Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். …

  2. இந்திய நடிகர்களுடன் இணைந்து இலங்கை மக்களை நிர்வாணிகளாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!: எம்.ரிஷான் ஷெரீப் மகிந்தவின் பொதுக்கூட்டத்தில் நிர்வாணப்படுத்தித் தாக்குதல் நடத்தும் போலிஸ் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியென உலகம் முழுவதும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. என்றாலும், அவரே அச்சப்படும் ஒருவர் இருக்கிறார் எனில் அது, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன ஆவார். பௌத்த பிக்குகளைத் தாக்கும் மகிந்த ஆதரவுப் போலிஸ் தன் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துகொண்டு வருகிறது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, மீண்டும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்…

  3. கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை யாழ்ப்பாணக் நன்னீர்க் கிணற்றில் எண்ணை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் மிகப்பெரும் பணக்காரரான தம்மிக்க பெரேரா யாருக்கு ஆதரவளிப்பார் என்று கேள்வியெழும்பினால் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரை ஆதரிப்பார் என்பதே பதில். வெலிவெரிய என்ற கொழும்பை அண்மித்த கிராமத்தில் தம்மிக்க பெரேராவின் ஹேலிஸ் நிறுவனம் அப்பிரதேச மக்களின் குடிநீரை மாசுபடுத்திவந்தது. அதற்கு எதிராக மக்கள் நட்த்திய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பாசிச இராணுவம் தாறுமாறாகச் சுட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். ஆறாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எந்த முன்னறிவுப்புமின்றிப் புகுந்த போலிஸ் படை கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் செய்த…

  4. அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை ஏன் என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம் ஆடியபோது தம்மை தற்காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் …

  5. நடராஜா குருபரன்:- 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்... ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கடும்போக்குவாதக் கட்சிகளும் ஓரணியில் சங்கமித்தன. சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்.. றணில் பிரபா கூட்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தப் போகிறது என மிகக் கடுமையான பிரச்சாரங்களை ஜே.விபி – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விட்டன... இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாடுபூராகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அநாகரீகமான முறையில் இனவாதத்தை உமிழ்ந்தன... இன்று எதிரணியில் இருக்கும் மங்கள சமரவீரவும் - …

  6. கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்;க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முன்வந்தால், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டு இருந்ததா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்ப…

  7. பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை? சர்வே பாலா அண்ணா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் (14.12.2014) 8 வருடங்கள் உருண்டோடி விட்டன. இவர் காலம் ஆகிய பின்னர் கழியும் ஒவ்வாரு அரசியற் தருணங்களும், அவர் இல்லாத வெறுமையை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டே உள்ளன. தமிழீழ தேசத்தின் முதலாவது இராஜதந்திரி எனக் கருதப்படக்கூடியவராக பாலா அண்ணா இருந்தார். தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்திராதவொரு சூழலில்தான் பாலா அண்ணா தன்னையொரு இராஜதந்திரியாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது. தமிழர்களிடம் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரச்சியடையாமைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழர்கள் நீண்ட நெடும் காலமாக அரசற்றதொரு தேசிய இனமாக …

  8. பெரும் இனவாதியான ஜாதிக ஹெல உறுமயாவின், சமபக்க ரணவக்க, தமிழ் மக்களை தேர்தல் பகிஸ்கரிக்க கோரும் பெரும், உள்ளூர், சர்வதேச, முனைப்புகள் பெரும் முன்னெடுப்புடன் நடைபெறுவதாக கவலை வெளியிடுள்ளார். இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் தொடர்பு இல்லாதது என கூறி அவர்களை வாக்களிக்காமல் தடுக்க முனைகின்றனர் என அவர் கவலை வெளியிட்டார். இந்த நாட்டில் வாழும் சகலரது தலைவிதியினை பாதிக்கும் தேர்தல் ஆகையால் சகலரும் வாக்களிக்க வேண்டும் என்றும், 2005ல் பகிஸ்கரிப்பினால் லாபம் அடைந்தவர்களே இம்முறையும் பகிஸ்கரிப்பினை விரும்புவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மகிந்தருடன் நின்ற இவரது கட்சி இப்போது மைத்திரி பக்கம் நிக்கிறது.

  9. ரணிலிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலில், டக்லஸ், கே பி போன்றவர்கள் இந்தியா கேட்டால் விசாரணைக்கு ஒப்படைக்கப் படுவார்கள் என கூறி உள்ளார். அப்பிடி விஷயம் எண்டால், டக்கியர் கள்ள வோட்டுப் போடப் போறார் எல்லோ ...

  10. Zero hour:Vanni after 5 years (10-12-14)1/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)2/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)3/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)4/4

  11. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போர், முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களுக்குப் பின்னரும், இலங்கை அரசியலில் அதுவே மிகப்பெரிய முதலீடாக விளங்கிவருகிறது. ஆளும் கட்சியினர் மட்டுமன்றி, எதிரணியினரும் கூட போர் வெற்றிக்கு உரிமை கோருவதிலும் அதனை பங்குபோட்டுக்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, போர் வெற்றியே பிரசாரங்களில் பிரதான இடத்தை வகிக்கப்போகின்றது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, டெய்லி மிரர் உள்ளிட்ட பல நாளிதழ்களின் முன்பக்கத்தில், ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் வெளியான முகப்புப்பக்கமே இடம்பெற்றிருந்தது. போர் வெற்றி கொள்ளப்பட்ட மறுநாள், வெளிய…

  12. யாழ்தேவி பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை நோக்கி கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், 'வரலாற்று சிறப்புமிக்க இந்த நாள் ஞாபகம் உள்ளதா?' என்ற கேள்வியையும் இலங்கையின் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளும் கடந்த திங்கட்கிழமை (டிசெம்பர் 08, 2014) முதற்பக்கம் முழுவதுமாக தாங்கியிருந்தன. அதேதினம், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், போர் வெற்றி அறிவித்தலை வெளியிடுவதற்காக தான் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு மே 17, 2009இல் நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்;கும் படத்தையும், 'ஒன்றிணைந்த தேசம், பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்பு, புலிகளின் கடைசி நிலப்பகுதியையும் இராணுவத்தினர் மீட்ட…

  13. தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்கை! by Dr. S. Jamunanantha - on December 10, 2014 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் முக்கியமானது. இங்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இனவாத சிங்கள மேலாதிக்கத்தினையே மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு விமோசனமான தீர்வினை முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள – பௌத்த தீவிரவாதத்துடன் அதாவது, ஜாதிக ஹெல உறுமய உடன் கூட்டு வைத்து உள்ளார். இது இலங்கை அரசியல் என்பது சிங்கள – பௌத்த தேசியவாதம் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. இன்று பெரும்பான்மை வாக்குப்பலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பெற்று அதனைத் த…

  14. மலையக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்? by Jothilingam Sivasubramaniam படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு மாறுவது பற்றியும் யோசித்திருந்தார். ஆனாலும், அமைச்சர்களுடைய கோவைகள் தன் கையில் உள்ளன என ஜனாதிபதி அறிவித்ததும் ஆறுமுகம் அடங்கிவிட்டார். மலையக மக்கள் மஹிந்தவின் இனவாதம் காரணமாக அவரை ஆதரிக்க பெரியளவிற்கு விரும்பவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் நிற்பதால் தா…

  15. இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்வதே. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதனை நேரடியாக மக்களுக்கு கூற தயங்குகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே இந் நாட்களில் மக்கள் விடுதலை …

  16. யாருக்கு வாக்களிப்பது என்பதில் கூட்டமைப்புக்குத்தான் குழப்பங்கள் இருக்கென்று பார்த்தால் எங்கள் குடும்பத்திற்குள்ளும் குழப்பங்கள் தொற்றிவிட்டன. ஒருபோதுமே இப்படிக் குழப்பங்கள் வந்ததில்லை. ஏனெனில் முன்னைய தேர்தல்களில் ஏதாவது ஒரு பக்கம் விரும்பியோ விரும்பாமலோ சிறுபான்மையினர் தொடர்பான நிலைப்பாட்டில் ஏதுவான சூழமைவுகளைக் கொண்டிருப்பர். ஆனால் இம்முறையோ நிலமை தலைகீழாகிவிட்டது. எமது வாக்கு பலமே இம்முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகின்றது என்ற வெளிப்படையான சூழ்நிலையை தென்னிலங்கை மக்களிடத்தில் சூனியமாக முன்னிறுத்தவே மைத்திரியும் மகிந்தவும் விளைகின்றனர். அதாவது தமிழ் மக்களின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றால் சிங்கள மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்ச…

  17. ‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள் Dec 05, 2014 | 10:12 by நித்தியபாரதி “சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்” அடுத்த ஆண்டு ஜனவரி 13 அன்று பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள நிலையில், பாப்பரசர் அவர்கள் இந்தப் …

  18. "தங்கத்தினை நேசித்ததைப் போன்று தாய் நாட்டையும் நேசியுங்கள்"நகைகளை வழங்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்சே. "விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் அரசுடைமையாக்கப்படுவதே சட்டமாகும்.ஆனால் நாம் அதனைச் செய்யவில்லை. நகைகளை சொந்தக்கார்ர்களிடமே வழங்குகின்றோம். ஏனென்றால் வடபகுதி மக்கள் நகைகளைச் சேகரிப்பதற்கு எவ்வளவு கஷ்ரப்பட்டிருப்பார்கள் என்பதை நாமறிவோம்"என்பதை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "அன்று பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.சுமுகமான தீர்வுக்கு அழைப்பு விடுத்தோம்.ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.அனைத்தும் தோல்வி கண்டன.இறுதியில் பயங்கரவாத்த்திற்கு எதிராக போராடினோம். யுத்தத்தை நிறுத்தினோம்.பயங்கரவாத்த்தை இல்லாதொழித்தோம். …

  19. சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும் Dec 02, 2014 சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு IPS-Inter Press Service என்னும் செய்தி நிறுவனத்திற்காக Amantha Perera எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தான் வாழும் கொழும்பு நகரானது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் மற்றும் நத்தார் பண்டிகையை எதிர்பார்த்து மிக வேகமாக அலங்கரிக்கப்படுவதாக பிரியந்த வக்விற்ற கூ…

  20. போரால் இழக்கப்பட்ட அங்கங்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- 03 டிசம்பர் 2014 இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள்…

  21. “உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா) பிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின. விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் …

  22. வை.கோ அவர்களின் தேசிய தலைவரின் பிறந்தநாள் செய்தி

    • 1 reply
    • 865 views
  23. 2015 ஆம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10 ஆவது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=434253687230426555

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.