அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில், மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் தான். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், தமிழர்களின் அவலநிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல்கட்சிகளால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ஐ.நா மனித…
-
- 1 reply
- 798 views
-
-
-
ஈழத் தமிழருக்கு என்ன வழி? உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. ஸ்லேவேனியா, கொ…
-
- 0 replies
- 574 views
-
-
ஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்! July 20, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் …
-
- 0 replies
- 388 views
-
-
ஈழத் தமிழர் – சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? - யதீந்திரா இன்றைய நிலையில் உலக அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரதான விடயம் என்ன? சந்தேகமில்லாமல், சீனா என்பதே இதற்கான பதில். சீனாவின் அபார பொருளாதார வளர்சியே இதற்கான காரணமாகும். பொருளாதாரம் வளர்ச்சிடைகின்ற போது, கூடவே இராணுவ ஆற்றலும் அதிகரிக்கும். இன்றைய நிலையில் உலகின் பிரதான சக்தியாக அமெரிக்காகவே இருக்கின்றது. சோவியத் – அமெரிக்க பனிப் போருக்கு பின்னரான உலகத்தில், அமெரிக்காகவே ஒரேயொரு தனிப்பெரும் சக்தியாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இப்போதும் முதல் இடம் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றது எனினும், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக…
-
- 0 replies
- 715 views
-
-
குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும்! காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாக உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்து சமுத்திர அரசியல்தான் இலங்கையின் அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கும் பாத்திரமும் வகிக்கக்கூடிய சர்வதேச அரசியலாகும். தற்போது இந்துசமுத்திர அரசியல் சூறாவளி அரபிக் கடலில் பாக…
-
- 0 replies
- 464 views
-
-
எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து, 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், தமிழ் இன அழிப்பு, தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. 2006-2011... தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தது தி.மு.க. முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சகல துறைகளிலும், அவரின் அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆட்சி அராஜகத்தின் உச்சத்தை தமிழக மக்கள் உணர்ந்த காலகட்டமும் அதுதான். 2004 தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இரண்டு கம்யூ…
-
- 0 replies
- 742 views
-
-
இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் 'குரல' (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Fre…
-
- 0 replies
- 830 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம் மேற்குலகத்துடனான உரையாடல்கள் அவசியம். எனவே பகிஸ்கரிப்பு சாத்தியமற்றதென்றும் கூறுகிறார் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்கள…
-
- 0 replies
- 307 views
-
-
ஈழத் தமிழர் உரிமை - எந்தக் கழகம் முன்னணியில் நிற்கிறது? சந்திர. பிரவீண்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையைக் காரணம் காட்டி தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலகியதற்கு மறுநாள், 'இத அப்பவே செஞ்சிருந்தா நான் செத்துருக்க மாட்டேன்ல... தாத்தா? உயிரைத் திரும்ப தா... தா...' என்ற சுவரொட்டியை அ.தி.மு.க.வினர் சென்னை முழுக்க ஒட்டியிருந்தார்கள். அதற்கு பதிலடி தரும் விதமாக, 'போர் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று நீங்கள் அன்று சொன்னதால்தான் எனக்கு இந்த கதி. என் உயிரைத் திரும்ப தர முடியுமா அம்மா?' என்று தி.மு.க.வினர் மற்றொரு சுவரொட்டியை வைத்தார்கள். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு முகத்தை வைத்து இந்த இரண்டு கழகங்களும் அரசியல் செய…
-
- 1 reply
- 772 views
-
-
ஈழத் தமிழர் என்ற அடையாள உணர்வே சிறந்த பாதுகாப்பு மறவன்புலவு க. சச்சிதானந்தன் இடம்- ஏறாவூர்; நிகழ்ச்சி- ஐக்கிய மீலாத் விழா; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்- தலைவர். கொள்கை பரப்புச் செயலாளர் சேகுதாவூது பசீர்- பேச்சாளர். "முஸ்லீம்களின் பாதுகாப்புக் குறித்த சந்தேகம் தொடர்ந்து நீடிக்குமானால் இன்று ஆளணி இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் ஆளணித் தளத்தை அதிகரிக்கச் செய்யும் கைங்கரியத்தை முஸ்லிம்கள் செய்ய வேண்டி ஏற்படும்" என அவ்விழாவில் பசீர் பேசியுள்ளாராம். ரவூப் ஹக்கீம், சேகுதாவூத் பசீர் இருவரும் கொழும்பு அரசில் அமைச்சர்கள். கொழும்பு அரசுக்கு உண்மையாக நடக்க உறுதி பூண்டவர்கள். கொழும்பு அரசுக்கு எதிராகப் போரிட என்றே அமைந்த தமிழர் படை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன் 96 Views தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா? கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை. உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்…
-
- 1 reply
- 326 views
-
-
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களைய…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன் 59 Views 26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது. அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சியாக “இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழை…
-
- 0 replies
- 329 views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் என்னும் ஆயுத இயக்கம் அழிவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு விடயமும் தமிழர்களுடன் நேரடியான தொடர்புடையவை அல்ல. அனைத்தும் யுத்த வெற்றிக்குச் சொந்தமான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தொடர்பானவை. உள்ளுக்குள்ளும் வெளியிலும் அரசாங்கம் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வருகின்ற அனைத்தும் அரசாங்கத்தின் தொடர்சியான இருப்புடன் தொடர்புபட்டவையாகும். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியல் பிரவேசம், மற்றும் யுத்தவெற்றிக்கு உரியவரான ஜனாதிபதி ராஜபக…
-
- 0 replies
- 589 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ? - யதீந்திரா ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதில்லை. அதாவது, நாம் முன்வைக்கும் விடயங்களை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம், உண்மையிலேயே அதனை சாத்தியப்படுத்த முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? இப்படியான கேள்விகளுக்குள் எவரும் செல்வதில்லை. ஒரு நுனிப்புல் மேய்ச்சலாகவே அனைத்தும் முடிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலான விடயங்கள், சாதாரணமாக வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லப்படுகின்றது. சாதாரணமாக எழுதிவிட்டுப் போதல் – என்னும் நிலைமை இருக்கின்ற போது, சாதாரணமாக…
-
- 0 replies
- 509 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஒரு பலமான வெளியுறவுக் கட்டமைப்புத் தேவை – நிலாந்தன்.. March 7, 2020 Dan Saelinger illustration for Foreign Policy ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கும் வெளியே மிகப்பெரிய பொதுசனத் தளம் ஒன்று உண்டு. அதற்குள் மத நிறுவனங்கள் ஊடகங்கள் படைப்பாளிகள் துருத்திக்கொண்டு தெரியும் முக்கிய ஆளுமைகள் பொது நிறுவனங்கள் சிவில் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கருத்துருவாக்கிகள் ஆய்வு நிறுவனங்கள் கொள்கை ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெரும்பரப்பிற்குள் அடங்கும்.அரசுகளை தெரிந்தெடுப்பதற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை இப்பொது சனப் பரப்ப்பே உருவாக்குகின்றது. …
-
- 0 replies
- 381 views
-
-
ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச…
-
-
- 1 reply
- 213 views
-
-
ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க…
-
- 0 replies
- 259 views
-
-
ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 01:39 இந்திய அரசியல் நிர்ணய சபையில், பேசிய டொக்டர் அம்பேத்கர், “வரைவு அரசமைப்புப் பிரிவுகளில், குடியுரிமை வழங்கும் இந்தப் பிரிவு போல், அரசமைப்பு வரைவுக் குழுவுக்குத் (Drafting Committee) தலைவலி கொடுத்த வேறு எந்த பிரிவும் இல்லை” என்று, குடியுரிமை பற்றிய அரசமைப்புப் பிரிவு ஐந்தின் மீதான விவாதத்தில் 10.8.1949 அன்று கூறினார். அவருடையை வார்த்தை, இன்றைக்கு 70 ஆண்டுகள் கழித்து, உண்மையாகும் என்பது, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உருவாகியுள்ள தலைவலியில் பிரதிபலிக்கிறது. மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க போன்ற ம…
-
- 0 replies
- 434 views
-
-
நஜீப் பின் கபூர் நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று. அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவ…
-
-
- 2 replies
- 273 views
- 1 follower
-
-
இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்தவது? தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துவதா அல்லது தமிழ்த் தேசிய சிறுபான்மையினராக அடையாளப்படுத்துவதா அல்லது சிறிலங்கர் என்ற அடையாளத்துக்குள் தம்மைக் கரைத்துக் கொள்வதா? இதில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் தெரிவை எடுத்திருந்தார்கள் என்பதனை வரலாறு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் தமிழர்கள் தம்மைத் தேசமாக அடையாளப்படுத்தும் கூட்டுணர்வில் இருந்து விடுபடச் செய்து சிறுபான்மையினராகவோ அல்லது சிறிலங்கராகவோ சிந்திக்கவும் அடையாளப்படுத்தவும் வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபச்ச முன்வைத்த «ஒரு நாடு ஒரு மக…
-
- 0 replies
- 417 views
-
-
ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? நிலாந்தன் 20 ஏப்ரல் 2014 கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருப்பவர்களில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உண்டு. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழர்கள் தரப்பில் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளில் ஒரு பகுதியினர் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள புத்திஜீவிகள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் மோடிக்கு எதிராகவே காணப்பட…
-
- 0 replies
- 596 views
-