Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக …

  2. புதிய சட்டத்தால் கேள்விக்குறியாகும் தமிழரின் எதிர்காலம்

    • 0 replies
    • 784 views
  3. Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள…

  4. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை! Veeragathy Thanabalasingham on April 12, 2023 Photo, SELVARAJA RAJASEGAR – கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாஜி சிந்தனைகளையும் தீவிர வலதுசாரி இயக்கங்களையும் ஆதரித்தவரும் பிறகு ஹிட்லரின் ஆட்சி புரட்டஸ்தாந்து திருச்சபையில் செய்த தலையீடுகளை வெளிப்படையாகக் கடுமையாக எதிர்த்தமைக்காக சிறையிலும் சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட்டவருமான ஜேர்மனிய போதகர் மார்ட்டின் நிமொல்லர் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கூறிய வார்த்தைகள் இவை. பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக கொடூரமான மு…

  5. ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக் காட்டிவரும் ரணில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற நினைக்கிறார். அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, பிரபலமான முகங்களை எல்லாம் கழட்டி எடுக்கும் வேலைகளில் கவனமாக இருக்கிறார். அதன் ஒருகட்டமாக, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள், ரணிலோடு…

  6. அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டன. இலங்கையின் பெற்றோலியச் சந்தைக்குள் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஏனைய போட்டியாளர்களை உள்ளீர்க்க அமைச்சரவை எடுத்துக்கொண்ட தீர்மானத்தினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தமும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது. எரிபொருள் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயால் குறைக்கப்பட்டது. த…

  7. ரணில் ஏன் இபடிச் செய்கிறார்? நிலாந்தன்! April 9, 2023 வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம், கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம், புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் புதுப்பிக்க முற்படுவது… போன்ற அனைத்தும் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்கின்றன? முதலாவதாக,ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டம். கடந்த நான்காம் திகதிதான் ஜெனிவா கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது. இரண்டாவதாக, இரண்டு முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவுக்கு போய் வந்த ஒரு காலகட்டம். அந்நாட…

  8. பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி.க்கள் பேரவையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தமிழ் கட்சித் தலைவர்களிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, டெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டி.சித்தார்த்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். . தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் போன்றோர் இவ்வாறான மன்றத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

  9. சீனாவும் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பும் இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை ‘தென் திபெத்’ என்று அழைத்து வருவதோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தனது பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி எல்லை தகராறு இருந்து வருகிறது. அழகான மலைகளையும், ஆறுகளையும், அடாந்த காடுக…

    • 4 replies
    • 876 views
  10. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எம்.எஸ்.எம் ஐயூப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம்: சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் வற்புறுத்தலாலேயே, அரசாங்கம் தற்போது அமலில் உள்ள சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை வரைந்துள்ளது. இலங்கைக்கு தொட…

    • 0 replies
    • 793 views
  11. ‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும். இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதா…

  12. ‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, காட்டின் இயற்கைக் சூழலுக்கு சேதம் விளைவிக்காது, அப்பகுதி மக்களால் காலங்காலமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களாக, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே, ஆலய விக்கிரகங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில், அரச ஆதரவுடன் பௌத்த அடிப்படைவாதத்தின் …

  13. ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணியில் சிங்கள பௌத்த மயமாக்கல் வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் திரண்ட மக்களோடு ஒப்பிடுகையில் நாவற் குழியில் புத்த விகாரையின் கலசத்தைத் திறப்பதற்காக பஸ்களில் வந்து இறங்கிய சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகமானது என ஓர் ஊடகவியலாளர் சொன்னார். ஒரு சிவனாலயம் சிதைக்கப்பட்டமை தமிழ் மக்களை ஒன்று திரட்டியுள்ளது என்பது உண்மை. ஆனால் அந்தத் திரட்சியைப் பேரெழுச்சியாக மாற்றத் தமிழ் கட்சிகளால் முடியவில்லை என்பதும் உண்மை. வெடுக்குநாறி மலை ஆலைய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அவசரமாக விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து வவுனியாவில் மக்கள் திரண்டார்கள். கட்சிப் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், சிவில…

  14. வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறிமலைக்கு? – நிலாந்தன் April 2, 2023 வவுனியா வெடுக்குநாறிமலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ்மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்று திரட்டியுள்ளது. இது தொடர்பாக சைவமகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவமதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. இது அண்மை நாட்களாக தமிழ்மக்கள் மத்தியில் மதரீதியான அகமுரண்பாடுகளைத் தூண்டிவரும் சக்திகளின் வேகத்தை ஒப்பீட்டளவில்தடுக்குமா? ஒருபுறம் சிங்களப…

  15. இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். தன்னுடைய பயங்கரவாத வரலாற்றை, அதைக் கண்டிராத, அறிந்திராத இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறைக்கவும், தனது மார்க்ஸிஸவாத அடையாளத்தை மறைக்கவும், அரசியலுக்குப் புதிதான தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோரோடு கைகோர்த்துக்கொண்டு, என்.பி.பி (தேசிய மக்கள் சக்தி) என்ற புதுப்பெயரில், புது சின்னத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கோடு “தேர்தலை நடத்து; தேர்தலை நடத்து” என்று கூக்குரலிட்டுக் கொண்டும்…

  16. 75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ] ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை. மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிகளிலும் பார்க…

  17. வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நா…

  18. ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை Veeragathy Thanabalasingham on March 27, 2023 Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது. நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்…

  19. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சிங்கள அரசினால் தமிழின ஒதுக்கல், தமிழர்தாயக நில அபகரிப்பும், தமிழர்தாயக கனிமவளச் சுரண்டலும் அதே நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடைய பாசாங்கு அரசியலும், அரசியல் வங்குரோத்துத்தனங்களும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் வளர்ச்சியடையத் தடையாக அமைந்துவிட்டன. இதேவேளையில் சிங்கள தேசம் தன்னை அரசியல் ரீதியாக இஸ்திரப்படுத்தியதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமிப்பதிலும் தொடர் வெற்றியடைந்துவருகிறது. ஆனால் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்காக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அது பிரயோகித்த பொருளாதாரம் என்பது மிகப்பெரியது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக தன்னுடைய முழு பொருளாதாரத்தையும் செலவழித்ததன் விளைவே இன்று இலங்கை பொருளாதா…

    • 3 replies
    • 764 views
  20. ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது …

  21. தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார். இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டி…

  22. நாம் ஒரு கொந்தளிப்பான உலகில் வாழ்கிறோமா- பா.உதயன் ரஷ்யா, உக்ரைன் போர் ஒரு வருடம் நிறைவடையவுள்ளது. மனிதப் பேரழிவுகளோடும் பொருளாதாரப் பின்னடைவுகளுடனும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலகத்தை ஆக்கிரமித்து தாக்கிய கொரோன வைரசு ஒரு பக்கம் அதைத் தொடர்ந்த ரஸ்சிய உக்ரேன் யுத்தம் இப்படியே தொடரும் நோய் யுத்தம் போன்ற அழிவுகளினால் இன்று உலகில் சமூக அரசியல் பொருளாதாரம் ( social political and economical structure ) ஆட்டம் காண தொடங்கியுள்ளது. உலக மக்கள் பெரும் பொருளாதா பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இன்னும் குறிப்பாக ஏழை நாடுகளை இது பெரிதும் பாதித்துள்ளது. உலகின் பெரும் பான்மை மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போதும் பெருவாரியான பணமும் ஆயுதமும் போருக்காக வீண் விரய…

    • 0 replies
    • 658 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.