அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் பரிசு கிடைத்துள்ளது பற்றி கொண்டாடக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நட…
-
- 0 replies
- 1k views
-
-
நடப்பாண்டைவிட அரச செலவினம் 40 சதவீதத்தால் அதிகரிக்கிறது: பணவீக்கமும் மோசமாக உயர்வடையும் அபாயம் [06 - October - 2006] [Font Size - A - A - A] இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்கள் உட்பட 2007 ஆம் ஆண்டிற்கான தனது செலவினங்களை நடப்பாண்டைவிட 40 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் முன்னறிவித்தலில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த செலவினம் 2007 இல் 804.6 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. இம்முறை பொலிஸ் சேவைக்கான செலவினம் இராணுவத்திற்கான செலவுகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.பொலிஸ் சேவையை இணைத்துள்ளோம். பாதுகாப்பு தொடர்பா…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஜநா செயலாளர் பதிவிக்கான வேட்பாளர்கள் பற்றிய தமிழர்கள் நிலைப்பாடு என்ன? புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஊடகங்கள் சமூகம் தங்களது நிலைப்பாடு என்ன என்று தெரிவித்தாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஈழத்தமிழர்கள் இவ்வாறு மொளனம் காப்பது சரியா? இது தெளிவில்லாததால் வந்த மொளனமா இல்லை நம்பிக்கையீனத்தால் வந்த இராஜதந்திர மொளனமா? மலரப்போகும் சுதந்திர தமிழீழம் அடுத்த ஜநா செயலாளர் பதிவிக்காலத்தில் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். எமது மொளனம் சரியானதா? தாயகத்தில் உள்ள மோசமான கள நிலமைகளால் நாங்கள் இந்த விடையங்களை சிந்திக்க பங்களிக்க பங்குபற்ற நேரம் முன்னுரிமை இல்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையா? உங்கள் கருத்துக்கள் :roll: :arrow:
-
- 9 replies
- 2.1k views
-
-
சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்! (ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம) ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன. இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன. சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ். குடா முற்றுகையும் தமிழ் ஊடகங்களின் அரசியலும் உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுகின்றனவோ இல்லையோ அவை சார்ந்த அரசியலை மிகத் தெளிவாகவே முன்வைக்கின்றன. முன்வைக்கின்ற என்ற சொல்லாடலை விட திணிக்கின்றன என்ற சொல்லாடலே பொருத்தமானது என நான் கருதுகிறேன். எமது விருப்பங்கள் குறித்த அக்கறைகள் எதுவுமின்றி எமது புலன்களின் வழி உள்ளிறங்கி எமது மனங்களின் மீதான வன்முறையை ஊடகங்கள் நிகழ்த்துகின்றன. உதாரணத்துக்கு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடிக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தீவிரவாதம்: அமெரிக்கா மீது முஷாரப் பாய்ச்சல் அக்டோபர் 01, 2006 லண்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்தான் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். முஷாரப் சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் 11 நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடேஜ் மிரட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்காக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பல கோடி ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்குக…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு து}ரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ அதே அளவு வேகத்தில், அல்லது அதைவிட அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவதானிக்க மறந்து விடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள அதாவது பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் திணித்தும் அழுத்தியும் வந்ததனால் மட்டுமல்ல, தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகமும் அவர்களை எதிர்த்திசையில் செல்வதற்கும் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai :|
-
- 4 replies
- 1.7k views
-
-
நான் உலகத் தமிழர்களுக்கு தலைவன். தமிழகம் எனது கோட்டை. அரச பணத்தை வேட்டையாடி வேட்டையாடி நான் உழைத்ததோ, சண் ரீ.வி. தற்போது என் பெயரில் வர இருப்பதோ, ரூயாட்ட கொம்பனி. மக்களுக்கு கலர் ரீவி. கேபிள் பாசு என் கெட்டிக்கு. ஆனாலும் தமிழ் நாட்டில் நல்லாட்சி. நல்லவர் ஆளும் காலம் தமிழகத்துக்கு எப்போது வரும்? அன்பிற்கினிய கலைஞர் அவர்களே! உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் சிறியவன் அல்ல. ஏனெனில் சிறு குழந்தை கூட உங்களிலுமு் நன்றாகவே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. நீங்கள் சிந்திக்கும் விடையங்கள் எல்லாம் நன்றே. ஆனால் சொந்த சகோதரர் வாழ்வில் தீயேறிகையில், எரியும் வீட்டுக்கு விலை பேசும் குணம் எப்போது உங்களோடு ஒட்டிக்கொண்டது.? வைகோவிற்கெதிரான அரசியல் செய்வதாக சொல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும் விடுதலைப்புலிகள் புரட்டாதி 2006 - க.வே.பாலகுமாரன் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமாக பரிணாம அரசியல் போக்கின் விளைவாக அரங்கேறிய போர் நிறுத்த ூ அமைதிப்பேச்சுக் காலகட்டம் தனது வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் உரிய உச்ச விளைவுகளுக்கு எம் மக்கள் இப்போது நிலையின் காவலர்களான மேற்குலகிற்கோ தமது நீண்டகால நட்பு நாடொன்றினை எவ் விதம் கையாள்வதென்கிற இக்கட்டு. இந்தியா விற்கோ எதிர்பாராத அதிர்ச்சி: இப் பிராந்தியத் தில் தனது உண்மை நண்பன் யார் என்பதை மீளாய்வு செய்யும் நெருக்கடிநிலை. இவ்வாறா நிலை நோக்கி நகர்வதைத் தடுக்கும் வேளை இது. முதலில் சருவதேசத்தின் கதையை நோக்கலாம். கடந்த ஓகஸ்ட்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிபிசியில் நடந்த உலக விவாதத் தொடரில் தற்போது உலகில் பல பாகங்களில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான வழி என்ன என்ற விவாதிக்கப்பட்டது. http://www.eelamist.com/podcast/index.php?...al%20Media&p=23
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பரிணாம வழர்ச்சிப் படிகளில் பல சோதனைகளையும் தாண்டி சாதனைகளை நிலைநாட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந்த சாதனைகள் என்பவை தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான போரியல் வெற்றிகளினாலும் அந்த வெற்றிக்காக வித்தாகிப் போன மாவீரர்களாலும் உருப்பெற்றதாகும். http://www.eelamist.com/podcast/index.php?...%20Reviews&p=22
-
- 3 replies
- 1.6k views
-
-
போச்சுவார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தமிழனை பிரத்தாளும் சூத்திரத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதி ரணிலை சந்தித்த தமிழ்நாட்டின் முதலமச்சர் விளக்கம் தருவாரா? ரணிலின் ஆட்சிக்காலத்தில் கருணாவை பிரிக்க முயற்சிகள் ஆரம்பித்தது அதில் ரணிலின் பங்கு என்பது ஒன்று இரகசியம் அல்ல. இந்த நிலையில் கருணாநிதி ரணிலை சந்தித்திருக்கிறார். சந்தித்தவர் இது பற்றி விளக்கங்கள் கேட்டாரா? இன்று மேசமடைந்த சூழ்நிலைக்கு கருணாவின் பிரிவினால் ஊக்குவிக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் நிலைப்பாடு ஒரு காரணம் என்பதை உணரமுடியாதவரா கலைஞர் கருணாநிதி?
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு எதோ ஒரு பத்திரிகையில் தீவகப் பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து அமைப்பொன்றை நிறுவுகின்றார்களாகவும் அது கருணாசியத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகவும் வெறும் உதவாக்கரை கருத்துக்களோடு கட்டுரையொன்று வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்துள்ள எதோ ஒரு தீவில் பிறந்தவன் என்கின்ற முறையிலும், தேவையற்றதற்கெல்லாம் கருணாவின் பெயரை தொடர்புபடுத்தும் புல்லுரிவிகளின் நோக்கத்தையும் தோலுரித்துக்காட்டுவது தான் இந்தக் கட்டுரையின் (??) உள்நோக்கம். எதற்கெடுத்தாலும் தீவகப் பிரதேசங்கள் அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசியம் வளர்க்கும் தம்பிமார்களின் விளையாட்டுக்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கோண்டாவில், கோப்பாய் போன்ற பிர…
-
- 1 reply
- 1.7k views
-
-
பலோசிஸ்தான் போராளிகளை அழிப்பதற்கு திட்டம் தீட்டியவரே இலங்கைக்கான பாக். தூதுவராக நியமனம் வீரகேசரி நாளேடு< இந்திய இணையத்தளம் தகவல் பலோசிஸ்தான் போராளிகளை அழித்தொழிப்பதற்கு முன்னர் திட்டம் தீட்டிய ஏயார் வைஸ் மார்ஷல் ஷெஹ்சாத் அஸ்லாம் சௌத்திரியே தற்போது இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சௌத்திரி குறித்த பதவியிலிருந்து விலகிய பின்னரே புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு உதவும் பொருட்டே இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பலோசிண்ஸ்தான் சுதந்திர போராட்ட இயக்க நிறுவுனர் கான் பக்டியும் மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும். இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல…
-
- 11 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்: ஜெயதேவ உயங்கொட சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ரெடிஃப் இணையத்தளத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காலனியாதிக்க காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல் சக்திகள் அரச கட்டமைப்பை மாற்றத் தயாராக இல்லை. 25 ஆண்டுகாலம் இனப்பிரச்சனை நீடிக்கின்ற போதும் கூட சிங்கள அரசியல் சக்திகள் இம்முடிவுக்கு வரவில்லை. தற்போதைய சிறிலங்கா அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியைத்தான் வரையறுக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன. இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.eelampage.com/?cn=28488 http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/28.htm இது எமது யுகம். எவ்வளவு மன்றாடிணோம்...மன்றாடுகிறோம
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்பாண அரசாங்க அதிபர், யாழ்பாணத்திற்கு உடனடித் தேவையாக, 5,500 மெற்றிக்தொன் உணவு மற்றும், அத்தியவசிய தேவைகள் தேவைப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார்! ஆனால், மகிந்த அரசு, மிகவும் அதைத் தாமதித்து, 4,5 நாட்கள் கழிந்த பின்னர், ஒரு கப்பலில், பொருட்களை அனுப்புவதாக வேண்டா,வெறுப்பாகச் செய்தது. அதுவும், சாமான் ஏத்துவதற்கு முன், மகிந்த தொடங்கி, அடிமட்ட, டக்ளஸ் வரைக்கும் படம் எடுப்பதற்காக 2 நாட்கள் தாமதம் செய்து தான் பொருட்கள் அனுப்பப்பட்டன! அந்தப் கப்பலில், 3500 தொன், அனுப்புவதாக கிட்டத்தட்ட, அமீர்அலி பிபிசிக்குச் சொன்னார். "அரசாங்க அதிபர் சொன்னதில் 85 அனுப்புகின்றேன் என்று!.அது சுத்தப் பொய்! அதில் கப்பலில் வெறும், 1500 தொன் வரை தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல்களின் பின்னணியில் சர்வதேச இராஜதந்திரம் ` இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணி திரண்டு விட்டன. அந்நிலையில், "எல்லாவற்றுக்கும் மேலானதாக நாட்டைக் கருதி' ஒன்றுபட்டு செயற்பட வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார். தேசிய அரசு மூலம் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஐ.தே.கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஐ.தே.கட்சியுடன் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டி யிட்டு, அந்தக் கட்சியின் தேசியப் பட்டியலில் தமக்குரிய பங்கையும் பெற்றுக்கொண்ட இ.தொ.காவையும், மலையக மக்கள் முன் னணியையும் ஐ.தே.க. அண…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://torsun.canoe.ca/News/Columnists/Mar...779431-sun.html
-
- 14 replies
- 5.9k views
-
-
புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் `ஒபரேஷன் பவான்' தோல்வி கண்டது ஏன்? [18 - August - 2006] [Font Size - A - A - A] புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்க வேண்டும்.புலிகள் அமைப்பை தோற்கடிக்க முடியும் ஆனால் அது இலகுவான நடவடிக்கையாக இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அரசு தனது பாதுகாப்புப் படையினரின் `ஒபரேஷன் பவான்' (OPERATION PAWAN) இராணுவ நடவடிக்கையைப் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக ஆரம்பித்தது. புலிகள் இயக்கத்தினரை 72 மணி நேரத்துக்குள் அதாவது, 3 நாட்களுக்குள் பின் வாங்கச் செய்வதே இந்திய இராணுவத்தின் உத்தேச குறிக்கோளாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. அந்தக் குறிக்கோளுடன் இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களைத் தொடங்கிய போ…
-
- 2 replies
- 1.7k views
-
-
எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன? உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது. யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது. இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன? யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது. அதற்கு நாம் என்ன…
-
- 67 replies
- 11.4k views
-