அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
‘கிழக்குத் தமிழர்’ என்னும் மாயவலை அதிரதன் / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 12:17 Comments - 0 நாட்டின் ஆளும்மன்றம் அல்லோல கல்லோலமாக இருக்கிறது. ‘யம்பர் அரசியலுக்கும், திருஷ்டி கழிப்புக்கும் என, மிக நல்ல விதமாக வளர்ச்சிகண்டு கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க தொன்று. ஆனால், இவ்வாறு ஒற்றுமைப்படுத்துவோர் எந்தவிதத்திலும் தமது நலன் கருதாத, முற்றிலும் பொது நோக்குக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்ற வாதம் முகிழ்ப்பு பெற்று வருகிறது. தமிழர் அரசியலில் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் ஒழுங்கில், 197…
-
- 0 replies
- 743 views
-
-
‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 03 மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட, இறைமை மன்னனிலேயே தங்கியிருந்தது. மன்னனின் முடிந்த முடிவை மறுதலிக்கும் அதிகாரம், எங்கேனும் இருக்கவில்லை. இதனால் மன்னன் வல்லாட்சியாளனாக மாறும் போதும் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போதும் அதைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கவில்லை. ஆகவே, புரட்சியொன்றே அந்த எதேச்சாதிகாரத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே வழியாக இருந்தது. மக்கள் புரட்சி செய…
-
- 2 replies
- 712 views
-
-
24 MAR, 2024 | 05:07 PM நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது.…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
‘குப்பை அரசியல்’ காலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 29 கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல, வவுனியா நகரப் பகுதியிலும், ஒரு வாரமளவில் குப்பை அகற்றப்படாத நிலையொன்று அண்மையில் காணப்பட்டது. இலங்கையில் குப்பை அகற்றுதல், மீள்சுழற்சி செய்வது தொடர்பிலான முறையான செயற்றிட்டங்கள், பெரியளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் நகர எல்லைப் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை, நகரத்துக்கு அப்பாலுள்ள பகுதியொன்றில் கொட்டுவதையே, குப்பை அகற்றுதலாகக் கருதுகிறார்கள். அவ்வாறு சேரும்…
-
- 0 replies
- 785 views
-
-
‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது. தமிழர் தேசம் எங்கும் வாக்களிப்பு சதவீதம், கடந்த பல பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை அதிகரித்திருந்தது. ஆனபோதிலும், கூட்டமைப்பு வாக்கிழப்பைச் சந்தித்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்துக்குள் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, இம்முறை 10 உறுப்பினர்களோடு செல்கின்றது. கடந்த காலத…
-
- 0 replies
- 501 views
-
-
‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும் ம. அருளினியன் எழுதிய, ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல், கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில், குறித்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக, கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று, நிகழ்வுக்கு முதல் நாள், அக- புற அழுத்தங்களினால், பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்ப…
-
- 2 replies
- 838 views
-
-
‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை முருகானந்தன் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது. அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீ…
-
- 0 replies
- 105 views
-
-
‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்? - யதீந்திரா இதுவரை சம்பந்தன் தரப்பு என்றே இப்பத்தியாளர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் ஆனால் இனி அதற்கு அவசியமிருக்காது. ஏனெனில் வருங்காலத்தில் சம்பந்தன் தரப்பு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. இனி அது சுமந்திரன் தரப்பாகவே இருக்கும். தனிநபர்களை முதன்மைப்படுத்தி அரசியலை ஆராய்வதில் இப்பத்தியாளருக்கு எப்போதுமே உடன்பாடிருந்ததில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் தனிநபர்களை முன்னிறுத்தியே சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது. ஆனாலும் இதுவே தமிழ்த் தேசிய அரசியலின் யதார்த்தமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை அனைவருமே அறிவர். இதில் ஒழ…
-
- 0 replies
- 535 views
-
-
‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்ஷ கோ ஹோம்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள். கோட்டா அரசாங்கமும், ராஜபக்ஷர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. வெற்றி வீரர்களாக தம்மைக் கொண்டாடிய அதே …
-
- 6 replies
- 517 views
-
-
‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜனவரி 14 பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு, கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்” என்று, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தலைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’ சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில்…
-
- 0 replies
- 403 views
-
-
‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை -விரான்ஸ்கி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
COLUMNSசிவதாசன் ‘சனல் 4’ விவகாரம்: ராஜபக்சக்களின் அதிர்ஷ்டம் சிவதாசன் “‘சனல் 4’ ராஜபக்சக்களுக்கு எதிராக வன்மத்துடன் செயற்படுகிறது” என்கின்றனர் ராஜபக்ச குடும்பத்தினர். “‘சனல் 4’ புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குகிறது என்கிறார் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு இலங்கை தயார்” என்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. போதாததற்கு நாட்டை விட்டுத் தப்பியோடி மீள வந்த வாயில்லாப் பிராணி கோதாபயவையே வாய் திறக்க வைத்துவிட்டது ‘சனல் 4’. சூத்திரதாரி மஹிந்த அதிர்ஷ்டம் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக…
-
- 0 replies
- 338 views
-
-
‘சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது, அரச இயந்திரமும் சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆன…
-
- 0 replies
- 468 views
-
-
‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம் Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:38 Comments - 0 -இலட்சுமணன் சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடை…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். இவ்வாறு The Statesman இதழில், பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவைப் பொறுத்தளவில் 2015 என்பது ஒரு அதிசயம் மிக்க ஆண்டாகும். அதாவது 2015 ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினர் வாழ்ந்து வரும் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகள…
-
- 4 replies
- 596 views
-
-
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல் இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது. முன்னைய அனைத்துத் தேர்தல்களையும் விட, இத்தேர்தல் மிக வேறானது என்பது, திரும்பத் திரும்பக் கூறப்பட…
-
- 0 replies
- 300 views
-
-
‘சிலுக்கு’ அரசியல் - முகம்மது தம்பி மரைக்கார் வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் - வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பித் தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை இருப்பதாக அரசியல் விளம்பரம் செய்கிறார்கள். அது கூடப் பரவாயில்லை, ஊசி கூடக் கையில் இல்லாதவர்களும் தாங்கள் உலக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் அபத்தங்களும் அரசியல் விளம்பரங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டமும் முஸ்லிம்களும் இலங்கை…
-
- 0 replies
- 744 views
-
-
‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும். இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதா…
-
- 0 replies
- 791 views
-
-
‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!! கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது. ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும். சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழு…
-
- 1 reply
- 425 views
-
-
‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’ Dec 16, 2014 | 13:26 by நித்தியபாரதி கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட ‘Stars and Stripes’ ஊடகத்தில் Wyatt Olson எழுதியுள்ள ஆய்வுக்கட்டு…
-
- 0 replies
- 688 views
-
-
‘சுதந்திர இலங்கை’ - சில எண்ணப்பகிரல்கள் என்.கே.அஷோக்பரன் பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் டொலருக்காக எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலையில், டொலர் இருந்தால்தான் எரிபொருள், எரிபொருள் இருந்தால்தான் மின்சாரம் என அடுத்தநாள் மின்சாரம் இருப்பதன் நிச்சயத்தன்மை இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணையெட்டிப்பிடிக்குமளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், “கோலாகலமாக” பெரும் இராணுவ அணிவகுப்புக்களுடன், விமான சாசகஸப் பறத்தல்களுடன், 74வது சுதந்திர தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சுதந்திர தினமென்றால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கிறதுதானே எனச் சி…
-
- 1 reply
- 388 views
-
-
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’ Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 -இலட்சுமணன் ‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும் காரணமல்ல; எமது அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம்களுமே காரணம் என்று விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். ஆனால், கல்முனை விவகாரத்தில், ‘நிலத் தொடர்பற்ற’ என்ற பதம், மிகப் பெரிதாகவே பேசப்படுகிறது. நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்ற எண்…
-
- 0 replies
- 611 views
-
-
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’ October 28, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது?எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வ…
-
- 0 replies
- 288 views
-
-
‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’ September 16, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும். இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள். …
-
- 4 replies
- 476 views
-
-
‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:18Comments - 0 சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும். வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. …
-
- 0 replies
- 811 views
-