நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தாமதப்படும் நீதியும் - மறுக்கப்படும் நீதியும்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனம் வழங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றும்போது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனாகும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணமெனவும் அதன் பொருட்டே நீதிபதிகளின் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்ற தொனியிலேயே அவரின் கருத்துகள் அமைந்திருந்தன. அதே நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் உரையாற்றும்போது, தற்சமயம் நிலுவையில் 2,50,560 வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளதாகவும் அவற்றில் பல 25 வருடங்கள், 15 வருடங்கள், 10 வருடங்கள் காலத்தைக் கடந…
-
- 0 replies
- 335 views
-
-
கமலஹாசனின் அரசியல் ஊழல் : சபா நாவலன் 12/16/2020 இனியொரு... 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப…
-
- 0 replies
- 406 views
-
-
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை – நியூசிலாந்து சிற்சபேசன் நியூசிலாந்து சிற்சபேசன் அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதே…
-
- 0 replies
- 505 views
-
-
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி (நேர்காணல் ஆர்.யசி) ‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை. ‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’ இந்திய மீன…
-
- 1 reply
- 601 views
-
-
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் ப…
-
- 0 replies
- 361 views
-
-
கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன? December 12, 20203:51 pm வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் யசோதரன், தலைமை தவிசாளரான சோபா ஜெயரஞ்சித்தை கட்டிப் பிடித்ததாக பேசப்பட்ட விடையத்தின் உண்மை என்ன எதற்காக அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதை பற்றியே இந்த பதிவு விழித்து நிற்க போகிறது. கோறளைப்பற்று பி.சபை 23 உறுப்பினர்களைக் கொண்ட சபை. இந்த சபையை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூ.கட்சி-6, த.ம.வி.பு-6, ஸ்ரீமுக-3, ஐ.தே.கட்சி-3, ஸ்ரீலங்கா சு.கட்சி-2, த.ஐ.ம.கட்சி-1, கொடி சின்னம்-1 ஏனைய கட்சி-1 மொத்தமா 23 ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில், த.ம.வி.பு.கட்சியுடன் கூட்டுச் சே…
-
- 0 replies
- 356 views
-
-
ஏற்கனவே 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம் பீக்கள் வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதனை ஆதரிக்காமல் தமிழ் கூட்டமைப்பு போல் நடந்து கொண்டமை தவறாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை மூலம் அரசாங்கத்தை மறைமுகமாக ஆதரித்துள்ளது. எதிர்ப்பக்கம் இருந்து கொண்டே தமிழ் கூட்டமைப்பு மறைமுகமாக அரசை ஆதரிக்கும் போது ஏற்கனவே ஆதரித்த முஸ்லிம் எம் பீக்கள் நேரடியாக பட்ஜட்டில் அரசை…
-
- 1 reply
- 418 views
-
-
இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது. கடற்கரையில் இருந்து 200 மீற்றர் வரையான ஆழமான கடற்பகுதியே இந்தக் கண்டமேடைகளாக அமைகிறது. இதன் படி இலங்கையில், 2, 620,000 எக்டர் பரப்பளவுள்ள கண்டமேடைகள் காணப்படுகிறது. இதில் 1,502,240 எக்டர் பரப்பளவு வடமாகாணத்தில் இருக்கிறது. சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி (ஒளித்தொகுப்பு) கடலிலே நடக்கிற தாவர உற்பத்தி, கண்டமேடைகளிலே அதிகம…
-
- 2 replies
- 420 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா.? டிசம்பர் 10 – இன்று உலக மனித உரிமைகள் தினம். இந்த நாளைக் குறித்து உலகின் தலைவர்கள் பலரும் இன்று பேசுவார்கள். இந்த நாளைப் பிரகடனப்படுத்திய ஐ.நாவும் இந்த நாளைக் குறித்து இன்று பேசக்கூடும். மனித உரிமை பிரகடனம் பற்றியும் இந்த ஆண்டின் குறிக்கோள் குறித்தும் அவர்கள் எடுத்துரைப்பர். அத்துடன் இலங்கையின் அரச தலைவர்களும் இந்த நாளைப் பற்றி இன்றைக்கு பேசுவார்கள். ஆனால் உலகம் எங்கும் மெய்யாகவே இந்த நாளின் அர்த்தம் பேணப்படுகின்றதா என்பதே பெருத்தவொரு கேள்வியாகும். ஒரு மனிதனின் அடிடைப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனது உரிமைகளுடன் வாழ்வதே அடிப்படை உரிமையாகும். இன்றைய பூகோள சூழலில் மனிதன் தன் மண் கடந்து தேசம் கடந்தும் வாழ்…
-
- 0 replies
- 358 views
-
-
கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ! December 10, 20205:38 am (நித்தி மித்திரன்) கிழக்கில் தமிழரசுக்கட்சி, கிழக்கின் தேசியவாதிகள்,கருணா,பிள்ளையான் ஆகிய தரப்பினரை எதிர்கொள்வதை விட டெலோவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தங்களை எதிர்கொள்வதே பெரிய வில்லங்கமாக உள்ளது. குறிப்பாக மட்டு. மாநகரசபை முதல்வர் சரவணபவானை நீக்கி விட்டு உதவி மேயராக உள்ள சத்தியசீலனை நியமிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது டெலோ. கட்சிக்கு அழுத்தம் கொடுத்தாவது பேச்சாளர் பதவியை எடுத்துவிடலாம் எனவும் கனவு காண்கின்றது டெலோ. தூண்டில் போட்டால் மீன் சிக்கலாம். ஆனால் சுறாவே சிக்குமென ஆழம் பார்க்கிறது டெலோ. மட்டு மாநகர சபை பாதீடு இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை சபையில் இது ச…
-
- 0 replies
- 375 views
-
-
சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்.! அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 11 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் 107 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் 38 பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது மட்டுமின்றி சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியபோதும் அவை விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துக் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இரு சிறை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக பிடித்து, சிறையை விட்டுத் தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோ…
-
- 0 replies
- 379 views
-
-
உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வந்திருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140421/Rajinikanth.jpg திரைப்படமொன்றில் (அதன் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது) வாடகைக்கார் வைத்திருக்கும் என்னத்தே கன்னையாவிடம் வடிவேலு ' கார்வருமா? " என்று கேட்க ' வரும்...ஆனா....வராது' என்று சொல்லிவிட்டு வடிவேலுவை ஏற்றிக்கொண்டு முன்னால் வந்த லாரியொன்றுடன் மோதி கார் சின்னாபின்னமாகுவதாக ஒரு காட்சி வருகிறது. சின்னாபி்ன்னமானதை விடுவோம்.....மற்றும்படி உங்கள் அரசியல் பிரவேசம் கன்னையா காரைச் செலுத்துவதற்கு முன்னதாக 'வரும்...ஆனா...வராது என்பது போன்று இருக்கிறது. நீங்கள் இப்போதெல்லா…
-
- 1 reply
- 537 views
-
-
யாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா? சாகடிக்கப்படுகிறதா? ந.லோகதயாளன். November 29, 2020 2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நிற்போர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் . இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலைய 2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. பலாலி விம…
-
- 1 reply
- 604 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகள் நீக்கம்- ஃபேஸ்புக் விளக்கம் 4 Views தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஃபேஸ்புக் மீதான பயனர்களின் குற்றச்சாட்டு மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும…
-
- 2 replies
- 582 views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
-
- 2 replies
- 454 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். 1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாயநாயக அரசாங்கம், நாட்டில் இறக்குமதிகளைத் தடைசெய்ததோடு, உள்நாட்டு உற்பத்தியையே நாடு முழுமையாக சார்ந்திருக்கும்படி மூடிய பொருளாதாக் கொள்கையைப் பின்பற்றியது. கிழங்கு சாப்பிட்ட மக்கள் இதன…
-
- 0 replies
- 413 views
-
-
சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.? சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாது…
-
- 0 replies
- 400 views
-
-
வடக்கு கிழக்கில் மட்டும் நினைவுகூரலை மறுக்கும் கோட்டாபயவின் கோமாளி அரசு! மனோ கணேசன் சாட்டை 1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டாபய அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கோமாளித்தனமாக சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு மனோ கணேச எம்பி வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது; தொகுப்பாளர்: …
-
- 0 replies
- 765 views
-
-
பிள்ளையானுக்கு பிணை - எழும் கடும் விமர்சனங்கள்.! ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுச் செய்துள்ளது. இவ்வாறு முகநூலில் எழுதப்பட்ட பதிவு ஒன்று வாசகர்களுக்காக… பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயா ராஜபக்சே போட தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை ஒருங்கிணைத்து புலனாய்வு துறை அதிகாரிகளை முன்னிலைப்படுத்தி ஒரு இரகசிய புலனாய்வு குழுவை 2005-2009 காலப்பகுதியில் இயக்கினார் இந்த குழுவின் ஏற்பாட்டில் தமிழ் ஆயுத குழுக்களின் பங்குபற்றலுடன் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கடத்தி காணாமலாக்கப…
-
- 0 replies
- 324 views
-
-
2015 தேர்தலில் இந்தியாவாலும் மேற்குலகத்தாலும் எப்படி ஏமாற்றப்பட்டோம்.
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இந்த வாரம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சார்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் நிகழும் உரையாடல்களை, கடந்த சில நாள்களாக அவ…
-
- 0 replies
- 430 views
-
-
அஞ்சலிக் குறிப்பு – ருஷ்யப் பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி ; மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் ! முருகபூபதி கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் …
-
- 0 replies
- 244 views
-
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா.? இலங்கை -இந்திய அரசியல் உறவு ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே அமைந்துவருகிறது. அதிலும் இலங்கையில் சீன சார்பு நிலை எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் கடும் போக்கு அமைவதும் பின்பு சுமூகமாவதும் வழமையான அரசியலாக தெரிகிறது. ஆனால் தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்கே பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பில் இந்தியாவின் கடும் போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது. இது சரியானதா இல்லையா என்பது இந்தியாவின் அடைவிலேயே தங்கியுள்ளது. அது முழுக்க முழுக்க இந்தியாவின் புவிசார் நலனைப் பற்றியதாகவே அமையும். அந்த வகையில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில…
-
- 0 replies
- 729 views
-
-
உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும்’ 32 Views உலகை உள்ளங்கையில் கொண்டு வந்தாலும், உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும். பட்டி பெருக வேணும் தம்பிரானே! பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே ! மேழி பெருக வேணும் தம்பிரானே ! மாரி மழை பெய்ய வேணும் தம்பிரானே ! என மழை சிறப்பாக பெய்ய வேண்டும் என வருண பகவானை வணங்கி, மேற்கொள்ளும் விவசாயத்தை, உயிராய் கருதிய எமது மூதாதையர் விட்டுச்சென்ற பாதையில் வளர்ந்து வருகின்ற சிறு மொட்டுக்களாகிய எமக்கு முன்னோர்கள் தடம் பதித்த விவசாயம் பற்றி தெரியவில்லை எனில், எமது பிற்கால சந்ததியினருக்கு விவசாயம் என்பது இரண்டாம் மொழி போன்றே தென்படும். …
-
- 0 replies
- 539 views
-