நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ் April 4, 2022 முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும். ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்க…
-
- 11 replies
- 719 views
-
-
இலங்கை: இடைக்கால அனைத்துக் கட்சி அரசு என்பது என்ன? பொருளாதார நெருக்கடிக்கு அது தீர்வு தருமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் மஹிந்த, அதிபர் கோட்டாபய கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியா…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
சிரச தொலைக்காட்சியின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முடித்தவுடன் அருண் சித்தார்த் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளரின் செவ்வியொன்றினை நேற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்செவ்வியினை இங்கே ஊர்ப்புதினத்தில் பேசலாமா என்று தெரியவில்லை. நிர்வாகம் இடம் மாற்றினாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று கூறிக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில விடயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்நிகழ்ச்சி பேட்டியாக நடந்திருந்தாலும்கூட, இதில் பேசப்பட்ட விடயங்களைச் சாராம்சமாகத் தொகுத்துத் தருகிறேன். குறிப்பு : அருண் சித்தார்த் எனும் நபரே யாழ்ப்பாணத்தில் அவ்வபோது இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவும், புலிகளை வன்மையாக விமர்சித்தும் தடால…
-
- 53 replies
- 3.9k views
-
-
இலங்கையில் அவசரநிலை - இது எப்படியிருக்கும்? 300 வார்த்தைகளில் விளக்கம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். நாள்: ஏப்ரல் 2, 2022 இலங்கையில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 2) அமலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள இடத்தை நேற்று முன்தினம் இரவு பொதுமக்…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? ஆர்.ராமகுமார் தமிழில்: வ.ரங்காசாரி கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும், உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம். 21ஆம் நூற்ற…
-
- 0 replies
- 342 views
-
-
ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு விரைந்து உதவுவதற்காக, உதவிகளை விரைவுப்படுத்துவதற்காக மேலதிக நேரம் (ஓவர் டைம்) வேலை செய்வதாக, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கார…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையில்... என்று தீரும், இந்த நெருக்கடிகள்? இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாது திணறிக்கொண்டிருக்கின்றார்கள். உணவுப்பொருட்களின் விலைகள் வானளவை தொட்டு விட்டன. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலையில் வழங்க முடியாது அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தனது கை மீறி நிலைமைகள் சென்றுவிட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதோடு வணிகர்களின் ஏதேச்சதிகாரப் போக்கினை கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. தற்போது வரையில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக நீண்ட வரிசைகளில் நாள் தோறும் காத்திருப்பவர்களில் மூவர் உய…
-
- 0 replies
- 195 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2022, 05:42 GMT பட மூலாதாரம்,TPA MEDIA UNIT இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய …
-
- 5 replies
- 546 views
- 1 follower
-
-
பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும் ப.சிதம்பரம் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’ அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக ந…
-
- 8 replies
- 582 views
-
-
திடம் ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க…
-
- 0 replies
- 737 views
- 1 follower
-
-
இருள் சூழ்ந்த இலங்கை! காரணங்கள் என்ன? -ச.அருணாசலம் பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில நிபந்தனைகளுடன் உதவ முன் வந்துள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta ) March 25, 2022 கஜமுகன் கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை கொண்டுவந்தீர்கள் என்று சொல்லித் தப்பிக்கும் நிலைக்…
-
- 4 replies
- 550 views
-
-
Published by T. Saranya on 2022-03-25 15:02:53 தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம். வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டைய…
-
- 0 replies
- 187 views
-
-
மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: உக்ரைனில் ரஷ்ய ராணுவப் படையெடுப்பும்... நேட்டோவின் ‘மாற்றாள் போரும்’... மின்னம்பலம்2022-03-24 எஸ்.வி.ராஜதுரை 1990இல் சோவியத் யூனியனில் நடந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, அதிலிருந்த ஆறு குடியரசுகள் யூனியனிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்துவிட்ட பிறகு, எஞ்சியிருந்த குடியரசுகளைச் சரிசமமான இறையாண்மையுள்ள சோவியத் குடியரசுகளின் யூனியன் என்ற வடிவத்தில் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக கோர்பசேவ் தலைமையிலிருந்த சோவியத் நாடாளுமன்றம் 1991 மார்ச்17இல் பொது வாக்கெடுப்பை நடத்தியது. அதற்கு ஆதரவாக, ஏற்கெனவே பிரிந்துபோன குடியரசுகளைத் தவிர மற்ற குடியரசுகளைச் சேர்ந்த மக்களில் 76.5% மக்கள் ஆதரவளித்தனர். சோவியத் யூனியனில் எல்லா வகையிலும் ப…
-
- 3 replies
- 429 views
-
-
நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும் March 16, 2022 (அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடன் ஒரு செவ்வி) — நேர்கண்டவர்: அரவிந்தன் — 1987 இல் இலங்கை –இந்திய உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையை உருவாக்கியது இந்தியா. 35 ஆண்டுகள் கடந்த பின்னும் மாகாணசபை முறைமை வெற்றியளிக்காத ஒன்றாகவே உள்ளது. மாகாணசபைகளுக்கான சட்டமூலமான 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது. மாகாணசபை முறைமையும் 13 ஆவது திருத்தமும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தராது என்கின்றது தமிழர்களின் ஒரு தரப்பு. இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்துவத…
-
- 2 replies
- 452 views
-
-
உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட Maatram Translation on March 18, 2022 Photo: wtopnews இன்றைய கால கட்டத்தில் உலக அரசியலில் எழுச்சி கண்டு வரும் ஒரு போக்கு ரஷ்யா ஒரு பக்கத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன மற்றொரு பக்கத்திலும் நின்றும் உலகை இராணுவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மீண்டும் ஒரு முறை பிரித்து வைத்திருப்பதாகும். இது இரண்டாவது உலகப் போரின் பின்னர் தொடர்ச்சியாக நிலவி வந்த ஒரு பிளவாக இருப்பதுடன் காலத்திற்கு காலம் உச்ச நிலையை எட்டியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தியதன் விளைவாக இந்தப் பிளவு மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்த…
-
- 0 replies
- 245 views
-
-
கடும் பொருளாதார நெருக்கடியில், இலங்கை – கைகொடுத்தது... இந்தியா! 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அண்மைய காலத்தில் தெற்காசிய நாடொன்று முகங்கொடுத்த மிக மோசமான நிலைமை இதுவாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு நெருக்கடியான நிலைமையில் உள்ளதையும், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதையும் ஏற்றுக்கொண்டதோடு நிலைமைகளை முகங்கொடுப்பதற்காக தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்துள்ளதாக தனது உரையில் கூறினார். அத்துடன், ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த …
-
- 0 replies
- 138 views
-
-
உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) March 19, 2022 — ஜஸ்ரின் — தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இ…
-
- 32 replies
- 1.9k views
-
-
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் …
-
- 1 reply
- 282 views
-
-
ரசியாவும் உக்ரைனும் sudumanal John J. Mearsheimer (image -thx: reddit.com) "த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார். // சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின் * 1962 கியூப எவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைன் போர் மிகப் பயங்கரமான சர்வதேச நெருக்கடி வாய்ந்ததாக உருவாகியிருக்கிறது. இந் நிலைமையை தடுக்க வேண்டும், அல்லது முடிவுக்குக் க…
-
- 2 replies
- 407 views
-
-
யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு முறையல்ல, பல முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். போலாந்து தலைநகர் வார்சாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் யுக்ரேனிய பெண் ஒருவர் கண்ணீருடன் இதே வேண்டுகோளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வைத்தார். விண்ணில் இருந்து எப்போது குண்டுகளும் ஏவுகணைகளும் வருமோ என்று யுக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்று டாரியா என்று அந்தப் பெண் கூறினார். யுக்ரேனில் கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் ரஷ்யாவின் த…
-
- 2 replies
- 383 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?
-
- 0 replies
- 482 views
-
-
நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg - தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படுகின்றார். அவர் இதுவரை தனது இரு அயல்நாடுகளான சீனா இந்தியாவை உதவிக்காக நம்பியிருந்துள்ளதுடன் …
-
- 0 replies
- 321 views
-
-
7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு அதிகம் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கடன் அதிகமாகி, அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கிப் ப…
-
- 0 replies
- 300 views
-
-
இப்போது பெரும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யுக்ரேன் இரண்டாம் உலகப் போர் காலகட்டதிலும் கொடூரமான நிகழ்வுகளின் களமாக இருந்திருக்கிறது. இப்போது ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கீயவ் நகரத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். அதை பாபின் யார் படுகொலை என வரலாறு பதிவு செய்திருக்கிறது. 1941-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுக்ரேனின் தலைநகர் கீயவை ஹிட்லரின் ஜெர்மானிய நாஜிப் படைகள் கைப்பற்றின. அப்போது அது சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. கீயவ் தங்கள் கட்டுப்பாட்டுகள் வந்த சில நாள்களில் அந்த நகரத்தில் இருந்து யூதர்கள் அனைவரும் தங்கள் முன் வரும்படி நாஜிப் படையினர் கட்டளையிட்டனர். அனைவரும் சோதனைச் சாவடி ஒன்றின…
-
- 1 reply
- 341 views
-