அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி? - யதீந்திரா அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க …
-
- 0 replies
- 244 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்.கே அஷோக்பரன் தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், ‘வேலா, சிலுவையா?’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார். இது ஓரளவுக்கு வௌிப்படையாக நடந்த பிரசாரம். ஆனால், அந்தத் தேர்தலில் பெரும்பான்மை சைவர்கள் நிறைந்த தொகுதியில், குறித்த பாணியிலான பிரசாரத்தை மீறியும், கிறிஸ்துவரான சா.ஜே.வே செல்வநாயகம் வெற்றி பெற்றார். அதன் பின்னர், பகிரங்கமாக சைவ-கிறிஸ்தவ வேறுபாடு ச…
-
- 0 replies
- 597 views
-
-
ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24 உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. ஆபிரிக்கக் கண்டமானது,…
-
- 0 replies
- 276 views
-
-
இலக்கை மறந்த தமிழர் அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன. நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதி…
-
- 0 replies
- 324 views
-
-
கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்ற…
-
- 0 replies
- 718 views
-
-
வெடுக்குநாறி மலையும் தையிட்டி விகாரையும்! நிலாந்தன்! வெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். “ஒரு வழக்கில் எதிரி தரப்பு ஆட்சேபனை இல்லை என்றால் அந்த வழக்கில் வழக்காளி தரப்பு தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவது சட்டத்தரணியின் திறமையினால் அல்ல.வெடுக்குநாறி மலையில் தொல்பொருள் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காதபோது அதற்காக ஆணையைப் பெற்றதை சிலர் வெற்றியாக காட்ட முனைகின்றார்கள். அந்த திணைக்களத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அது சரி, திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர…
-
- 0 replies
- 836 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவும் ரணிலின் உத்தியும் 1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார். இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சீன அரசுகளுடன் சமாந்தரமான – நேரடியான உறவைப் பேண வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால விருப்பம். அ.நிக்ஸன்- 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியல…
-
- 3 replies
- 885 views
-
-
சட்ட மறுப்பு போராட்டம்! இதைத்தான் அரசியல் சூனியம் என்பதா? தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளுக்கும் இலங்கையின் விருப்பங்களுக்கும் மனதார இடமளித்துவிட்டுத் தற்போது சட்ட மறுப்புப் போராட்டம் என்று அதுவும் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் நின்று கோசமிடுவது கோமாளி அரசியல் (Clown Politics) அல்லவா? அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை (Political Emancipation) அடைய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை. அதாவது சட்ட மறுப்புப் போராட்டம். …
-
- 0 replies
- 538 views
-
-
ஒன்றிணையா வரை நிலையான மாற்றம் இல்லை
-
- 0 replies
- 660 views
-
-
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள். பொருளாதாரக் கொள்கை என்பதை தனி…
-
- 0 replies
- 742 views
-
-
சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், விக்னேஸ்வரன் அணியில் ஐங்கரநேசன் முக்கிய பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்திலேயே, ஐங்கரநேசனின் சாதியை விக்னேஸ்வரன் அறிய முயன்றிருக்கிறார். தன்னுடைய அணியில் முக்கிய நபராகச் செயற்பட்ட இன்னொருவரின் சாதியை சுட்டிக்காட்டியே, ஐங்கரநேசனின் சாதியையும் விக்னேஸ்வரன் அறிய விரும்பி இருக்கிறார். தம…
-
- 2 replies
- 1.1k views
-
-
குரங்காட்டி அரசியல் ? - நிலாந்தன் குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை. ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா? இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங்கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளில் ஒரு பகுதியினர் யானை வேலியை அமைத்து வருவதாகவும் ஒருமுறை அந்த வேலியில் முட்டினால் குரங்கு மீண்டும…
-
- 1 reply
- 642 views
-
-
கண்ணாடியில் நிலவைக் காட்டும் அரசியல்? நிலாந்தன். சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு போக வெளிக்கிட்டு சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 303 தமிழ்க் குடியேறிகளைக் குறித்துக் கேள்விப்பட்டோம். அவர்கள் வியட்நாமில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் பெரும்பாலானவர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஐநாவும் உலக பொது நிறுவனங்களும் நம்புவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையில் அவர்களை ஐநாவின் அகதிகளுக்கு பொறுப்பான அமைப்பு பொறுப்பேற்கத் தயாரில்லை என்றும் தெரிகிறது.இதனால் அப்புலம்பெயரிகளில் ஒரு தொகுதி நாடு திரும்பிவிட்டது. ஏனைய தொகுதி படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. இவர்கள் யாரும் விருப்பத்தோடு …
-
- 0 replies
- 603 views
-
-
-
- 0 replies
- 815 views
-
-
பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது. இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமானச் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்பு…
-
- 0 replies
- 492 views
-
-
அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும் - யதீந்திரா தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமா…
-
- 4 replies
- 853 views
-
-
இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan 1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், குடியேறியவர்களை அவர்களின் பூர்வீகம் பொருட்படுத்தாமல் வரவேற்கவும் தனது அமைச்சரவை கூட்டாளிகளை வழிநடத்துவதன் மூலம் சிங்கப்பூரை ‘மூன்றாம் உலக’ நாட்டிலிருந்து ‘முதல் உலக’ உலகளாவிய பெருநகரமாக மாற்றினார். இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகள…
-
- 3 replies
- 740 views
-
-
பதின்மூன்று- ரணிலின் விளக்கத்தை நம்பிய இராஜதந்திரிகள் -அரசியல் தீர்வாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் பதின்மூன்று பற்றிப் பேச வேண்டும் என்று கூறிக் காலத்தைக் கடத்திவிடும் உத்திகளையே ரணில் கையாளுகிறார். இந்த ஆபத்தான அரசியல் பொறியை (Political Trap) உடைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்கே உண்டு. சஜித்துக்கும் ஜே.வி.பிக்கும் அந்தத் தேவை இல்லை- அ.நிக்ஸன்- …
-
- 0 replies
- 794 views
-
-
சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின் தளத்தைத்தையும் கடற்பரப்பையும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வைத்துக்கொள்வதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. அத்துடன் இது முதல் தடவையும் அல்ல. 2022 ஓகஸ்ட் இல், சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங்-5' ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய இர…
-
- 5 replies
- 876 views
-
-
சிலைகள் சிலைகள் – “எங்களுடைய எதிரி எங்களுடைய ஆசிரியர் அல்ல” நிலாந்தன்.! 1980களில் முதலாம் கட்ட ஈழப்போரின்போது இயக்கங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு படம் உமர் முக்தாரின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படமாகும். இப்படத்தில் ஓரிடத்தில் உமர் முக்தாரிடம் அவருடைய போராளிகள் வந்து கேட்பார்கள்…கைது செய்யப்பட்ட எதிரிப் படைகளை நாங்கள் சித்திரவதை செய்து கொல்வோமா? என்று. உமர் முக்தார் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பார். அவர்கள் எங்களுடைய போராளிகளை கைது செய்யும் பொழுதும் அப்படித்தான் கொன்றார்கள்.எனவே நாங்களும் அவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதில் கொடுக்க வேண்டும் என்று போராளிகள் கூறுவார்கள். அப்பொழுது உமர் முக்தார் மிக நிதானமாக ஒர…
-
- 2 replies
- 873 views
-
-
மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக …
-
- 0 replies
- 747 views
-
-
புதிய சட்டத்தால் கேள்விக்குறியாகும் தமிழரின் எதிர்காலம்
-
- 0 replies
- 785 views
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை! Veeragathy Thanabalasingham on April 12, 2023 Photo, SELVARAJA RAJASEGAR – கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாஜி சிந்தனைகளையும் தீவிர வலதுசாரி இயக்கங்களையும் ஆதரித்தவரும் பிறகு ஹிட்லரின் ஆட்சி புரட்டஸ்தாந்து திருச்சபையில் செய்த தலையீடுகளை வெளிப்படையாகக் கடுமையாக எதிர்த்தமைக்காக சிறையிலும் சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட்டவருமான ஜேர்மனிய போதகர் மார்ட்டின் நிமொல்லர் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கூறிய வார்த்தைகள் இவை. பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக கொடூரமான மு…
-
- 0 replies
- 311 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக் காட்டிவரும் ரணில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற நினைக்கிறார். அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, பிரபலமான முகங்களை எல்லாம் கழட்டி எடுக்கும் வேலைகளில் கவனமாக இருக்கிறார். அதன் ஒருகட்டமாக, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள், ரணிலோடு…
-
- 0 replies
- 753 views
-