூறிவிட்டன.இதுவிடயத்தில் உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறை தேவை என்ற குரலும் சற்று தீவிரமாக மேலெழும்ப ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக நிற்பதுதான் அரசிற்கு புதியதலையிடி. போ…
-
- 1 reply
- 522 views
-
-
சுகாசினி பற்றிய பதிவில் தொடர மனமில்லை. சுய அடையாளத்துடனேயே ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராகாத எம் இனம் முகமற்ற இணையத்தில் எதை எழுதும் என்று சொல்ல தேவையில்லை . தமிழ் அரங்கத்தில் தொடராக வெளிவரும் நேசனின் "புளொட்டின் அராஜகத்தை " விடாமல வாசித்து வரும் நுணாவிலானுக்கு நன்றிகள் . எமது போராட்டத்தில் நடந்த சரி ,பிழை என்பவற்றை விமர்சனம் செய்யாமல் ,இன்னமும் தொடர்ந்து இயங்குபவர்கள் கடந்த காலங்களில் நடந்ததை சுயவிமர்சனம் செய்யாமல் நாம் ஒரு நேர்மையான அரசியல் செய்ய முடியாது என்பதுதான் என்கருத்து. இங்கு பலர் மற்றவர்கள் மேல் புழுதிவாரி தூற்றிகொண்டு ஆனால் தம்மை அல்லது தாம் சார்ந்த இயக்கத்தை எதுவித விமர்சனதிற்கும் உட்படுத்த தயாராகவும் இல்லை, உட்படுத்தவும் கூடாது என்ற தொனியி…
-
- 12 replies
- 1.3k views
-
-
வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம் சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது. - சுவாமி போர்…
-
- 1 reply
- 942 views
-
-
தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா? ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது.போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். இதற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பல்வேறு விதமான எச்சரிக்கைக…
-
- 3 replies
- 762 views
-
-
இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவ…
-
- 0 replies
- 700 views
-
-
ஈழப் போராட்டம் – அழித்தவர்கள் யார் : அஜித் ஒடுக்குமுறையும் வன்மமும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவற்றிகு எதிராக மக்கள் போராடுகிறார்கள். மக்களின் போராட்டங்கள் அரசியல்ரீதியாகத் திட்டமிடப்படும் போது மக்கள் இயக்கங்களாக வளர்ச்சியடைகின்றன. மக்கள் இயக்கங்கள் மீதான அரச பயங்கர வாதம் எதிர்கொள்ளப்படும் போக்கில் தலைமறைவு இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்ததின் பின்னான காலகட்டம் முழுவதிலும் விடுதலை இயக்கங்களை அரசுகளும் ஏகபோகங்களும் உருவாக்கிக் கொள்வதும் இறுதியில் இரத்த வெள்ளத்தில் மனிதப்பிணங்களை காண்பிப்பதும் பொதுவான நிகழ்ச்சிப் போக்கக அமைந்தது. மக்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்…
-
- 6 replies
- 1.4k views
-
-
முதலில் இன்றைய தமிழ் மக்களின் அரசியல் நிலையில் அவர்கள் தாம் எந்த தமிழ் தலைமையை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பநிலையிலேயே உள்ளனர். தமக்கு முற்றுமுழுதான நிம்மதியான வாழ்வையும், தாம் இதுவரை பட்ட துன்பங்களுக்கு ஈடான அரசியல் சுதந்திர அபிலாசைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெற்றுக்கொடுக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்கள் கடந்த 30 வருடமாக நம்பி ஏமாந்து தாம் நம்பிய தலைமைகள் தமக்கு விட்டுச் சென்ற சுமைகளின் வெளிப்பாடாகவே கருத இடமுண்டு. இதை மறுதலிக்கவும் முடியாது. சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் சிறிலங்கா என்ற நாட்டிலே வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது அரசியல் தலைமையாக முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் நன்கு தெரிய…
-
- 0 replies
- 852 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும…
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கை அரசுக்கான நெருக்கடிகள் - யாருடைய நலன்களுக்காக? - சஞ்சீவன் ஜெயக்குமார் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசுக்கு உள்நாட்டு நெருக்கடி என்பது, சமாளிக்கவே முடியாத மிகப் பெரிய சவால். ஆனால், அப்போது வெளியுலகத்தின் ஆதரவுத்தளம் பலமாக இருந்தது. அல்லது சாதகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் மிகப் பலமாக உள்ளது. பதிலாக வெளியுலக நெருக்கடி மிகப் பெரிய சவாலாக உள்ளது. எதிர்நிலை அம்சங்கள் அதிகரித்துள்ளன. புலிகள் இல்லை என்றாலும் புலிகளின் பேராலான புலிகளுடனான யுத்தத்தின் போது நடந்த - யுத்தக் குற்ற விவகாரங்கள் தொடர்பாகவே இன்றைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த மாதிரியான நிலைமைகளை முன்னரும் …
-
- 0 replies
- 623 views
-
-
நாம் இனி என்ன செய்யப் போகிறோம் ? 2009 முதல் இன்றுவரை நடைபெற்றுவரும் விடயங்கள் எம்மைப் பொறுத்தவரையில் நல்ல சமிக்ஞைகளாகத் தெரியவில்லை. 2009 இல் அழிக்கப்பட்ட எமது தாயக விடுதலைப் போராட்டமும் அதனுடனிணைந்த எமது கனவுகளும், நம்பிக்கைகளும். போரின் பின்னர் ஐ. நா உற்பட பல உலக நாடுகள் நடந்துகொண்ட விதங்கள். இடைக்கிடயே எமக்கு நம்இக்கை தருவதாகத் தோன்றி மின்னி மறைந்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான தனிநபர் கோரிக்கைகள், சனல் 4 ஒளிப்படங்கள், பா கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைகள், அவ்வப்போது காற்றில் ஆடி எரியும் மெழுகுவர்த்திப்போல தமிழகத்தின் மூலைகளில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் எம்மீதான அனுதாபக் கோஷங்கள், தற்கொடைகள் . இனக்கொலை முடிந்து இன்றுடன் இரண்டு வருடங்களு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையின் பூர்வீக குடிமக்களான தமிழ்மக்களின் சுதந்திரம் உண்மையிலேயே பறிபோனது பிரிட்டிஷ் வல்லாதிக்கத்திடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பொழுதில்தான். இலங்கை மண்ணில் தார்மீக உரித்துடைய தமிழர்கள் வந்தேறு குடிகளான சிங்களவரினால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். சிங்களவரின் பெரும்பான்மை என்கின்ற பலம் தமிழர்களின் அரசியற் பலத்தினை தோற்கடிக்க பெரும் சாதகமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று உருவானது இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கக் கொள்கையினால்தான். அகிம்சை வழியில் போராடி தளர்ந்துபோன இனத்துக்கு ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று மட்டுமே அந்த நேரத்தின் சரியான தீர்வாக அமைந்தது. அதனை தமிழர் தரப்பில் இறுதிவரை இலட்சியம் தவறாமல் கொண்டுநடத்தியவர்கள் தேசியத்த…
-
- 25 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம் தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது. எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்புச் செய்யவும் தயாராக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமேயானால் நாங்கள் எதிரிகளின் சேவகர்களாகவே இருக்க நேரும். சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை. ஆனால் சூரியனின் வரவை சேவலால் முன்னறிவிப்புச் செய்யமுடியும். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்ல ஒரு பண்டிதர் தேவையில்லை. ஆனால் சூரியன் ஏன் கிழக்கே உதிக…
-
- 1 reply
- 687 views
-
-
கலாமின் இலங்கை அவதாரம்!இரு கடலோர நிலவரம் ஆக்கம்: இரா.தமிழ்க்கனல் சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்னைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர் பாக ஒரு தீர்வைச் சொல்ல... பிரச்னை பற்றிக் கொண்டுள்ளது. ''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை. கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடைய…
-
- 0 replies
- 580 views
-
-
அட்சர கணிதத்தில் இரண்டு மைனஸ், பிளசுக்கு சமமானது, இதன் அர்த்தம் ஒன்றும் இல்லையென்பதே'' மிக்னோன் மக்லோக்ளின் அமெரிக்க பத்திகையாளர் (1913 1983) மூன்று வருட கால இடைவேளையின் பின்னர் 13 பிளஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. இவ் உற்பத்திப் பொருள் யார் யாருக்கு விற்கப்படப்போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன் ஓர் முக்கிய காரணத்தினால் இப்பொருள் நன்றாக சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின் 13 பிளஸ் என்னும் வாய்ப்பொருளை நம்பி வாங்கியவர்கள் தமக்கு விற்பனை செய்தவரை தேடத் தொடங்கினார்கள். இவர் இறுதியாக தமக்கு 13 பிளஸை விற்றவர், மிகவும் சந்தோஷத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கி 13 பிளஸ் விற்பதை நிறுத்திவிட்டு வேறு ஒர…
-
- 1 reply
- 534 views
-