நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
2015 ஆம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10 ஆவது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=434253687230426555
-
- 0 replies
- 748 views
-
-
சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்! சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது. துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூ…
-
- 5 replies
- 2.4k views
-
-
கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, வடகடலில் மீன்வளத்தை முழுமையாக சுரண்டும் செயற்பாடுகள், வடக்கு மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் அழிப்பு, மீன்வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் செய்தல், இந்திய மீனவர்களின் அத்துமீறல், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றினால், தங்கள…
-
- 10 replies
- 745 views
- 1 follower
-
-
அவசியமான மீள்பரிசீலனை மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:30 Comments - 0 உலகில், பெரும் புரட்சியாளர்கள் என்று பெயரெ டுத்தவர்கள், அகன்ற இராச்சியங்களை ஆண்ட அரசர்கள், தீர சூரர்கள், படையெடுப்பில் வல்லவர்கள் எனப் பேசப்பட்டவர்கள், பெயர்பெற்ற ஆயுதக் குழுக்களின் கட்டளையிடும் தளபதிகள் எனப் பலர், தாம் போகும் வழிமுறையை, நகர்வுகளை மீள்பரிசீலனை செய்யாமல் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத ஒரு தருணத்தில், தோற்றுத்தான் போனார்கள் என்பதற்கு, சரித்திரக் குறிப்புகளில் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையில், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கும், மேற்குறிப்பிட்ட உவமானத்தை இணைத்து நோக்க முடியும். இரு பெருந்தேசியக் கட…
-
- 0 replies
- 643 views
-
-
‘அடையாளங்களை’ இழக்கும் முஸ்லிம் சமூகம்: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலம்..! பாரம்பரியத்தினூடு இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்ட இன, மத, கலாசார அடையாளங்களை இழப்பதானது நமது வரலாற்றின் பக்கங்களை நாமே கிழித்தெறிவதைப் போன்றதாகும். இலங்கை முஸ்லிம்கள் நிகழ்காலத்தில் அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையையே எதிர்கொண்டிருக்கின்றனர். தனித்துவ அடையாளங்களைக் கொண்ட இஸ்லாமியனாகவோ அல்லது முஸ்லிமாகவோ அன்றி, ‘இரண்டும்கெட்டான’ நிலைக்குள்ளான ஒரு ‘கலப்பு சமூக விலங்காக’ வாழ்வதற்கான நிர்ப்பந்தங்கள், தெட்டத் தெளிவாக முஸ்லிம்கள் மீது தவணை அடிப்படையில் பிரயோகிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவ…
-
- 0 replies
- 297 views
-
-
நாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் !!!! கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட தேரர் தலைமையிலான குழுவினரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடை வேளையுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளும் பொலிஸார் மற்றும் தேரர்களின் அமுத வாக்குறுதிகளை நம்பி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சாப்பாடு கொடுப்பது, விழா எடுப்பது என எந்த முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும் ஐக்கிய சதுக்கம் தயாராக இருக்கிறது. அந்த சதுக்கத்தில் முஸ்லிம் தரப்பு சத்தியாகிரகம் எனு…
-
- 0 replies
- 338 views
-
-
உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத…
-
- 0 replies
- 593 views
-
-
தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள் ஒவ்வொரு தேசிய மட்டத் தேர்தல்களின் போதும், மாகாணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் அரசியல் கட்சிகள், மரபு ரீதியான சில கோரிக்கைகளைப் பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றன. அல்லது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கின்றன. இம்முறையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மாகாணசபையின் முன்ளாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளன. தமிழ்க் கட்சிகள், இது போன்ற கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் போதெல்லாம், அந்த…
-
- 0 replies
- 563 views
-
-
கோத்தா வென்றதும் மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் - அமரவீர (செ.தேன்மொழி ) தற்போதைய அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு எந்தவித நலனும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரச ஊழியர்கள் தொடர்பில் எந்தவிதமான சிறந்த வேலைத்திட்டமும் உள்ளடக்கப்பட வில்லை. ஆனால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு பல சிறந்த கொள்கைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கோத்தாப…
-
- 0 replies
- 209 views
-
-
மனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது? ஹெலன் பிரிக்ஸ்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVELIZAR SIMEONOVSKI பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் …
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்ட போதும், அந்தச் செய்திகளை விட மக்களிடம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருப்பது கொரோனா வைரஸ் தான். கடந்த வியாழக்கிழமை 22 மாவட்டச் செயலகங்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டன. வழக்கத்தில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கினால், ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளே முதன்மை பெற்றிருக்கும், எந்தக் கட்சி எந்த இடத்தில், எந்தக் கட்சியில் எந்தெந்த வேட்பாளர்கள் என்ற விலாவாரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். வாசகர்களும், அத்தகைய செய்திகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கடந்தவாரம் நடுப்பகுதி வரையில் முதலாவது கொரோனா நோயாளி இ…
-
- 0 replies
- 559 views
-
-
நினைவுச்சின்னங்கள் பூஜிக்கப்படுவதற்காக மட்டுமல்ல - உமா ஷானிகா நாம் பிரான்ஸ் சென்றிருந்த போது, 1944 இல் ஹிட்லரின் SS- படையினரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட Oradour-sur-Glane எனும் கிராமத்தையும், அதனையொட்டியிருந்த நூதனசாலையையும் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நினைவுச் சின்னமாக அந்தக் கிராமம் அழிந்த நிலையில் விடப்பட்டு, அதற்கண்மையில் அதே மாதிரியான சிறு கிராமம் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. எமது தந்தையுடன் பலகாலமாகப் புரட்சிகர மார்க்சியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட, நாங்கள் வில்பிரட் அங்கிள் என்றழைக்கும் வில்பிரட் சில்வாவுடன் தான் நாம் அங்கு சென்றிருந்தோம். அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 312 views
-
-
போலீஸ் அதிகாரியும் மனைவியும்... கொழும்பில் கொரோனா லொக்டவுன் ஊரடங்கு அமுலில் உள்ளது. போலீசார் வீதியில் நின்று அத்தியாவசியமான் பயணங்களை மட்டுமே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். ஒரு அம்மணி வேகமாக நடந்து வந்தார். பொலீஸ் காரர் மறித்து என்ன விசயம், எங்க போறீர்கள் என்றார். ஜொக்கிங் போகிறேன் என்றார் அவர். அதுக்கெல்லாம் அனுமதி இல்லை. வீட்டுக்கு திரும்பி போங்கள் என்றார் அவர். முடியாது, நான், இந்த பகுதி ஏரியா போலீஸ் உயர் அதிகாரியின் மனைவி. அதுதான் எமது குவாட்டர்ஸ், ஆகவே என்னை தடுக்காதே என்றார். அம்மா, உங்கள் நன்மைக்கு தானே சொல்கிறேன். நோய் வந்தால் பிரச்சனை தானே என்று சொல்லி, வீடு திரும்புங்கள் என்று சொல்ல, அம்மணிக்கு கோபமான கோவம். எடுத்தார் போனை, கூப…
-
- 5 replies
- 896 views
-
-
“ஒரு இனத்தை அடையாளம் காட்டக்கூடியது மொழி தமிழைச் சிதைந்துவிடாமல் பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை” “அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அறிவில் உயர்ந்தும் எளிமையாக வாழும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பார்த்தபோது தேசியத் தலைவரின் இந்த வாக்கியம் தான் நினைவில் தோன்றியது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அறிமுகம…
-
- 0 replies
- 608 views
-
-
மார்ட்டின் லூதர் கிங் முன்கூட்டியே தனது மரணத்தை கணித்தாரா? ஓவன் ஏமோஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் டிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்டின் லூதர் கிங்கின் சொற்கள் 50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா அவர்? மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அந்த வாரம், ஒரு குப்பை லாரி தொடர்பாகத்தான் அவர் மெம்ஃபிஸுக்கு வந்தார். இரண்டு மாதஙக்ளுக்கு முன்பு, இரண்டு கருப்பின துப்புரவுத் தொழிலாளர்கள் — எகோல் கோல் மற்றும் ராபர்ட் வாக்க…
-
- 1 reply
- 332 views
- 1 follower
-
-
‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன். எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை! தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவி…
-
- 0 replies
- 386 views
-
-
சரியான பாதையில் ஜே.வி.பி இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான். ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல. ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் ப…
-
- 14 replies
- 5.3k views
-
-
கூட்டைத் தடுக்கும் ‘புறச்சக்தி’ * விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதில், அவரை மாற்று அரசியல் தலைமையாக வெளிப்படுத்துவதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணிசமான பங்கு உள்ளது. *ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்கிருந்தும் காய்வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்…
-
- 0 replies
- 333 views
-
-
இன்று இந்திரா காந்தி நினைவு நாள். ஆங்கில டியூஷன் முடிந்து, தெஹிவல கடற்கரைப் பக்கத்தில் இருந்து, நண்பருடன் வெள்ளவத்தை நோக்கி ரயில் பாதை மேலாக நடந்து வந்து கொண்டிருந்தோம். இரு போலீஸ் காரர்கள், கிரந்தம் விட யோசித்து, கூப்பிட்டு அரை மணி நேரம் வதை பண்ணி கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் அடையாள அட்டை வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நேரம் ஆக எமக்கு கவலை வரத் தொடங்கியது. எம்மிடம் பிளேன் டீ காசு தான் இருந்தது. அவர்களோ, காசு வெளில வருமோ என்று வதை பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து வந்த 'அன்னாசி' விற்பவர், 'தீடிரென' நின்று தனது சிறிய ரேடியோவில் நியூஸ் கேட்டு பதட்டத்துடன் 'இந்திரா காந்தி சுடப் பட்ட' செய்தியினை அறிவித்தார். எல்லோருக்கும் …
-
- 0 replies
- 435 views
-
-
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் தமிழ் நாட்டு இந்தியர்களிடம், மொழி வெறியை மீண்டும் தூண்டும் விதமாகவும், ஈழ பயங்கரவாதிகளிடம் பரிவை ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகள் எழுதப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தப் பதிவுகளைப் படித்து ஒன்றும் நமது இந்திய சகோதரர்கள் எதுவும் செய்துவிட மாட்டார்கள்தான் என்றாலும் இப்படியும் சில பேர் பேசிவருவது எதில் கொண்டு போய் விடுமோ. எந்தப் பிராந்திய உணர்வும் பிரிவினையில்தான் கொண்டு போய் விடும். அதனால் இந்த உணர்வுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுவேதே தேசத்தின் நலனுக்கு உகந்தது. இன்று தமிழன், தமிழினம் என்று பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். மொழி என்பது கருத்தைக் கொண்டுசெல்லும் ஒரு கருவிதானே. அது தேசபக்தியின் வழியில் குறுக்கே நிற்கலாமா? அடு…
-
- 9 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும் Maniam Shanmugam : · யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்த…
-
- 43 replies
- 4.1k views
-
-
தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி by vithaiJuly 23, 2021089 1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத ‘இறைச்சி, மீன், முட்டை’ ஆகிய நல்லுணவுகளை தினமும் கிடைக்கும், என்ற கனவுடன் கொழும்பிலுள்ள பணக்கார வீடு ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறாள். ஆசிரியர் இறைச்சி, மீன் , முட்டை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி அவளுடைய கனவாக விபரிக்கிறார். இப்படியாகக் கதை வளர்ந்து சென்று அவள் வேலையை விட்டு விட்டு சுதந்திரமாக தந்தையுடன் வீடு திரும்புவதாகக் கதை முடியும். பிள்ளை இறுதியி…
-
- 0 replies
- 659 views
-
-
கிறீஸ் மனிதனை நாம் மறந்திருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு சில மாதங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களையெல்லாம் அலைக்கழித்த பயங்கரம். பெருந்தோட்டப்பகுதியில்தான் இது ஆரம்பித்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் பொதுவிடங்களில் தனியே போக முடியாத அளவுக்கு அவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன எனச் செய்திகள் எங்களை வந்தடைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென யாரோ ஒரு மர்ம மனிதன் பெண்கள் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களைப் பிராண்டி விட்டு ஓடுகின்றான் என்கின்ற செய்திகள் கிளம்பத் தொடங்கின. முதலில் ஒன்றுமாக விளங்கவில்லை. ஆனால், நாம் சிந்தித்து செயலாற்ற நேரம் கொடுக்காமல் இந்த மர்ம மனிதனின் வெளிப்பாடு கடகடவென மலையகத்தில் அனேக பிரதேசங்களில் பரவி…
-
- 0 replies
- 679 views
-
-
அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில் 11 Dec, 2022 | 02:14 PM இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு : …
-
- 7 replies
- 856 views
-
-
போர் வெற்றிக்காக பரபரப்பாக இயங்கும் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் போர் ஆரம்பமாகிய நாளில் இருந்து உக்ரைன் போரின் களமுனையில் உக்ரைன் தரப்பு தற்காப்பு தாக்குதல்களில் தான் ஈடுபட்டு வருகின்றது. வலிந்த தாக்குதலை மேற்கொள்ள கடந்த வாருடத்தின் நடுப்பகுதியில் அது முயன்றபோதும் ரஸ்ய படையினர் தமக்கு பாதகமான களமுனைகளில் இருந்து வெளியேறியதால் அது உக்ரைனுக்கு வெற்றியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொண்டு தமது படையினரின் மனவலிமையை தக்க வைக்கவும், உதவிகளை வழங்கும் நேட்டோ நாடுகளை திருப்த்திப்படுத்தவும் வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது. எனவே தான் அண்மைய நாட்களின் உக்ரைனின் வலிந்த தாக்குதல் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து எ…
-
- 1 reply
- 632 views
-