நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது. ஏன் இந்த அவலநிலை? என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு? எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி? தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்? இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302
-
-
- 36 replies
- 14.1k views
-
-
தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படினும் அரசியல் தீர்மானம்சார் அதிகாரங்கள் ஜே.வி.பி வசமே உள்ளன! Posted on October 21, 2024 by தென்னவள் 36 0 சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வச…
-
- 0 replies
- 175 views
-
-
தேசிய மக்கள் சக்தி கூறிய மாற்றங்கள் சரிவருமா?; சறுக்குமா? கந்தையா அருந்தவபாலன் முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை. …
-
- 0 replies
- 340 views
-
-
ஈழத்தமிழர் அரசியல் பற்றிய கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான உரையாடல். உரையாடலில் சமுகம் இணையத்தள நெறியாளருடன் பங்கேற்பவர்கள் லண்டனில் இருக்கும் திரை இயக்குனரும் யூகே கிங்ரன் கல்லூரியின் முன்னாள் கணக்கீட்டுத்துறைத் தலைவரும் விரிவுரையாளருமான புதியவன் இராசையா, யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளர் திருவரங்கன்.
-
- 3 replies
- 525 views
-
-
இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும் ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது. இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம். தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன. தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது. தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்…
-
- 0 replies
- 303 views
-
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது. இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்…
-
-
- 237 replies
- 14.1k views
-
-
தாயக அரசியலை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் புலம்பெயர் நிதி வழங்குனர்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நேரடிக் காலனித்துவ ஆட்சி உலகில் மறைந்துவிட்டபோதிலும் இன்றும் உலகில் முன்னேறிய நாடுகள் பல தத்தமது நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளை பல்வேறு வழிகளில் மறைமுகமாக நவகாலனித்துவ முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது சார்பு நிலையில் வைத்திருப்பதையும் வைத்திருக்க முயல்வதையும் காணமுடியும். இதற்கு அந்நாடுகள் பொருளாதார காரணிகளை பிரதான வழிமுறையாகக் கையாண்டாலும் மறைமுகமான, சிலவேளைகளில் நேரடியான அரசியல் தலையீடுகள் மூலமும் இதனைச் சாதிக்க முனைகின்றன. தமக்குச் சார்பான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் கொண்டுவர முனைவது போலவே முரண்டுபிடிப்போரை அதிகாரத்திலிருந்து அகற்றுத…
-
- 0 replies
- 97 views
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூ…
-
-
- 7 replies
- 505 views
-
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி - இரா மயூதரன்
-
-
- 16 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள் October 13, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்திருக்கும் ஒரு நேரத்தில் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது முக்கியமான ஒரு மாற்றமாகும். தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் ஒழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து ஜ…
-
- 0 replies
- 162 views
-
-
அம்மாவின் கருத்தையும் கேளுங்க | தமிழ் வீரப்பெண்கள் இவர்கள் | srilanka | tamil இன்றைய அரசியலோடு தொடர்புடைய உரையாடலாக இருப்பதால் இணைத்துள்ளேன்.புலத்திலே எமது பேரப்பிள்ளைகள் வரை வசதியான வாழ்வுக்கு நாம் தயாராகிவிட்டுள்ள சூழலில் தாயத்திலே அன்றாடம் உழைத்துவாழும் ஒரு அன்னையின் பார்வை. நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்ரேலினால் தடுக்க முடியாத ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ் October 7, 2024 கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரமான ரெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல நகரங்களில் இருந்த படை நிலைகள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்ததை காணொளிகள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 1864 இடங்களில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்க…
-
- 1 reply
- 122 views
- 1 follower
-
-
பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடுகளும் ஆரம்பம்-மட்டு.நகரான் October 8, 2024 இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக் கான ஏற்பாடுகள் மிக விரைவாக முன் னெடுக்கப் பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் வாக்கு அரசியலை மையப்படுத்திய வகையில் தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக வும் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் தமிழர்களின் தாயக கனவிற்காகவும் போராடுவதாக கூறுகின் றவர்கள். இன்று இலங்கையின் பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக்கொண்டு அதில் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இன்று தேவையாகவுள்ளது தமிழ் தேசிய உணர்வு இதனை பயன்படுத்தி …
-
- 0 replies
- 103 views
-
-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024 ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதி…
-
- 0 replies
- 222 views
-
-
வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கு…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும் September 19, 2024 மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்ட…
-
- 0 replies
- 342 views
-
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் September 9, 2024 — எழுவான் வேலன் — ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன. பசுத்தோல் போர…
-
-
- 7 replies
- 1k views
-
-
மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் September 1, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள் எவ்வாறிருக்கின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்த லிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தோ்தல் பரப்…
-
- 0 replies
- 371 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூலை 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. ரணில் விக…
-
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்…
-
- 0 replies
- 206 views
-
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!) April 22, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக ம…
-
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
கீர்த்தி துபே பதவி,பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது. வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது. இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளத…
-
- 1 reply
- 284 views
-
-
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் ப…
-
- 1 reply
- 469 views
-
-
ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
-
- 0 replies
- 176 views
-