Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள் காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்…

  2. திலீபனைத் தத்தெடுப்பது? – நிலாந்தன். கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் உயிர் துறந்த நாள் என்ற அடிப்படையில் அந்த நாளும் புலிகள் இயக்கத்துக்கு உரிய ஒரு நினைவு நாளாக கருதும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுதான் மே 18இற்கான பொதுக்கட்டமைப்பு குறித்த முரண்பாடுகளும் ஆகும். இவ்வாறான கடந்த 13 ஆண்டு கால முரண்பாடுகளின் பின்னணியில்தான் இம்முறை திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு இட…

  3. ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. …

  4. சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. …

  5. நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ? நிலாந்தன் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை? ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் து…

  6. இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று எமது தேசிய இனப்பிரச்சினை, அனைத்துத் தரப்புகளாலும் அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் நவதாராளவாத பொருளாதாரத்…

  7. இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம் By RAJEEBAN 23 SEP, 2022 | 01:08 PM இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்ட…

  8. புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா? ரணில் ஜனாதிபதியான பின்னர் ஏற்படும் மாற்றங்கள் — ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது Eelam Tamils என்று சொல்வதில்லை– -அ.நிக்ஸன்- புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமை…

  9. மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!! 22 SEP, 2022 | 02:44 PM இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவது சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. அதுவும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சினைகள் எவ்வாறு எழுந்தன என்பதும் நாம் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறியமுடியும். அந்தவகையில் தற்போது புதியதொரு பிரச்சினையொன்றை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சின் எனும் அமிலம் கலந்த திரிபோஷா, சமபோஷ, யஹபோஷ, லக்போஷ உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இலங்கையில் கடந்த …

  10. மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …

  11. ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள்…

  12. பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம் Veeragathy Thanabalasingham on September 20, 2022 Photo, Evening Standard இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று இடம்பெற்றது. லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆராதனைக்குப் பிறகு வின்ஸ்டர் மாளிகை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது 6 தசாப்தங்களுக்கு பிறகு பிரிட்டன் காணும் அரசமரியாதையுடனான முதலாவது இறுதிச்சடங்காகும். அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் அங்கு முடியாட்ச…

  13. இலங்கைத்தீவு விவகாரம்- இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது. 13 ஐ இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல. -அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்று…

  14. ‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு எ…

  15. ராஜபக்ஷக்களின் ஐந்து கவசங்கள் 17 Sep, 2022 | 12:33 PM சி.அ.யோதிலிங்கம் ஜெனிவா திருவிழா உச்சக் கட்டத்தைஅடையத்தொடங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தலைமையில் 6 நாடுகள் இணைந்துகொண்டு வரவுள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த 13ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 27ஆம் திகதி இப்பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கின்றது. எப்போதும் கடைசி நேரத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய முன்வருவதால் இந்திய திருத்தங்களுடன் தான் புதிய பிரேரணை வெளிவருவதற்கு வாய்புகள் இருக்கின்றன. …

  16. தமிழ்க் கட்சிகள், ஒன்றாக... திலீபனை, நினைவு கூரப்போவதில்லை? -நிலாந்தன்.- யாழ்.மாநகர சபை எல்லைக்குள் திலீபனின் நினைவுத்தூபி வருகிறது. அதனால் மாநகர சபையை நிர்வகிக்கும் மணிவண்ணன் அணியானது திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாட்டுக்களை ஒருபுறம் செய்யத் தொடங்கியது. இன்னொரு புறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அக்கட்சியானது வடக்கையும் கிழக்கையும் இணைத்து பொத்துவிலில் இருந்து திலீபனின் நினைவிடம் வரையிலும் ஒரு நினைவூர்தியைக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு தரப்பும் இதுதொடர்பில் முரண்படப் போவதை முன்கூட்டியே அனுமானித்த அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் இதுவிடயத்தில் தலையீடு செய்ய முற்பட்டார்கள்.இந்த இரண்டு கட்சிகளையும் சாராதவரும் புலிக…

  17. இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும். இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட…

  18. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் ப…

  19. ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்ற…

  20. ஜெனிவாவில் பலமுனைப் போர் By VISHNU 18 SEP, 2022 | 07:34 AM கார்வண்ணன் “கடந்த 13 ஆண்டுகளில் தமிழர் தரப்பின் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தான் ஜெனிவாவில் முதன்மையான விடயமாக இருந்து வந்தன. இப்போது, அது பலமுனை அழுத்தங்களாக விரிவடைந்திருக்கிறது” இலங்கையைப் பொறுத்தவரையில், ஜெனிவா இம்முறை வழக்கத்துக்கு மாறானதாரு போர்க்களமாக மாறியிருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ என இரண்டு சட்ட நிபுணர்களின் தலைமையில் ஜெனிவா கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக இருக்கப் போகிறது என, முன…

  21. புதிய எதிர்பார்ப்பு By VISHNU 16 SEP, 2022 | 01:58 PM ஆர்.ராம் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் கடல் எல்லைகளை அத்துமீறுவதால் தொடரும் அவலங்களுக்கு தற்போது வரையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. குறிப்பாக, வடமாகாண மீனவர்களும், தமிழக மீனவர்களும் அத்துமீறல் விவகாரத்தின் பிரதான இரு பங்காளிகளாக உள்ளார்கள். இந்நிலையில் கடல் எல்லைகளை அத்துமீறும் மீனவர்கள் அந்தந்த நாடுகளின் கடற்படைகளால் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது. எனினும், அவர்கள் இலங்கை, இந்திய அரசுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் காரணமாகவும், இராஜதந்திரத் தரப்பினரின் தலையீடுகள் காரணமாகவும் பரஸ்ப…

  22. ராஜபக்ஷவினரை காப்பாற்றும் முயற்சி By VISHNU 16 SEP, 2022 | 09:45 PM என்.கண்ணன் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், சமர்ப்பித்திருந்த விரிவான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார். பேரவையில் அவர் உரையாற்றிய போது, இரண்டு முக்கியமான விடயங்களை முன்வைத்தார். ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/…

  23. இலங்கையின் நெருக்கடி மற்றும் சிறிய அரசுகளின் சங்கடங்கள் By T. SARANYA 16 SEP, 2022 | 03:30 PM இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அதன் சிக்கலான வெளிநாட்டு உறவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகம் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை வரவேற்றது. பயணத்தை ஒத்திவைக்குமாறு கொழும்பு கேட்டிருந்த போதிலும், பின்னர் இணங்கி, ஆகஸ்ட் 22ம் திகதி வரை கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதித்தது. இந்த விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்று இந்தியா மறுத்தது, எனினும் விஜயம் குறித்து தனது கவலையை பதிவு செய்தது. பெய்ஜிங் கப்பல் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்று வாதிடுகி…

  24. மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப…

  25. ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல் புருஜோத்தமன் தங்கமயில் இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.