அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இலங்கையில் கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் உயர்கல்வித்துறை முடங்கிக்கிடக்கிறது. பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என்று உயர்கல்வித் துறையினரின் போராட்டங்கள் மற்றும் போர்க்கொடிகளால் நாளுக்குநாள் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டு போகின்ற நிலையில் அரசாங்கமும் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தபாடில்லை. போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களை மூடியும் பார்த்தது. நீதிமன்றங்களை நாடி மாணவர் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க தடையுத்தரவுகளும் பெற்றது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. விடைத்தாள் மதிப்பீடு [size=3][size=4]இப்போது பள்ளிக்கூட படிப்பை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல காத்திர…
-
- 1 reply
- 498 views
-
-
அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்! -ச.அருணாசலம் நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப் காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா? அமைதி நாயகன் வேடம் டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்; அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன? # தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல் இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம். # மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம். # அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Pea…
-
- 0 replies
- 179 views
-
-
தேசியபட்டியல் அடிபிடிகள் என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 17 பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும் பௌத்தம் போதிக்கிறது. பற்று, பேராசை ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பௌத்தம், “தீங்கு விளைவிக்கும் பற்றுகள், காட்டு மிருகங்களைப் போன்றவை; ஏனெனில், அவை தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது” என்கிறது. உலகப் பற்றுகளைத் துறத்தல் பற்றிப் போதித்த கௌதம புத்தரின் வழிநிற்பதாக உரைக்கும் பௌத்த துறவிகள் முதல், பௌத்தத்தின் காவலர்க…
-
- 0 replies
- 487 views
-
-
ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் ! in அமெரிக்கா, பன்னாட்டு நிறுவனங்கள், புதிய கலாச்சாரம், மதம், மத்திய கிழக்கு by வினவு, February 7, 2013 சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், கமல்ஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் ? “வி சுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிற…
-
- 0 replies
- 671 views
-
-
கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 03 ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது; இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மானங்களில், ‘சிறிய ஆலோசனை’ என்கிற அடிப்படையில் கூட, உள்வாங்கப்பட மாட்டார்கள் என்பது; மூன்றாவது, சிவில் நிர்வாகக் கட்டமைப்பைத் தாண்டி, இராணுவ நிர்வாக…
-
- 0 replies
- 496 views
-
-
காலம் கடந்த ஞானம் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலோ அல்லது திருத்தம் கொண்டு வந்தாலோ, அதில் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வும் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு விடயத்தில், அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியும் நாட்டை இரு முறை ஆண்ட முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க, அண்மையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன், “சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கப் பலர் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எவரும்…
-
- 0 replies
- 879 views
-
-
புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன? புருஜோத்தமன் தங்கமயில் சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. ராஜபக்ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயல…
-
- 2 replies
- 450 views
-
-
உயரும் விலைகள் – வெடிக்கும் அடுப்புக்கள்! நிலாந்தன். கடந்த வாரம் கால் கிலோ 60 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மரக்கறிகளை இந்த வாரம் 90 ரூபாய்க்கே வாங்கக் கூடியதாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரப் பிரச்சினையால் ஒரு போக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது நெல்லின் விலையில் தாக்கம் செலுத்தும். அரசாங்கம் செயற்கை உரத்துக்கான மானியத்தை நிறுத்தியிருப்பதோடு செயற்கை உர இறக்குமதியை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. எனவே இனி தனியார் வைத்ததுதான் உரத்தின் விலை. இது காரணமாகவும் அரிசியின் விலை அதிகரிக்கலாம். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் பொருட்களின் விலை அதிகரிப்பை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் தொற்று தொடங்க…
-
- 0 replies
- 325 views
-
-
கூட்டமைப்பை திருத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்தும் முயற்சி - மாற்று அரசியல் இயக்கமே இன்றைய தேவை முத்துக்குமார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் இயக்கம் தேவை என்கின்ற விவாதம் பல தளங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின் நோக்கி நகர்த்துவதாகும். தமிழர் அரசியல் 1920 தொடக்கம் 1949 வரை சமவாய்ப்புகளை கோருகின்ற அரசியலாக இருந்தது. பின்னர் 1949 தொடக்கம் 1968 வரை தமிழர் தாயகத்தை வரையறைத்து அதற்கு அதிகாரத்தை கோருகின்ற சமஸ்டி தீர்வை முன்வைப்பதாக அமைந்தது. 1968 இற்குப் பின்னர் சமஸ்டி தீர்வும் சரிவராத நிலையில் தனிநாட்டுப் போராட்டமாக ப…
-
- 0 replies
- 833 views
-
-
ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இம்மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை என்பதால் உலக மக்கள் அனைவருக்கும் உன்னதமான தினமாகும். ஏனெனில் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் இன்னும் பல துறைகளில் மானுடம் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாயிருந்தது ஐக்கிய நாடு கள் சபையாகும். சில அரசியல் ஆய்வாளர்கள் ஐ.நா. சபையை உலக அரசாங்கம் என்று கூட வர்ணிக்கின்ற சூழலில் இக்கட்டுரையை ஐ.நா.வின் 72 ஆவது பிறந்த நாளையொட்டி சமர்ப்பிக்க விரும்புகிறேன். இன்று உலக…
-
- 0 replies
- 5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 367 views
-
-
இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவகமானது எந்தவொரு வெற்றியையும் மக்கள் மனதில் பதிக்கவில்லை. மாறாக கணவன்மார், பிள்ளைகள் மற்றும் சகோதரர்களை இழந்த மக்களின் கசப்பான தோல்வியாகவே இது காணப்படுகிறது. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் The Hindu ஆங்கில நாளேட்டில் ஜேர்மனியை சேர்ந்த ஆய்வாளர் Gerrit Kurtz* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் விபரமாவது: வன்னியில் இராணுவ வீரர் ஒருவர் ஒரு கையில் ஏ.கே 47 ரகத் துப்பாக்கியுடனும் மறுகையில் சிறிலங்காக் கொடியுடனும் நிற்பதைச் சித்தரிக்கின்ற வகையில் கல்லால் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இயந்திரத் துப்பாக்கியில் புறா ஒன்று அமர்ந்துள்ளது. தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவ…
-
- 1 reply
- 368 views
-
-
ஜெனீவா தீர்மானம்: இனிமேல் நடக்கப்போவது என்ன? முத்துக்குமார் ஜெனீவாவில் இந்தத் தடவை கழுத்துமுறிப்பு இடம்பெறாது, சற்று வலிமையான காதுதிருகல்தான் இடம்பெறும் என முன்னரும் இப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதுதான் உண்மையில் நடைபெற்றிருக்கின்றது. தீர்மானத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் நம்பகரமான, சுதந்திரமான விசாரணையை நடாத்தவேண்டும் எனக் கூறியிருந்தது. இறுதியில் மனித உரிமை ஆணையாளர் சுதந்திரமான விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளது. இவ்வாறு இரு இடங்களில் விசாரணை பற்றி கூறியதன் அர்த்தம், இலங்கை அரசாங்கம் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளாவிடில்தான் மனித உரிமை ஆணையாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதே. இதன்படி பார்த்தால் இலங்கை அரசாங்கத்திற்கு மீ…
-
- 0 replies
- 704 views
-
-
மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள் ஜூலை 1, 2022 மோடி அரசாங்கத்தின் எட்டாண்டுகள் நிறைவடைவதையொட்டி, பா.ஜ.க பதினைந்து நாட்களுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின்போது அது பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, உணவு தான்ய உற்பத்தி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் அயல்துறைக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளை உயர்த்திப்பிடித்திட வலியுறுத்தியிருக்கிறது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவே என்றும் பிரச்சாரத்தின்போது அது தம்பட்டம் அடிக்க முடிவு செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 268 views
-
-
ஒரு சீனா கொள்கையிலிருந்து யுவான் வாங் 5 வரை By RAJEEBAN 26 AUG, 2022 | 04:00 PM QI ZHENHONG இலங்கைக்கான சீன தூதுவர் ------------ சமீப நாட்களில் சீனா தொடர்பான இரண்டு விடயங்கள் இலங்கையின் பரந்துபட்ட கவனத்தையீர்த்துள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்கசனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் சீனாவின் தாய்வான் பிராந்தியத்திற்கான இரகசிய விஜயத்தின் பின்னர் சீனா தரப்பு கடுமையான பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்தது. உலகின் 170 நாடுகள் ஒருசீனா கொள்கைக்கு தங்கள் உறுதியான ஆதரவை வழங்கியுள்ளதுடன் அமெரிக்காவின் பதற்றத்தை தூண்டும் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன. …
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
ஜெனீவா தீர்மானங்களின் காரணத்தை கையாளவேண்டியது அவசியம் Photo, Selvaraja Rajasegar கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்னென்றும் இல்லாத தோல்வையைச் சந்தித்தது. அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச கருத்தொருமிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்பட்ட 47 நாடுகளில் 7 நாடுகளின் ஆதரவை மாத்திரமே இலங்கையினால் பெறக்கூடியதாக இருந்தது. இது தற்போதைய அரசாங்கம் உட்பட வெவ்வேறு அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த இலங்கை மீதான மனித உரிமைகள் பேர…
-
- 0 replies
- 282 views
-
-
இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா? வேல் தர்மா இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு ரஷ்யா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவூதி அரேபியா உட்பட பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாசாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ர…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 707 views
-
-
இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களையடுத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டம் காட்டியதற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதென்பது உண்மையிலேயே ஒரு பாசாங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது. இரு தரப்புகளுமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.அதனால் 2015 ஜனவரியில் நிலவிய உற்சாகமான நாட்கள் ஒரு முடிந்த கதையாகிப்போய்விட்டன. …
-
- 0 replies
- 446 views
-
-
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதி யில் பெரிதும் தங்கியுள்ளது. சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடு களும் வட அமெரிக்க நாடுகளும் பொருளா தாரப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக் கையிலும் சீனா தனது உள்நாட்டு மக்களின் கொள்வனவை அதிகரிக்க முடியாத நிலையி லும் புதிதாக ஏற்றுமதிச் சந்தைகளை சீனா தேடிக்கொண்டிருக்கின்றது. சீனாவின் உள் நாட்டு வேதனம் மற்றும் கொள்வனவு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 56 விμக்காடாக 1983-ம் ஆண்டு இருந்தது. அது பின்னர் 36 விμக் காடாகக் குறைந்து விட்டது. ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தனது பொரு ளாதாரத்தை உலக நெருக்கடிகள் பாதிக்காமல் இருக்க சீனா ஒரு கடல் வழிப்பட்டுப்பாதையை உருவாக்கியதுடன் மாற்றுப் பாதையாக மத்திய ஆசியாவினூடாக ஒரு தரைவழிப்பட்டுப் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாள் தொடக்கம் இலங்கை அராஜகநிலையை நோக்கிவிரைந்துகொண்டிருக்கிறது. அபாயகரமான நிலைவரம் ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதென்பதை நிரூபிக்கும்வரை சபைக்குள் அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த திங்கடகிழமை வெளியிட்ட அறிக்கை பதற்றத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்…
-
- 0 replies
- 525 views
-
-
ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! -நிலாந்தன்.- ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில் அது அவருடைய பிம்பத்தை உடைக்க கூடியது. முதலில் அது எப்படி உள்நாட்டில் அவருக்கு லாபகரமானது என்று பார்க்கலாம். அதில் அவர் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆசியாவின் குரலை எதிரொலிக்கிறார். அதன்மூலம் இந்தியாவை,சீனாவை,ரஷ்யாவை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருபுறம் யுத்த வெற்றிகளை அபகரிக்க முற்படும் மேற்குக்கு எதிரான சிங்கள பௌத்தத்தின் விட்டுக்கொடுப்பற்ற வீரமான குரல் போல அவர் காட்சியளிக்கிறார். அது உள்நாட்டில் அவருக்கு ஆதரவைப் பெருக்கும்.குறிப்பாக சிங்கள க…
-
- 2 replies
- 389 views
- 1 follower
-
-
காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…
-
- 0 replies
- 815 views
-
-
போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும் மகேந்திரன் திருவரங்கன் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களி…
-
- 0 replies
- 931 views
-
-
ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
-
- 0 replies
- 476 views
- 1 follower
-