அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
தமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன ? தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன ? சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு. ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது. மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்…
-
- 5 replies
- 3.1k views
-
-
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை Filed under: செய்திஆய்வு — thivakaran @ 4:32 pm தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல “ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறகொடிக்கப்பட்ட ஜனநாயகம் கே.ஜி.பி. அருகில் கிடத்தப்பட்டிருந்த கணவரின் சடலத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்த அம்மாவின் கைவிரல்களைத் தன் பிஞ்சுக் கரங்களால் பற்றிக் கொண்டு சிரித்துக் கொண்ருந்தது அந்த இரண்டு வயது பெண் குழந்தை . -ஆண்டு : 1947 புற்றுநோயால் தாம் இறக்கும் முன்பு ஒரே ஒரு முறை தன் மனைவியைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது அவளுடைய கணவருக்கு! -ஆண்டு : 1999 34 வயது அலெக்ஸாண்டர், 30 வயது கிம்-இரண்டு மகன்களும் அயல்நாட்டில்; அவளோ வீட்டுச்சிறையில்! - ஆகஸ்ட் : 2007 அந்தப் பெண்தான் ஆவ்ங்-ஸான்-ஸூ-க்யி-டாவ் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் பர்மிய வீராங்கனை. 1945 ஜூன் 19 அன்று பிறந்த ஸூ-க்யிவின் தந்தையார் ஆவ்ங்-ஸான்-யூ பர்மிய தேசியத் தலைவர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்! மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. .. இத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக …
-
- 1 reply
- 2.9k views
-
-
கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் : பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந்திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதிகாரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது …
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…
-
- 8 replies
- 5.7k views
-
-
வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம் Pathivu Toolbar ©2005thamizmanam.com உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 - 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே. இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை Pathivu Toolbar ©2005thamizmanam.com உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க: அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
*********
-
- 1 reply
- 1.8k views
-
-
மொழிகளில் பலமானது மௌனம் என்று எங்கோ எப்போதோ வாசித்த ஒரு ஞாபகம். இக்கூற்று நியாயமானதா, லொஜிக்கலானதா என்ற ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், உலக அரசியலைப் பொறுத்தவரை இக்கூற்று கவனத்திற் கொள்ளப்படவேண்டி ஒன்றாகவே தோன்றுகின்றது. உதாரணமாக, அண்மைக்காலமாக புலம்பெயர் "ஆய்வாளர்கள்" விடுதலைப்புலிகளின் மொனத்திற்கு மனம் போன போக்கில் காரணம் கற்பித்து வருவது இங்கு நோக்கத்தக்கது. இந்நிலையில், அண்மையில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு உலக அரசியல் மௌனம் தொடர்பான ஒரு சிறு பதிவாகவே இப்பதிவு அமைகிறது. இம்மாதம் 6ம் நாள் (06-09-2007), இஸ்றேல் சிரியாமீது ஒரு வான் தாக்குதலை நிகழ்த்தியது என்ற செய்தி, சம்பவம் நடந்து ஏறத்தாள பத்து நாட்களின் பின்னர் தான் பரந்த அளவில் வெளியானது. இருப்பினும் ஏன் இந்தக் …
-
- 4 replies
- 2.1k views
-
-
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன. தாயகத்தின் அவல நிலையையும், எந்தவித வெளி உதவிகள் இன்றி விடுதலை வேண்டி 30 ஆண்டுகளிற்கு மேலாக பலத்த இழப்புக்களோடு போராடும் இனமாக மட்டுப்படுத்தப்பட்ட நேர மற்றும் மனித வளரீதியில் இவைதான் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன. இருந்த போதும் புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நல்லெண்ண தூதுவர்களாக நடந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய …
-
- 16 replies
- 4.3k views
-
-
பொம்மலாட்டம்! க. ரகுநாதன் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஏறக்குறைய 15 ஆண்டுகள் பேச்சுக்குப் பின் உலக வர்த்தக அமைப்பில் டிசம்பர் 2001-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது சீனா. அது முதற்கொண்டு சீனாவின் பொருள்கள் உலகச் சந்தையில் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் அதை கலக்கத்துடனே பார்க்கின்றன. சீனா தயாரிக்கும் பொருள்கள் பெரும்பாலானவை தரம் குறைந்தவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்தியாவில் "சைனா பஜார்' வந்தபோது விலை குறைந்த, தரமும் குறைந்த பொருள்கள் சந்தையில் குவிந்தது, இதற்கு ஓர் உதாரணம். இந்நிலையில், சீனாவில் தயாரான 8 லட்சம் பொம்மைகளைத…
-
- 1 reply
- 1.6k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்…
-
- 2 replies
- 10k views
-
-
ஆரிய உதடுகள் உன்னது. தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும் இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும் சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின் ‘பிதாமகன்’களில் ஒருவருமான அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது கூட. இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது. சுற்றி வளைப்பானேன்? அவ…
-
- 9 replies
- 3.3k views
-
-
இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை மதியம் செவ்வாய், செப்டம்பர் 04, 2007 ... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ …
-
- 0 replies
- 2.2k views
-
-
இரட்டைத் தந்திரோபாயங்களும் சர்வகட்சி மாநாடும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த அரசியல் கூட்டு திரும்பத் திரும்பக் கூறி வந்த ஒரு விடயம் நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்தத்திற்குச் செல்லமாட்டோம் என்பதாகும். இருப்பினும் புதிய அரசாங்கத்திற்கு அவ்வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய இயலுமை இருக்கவில்லை. இது நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, கோட்பாட்டு ரீதியான நம்பிக்கைகள், தெற்கு, மற்றும் குறிப்பாக வடக்கில் இருந்து ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டதொரு நிலையாகும். எனவே, தவிர்க்க முடியாதபடி நாடு மீண்டும் ஒரு தடவை யுத்த சூழ்நிலையினுள் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாரக் கட்டுரையின் விடயம் அதுவல்ல. …
-
- 0 replies
- 929 views
-
-
ஜுலை 11, 2007. கடைசி கடைசியாக ஓர் ஆட்டம் ஆடிப் பார்த்துவிடலாம் என்று அப்துல் ரஷீத் காஜி முடிவு செய்தபோது, லால் (என்றால் சிவப்பு) மசூதி முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. கூரைக்கு மேலே ஹெலிகாப்டர்கள். நிறைமாத கர்ப்பிணி மாதிரி அசைந்து, நகர்ந்து வரும் பீரங்கிகள். ராணுவம் உள்ளே வராது; காட்டுவதெல்லாம் வெறும் பாவ்லா என்றுதான் அந்த வினாடி வரை நினைத்திருந்தார்கள். பாகிஸ்தானின் சூழ்நிலை அப்படி. அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பிய மாதிரி இஸ்லாமாபாத்தில் முஷாரஃப் செய்துவிட முடியாது. நிற்கவைத்துக் கழுவிலேற்றிவிட ஒரு மாபெரும் கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிற தேசம். தவிரவும், அவர்கள் தனிநாடு கேட்கிற கோஷ்டியல்ல. இஸ்லாமியச் சட்டமான ஷரியத்தை,…
-
- 0 replies
- 1.3k views
-
-
தங்கத்தை புடம் போட்டாலும் தரம் குறையாது. Saturday, 30 June 2007 ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் மகிந்தராஜபக்ஷ ஆட்சியின் மற்றுமொரு விரிவாக்கம் "தமிழ்நெற்" இணையத்தளத்தை முடக்க முயலும் அதனது செயற்பாட்டிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்காவில் இணைய இணைப்பு சேவை வழங்குணர்களூடாக இணைப்புப்பெறும் பயன்பாட்டாளர்கள் "தமிழ்நெற்" இணையத்தளத்தைப் பார்வையிட முடியாத நிலையை அது ஏற்படுத்தியுள்ளது இந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுராபிரியதர்சனயாப்பாவும், சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகோடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறியிருக்கின்றனர். இதிலே எவ்வளவு வீதம் உண்மை இருக்கும் என்பதை அவர்கள் நாளாந்தம் வெளியிடும் அற…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த மே மாதத்தில் இரு தினங்கள் கலைஞர் எரிமலையாய்ப் பொங்கி வெடித்ததையும், குற்றால அருவியாய்க் குளிர்ந்ததையும் தி.மு.க. வரலாறு மட்டுமல்ல, அகில இந்திய அரசியல் வரலாறும் கவனமுடன் பதிவு செய்து கொண்டது. மே 13 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதிமாறனை விலக்கிக் கொள்ளும் அதிகாரத்தை தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய தினம் கனத்த இதயத்துடன் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறிய கலைஞர், பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தார். அந்தச் செய்தி நாடு முழுவதிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 27_ம் தேதி தி.மு.க.,…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா? -(கலைஞன்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 938 views
-
-
அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும்இ அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜிஇ ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோஇ அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள். மீண்டு வந்த மீனவர்களில் பத்துப் பேர் குமரி மாவட்டம் குளச்…
-
- 2 replies
- 1.4k views
-
-
பெண்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது உலக அதிகாரம்! உலகின் சக்திமிக்க பெண்கள் ஒரு பார்வை. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஐ.நா தலைமையிலான உலக அரசுகளும்இ அவைகளின் ஆட்சிகளும் ஆண்களின் கைகளில் இருந்து இப்போது பெண்களின் கைகளுக்கு மாறியவண்ணமுள்ளன. ஆண்களின் சலிப்பு மிக்க ஆட்சி மறையஇ பெண்களின் அதிகாரம் உலக அரங்கில் வேகமாகப் பரவுகிறது. அரசியல் மட்டுமல்லாமல்இ நிர்வாக மையங்களிலும் பெண்களின் மேலாதிக்கம் படிப்படியாகக் கையோங்கி வருகிறது. ஐரோப்பிய அரங்கில் பெண்களின் சிறப்பு 1979 முதல் 1990 வரை ஆட்சி செய்த இரும்புப் பெண்மணி மாக்கிரட் தாட்சர் காலமேயாகும். தற்போது ஜேர்மனியில் புதிய சான்சிலராக தெரிவான அஞ்சலா மார்க்கிலின் வருகைக்குப் பின்னர் ஐரோ…
-
- 5 replies
- 2.9k views
-
-
ராணுவமில்லாத நாடுகள் உலகில் மிகப் பெரிய ராணுவம் உள்ள நாடு சீனா என்பது எல்லோருக்கும் தொரியும். இரண்டரை கோடி பேர் சீன ராணு வத்தில் பணியாற்றிவருகிறார்கள். இதில் 2 கோடி பேர்கள் வரை தரைப் படையிலும் ஏனையோர் கப்பல், விமானம் போன்ற படைவீரர்களா கவும் பணியாற்றி வருகிறhர்கள். இதுதான் உலகின் மிகப்பொரிய ராணுவ நாட்டின் கதை. அதே சமயம் ஒரே ஒரு ராணுவ வீரர்கூட இல்லாத நாடுகளும் இந்த உலகில் உள்ளது என்பது ரொம்ப பேருக்குத் தொரியாது. இதில் முத லிடம் வகிப்பது வாடிகன் நாடாகும். 0.4 சதுர கிலோ மீட்டர் சுற்றளவே இந்த நாட்டுக்கு உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையோ 900 பேர்கள் தான் இந்தகுட்டி நாடு எப்படி ஒரு ராணுவத்தை வைக்க முடியும். அப்படியே ராணுவம் இருந்தாலும் இந்த குட்டி ராணுவப் படையால் பிற நாட…
-
- 4 replies
- 2k views
-
-
குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது. அவர் இலங்கையின் பிரபலகுற்றவியல் வழக்கறிஞர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வாதடியவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்களின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 98வீதமான வழக்குகளில் எதிரிகளுக்காக தோன்றி வாதடியவர். கிருஷாந்தி கொலை வழக்கு மற்றும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் படுகொலை வழக்கு உட்பட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வழக்குகளில் தோன்றி வாதாடியவர். மனித உரிமைகளை மீறிவந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவரின் செயல்கள் சவாலாக இருந்தது. அரசு தலைவராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின…
-
- 0 replies
- 1k views
-