நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
நாடுதிரும்பும் இலங்கை அகதிகளின் மீழ் வருகையும் சிக்கல்களும். நேற்று (19.04.2015 இரவு 9 மணி. ) புதியதைமுறை தொலைக் காட்ச்சியில் தமிழ் நாட்டுக்கு ஆபத்தான படகுப் பயணத்தில் திரும்பி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை அகதிகள் பற்றிய விவாதம் இடம்பெற்றது. மீழ்வருகைக்கான காரணங்களாக அவர்கள் பின் வரும் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவை 1. இராணுவம் கைப்பற்றிய தமது நிலங்கள் திரும்பக் கிடைக்காதமை.2. தம்பலகாமத்தில் நிலவும் இராணுவச் சூழலில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பின்மை 3. இன்னும் இரண்டு பிள்ளைகள் திருவண்ணாமலை அகதி முகாமில் இருப்பது, . அகதிகளை மீழ் குடியேற்றத்தில் தீவிரமாயுள்ள குறிப்பிட்ட தொன்டு நிறுவத்தினர் ரஜபக்ச ஆட்ச்சிக் காலத்தில் இருந்தே இலங்கையில் போர் மு…
-
- 0 replies
- 355 views
-
-
உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று; இந்திய விமானம் முதலாவதாக தரையிறக்கம் ஒருபுறம் நாட்டின் போக்குவரத்துத்துறை அபிவிருத்தி; மறுபுறம் காணிகளை இழந்தோரின் தீர்க்கப்படாத துயரம் "பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்படும் நிலங்களுக்கான நட்டஈடு தருவதாக அரசாங்கம் எங்களுக்கு அறிவித்தல் தரவில்லை. உண்மையில் ஒரு ஜனநாயக நாடெனில், மக்களிடம் விருப்பங்களைக் கேட்க வேண்டும். ஆனால், மக்களின் அபிப்பிராயங்களை எங்களிடம் கேட்கவில்லை" என பலாலி விமான நிலையத்துக்கான நுழைவாயில் அமைக்கப்படும் நிலங்களின் உரிமையாளரான கதிர்காமநாதன் கூறுகின்றார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு, யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி திறந்து …
-
- 0 replies
- 355 views
-
-
அம்மாவின் கருத்தையும் கேளுங்க | தமிழ் வீரப்பெண்கள் இவர்கள் | srilanka | tamil இன்றைய அரசியலோடு தொடர்புடைய உரையாடலாக இருப்பதால் இணைத்துள்ளேன்.புலத்திலே எமது பேரப்பிள்ளைகள் வரை வசதியான வாழ்வுக்கு நாம் தயாராகிவிட்டுள்ள சூழலில் தாயத்திலே அன்றாடம் உழைத்துவாழும் ஒரு அன்னையின் பார்வை. நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 355 views
-
-
பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனம் முதல் முதலாக அறிவிக்கப்பட்ட மனிதவுரிமை சதுக்கத்தில் நேற்று 12.02.2013 செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அனைத்து தியாக உள்ளங்களும் நினைவிற்கொள்ளப்பட்டன. கடுங்குளிருக்கு மத்தியில் நிகழ்ந்த இந்நிகழ்வின் போது, வெளிநாட்டு மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி வி…
-
- 0 replies
- 355 views
-
-
"சிங்கள பௌத்த மதவாத - இராணுவ மேலாதிக்கம்: தமிழர், முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையே" இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பிரதான தடையாக இருப்பது தற்போதைய சிங்கள மதவாத இராணுவ மேலாதிக்கமே என்று கூறியிருக்கும் நோர்வே சமூக விஞ்ஞான அறிஞரான பேராசிரியர் ஓவின்ட் ஃபுக்லெருட் அந்த மேலாதிக்கம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திர மல்ல, பல சிங்களவர்களுக்கும் கூட ஒரு பிரச்சினையே என்று குறிப்பிட்டிருக்கிறார். வரலாறு நெடுகிலும் நிலைநாட்டப்பட்டு வந்திருக்கும் (குடிப்பரம்பலுடனும் மதங்களுடனும் மற்றும் சமூக -- பொருளாதாரத்துடனும் தொடர்…
-
- 0 replies
- 354 views
-
-
முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பிப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்…
-
- 0 replies
- 354 views
-
-
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின் இலங்கைக்கான விஜயம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவு பெற்றாலும் அவரின் வருகையானது ஏதாவது தரப்பினருக்கு அனுகூலம் தரும் விஜயமாக இருந்துள்ளதா என்பது அவரின் விஜயத்தையொட்டிய பாரிய கேள்வியாக மாறியுள்ளது. இங்கு தரப்பினர் என்று பிரித்துக்காட்ட முனைவது அரசாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரினவாதிகள் என்ற எல்லைப்படுத்தப்பட்ட கூட்டத்தினரையேயாகும்.செயலாளர் நாயகத்தினுடைய இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமானது ராஜதந்திர ரீதியில் முக்கியம் கொண்டதாக கருதப்பட்டாலும் அல்லது கணிக்கப்பட்டாலும் அவரின் வருகையின் பெறுமானமானது உள்ளூ…
-
- 0 replies
- 354 views
-
-
கிஷோரில் இருந்து சாட்டை முருகன்களை வரை ஆதரிக்கிற நடுநிலையாளர்கள் ஆர். அபிலாஷ் சாட்டை முருகன் கைதை ஒட்டி கண்டனம் தெரிவித்து எழுதிய சமஸ் அதற்குள் சில குழப்பமான caveatsகளையும் வைக்கிறார். முதலில், தான் “அவதூறு, வசை, பொய்ப் பிரச்சாரம், வன்மத் தாக்குதல்களுக்கு எந்த இடத்திலும் 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை” என்கிறார். இது சரி என்றால் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தை, தாய்க்கு பிறந்தவர் அல்ல என சாட்டை முருகன் கூறியது வசையாகாதா? சாட்டை முருகன் ஒரு தலைவரை இவ்வாறு வசைபாடும் போது அவருடைய பெற்றோரின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். இது வசை, அவமதிப்பு அல்லவென்றால் வேறென்ன? சமஸ் ஒரு மாற்றுப் பெயரை அளிக்கிறார்…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ March 10, 2022 — கருணாகரன் — “கடலில மீனைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை வந்திட்டு” என்று சொல்லிக் கவலைப்படுகிறார் யாழ்ப்பாணம் –மாதகலைச் சேர்ந்த மீனவர். இது தனியே மாதகல் பகுதியிலுள்ள மீனவர்களின் பிரச்சினையோ அவர்களுக்கு மாத்திரம் நேர்ந்துள்ள கதியோ அல்லது அவர்களுடைய இக்கட்டான நிலையோ மட்டுமில்லை. இப்பொழுது வடமாகாணக் கடற்பிராந்தியம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை –நெருக்கடி நிலையாகும். அதாவது வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற கூட்டுப் பிரச்சினையாகும். இதற்குக் காரணம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் –எல்லைமீறலுடன் அவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலை – இழுவைப் படகுத் த…
-
- 2 replies
- 354 views
-
-
ஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019 ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் நினைவேந்தலில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய ஆய்வுரை உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது இன்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகான சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்ப…
-
- 0 replies
- 354 views
-
-
சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா? -மேனகா மூக்காண்டி பல்குழல் பீரங்கிகள்;, மோட்டார் குண்டுகள், ஆட்லறிகள், வான் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களைக் கேட்டு, பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கிய காலமொன்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முந்திய மூன்று தசாப்தக்காலத்தில் இருந்தது. அவ்வாறான நிலைமையை, தெற்கைச் சேர்ந்த மக்கள் முதன்முறையாக எதிர்நோக்கிய சம்பவமொன்று, கடந்த ஞாயிறன்று (05) இடம்பெற்றது. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்ற கோஷம், இதுவரை காலமும், வடக்கிலிருந்தே ஒலித்துக்கொண்டிருந்தது. முதன்முறையாக இந்தக் கோஷமும், தெற்கிலிருந்து கேட்கத் தொ…
-
- 0 replies
- 353 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும் “இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினரின், இலங்கையின் அயலுறவு தொடர்பான, இன்றைய நிலைப்பாடாகும். இதன் அடுத்த கட்டத்துக்கு இப்போது சில புலம்பெயர்ந்த ‘செயற்பாட்டாளர்கள்’ என்று சொல்வோர் சென்றிருக்கிறார்கள். அண்மையில், மேற்குலக நாடொன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்பான கருத்தரங்கொன்றில், இந்த அறிவுஜீவிகள் “இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்க…
-
- 0 replies
- 353 views
-
-
ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ஐந்து கட்சித்தலைவர்களே அடுத்த கட்டமான மூன்று பிரதான வேட்பாளர்களைச் சந்திக்கவுள்ளனர். அவர்கள் கூட்டுப்பலத்துடன் ஏற்பட்டுள்ள பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி அரசியல் சூழலை சரியாக கையாள்கின்றார்களா என்பதை தொடர்ந்தும் அவதானித்துக்கொண்டே இருப்போம் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ…
-
- 1 reply
- 353 views
-
-
கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் - - ஜோதிகுமார் - 15 மே 2022 இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்…
-
- 0 replies
- 353 views
-
-
‘வாங் யி’ன் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்! இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கைக்கான சீன தூதரகமே வெளியிடுவதை தவிர்த்து இரகசியம் காத்து வந்தன. பொதுப்படையில், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றமையையும், அரசி, இறப்பர் ஒப்பந்தம் கைச்சாத்தாக்கப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியையும் முன்னிட்டு ஏற்பாடான நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டத…
-
- 0 replies
- 353 views
-
-
சண்டியர்களின் கூடாரம் மப்றூக் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த சம்பவத்தினூடாக, நமது நாடாளுமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த எண்ணக் கருவில், மீண்டுமொரு தடவை கறை விழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் வெளி…
-
- 0 replies
- 353 views
-
-
கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:36Comments - 0 உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக, நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்ல இயலும்? நேற்று கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்தது, நாளை இன்னோர் இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை, யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே, நிச்சயமான காலப்…
-
- 0 replies
- 353 views
-
-
பலாப்பழம் எவ்வளவுதான் பழுத்தாலும் அதன் பால் கையில் ஒட்டிக்கொள்வதை விலத்துவதே இல்லை. முதிர் மரங்கள் தரும் பலாக்கனிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனாலேயே பலாப்பழப் பண்பாடு என்றுரைத்தோம். ஆக, எவ்வளவுதான் முதிர்ச்சியடைந்தும் இயற்கையின் அனுபவங்களை உள்ளுணர்ந் தும் ஏனைய கனிதரும் மரங்களின் கூட்டத்தில் கலந்திருந்தும் பால் விலத்தி, பலாச் சுளை தரமுடியாத அளவிலேயே பலா மரங்களின் பண்பாடு உள்ளது. இத்தகைய பலாப்பழப் பண்பாடு போலவே பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவ தைக் கொடுமையும் அமைந்துள்ளது. ஆம், நிறைந்த போட்டிகளுக்கு மத்தியில் பரீட்சையில் உயர்பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்குச் செல்வதென்பது பெருமைக்குரியது. என் பிள்ளை பல்கலைக்கழகத்தில் படிக்கிறான் என்று கூற…
-
- 1 reply
- 353 views
-
-
அறுவடைக் காலம் மப்றூக் 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து …
-
- 0 replies
- 353 views
-
-
புட்டின் திறந்த போர்முனை Published By: VISHNU 16 OCT, 2023 | 04:40 PM சி.அ.யோதிலிங்கம் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்வலைகளை சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் இனங்களின் தேசிய மட்டங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்கால பனிப்போரின் விளைவுகள் தான் இவை. இப்போர் சர்வதேச அரசியலின் போக்கை துலாம்பரமாக வெளிக்காட்டியுள்ளது. அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒரு மைய உலகம் சரிந்து போவதற்கான அடையாளம் இது வெனலாம். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இரு மைய உலகம் தோற்றம் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு மைய உலகமாக மாறியது. ப…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு. கண்கள் மின்னுகின்றன பரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்த வெற்றியாளர்! அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்…
-
- 0 replies
- 352 views
-
-
கடந்த 19 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு பார்வை! ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 19 நாட்களாக நடைபெற்ற விடயங்களை வாசகர்களாகிய உங்களுக்கு எமது ஆதவன் செய்தி சேவை மீட்டித் தருகின்றது. கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 352 views
-
-
இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு..... அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல் முல்லையில் தண்ணீர் கேட்டால். கேராளக்காரன் அடிக்கிறான் காவேரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடக்காரன் அடிக்கிறான் செம்மரம் வெட்டுறானு ஆந்திராக்காரன் அடிக்கிறான் தீவிரவாதி இனம்னு இலங்கைக்காரன் அடிக்கிறான் தமிழனை எங்கு அடித்தாலும் தமிழ்நாட்டுகாரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறான்…..!!!! முல்லையில் வந்த தண்ணீரை நாம் சேமிக்கவில்லை காவேரியில் வந்த தண்ணீரை சேமிக்கவில்லை காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணையேதும்…
-
- 1 reply
- 352 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 352 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், கொழும்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை "பொருளாதார மாற்றத்துக்கான காரணி" என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள். பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச நிதி மையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மெரினா ஆகியவை உருவாகப் போகின்றன. அதன் உருவாக்கத்துக்கு பிறகு இது ஒரு துபாய், மொனாக்கோ அல்லது ஹாங்காங் உடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கும். "இந்தப் பகுதியால் இலங்கை வரைபடம் மீண்டும் வரையப்படலாம். உலகத்தரம் வாய்ந்த தக…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-