அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்! November 11, 2023 —- எம். எல். எம். மன்சூர் —- ”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சி…
-
- 0 replies
- 455 views
-
-
கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா? Published By: VISHNU 12 NOV, 2023 | 06:40 PM சி.அ.யோதிலிங்கம் தமிழரசுக்கட்சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதென வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. அம் மாநாட்டில் புதிய நிர்வாகமும் தெரிவுசெய்யப்படவுள்ளது. மாநாடு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக சுமந்திரன் தெரிவுசெய்யப்படலாம். அதற்கான நகர்வுகளையே பல நாட்களாக சுமந்திரன் செய்துகொண்டு வருகின்றார். இதற்காக அவர் கிழக்கிலிருந்து வடக்கா…
-
- 14 replies
- 1.3k views
- 2 followers
-
-
அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா? - நிலாந்தன். November 12, 2023 கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது. ”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ். மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும் ஹோட்டல் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு கேட்டிருக்கின்றன. அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தும் “Shuttle Vibe” என்ற கொழும்புமைய நிறுவனத்தோடு கதைக்குமாறு கூறி அந்த நிறுவனத்தின் தொடர்பிலக்கத்தை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. நிகழ்வில் “டிஜே” இசை வழங்குனரோடு சிலர் தொலைபேசியில் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அவருடைய வீட்டுக்குச் …
-
- 4 replies
- 712 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன? – நிலாந்தன். சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து போன சில நாட்களின் பின், கடந்த வாரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.கடந்த சில ஆண்டுகளில் இது இரண்டாவது வருகை. இங்கே அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்றார். சீனாவில் உள்ள ஒரு பௌத்த அறக்கட்டளையின் பெயரால் நலிவுற்றோருக்கு உதவிப் பொதிகளை வழங்கினார். யாழ் ஜெட்விங் சுற்றுலா விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 10 பேர்களைச் சந…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவின் துரோகங்கள் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகப்புரியும். இப்ப சீனாவைக்காட்டி தமிழர்களைப்ப் பேய்க்காட்ட வேண்டாம். இந்தியாவின் தவறான வெளியுறவுக்கொள்கையின் தோல்வியே இன்றைய சீனாவின் சுற்றிவளைப்பு. புலிகள் இருந்தவரையில் இலங்கை இந்தியக்கடற்பரப்பில் சீனாவே,அமெரிக்காவோ யாரும் உள்நுழைய முடியவில்லை. புலிகளை அழித்து தனக்குத்தானே மண்ணை அள்ளிப்போட்டது.இந்தியா. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் தோல்வி இந்தயாவைச்சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவுக்கு பகைநாடுகளாக்கி வைத்திருக்கின்றன.இந்தியா வேடம் பேட வேண்டாம். இநதியாவின் வெளியுறவுக்கொள்கையை மற்றாகக் கலைத்து மலைiயாளிகளை வெளியேற்றி தமிழர்களை வெளியுறவுத்துறைக்கு புதுஇரத்தம் பாய்ச்ச வேண்டும்.
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா? — 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.1947 இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய கொடி எது?– அ.நிக்ஸன்- 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் …
-
- 1 reply
- 446 views
-
-
இந்தியாவை நாங்கள் அளவுக்கு மீறி நம்பவும் கூடாது. இந்தியாவின் நிலைப்பாடு முழுமையாக எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் கொள்ளக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆனால் எங்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கை தீவைப் பொறுத்தவரை இந்த உலக நாடுகள் எல்லாம் பார்க்கின்ற விடயம் என்னவென்று சொன்னால் இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரம் யாரால் நிர்ணயிக்கப்படுகின்றதோ அவர்களுடைய மனம் கோணாமல் தாங்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். இலங்கையில் 72 வீதமான மக்கள் சிங்கள பெரும்பா…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
09 NOV, 2023 | 05:08 PM (கொல்லங்கலட்டியான்) தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜின் நினைவுதினம் நவம்பர் 10ஆம் திகதியாகும். மாமனிதர் நடராஜா ரவிராஜின் அரசியல் பயணமும் அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு காலத்தால் அழியாத கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன. நேர்மையும், தைரியமும், மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காக அவர் கொண்டிருந்த இதயபூர்வமான அர்ப்பணிப்பும், எவரையும் மதிக்கும் சுபாவமும், தனது உறுதியான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடும்போது அவர் பேணும் அரசியல் நாகரிகமும் அரசியல் களத்தில் வேறுபடுத்தி இனங்காட்டும் ஆளுமைமிக்க தலைவராக அவரை மாற்றியிருந்தன. இந்த சூழலில் அ…
-
- 4 replies
- 717 views
- 1 follower
-
-
நீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற ‘நடுநிலையும்’ Photo, TAMIL GUARDIAN ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எமது தனிப்பெரும் தலைவர் இந்த வேட்கையை ஒட்டுமொத்த மக்களின் விழிப்புணர்வாக்கி மக்களை ஒருங்கிணைத்துள்ளார். எனவே, வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிப்பதிலிருந்து எவரும் தவறக்கூடாதென்றார் அவர். இது பரிந்துரையல்ல; அதிகாரத்தைப் பயன்படுத்திய உத்தரவு. ஒரு பல்க…
-
- 0 replies
- 404 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். ஹமாஸை 'பிசாசு' என்று கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருப்பதாகவும் கூறினார். இஸ்ரலுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பிறகு, நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான முன…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 11:26 AM ஆர்.ராம் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் தமக்கு கீழ்படியாது முரண்டுபிடித்தவர்களை களையெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதை கடந்தவாரம் பார்த்திருந்தோம். களையெடுக்கும் முதலாவது அத்தியாயம் வவுனியாவில் அரங்கேற்றப்பட்டதோடு அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மா…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும் November 5, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் ஒரு மதகுருவிடம் இருக்கவேண்டிய பண்புகளுடன் பொதுவெளியில் நடந்துகொள்வதில்லை என்பதை ஏற்கெனவே நடந்தேறிய ஒன்று இரண்டு அல்ல பல்வேறு சம்பவங்கள் மூலமாக நாமெல்லோரும் அறிவோம். ‘ வணக்கத்துக்குரியவராக’ இருக்கவேண்டிய தேரர் பெருமளவுக்கு ‘சர்ச்சைக்குரியவராகவே ‘ பொதுவில் அறியப்பட்டிருக்கிறார். அவரது அட்டகாசங்களும் ஆவேசப்பேச்சுக்களும் மகாசங்கத்துக்கே பெரும் அவமானம் என்பது குறித்து பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட கவலைப்படடதாகத் தெரியவில்லை. அவர்கள் அழைத்து அறிவுறுத்தியிருந்தால் அவர் தொடர்ந்தும…
-
- 0 replies
- 422 views
-
-
சம்பந்தன் பதவி விலகுவதே மக்களுக்கான அறம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து ஊடகக் கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார். அவரினால் வெளியிடங்களுக்குப் பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டுச் சொல்லும் நிலை இருக்கிறது. அப்படியான நிலையில், பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்க…
-
- 0 replies
- 866 views
-
-
சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் யோசனையும் அதிலுள்ள பேராபத்தும் - யதீந்திரா யாழ் வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணம் அண்மையில் தீன்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. அதாவது, சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையை கைவிடுங்கள். அதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அத்துடன் காலப்போக்கில் எங்களுடைய உள்ளுர் மீன்பிடியே இல்லாமல் போய்விடும். சீனா அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் துறையின் மீது அதிக ஈடுபாட்டை காண்பித்துவருகின்றது. பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் தொழில்களை இழந்திருந்த சந்தர்ப்பங்களில், மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கியது அத்துடன், இலவசமாக டிசல் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈட…
-
- 0 replies
- 266 views
-
-
அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்- நிலாந்தன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மோதலைப் பற்றிய விளக்கம் உண்டு. ஆனால் அது முழுமையானதாக தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் உள்ள எல்லாச் …
-
- 0 replies
- 424 views
-
-
இந்தியக் கப்பல் – சீனக்கப்பல் – நிர்மலா சீதாராமன்! நிலாந்தன். இந்தியக் கப்பல் ஒன்று இலங்கைத் துறைமுகம் ஒன்றினுள் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், சீனக் கப்பல் இலங்கைக் கடலுக்குள் பிரவேசித்தது. அது சில நாட்கள் தரித்து நின்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின் வெளியேறிய கையோடு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார்.அவர் வடக்கு கிழக்கிற்கும் வருகை தந்தார். அவர் வந்து போன கையோடு, சீனத் தூதுவர் வடக்கிற்கு வருகை தருகிறார். நாட்டில் என்ன நடக்கின்றது? நாட்டின் ஜனாதிபதி கூறுகிறார், இந்தோ பசுபிக் மூலோபாயம் எனப்படுவது யதார்த்தமற்றது என்று.புவியியல் பாடங்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு பதம் 2000 ஆவது ஆண்டுகளுக்கு முன் பிரயோகத்தில் இருக்கவில்லை. ஆசிய பசிபிக் என…
-
- 0 replies
- 448 views
-
-
ஹமாஸை வேரோடு அழிப்பது காஸாவுக்கு பேரழிவாக முடியுமா? இஸ்ரேலின் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜீய செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘மத்திய கிழக்கை மாற்றுவோம்’ என்று சூளுரைத்திருக்கிறார். முன்பிருந்த சூழ்நிலை ‘திரும்பப் போவதில்லை’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேலிய படைகள் காஸா பகுதியில் தாக்குதல்களை அதிகரித்து, பாலத்தீனியர்களுக்கு புதிய, அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. இந்தப் போர் எங்கே போகிறது? அடுத்து என்ன நடக்கும்? போருக்கு அ…
-
- 2 replies
- 618 views
- 1 follower
-
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! ஆண்கள் பலர் என்னதான் படித்தாலும் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொண்டு மேடைகளில் பெண்ணுரிமை குறித்துப் பேசினாலும் அடிப்படையில் மோசமான ஆணாதிக்கச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் சீமான். நாம் தமிழர் கட்சியின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். தன்னை மணந்துகொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவந்தார். அண்மையில் அந்தப் புகார் குறித்த விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சீமான் சென்றார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், விஜயலட்சுமி குறித்து மிக மோசமாகப் பேசினார். ‘இவ்வளவு பெ…
-
- 82 replies
- 6.8k views
- 1 follower
-
-
(எம்.பஹ்த் ஜுனைட்) 1990 ஒக்டோபர் 29 இல் புலிகளால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டு 33 வருட நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (29) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி , அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது . எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பின் செயலாளர் சட்டமானி பி.எம்.முஜீபுர்ரஹ்மான் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டு வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்ல…
-
- 0 replies
- 612 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் –தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரம் பேசும் பலத்தை இது அதிகரிக்கும்– அ.நிக்ஸன்- 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ச…
-
- 0 replies
- 331 views
-
-
அமெரிக்க நலனும் இந்தியாவின் சர்வதேச இரட்டைக் கொள்கையும் புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு வன்னி போர் பற்றிய 2010 நிபுணர் குழு அறிக்கையும் காசா படுகொலைகளும் ஐ.நாவுக்குத் தெரியவில்லையா? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் …
-
- 1 reply
- 747 views
-
-
இஸ்ரேலின் அழிச்சாட்டியம் இஸ்ரேலின் அழிச்சாட்டியம்: உலக ஒழுங்கு மாற்றங்களை கவனமாக பயன்படுத்த வேண்டிய முஸ்லிம் உலகு மொஹமட் பாதுஷா இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பலஸ்தீன மண்ணை இஸ்ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் த…
-
- 23 replies
- 1.6k views
-
-
இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல் கார்த்திக் வேலு இன்று இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் விழும் குண்டுகள், பல நூறாண்டுகளுக்குப் முன்னரே எங்கிருந்தோ ஏவப்பட்டுவிட்டன என்பதே உண்மை. இஸ்ரேலை அறிய முதலில் யூத மதம் உருவாகிவந்த விதம் குறித்து அறிவது உதவியாக இருக்கும். வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கையில் மக்கள் - மதம் - தேசம் என்ற மூன்றும் எப்படி ஒன்றை ஒன்றைச் சார்ந்து வளர்ந்தன என்ற சித்திரமும் பிடிபடும். யூத மதம், யூதர்கள், யூதர்களுக்கான நாடு மூன்றுமே படிப்படியாக பரிணாமம் கொண்ட விஷயங்கள். யூத மதத்தின் பின்னணி யூத மதம் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான வேர்களைக் கொண்டது. அதேசமயம், வரலாற்றுப் பரிணாமத்தில் புறச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவம…
-
- 13 replies
- 1.6k views
- 1 follower
-
-
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன் October 27, 2023 மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் அரசாங்கம் கவனமாகவுள்ளது. மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநா் அநுருத்த யஹம்பத் இப்போதும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா். பிக்குகள் மற்றும் சிங்களத் தரப்பினரின் பின்னணியில் அவா் செயற்படுகின்றாா். அதனால்தான் ஜனாதிபதியின் உத்தரவுகள் எதுவ…
-
- 1 reply
- 731 views
- 1 follower
-
-
விடுதலை புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு —வன்னிப் போரில் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியதாக 2010 நிபுணர் குழு அறிக்கை கூறியது. ஆனால் இப்போது பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? ஐ.நா.எங்கே? ஆகவே உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ அந்த அரசைக் காப்பாற்றுவதே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை— அ.நிக்ஸன்- விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிர…
-
- 0 replies
- 646 views
-