Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …

  2. பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? - நிலாந்தன் 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும். பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன்…

  3. அடுத்த சுதந்திரதின விழாவிற்குள் என்ன கிடைக்கும் ? நிலாந்தன். கலண்டருக்குத் தட்டுப்பாடான மற்றொரு ஆண்டு பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே அது பேச்சுவார்த்தையோடுதான் பிறந்திருக்கிறது.ஆனால் முடியும்போது அது சமாதானத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்குள் சமாதானத்தை நோக்கித் திருப்பகரமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக அரசுத்தலைவர் அறிவித்திருக்கிறார்.தமிழ்த் தரப்பைத் திருப்திப்படுத்தாமல் அவ்வாறு திருப்பகரமான முடிவு எதையும் எடுக்க முடியாது. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சியின் காதலியாகி விடும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது தமிழரசுக்கட்சி போராளி ஆகிவிடும் என்று எனது நண்பர் ஒருவர் கூறு…

  4. Courtesy: கட்டுரை தி.திபாகரன் M.A இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கப் போவதாக செய்திகள் பலவாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எத்தகைய தீர்வு திட்டம் ஒன்றை பற்றி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க முடியும் என்பது பற்றி சிந்திப்பது மிக அவசியமானது. மக்கள் ஆதரவற்று, தேர்தலில் படுதோல்வி அடைந்து அதிர்ஷ்டமற்ற ஒரு தலைவராக காணப்பட்ட ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் பின்னணியில் தன்னுடைய இராஜதந்திர வியூகத்தினால் இன்று இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அத்தகையவர் ஒட்டுமொத்த சிங்கள தேசியவாதிகளும் தமிழர்களுக்கான அரச…

    • 4 replies
    • 499 views
  5. இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல் Veeragathy Thanabalasingham on January 4, 2023 Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளிய…

  6. நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது ஏன்? உலக அதிகாரம், எண்ணெய், தங்கம் Statement of the Editorial Board of the World Socialist Web Site அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகள் 1999 மார்ச் 24ம் திகதியில் இருந்து யூகோஸ்லாவியாவை பேரழிவுகளைக் கொண்ட குண்டுவீச்சுக்களுக்கு இலக்காகிக் கொண்டுள்ளது. நேட்டோவின் 15.000 யுத்த விமானங்கள் யூகோஸ்லாவிய நகரங்களிலும், கிராமங்களிலும் குண்டுகளைப் பொழிந்து தள்ளியுள்ளன. பக்டரிகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், பாலங்கள், எண்ணெய்க் குதங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் ஆதியன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரயாணிகள் போக்குவரத்து, புகையிரதங்கள், பஸ் வண்டிகளின் பிரயாணிகள், தொலைக்காட்சி நிலையங்கள், ஒலிபரப்பு நிலையத் தொழிலாளர்கள…

    • 15 replies
    • 1.2k views
  7. https://www.tamilguardian.com/content/tna-refused-meet-us-3-times-claims-chinese-envoy தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களைச் சந்திக்க 3 முறை மறுத்துவிட்டது' என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான சீனாவின் துணைத் தூதுவர் ஹூ வெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) மூன்று தடவைகள் தமிழ்த் தலைவர் ஆர் சம்பந்தனைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அது நிராகரிக்கப்பட்டது என்றும் சாடினார். “சீனா தமிழ் மக்களுடன் உறவைப் பேணவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். அதை ஒப்புக்கொள்ளும் மரியாதை கூட அவர்களிடம் இல்லை" என்று ஹூ வெய் கூறினார். ஐக்கிய…

  8. 2023 கைகொடுக்குமா? எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும். எனினும், 2022ஆம் ஆண்டைப் போல், அந்த ஆண்டு முழுவதும் அரசியல், பொருளாதார நெருக்கடி நீடிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த புத்தாண்டு, அந்த நெருக்கடிகளின் நீட்சியாக இருக்குமா அல்லது, அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு கா…

  9. இலங்கையின் பொருளாதார சவால்களை 2023ல் வெற்றிக் கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு, வரி வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்த்தல், மின்சார பிரச்னை, மனித உரிமையை பாதுகாத்தல், தேர்தல் நடத்துதல், எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் ஆகிய பிரச்னைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுடன் 2023ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது. இந்த பிரச்னைக…

  10. குர்து மக்கள் : தனி நாடு - மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு! துருக்கியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதத்தினர் குர்து இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். துருக்கி அரசுக்கும், குர்துகளுக்கும் இடையே பல்லாண்டு காலமாக பகை பாராட்டப்பட்டு வருகிறது. துருக்கி, இராக், சிரியா, இரான், ஆர்மேனியா என பல நாடுகளில் உள்ள மலைப்பாங்காந பகுதிகளில் சுமார் 25 முதல் 35 மில்லியன் குர்து இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய கிழக்கிலேயே நான்காவது பெரிய இனக்குழுவாக இருக்கும் குர்துகளுக்கு, தங்களுக்கென ஒரு நிரந்தர நாடு இல்லாமல் இருப்பது தான் பிரச்சனையின் மையப் பகுதி எனலாம். …

    • 0 replies
    • 415 views
  11. 2023:பேச்சுவார்த்தைகளின் ஆண்டா ?பேய்க்காட்டப்படும் ஆண்டா? - நிலாந்தன் புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று அல்லது நாலு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது. அவ்வாறு காட்டவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. ஏனெனில் இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர வேண்டும் என்பதை விடவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுக்கக்கூடிய நாடுகளை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். …

  12. 2023: எதற்காக காத்திருக்கிறது? நிலாந்தன்! புதியவருடம் பொருளாதார ரீதியாக சுப செய்திகளோடு பிறக்கவில்லை.பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி எதிர்பார்க்கப்பட்டது போல ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கவில்லை.அந்த உதவியை பெறுவதாக இருந்தால் இந்தியா சீனா போன்ற நாடுகளிடம் வாங்கிய கடனை மீளக் கட்டமைக்க வேண்டும்.அவ்வாறு மீளக் கட்டமைப்பதில் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இது விடயத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இலங்கை இறுகிப்போய் நிற்பதாக அவர் தெரிவித்து இருந்தார்அது காரணமாக ஐ.எம்.எப் நிதி மேலும் தாமதமாகலாம். அது ஒரு பெரிய உதவி அல்ல.மொத்தம் 2.8 பில்லியன்தான். ஆனால் இலங்கைத் தீவின் மொத்த கடன் 57 பில்லியன்.எனவே ஐ.எம…

  13. தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற…

  14. ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !– ஐங்கரன் Digital News Team பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. ஆச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. கொ…

    • 0 replies
    • 321 views
  15. சொல்ஹெய்மின் மீள்வருகை: தமிழ்த் தரப்புக்கான பொறி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன்னரும் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலும், அண்மையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டில் உரையாடப்பட்ட, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னராக, இனப்பிரச்…

  16. ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள் Posted on December 28, 2022 by தென்னவள் 12 0 ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி இதுதான்: மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் நாடெங்கும் தேடுதல் வேட்டைகளில் இறங்கி, 25 பேரைக் கைது செய்தனர். இதன்மூலம், அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான சதி முறியடிக்கப்பட்டது. இது ஜேர்மனியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக அதிவலதுசாரி அபாயம் குறித்துக் கேட்கப்பட்ட போதெல்லாம், ஜேர்மன் பொலிஸாரும் அரசாங்கமும் அவ்வ…

    • 0 replies
    • 744 views
  17. ரணில் வகுக்கும் வியூகத்தில் விழாமலிருப்பது எப்படி? - நிலாந்தன் ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும். கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை …

  18. சிங்கள ராஜதந்திரத்தில் "முடிந்தால் குடுமியைப்பிடி முடியாவிட்டால் காலைப்பிடி" என்று ஒரு பழமொழி உண்டு. இதனை அனைத்து சிங்களத் தலைவர்களும் தமக்கு நெருக்கடி வருகின்ற போதெல்லாம் பயன்படுத்தி நிலைமைகளை சமாளித்துக் கொள்ளும் ராஜதந்திர உத்தியை பிரியோகிக்க தவறுவதில்லை. இலங்கை தீவில் இன்றுள்ள பொருளாதார நெருக்கடியும், இந்தோ-பசுபிக் பிராந்திய வலுச்ச சமநிலை இலங்கைத்தீவில் மையம் கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சிங்களத் தலைவர்களை அனைத்து எதிர் சக்திகளிடமும் பணிந்து அவர்களின் காலைப்பிடிக்கும் தந்திரத்தை தற்போது கையாளுகின்றனர். காலில் விழுந்து காலை தடவுவார்கள் அரசியலில் எப்போது எதிரி பலம் இழந்திருக்கிறானோ அப்போதுதான் அவன் தன் எதிர்த்தரப்பினரை நோக்கி பணிந்த…

  19. தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி —2009 இன் பின்னரான பன்னிரென்டு ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் இந்தியா குறித்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கு மாறாக இலங்கைக்கு கூடுதல் நிதிகளை வழங்கிப் புவிசார் அரசியல் அடிப்படையில் உறவைப் பேணுகின்றோம் என்ற குற்ற உணர்வு இந்திய மனச் சாட்சிக்குப் புரிகின்றது—- -அ.நிக்ஸன்- புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையை மையப்படுத்தி இந்தியா வகுக்கும் வியூகம், அமெரிக்கா, பிரித்தானியா, ஆகிய நாடுகளின் பின்னணியோடு வெளிப்பட்டு வருகின்றது என்பதை இலங்கையின் சமீபத்திய நகர்வும் அதன் மீதான நம்பிக்கைகளும் கோடிகாட்டுகின்றன. …

    • 2 replies
    • 496 views
  20. அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா? -தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன– அ.நிக்ஸன்- அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழ…

  21. அரசியலில் சூழ்ச்சி? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது. இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.