அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன் கள ஆய்வு யாழ். மாவட்ட எம்.பி.க்களான எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் செய்திருந்தார்கள். வடபகுதியில் சீனா கால் பதிப்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் தயராக இருக்கவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளும் பிரதிபலித்தார்கள். அதே வேளையில், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, பொருளாதார நலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை அனுமதிக்கலாம், ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தாமல் அது செயற்பட வேண்டும் என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்வைக்கப் பட்டிரு…
-
- 9 replies
- 711 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” ஓகஸ்ட் 3, 2021 ~ Vigetharan A.S அ. சி. விஜிதரன் தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” என்பது வித்தியாசமான தலைப்புப் போல தெரியலாம். ஆனால் முப்பது ஆண்டுகாலமாக இதுவே எதார்த்தமாக உள்ளது. இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய …
-
- 0 replies
- 649 views
-
-
வறுமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, …
-
- 0 replies
- 540 views
-
-
-
- 9 replies
- 1.1k views
-
-
ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் என்பதானது இலங்கை அரசு மனித உரிமைகள் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச செவி சாய்த்து, அண்மையில் பதிலளித் துள்ளமை பலரையும் ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது. பௌத்த சிங்கள பேரின தேசிய வாதத்தில் ஊறி, இராணுவ மனோபாவ சர்வாதிகார ஆட்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய போக்கிற்கு முரணாக இந்தக் கருத்து வெளிப்பாடு அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை உதறித் தள்ளி, ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக சர்வாதிகார ஆட்சிப் போக்கில் செல்கின்ற அவர், பொறுப்புக் கூறல் விடயத்தி…
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்! August 2, 2021 — எம்.எல்.எம். மன்சூர் — ஒரு நெருக்கடிக்கு வழிகோலிய மூல காரணங்களை அந்நெருக்கடியை சந்தித்திருப்பவர்கள் பிழையாக விளங்கிக் கொண்டால், அதற்குண்டான தீர்வையும் (இயல்பாகவே) அவர்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்கள். இலங்கை முஸ்லிம்களின் விஷயத்தில் இப்பொழுது இது தான் நடந்திருக்கின்றது. ‘இன்று தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான ஒரேயொரு தீர்வு ‘ராஜபக்ச அரசாங்கத்தை தொலைத்துக் கட்டுவதுதான்’ எனப் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது ‘அது சரி’ என்றே தோன்றுகின்றது. ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் பின்னர் ராஜபக்சகள் மீத…
-
- 0 replies
- 417 views
-
-
ஒன்றிணைத்துப் பாதுகாப்பதே தலைமைத்துவம் இலக்கு மின்னிதழ் 141 இற்கான ஆசிரியர் தலையங்கம் சிறீலங்காவில் ஈழத் தமிழினத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாது ஒழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் 1921 முதல் கடந்த ஒரு நூற்றாண்டாக தமது அரசியற் செயற் திட்டமாக முன்னெடுத்து வருகின்றன. பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் 1921இல் சட்டநிரூபண சபையில் சிங்களப் பெரும்பான்மை வழி சட்டவாக்கங்கள் நடைபெறுவதற்கு வழி செய்த ‘மன்னிங்’ அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக தமிழர்களுக்குத் தங்களது தாயகத்தில் தங்களது இறைமையை சிங்களவர்கள் மேலாண்மை செய்யும் நிலை வளரத் தொடங்கியது. நூறு ஆண்டுகளாக இலங்கையில் வாழ்விடம் கொண்ட ம…
-
- 0 replies
- 773 views
-
-
ஆஸ்டெக் பேரரசின் நரபலி வரலாறு: மத்திய அமெரிக்காவில் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1 ஆகஸ்ட் 2021, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், ஏழாம் கட்டுரை இது.) உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் மத்திய மெக்சிகோ …
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்! August 1, 2021 மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று. தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த…
-
- 0 replies
- 425 views
-
-
ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இ…
-
- 9 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 585 views
-
-
ஹிஷாலினியின் மரணம்: பல்வேறு பரிமாணங்களில் மலையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது – பி.மாணிக்கவாசகம் July 29, 2021 சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அவருடைய மரணத்திற்கு ந…
-
- 0 replies
- 265 views
-
-
வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்ஷர்களின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார். அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்து…
-
- 0 replies
- 585 views
-
-
‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக,…
-
- 4 replies
- 2.4k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 352 views
-
-
இந்தோ பசுபிக் பிராந்திய விவகாரத்துக்கு மத்தியில் இடிந்துபோன மோடியின் தேசியவாதம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள…
-
- 0 replies
- 494 views
-
-
திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 1…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 628 views
-
-
பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன். July 25, 2021 அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவே…
-
- 0 replies
- 364 views
-
-
-
பொய்யான வாக்குறுதிகள்: பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்-அம்பிகா சற்குணநாதன் பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசானது பயங்கரவாத தடைச்சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது என கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்;யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை…
-
- 5 replies
- 1k views
-
-
சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள் புருஜோத்தமன் தங்கமயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது. சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிரு…
-
- 0 replies
- 482 views
-
-
அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் – அகிலன் July 21, 2021 பசில் ராஜபக்ஷ நிதி, பொருளாதார அமைச்சராகப் பதவி யேற்றியிருக்கும் நிலையில், திருமலைத் துறை முகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளி வந்திருக்கின்றது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்களத் தேசியவாத அமைப் பினர் தான் இந்தச் செய்தியை வெளியிட்டு, கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் உத்தியோக பூர்வமாக இது குறித்த செய்திகள் வெளிவரவில்லை. தேசப் பற்றுள்ள தேசிய …
-
- 0 replies
- 516 views
-
-
கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும் எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர். இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி சுதந்…
-
- 0 replies
- 299 views
-
-
அடக்குமுறைச் சிந்தனைகள் என்.கே. அஷோக்பரன் இலங்கையர்களின் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளப் பகுதியில், இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான, அரசியல் பின்புலத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர், அண்மையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர், முன்னொருபொழுது வழங்கியிருந்த பேட்டியொன்றும் பெண் தலைமைத்துவ விருது வழங்கல் நிகழ்வொன்றில் ஆற்றியிருந்த உரையொன்றும், மீண்டும் ‘ட்விட்டர்’ தளத்தில் பகிரப்பட்டதே, அவர் விமர்சனங்களைச் சந்திக்கக் காரணமாயிற்று. அந்த விருது வழங்கும் விழாவில், அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், இங்கு கவனமீர்ப்பதாக அமைகிறது. அந்த உரையின் இரத்தினச் சுருக்கம், தன்னிடம் அதிகாரம் வந்தால், தான் ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் போர்க்கால…
-
- 0 replies
- 562 views
-