நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
யாழ் பல்கலைகழக பகிடி வதை விசாரணை அறிக்கை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன் ’ யாழ் பல்கலைக் கழக கிழிநொச்சி வளாகத்தில் 2020ம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் பகிடி வதையும் குற்றச் செயல்மட்டத்துக்கு சீர்குலைத அதிற்ச்சிதரும் செய்திகள் 06.02.2020 அன்று வெளியாகி நமக்கெல்லாம் பேரதிற்சியை ஏற்படுத்தியது. மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணை ஆரம்ப அறிக்கை யாழ் பல்கலைக் கழப் பதிவாளரால் 24.02.2020 வெளியிடபட்டுள்ளது. விசாரணைகள் யாழ் பல்கலைக்ழக மாண்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதிக்கும் அதேசமயம் சம்பந்தபட்ட மாணவர்களின் திருந்திய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. இதற்க்காக பழைய மணவன், முன்னைநாள் மாணவர் தலைவன் என்கிற வகை…
-
- 0 replies
- 552 views
-
-
1 . முத்தமிழ் அறிஞர் என ஒருவரை சிலர் கூறுகின்றனர் . எதை வைத்து ? 2 . தமிழரின் உணர்வுகளையும் போராட்டத்தையும் தமிழிலே தொண்டை கிழிய தமிழரிடம் கத்தி வரும் பலன் அதிகமா அல்லது பிற மொழியில் தெளிவாக பிறரிடம் எடுத்து சொல்வதின் பலன் அதிகமா ? மிக முக்கியமாக இந்திய மக்கள் . 3 . ஈழ பிரச்னை என வரும்போது தெளிவாக புலிகள் போராடுவது மக்களுக்கே என கூறுகிறார் வைகோ . ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்களின் கருத்தும் அதே . இருந்தும் தேர்தல் என வரும் போது அவருக்கு சொல்லிகொள்ளும்படி வெற்றி கிடைப்பதில்லையே . ஏன்? 4 . போர் நிறுத்தம் என்ற பேரில் புலிகளின் போர் உத்தி மற்றும் பூகோள ரீதியான திட்டங்களை அறிந்து (இப்போது நடைபெறும்) போருக்கு ராணுவம் திட்டமிட்டுகொண்டிருந்ததா அல்லது நடுநிலைமை என்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…
-
- 0 replies
- 316 views
-
-
சமூகவியலாளர் கணநாத் ஒபயசேகரவின் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ எனும் கருத்தாக்கம் ‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும். கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக …
-
- 0 replies
- 426 views
-
-
கைமாறும் பொருளாதார அதிகாரம்! மேற்கத்திய வல்லரசுகள்தான் உலக அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ராணுவ பலமும் அரசியல் ராஜதந்திர உத்திகளும் அந்நாடுகளுக்குச் சாதகம். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக் குறையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளே வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அவர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது 5 முதல் 10 சதவீதம் வரையிலான வர்த்தகம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து "பிரிக்' நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த மாற்றத்த…
-
- 0 replies
- 842 views
-
-
எதற்காக அஞ்சுகின்றார்கள்; எதற்காகக் கெஞ்சுகின்றார்கள்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:53 Comments - 0 தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் விழாவையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துச் செய்திகள் வெளியிடுவது வழமை. இம்முறை பொங்கலுக்கும் இவர்களது வாழ்த்துகள் செய்தித்தாள்களின் முதற் பக்கத்தை அலங்கரித்திருந்தன. ‘கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு தைப்பொங்கல் சிறப்பு’ என ஜனாதிபதியும் ‘சகவாழ்வை அ…
-
- 0 replies
- 794 views
-
-
பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை! March 28, 2019 மூதூர் ஹப்லுல்லாஹ் புஹாரி… பல்கலைக்கழகங்களின் நற்பெயர்களை சீரழிக்கும் பாழ்பட்ட செயல்களில் ஒன்றாக சமகாலத்தில் பகடிவதை எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் அரக்கச் செயல்களை அடையாளப்படுத்த முடிகின்றது. இவர்களின் மூர்க்கத்தனமான செயல் வடிவங்களை பார்க்கும் போது இது பல்கலைக்கழகமா இல்லை கடையர்களின் கழகமா எனும் சந்தேகங்களே வலுக்கிறது. பன்னிரண்டு பதிமூன்று வருட கால பாடசாலை கல்வியை கற்று அங்கிருந்து நாடளவில் தெரிவு செய்யப்படும் 4-5% மான மாணவர்களுள் ஒருவராக, கற்பனை மிகுந்த கனவு உலகத்தில் சஞ்சரிக்கின்றான் அப்பாவி மாணவன் ஒருவன். பாவம் பஸ் ஏறி பலிபீடம் போகிறோம் என்பதை கிச்சிந்தும் மறந்தவனாக , …
-
- 0 replies
- 847 views
-
-
செப்டெம்பர்11: மீளநினைத்தல் உலக வரலாற்றில் சில நாட்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அதன் பொருள் பிற நாட்கள் முக்கியமற்றவை என்பதல்ல. மாறாகச் சில நாட்கள் உலக வரலாற்றின் திசைவழியையே மாற்றியதால், அவை காலங்கடந்தும் தமது பெறுமதியை இழக்காது உயிர்ப்புடன் இருக்கின்றன. செப்டெம்பர் 11 அல்லது 9/11 என்றவுடன், 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரதும் நினைவுக்கு வரும். புதிய உலக ஒழுங்கைக் கட்டமைக்க அமெரிக்கா தோற்றுவித்த 'பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்' என்ற கோட்பாட்டுருவாக் கத்துக்கான சாட்டாக அந் நிகழ்வு அமைந்தது. 'ஒன்றில் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்' என்ற புகழ்பெற்ற பிரகடனத்தோடு, அமெரிக்காவ…
-
- 0 replies
- 391 views
-
-
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது
-
- 0 replies
- 303 views
-
-
ராஜபக்ஷக்களின் புதிய யாப்புக் கதை - கூட்டாக முடிவெடுக்க தமிழ் தரப்பு தயாரா.? கோட்டாபய ராஜபக்ஷ ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கோடி காட்டியிருக்கிறார். 20ஆவது திருத்தத்தின் மீது சர்ச்சைகள் எழுந்த பொழுது இரண்டு சிறிய பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்கள் தமது அறிக்கையில் ஒரு புதிய யாப்பே தேவை என்று கேட்டிருந்தார்கள். கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் அவ்வாறே கேட்டிருந்தது. அவாறான ஒரு அரசியற் சூழலில் தாங்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக ராஜபக்ஷக்கள் வெளிப்படையாக, தெளிவாக அறிவித்தார்கள். இப்பொழுது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஆர்வமாக இருப்பதாக ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. புதிய யாப்புக்கான தீர்வு முன்மொழிவுகளை வழங்குமாறு…
-
- 0 replies
- 381 views
-
-
சமகாலத்தில் நல்லிணக்கத்தை பாதிக்கும் சமூக ஊடகங்கள் 13 Views இலங்கையில் நல்லிணக்க செயன் முறையை வலுப்படுத்துவதற்காக பன்மைத்துவம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவினை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இன்றைய நவீன உலகமானது ஊடகத்தை ஒரு அச்சாணியாக வைத்தே இயங்கி வருகின்றது. ஒரு மனிதன் தனது நாளாந்த வாழ்க்கையில் நித்திரையால் விழித்தவுடன் முதலில் பார்ப்பது சமூக ஊடகங்களையே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் நித்திரையால் விழித்தவுடன் பைபிளை எடுத்து வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய அடையாளம். அதேபோல் இந்த சமகால உலகில் அனைவரும் சமூக ஊடகங்களையோ அல்லது பத்திரிகையையோ எடுத்து வாசிக்கிறார்கள். அதாவது ஒரே செய்தியை எல…
-
- 0 replies
- 332 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிங்களப் பேரினவாத அரசின் கோரப் பற்களைப் பிடுங்குவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதன் தீவிரத் தன்மையையும் கடந்து அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு குழுவினர் மிகத் தீவிரமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பணியினை செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மிக முக்கிய குழுவாக தம்மை அறிவித்துக்கொள்கின்ற அமைப்பு ஒன்று இந்த நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. அந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பது எதற்காக என்று ஆராய்ந்தால் அது “பண்ணையாரும் பத்மினியும்” என்ற தென்னிந்திய சினிமாப் படத்தினை திரையிடுவதற்கு மக்களைத் திரட்டுவதற்காக என்ற பதிலே கிடைத்திருக்கிறது. குறித்த அமைப்பி…
-
- 0 replies
- 596 views
-
-
http://www.youtube.com/watch?v=QeRGSEb7Y8Y&feature=player_embedded#! எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து
-
- 0 replies
- 837 views
-
-
கிருஷ்ணனின் ஐந்து யுகக் கோட்பாடு....
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம் மே 25, 2022 –இ.பா.சிந்தன் வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை. அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் த…
-
- 0 replies
- 219 views
-
-
மட்டு.நகரான் ‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. கிழக்கு மா…
-
- 0 replies
- 418 views
-
-
May 3, 2019 எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். ம…
-
- 0 replies
- 872 views
-
-
http://in.youtube.com/watch?v=oXaWvOj1sGg&...feature=related தலைவரின் 54வது வயதை முன்னிட்டு...
-
- 0 replies
- 945 views
-
-
மழைக்குமிழிகள்: கரோனா களத்தில் மருத்துவர் குடும்பத்தின் அனுபவக் குறிப்புகள்! “படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்- தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்”- நாலடியார் வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இவ்வுலகில் காண இயலுமோ?? பல ஊரடங்குகளைச் சந்தித்த வேளையில் செய்கின்ற வேலை காரணமாக - முக்கிய உயிர் காக்கும் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் பயணங்கள் தொடர்கின்றன. மருத்து…
-
- 0 replies
- 461 views
-
-
இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் கவிஞர் தீபச்செல்வன் இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம் லண்டன். இன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதியின் நெடில் விலகவில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் போரின் தாக்கம் சமீபமாகவே இருக்கிறது. சொற்களாலும் அரசியலாலும் உளவியல் ரீதியாக தமிழர்களை கொல்லுகிற இன அழிப்பு போர் முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இப் போரை உணரத்தான் முடியும். இலங்கை பாராளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்கு…
-
- 0 replies
- 541 views
-
-
ஹொஸ்பிற்றலடி காந்தி ஜெயந்தியும்!! வன்னி காடழிப்பு கவலையும்
-
- 0 replies
- 286 views
-
-
ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன “நியூயார்க் டைம்ஸ் முஜிப் மஷால் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில் அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த வடக்கின் கிராமங்களில் தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன. , அவர்கள் நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் புகைப்படங்களை அணைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைமட்டுமே கேட்கிறார்கள்: எங்கள் பிள்ளைகள் எங்கே? நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடர்கின்றன, போரின் மனித இழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு அரசாங்கத்தால் அ…
-
- 0 replies
- 367 views
-
-
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ள நிலையில் ஜெனிவா ஐ.நா.முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் அதன் பின்னர் 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரையிலும் இடம்பெறும் என என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் புகைப்படங்களும் விமான குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட சடலங்களின் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இனப்படுகொலையை விபரிக்கும் இப்புகைப்படங்களை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்…
-
- 0 replies
- 453 views
-
-
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன், நீதி அமைச்சர் சப்பிரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார் எனவும் இராஜினாமா செய்ய முயன்றும் முடியாமலிருக்கிறார் என ஊடகங்கள் கூறிவருவதாக தெரிவித்தார். இராஜினாமா செய்ய முடியாமை மிகவும் விசித்திரமாக இருந்தாலும் , அமைச்சருக்கு தன் பதவியை குறித்திருக்கும் சங்கடம் தன்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதென சுமந்திரன் கூறினார். ஏனெனில் அரசாங்கம் நாட்டின் நீதித் துறையின் செயற்பாடுகளில் வெட்கமின்றி தொடர்ந்து தலையிட்டு வருகிறதெனச் சாடினார். "இன்று கடற்படை தளபதி வசந்த காரனாகொட வடமேல் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்படப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இவர் இலங்கையின் ஒர் அடையாள…
-
- 0 replies
- 306 views
-
-
புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021ம் இணைந்துள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஸ் December 28, 2021 தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும். கடந்த…
-
- 0 replies
- 260 views
-