நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். "சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா" என்றார். "யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க. எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் …
-
- 0 replies
- 363 views
-
-
Herninig நகரில் வேற்றினத்தவர்களின் அமைப்புக்களும் டெனிஸ் அமைப்புக்களும் இணைந்து தங்களுடைய அமைப்புக்களின் வேலைத்திட்டங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலாச்சார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் Herninig நகரில் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பையும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் அழித்து வருவதை கண்காட்சி ஊடாக வெளிப்படுத்தினார்கள். இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அனைவரும் விருப்பத்தோடு சுவைத்து மகிழ்ந்தனர். இந் நிகழ்வில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட தமிழீழ பொருட்களை (தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள்) டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் விருப…
-
- 0 replies
- 363 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’ -கபில் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை தொடர்கிறது. தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள். அரசியல்வாதி…
-
- 0 replies
- 363 views
-
-
பிரபல நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடித்து இயக்கியுள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் ஆகஸ்டில் வெளியாகிறது. மும்பையில் தணிக்கை செய்யப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது மெட்ராஸ் கபே.! இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென்கிற அளவுக்கு தமிழீழ உணர்வாளர்களிடம் ஆவேசம் தெறிக்கிறது. இதன் ஒருகட்டமாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். இந் நிலையில் பொலிஸாரால் கைதாகி விடுதலையான அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இயக்குநர் சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘மெட்ராஸ் கபே’ படத்துக்கு தடை கோரியிருக்கிறீர்களே? தமிழீழ விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் போலவ…
-
- 1 reply
- 363 views
-
-
ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிராயுதபாணிகளுடனான யுத்தத்தையே இன்று முல்லைத்தீவு களத்தில் சந்திக்கின்றது. அழுத்தம் கொடுக்காத அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகினவே தவிர அதற்கு அப்பால் எதனையும் சாதித்திராத நில…
-
- 0 replies
- 363 views
-
-
இந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன். இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக…
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும் September 19, 2024 மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்ட…
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் நடராஜன் ஹரன் கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது. உலகில் இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டு வருட காலமாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில் உலகெங்கிலும் பொருளாதாரங்கள் மிகப் பெரும் சரிவையும் சவாலையும் எதிர்நோக்கி வருகின்றன. இது இவ்வாறு இருக்க, நாட்டின் அனைத்து பகுதிகளும் தற்காலத்தில் தனிமைப்பட்டிருக்கின்றன. இந்த கொரோனாவின் தாக்கம் காரணமாக மூடப்பட்ட பகுதிகளில் வாழ…
-
- 0 replies
- 362 views
-
-
குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும் -அம்பிகா சற்குணநாதன் Photo, Selvaraja Rajasegar “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது”: வழக்கமான சொல்லாடல் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் இளைஞர்ளது ஆர்ப்பாட்டங்களாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றன. ஆம், காலிமுகத்திடலை ஆக்கிரமிப்போம் என்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை இளைஞர்களே தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கிய இந்த ஆர்ப்பாட்டம் இளைஞர்களின் ஆக்கபூர்வமான மூலோபாயங்களால் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் காலி முகத்திடல் மீதே முழுக்கவனத்தை செலுத்தி இந்த ஆர்ப்பாட்டங்களை இளைஞர் ஆர்ப்பாட்டம் என முத்திரை குத்துவது பிழையானதும் அபாயகரமானதுமாகும். ஏப்…
-
- 0 replies
- 362 views
-
-
இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தமிழர்கள் எவ்வாறு ஆதரிப்பது?: இறுதியில் எமக்கு எஞ்சியது ஏமாற்றமே..! சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா? தமிழ்த் தரப்பின் விட்டுக்கொடுப்புக்களை தென்னிலங்கை கருத்திற்கொள்ளாது எதனையும் வழங்காது ஏமாற்றிவிட்டது. எமது தரப்பின் இராஜதந்திரம் தோற்றுவிட்டது. இத்தகையதொரு நிலைமையானது அடுத்த தலைமுறையின் சிந்தனைகளில் திசைமாற்றத்தினை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்த…
-
- 3 replies
- 362 views
-
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். …
-
- 0 replies
- 362 views
-
-
கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன? December 12, 20203:51 pm வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் யசோதரன், தலைமை தவிசாளரான சோபா ஜெயரஞ்சித்தை கட்டிப் பிடித்ததாக பேசப்பட்ட விடையத்தின் உண்மை என்ன எதற்காக அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதை பற்றியே இந்த பதிவு விழித்து நிற்க போகிறது. கோறளைப்பற்று பி.சபை 23 உறுப்பினர்களைக் கொண்ட சபை. இந்த சபையை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூ.கட்சி-6, த.ம.வி.பு-6, ஸ்ரீமுக-3, ஐ.தே.கட்சி-3, ஸ்ரீலங்கா சு.கட்சி-2, த.ஐ.ம.கட்சி-1, கொடி சின்னம்-1 ஏனைய கட்சி-1 மொத்தமா 23 ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில், த.ம.வி.பு.கட்சியுடன் கூட்டுச் சே…
-
- 0 replies
- 362 views
-
-
அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …
-
- 0 replies
- 362 views
-
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 362 views
-
-
இந்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள இந்து மதவெறி பாசிச அரசுக்கு எதிராக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியைப் பிரசவிக்கும் தருணத்தில் இருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்த மூன்று சம்பவங்கள், எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல காஷ்மீர் குமுறிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. “காஷ்மீர் நம் கையைவிட்டுப் போய்விடுமோ?” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டுப் பலரும் பதறி நிற்கும் அளவிற்கு அம்மூன்று சம்பவங்களும் “இந்து” இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் சவால்விட்டுள்ளன. முதல் சம்பவம், கடந்த மார்ச் மாதம் பட்காம் மாவ…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா.? டிசம்பர் 10 – இன்று உலக மனித உரிமைகள் தினம். இந்த நாளைக் குறித்து உலகின் தலைவர்கள் பலரும் இன்று பேசுவார்கள். இந்த நாளைப் பிரகடனப்படுத்திய ஐ.நாவும் இந்த நாளைக் குறித்து இன்று பேசக்கூடும். மனித உரிமை பிரகடனம் பற்றியும் இந்த ஆண்டின் குறிக்கோள் குறித்தும் அவர்கள் எடுத்துரைப்பர். அத்துடன் இலங்கையின் அரச தலைவர்களும் இந்த நாளைப் பற்றி இன்றைக்கு பேசுவார்கள். ஆனால் உலகம் எங்கும் மெய்யாகவே இந்த நாளின் அர்த்தம் பேணப்படுகின்றதா என்பதே பெருத்தவொரு கேள்வியாகும். ஒரு மனிதனின் அடிடைப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனது உரிமைகளுடன் வாழ்வதே அடிப்படை உரிமையாகும். இன்றைய பூகோள சூழலில் மனிதன் தன் மண் கடந்து தேசம் கடந்தும் வாழ்…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையுடன் நெருங்கும் அமெரிக்கா அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவாக்கப்படவுள்ளது என்பதை கடந்த 4 ஆம் திகதி வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ,அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே உறுதிப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே, இதுபற்றி இலங்கைக்கான பயணத்தின் போது, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, மேலோட்டமாகத் தெரிவித்திருந்தார். அது குறித்து விபரம் கோரியபோதே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர், இலங்கைக்கு கடல்சார் ஒத்துழைப்பு உதவிகளை அமெரிக்கா அளிக்கவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவை எத்தகைய உதவிகள் என்பது …
-
- 0 replies
- 360 views
-
-
தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெர…
-
- 1 reply
- 360 views
-
-
ரஷ்யாவின் இரும்பு மனிதர் விளாடிமிர் புடின். அதிபர், பிரதமர் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் அதிகார சிகரத்தில் இருப்பவர். வல்லரசாக இருந்த சோவியத் ரஷ்யா சிதறுண்டு போன பின், ரஷ்யாவை அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக, துாக்கி நிறுத்தியவர். ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.,யின் உயர் பொறுப்பில் இருந்தவர். சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்கு பின், நீண்ட காலமாக பதவியில் இருப்பவர். 1997ல், போரிஸ் எல்சின் பிரதமராக இருந்தபோது, கிரம்ளின் மாளிகையில் நுழைந்தார். அவரை எப்.எஸ்.பி., என்ற உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார் எல்சின். 1999ல், எல்சின் பதவியை ராஜினாமா செய்தபோது, ரஷ்யாவின் இடைக்கால பிரதமரானார் புடின். 2000ம் ஆண்டு, அதிபரானார்; 2008ம் ஆண்டு வரை, இ…
-
- 0 replies
- 360 views
-
-
சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..! 46 Views வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்ற அடர் காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர் காடுகள் என அடையாளமாகியிருந்த இடங்கள், செறிவான மரங்களுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ வரும் சிங்கள மக்களும், பௌத்த மத தலைவர்களும் தங்களுக்கான இடங்களைப் பிடிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கச்சல்சமணங்குளம் அடர் காட்டுப் பகுதியில் ‘சபுமல்கஸ்கட தொல்லியல் வேலைத்தல’ எனும் பெயர்ப்பலகையை நாட்டி…
-
- 0 replies
- 360 views
-
-
மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…
-
- 0 replies
- 360 views
-
-
தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார். ஜூலை 17, 2017, 04:00 AM சென்னை,- பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நா…
-
- 1 reply
- 360 views
-
-
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன். December 2, 2021 இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் இன்று அவர்களை பெரும் பொருளாதார நெருக்களுக்குள் தள்ளியுள்ள அதே நேரம் சழூகத்தால் அவர்கள் மீது ஏற்படுத்தப்படுகின்ற உடல் உள ரீதியான நெருக்குதல்கள் தற்கொலை வரை கொண்டு செல்லுகின்றது. இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து இவர்களை பாதுகாப்பதற்கு பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டிய கடப்பா…
-
- 1 reply
- 360 views
-
-
விமர்சனங்களை விடுத்து செயலாற்ற வேண்டிய தருணமிது
-
- 0 replies
- 360 views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ; இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்து இம்மானுவேல் அடிகளாரின் நேர்காணல் உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம் என்றுதான் ஆட்சிப்பீடத்தில் உள்ளவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பொதுமக்களின் நலன்களை முன்வைத்து செயற்படுவதற்கு புதிய தலைவர்கள் வருவார்களோ என்ற நிலைமையே இருக்கின்றதென உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே உலகத்தமிழர் பேரவையின் தலைவர் …
-
- 0 replies
- 360 views
-