அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
9/11 முதல் 5/19 வரை…:அஸ்வத்தாமா 9 /11க்குப் பின்னரான உலக ஒழுங்கு அரசியல் என்ற சதுரங்கத்தில் நாம் பகடைக்காய்களாக உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 9/11க்குப் பின், உலகம் புதிய பல வழிகளை கண்டுபிடித்துள்ளது. புதிய போக்குகளைச் சென்றடைந் துள்ளது. நடந்துமுடிந்த போர், அவற்றைப் பற்றிய புரிதலை முள்ளந் தண்டைச் சில்லிடவைக்கும் வகையில் எமக்கு உணர்த்தியிருக்கிறது. 9/11உம் அதையடுத்து ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் எனும் போது, 9/11ஐ விளங்கிக் கொள்ளல் என்பது மிக முக்கியமானதாகிறது. ஒரு வகையில், 9 /1 என்பது வெறும் குறியீடு மட்டுமே ஆயினும்; அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. “9/11” என்ற சம்பவம் ஏன் நடந்தது?…
-
- 1 reply
- 873 views
-
-
மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!! சம்பந்தனுக்குப் பிறகு, வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான தேவையொன்று தமிழர்கள் மத்தியில் எழுமென்பதை எவருமே மறுத்துக்கூற முடியாது. இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.இதையே தமது தாயக பூமியாகவும் அவர்கள் தொன்றுதொட்டுக் கருதி வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் இனப்பரம்பல் சிதை…
-
- 0 replies
- 598 views
-
-
பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராள…
-
- 0 replies
- 452 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பும் ஈழக் கோட்பாட்டு பூச்சாண்டியும் வீ. தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வெகுஜனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியாமல் இருந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அடையமுடியாமல் போனவர்களினாலும், என்றைக்குமே அப்பதவியை அடையக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முடியாதவர்களினாலும் அது முன்வைக்கப்பட்டதேயாகும். 1994 பிற்பகுதியில் ஜனாதிப…
-
- 0 replies
- 454 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 890 views
-
-
இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…
-
- 0 replies
- 397 views
-
-
அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை ப…
-
- 0 replies
- 406 views
-
-
உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில்…
-
- 0 replies
- 703 views
-
-
ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில்…
-
- 0 replies
- 684 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, பி.ப. 12:31 கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே! ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசிய…
-
- 0 replies
- 855 views
-
-
ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும் ஆக்கம்: வ.திருநாவுக்கரசு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆத…
-
- 0 replies
- 590 views
-
-
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி? - யதீந்திரா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள் பிரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில் தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின் பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic trap) தமிழரசுக் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விட்டதா என்னும் கேள்வி தொடர்பில் பதில் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அண்மைக்க…
-
- 0 replies
- 521 views
-
-
ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் October 13, 2019 பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை…
-
- 0 replies
- 425 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கிய…
-
-
- 39 replies
- 2.7k views
-
-
இன்று அமெரிக்காவின் பிழையான அரசியல் முடிவுகள் பற்றி, நல்ல ஒரு பேச்சொன்று பார்க்கக் கிடைத்தது. நீங்களும் அந்த பேச்சைப் பார்க்க விரும்பினால் கீழ்வரும் இணைப்பை அழுத்தி 50 வது நிமிடத்திலிருந்து (இரண்டாவது பேச்சாளரின் அறிமுகத்திலிருந்து) பார்க்கவும். http://www.c-spanarchives.org/library/incl...=&clipStop=
-
- 3 replies
- 2k views
-
-
ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச…
-
-
- 1 reply
- 205 views
-
-
‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு. இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆக…
-
- 0 replies
- 407 views
-
-
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்…
-
- 0 replies
- 145 views
-
-
இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது. எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனென…
-
- 0 replies
- 541 views
-
-
’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’ ஏ.சி.எம் பௌசுல் அலிம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை …
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை? Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு, முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்புகள் பேரழிவுகரமாகத் தோல்வியடைந்தன, இது 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளுக்கும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதற்கும் பங்களித்தது. இது எச்சரிக்கை இல்லாமல் வந்த கடவுளின் செயல் அல்ல. இது தவிர்க்கப்பட்…
-
-
- 1 reply
- 211 views
- 1 follower
-
-
ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மே 20 முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில், தமிழ்த் தொலைக்காட்சியொன்றின், அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஆயுத இயக்கமொன்றின் தலைவர் ஒருவர், வெளியிட்ட கருத்தோடு, இந்தப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ''...தம்பி பிரபாகரனின் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்புப் பெரியது; நாங்களும், தமிழீழத்தை இலக்காகக் கொண்டே ஆயுதங்களைத் தூக்கினோம். ஆனால், ஆயுதத்தால் இலக்கை அடைய முடியாது என்று உணர்ந்த போது, அதைக் கைவிட்டோம்...'' என்று அந்தத் தலைவர் கூறினார். அப்போது, அவரது இயக்கம், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் …
-
- 3 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்புக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அம்பிகாவுக்கே போய் சேரும்.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பை சேர்ந்த அம்பிகாவும் நளினியும் இறக்கப்படுவதாக அறிவிப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர்கள் போட்டியிடக்கூடாது என்று பலரும் கடுமையாக வலியுறுத்தினார்கள். கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என்று அக் கட்சியின ஆதரவாளர்கள் பெரும் குதூகலிப்பை வெளியிட்டார்கள். ஆனாலும் சுமந்திரன் அம்பிகாவை மாத்திரம் கைவிடுவதாக இல்லை. கூட்டமைப்புக்குள் தன்னைப் போன்ற சிங்கள மனநிலை கொண்ட அம்பிகாவை எப்படியாவது கொண்டுவந்து, கூட்டமைப்பின் தலைமையை கொழும்புக்குள் கீழ் கொண்டுவ…
-
- 0 replies
- 544 views
-
-
ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அ…
-
- 0 replies
- 372 views
-
-
அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி.. ரொபட்அன்டனி ஆளும் கட்சிக்குள்ளேயே வலுத்துவந்த இருபதாவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மீதான எதிர்ப்பை இறுதி நேரத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி சாமர்த்தியமான முறையில் முறியடித்து வெற்றியீட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளதுடன் அதன் 8 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குஆதரவாகவாக்களித்தனர் சர்ச்சைகள் எதிர்ப்புக்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஏற்பாடும் நிறைவேற்றம் பல்வேறு சர்ச்சைகள் எதிர்ப்புகள், ஆதரவு, சாதக, பாதக, விமர்சனங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்ப…
-
- 0 replies
- 467 views
-