நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம்…
-
- 0 replies
- 404 views
-
-
அண்ணன் பிரபாகரன் சண்டையில் சிறந்தவர் வல்லவர் என்று தான் எண்ணியிருந்தேன். நேரே சந்தித்து பேசியபோது உலகத்தில் அரசியல் செய்த பிஏச்டி செய்தவர்களுக்கெல்லாம் தெரியாத அவர்களாலேயே பேசமுடியாத உலக வரலாறுகளை விரல் நுனியில் வைத்து பேசுகிறார். வழமையில் நான் கூட்டங்களில் பேசுவது கிடையாது.இந்த முறை ஏதே பேசிவிட்டேன். அதிலும் ஈழத்தமிழர்களை காயப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள். மதுரைத் தமிழன் பேச்சில் கொஞ்சம் மரியாதையீனம் இருப்பது உண்மை.எனது பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
-
- 26 replies
- 3k views
- 2 followers
-
-
இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…
-
- 0 replies
- 321 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா. வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க எந்த பிரச்னையை முன்வைத்து சந்திக்கப் போகிறது? வேல் யாத்திரை வெற்றியா? ரஜினியின் வருகை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? தேசிய செயலர் பதவியை இழந்ததால் வருத்தமா? என்பது குறித்தெல்லாம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் எச். ராஜா. பேட்டியிலிருந்து. கே: தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்…
-
- 0 replies
- 368 views
-
-
24 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது …
-
- 0 replies
- 332 views
-
-
ஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,GETTY IMAGES நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவ…
-
- 0 replies
- 759 views
-
-
தாமதப்படும் நீதியும் - மறுக்கப்படும் நீதியும்.! - நா.யோகேந்திரநாதன் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனம் வழங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றும்போது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனாகும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையே காரணமெனவும் அதன் பொருட்டே நீதிபதிகளின் தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்ற தொனியிலேயே அவரின் கருத்துகள் அமைந்திருந்தன. அதே நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் உரையாற்றும்போது, தற்சமயம் நிலுவையில் 2,50,560 வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளதாகவும் அவற்றில் பல 25 வருடங்கள், 15 வருடங்கள், 10 வருடங்கள் காலத்தைக் கடந…
-
- 0 replies
- 342 views
-
-
கமலஹாசனின் அரசியல் ஊழல் : சபா நாவலன் 12/16/2020 இனியொரு... 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப…
-
- 0 replies
- 413 views
-
-
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை – நியூசிலாந்து சிற்சபேசன் நியூசிலாந்து சிற்சபேசன் அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதே…
-
- 0 replies
- 512 views
-
-
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி (நேர்காணல் ஆர்.யசி) ‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை. ‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’ இந்திய மீன…
-
- 1 reply
- 611 views
-
-
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் ப…
-
- 0 replies
- 391 views
-
-
கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன? December 12, 20203:51 pm வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் யசோதரன், தலைமை தவிசாளரான சோபா ஜெயரஞ்சித்தை கட்டிப் பிடித்ததாக பேசப்பட்ட விடையத்தின் உண்மை என்ன எதற்காக அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதை பற்றியே இந்த பதிவு விழித்து நிற்க போகிறது. கோறளைப்பற்று பி.சபை 23 உறுப்பினர்களைக் கொண்ட சபை. இந்த சபையை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூ.கட்சி-6, த.ம.வி.பு-6, ஸ்ரீமுக-3, ஐ.தே.கட்சி-3, ஸ்ரீலங்கா சு.கட்சி-2, த.ஐ.ம.கட்சி-1, கொடி சின்னம்-1 ஏனைய கட்சி-1 மொத்தமா 23 ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில், த.ம.வி.பு.கட்சியுடன் கூட்டுச் சே…
-
- 0 replies
- 362 views
-
-
ஏற்கனவே 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம் பீக்கள் வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதனை ஆதரிக்காமல் தமிழ் கூட்டமைப்பு போல் நடந்து கொண்டமை தவறாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை மூலம் அரசாங்கத்தை மறைமுகமாக ஆதரித்துள்ளது. எதிர்ப்பக்கம் இருந்து கொண்டே தமிழ் கூட்டமைப்பு மறைமுகமாக அரசை ஆதரிக்கும் போது ஏற்கனவே ஆதரித்த முஸ்லிம் எம் பீக்கள் நேரடியாக பட்ஜட்டில் அரசை…
-
- 1 reply
- 424 views
-
-
இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது. கடற்கரையில் இருந்து 200 மீற்றர் வரையான ஆழமான கடற்பகுதியே இந்தக் கண்டமேடைகளாக அமைகிறது. இதன் படி இலங்கையில், 2, 620,000 எக்டர் பரப்பளவுள்ள கண்டமேடைகள் காணப்படுகிறது. இதில் 1,502,240 எக்டர் பரப்பளவு வடமாகாணத்தில் இருக்கிறது. சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி (ஒளித்தொகுப்பு) கடலிலே நடக்கிற தாவர உற்பத்தி, கண்டமேடைகளிலே அதிகம…
-
- 2 replies
- 427 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா.? டிசம்பர் 10 – இன்று உலக மனித உரிமைகள் தினம். இந்த நாளைக் குறித்து உலகின் தலைவர்கள் பலரும் இன்று பேசுவார்கள். இந்த நாளைப் பிரகடனப்படுத்திய ஐ.நாவும் இந்த நாளைக் குறித்து இன்று பேசக்கூடும். மனித உரிமை பிரகடனம் பற்றியும் இந்த ஆண்டின் குறிக்கோள் குறித்தும் அவர்கள் எடுத்துரைப்பர். அத்துடன் இலங்கையின் அரச தலைவர்களும் இந்த நாளைப் பற்றி இன்றைக்கு பேசுவார்கள். ஆனால் உலகம் எங்கும் மெய்யாகவே இந்த நாளின் அர்த்தம் பேணப்படுகின்றதா என்பதே பெருத்தவொரு கேள்வியாகும். ஒரு மனிதனின் அடிடைப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனது உரிமைகளுடன் வாழ்வதே அடிப்படை உரிமையாகும். இன்றைய பூகோள சூழலில் மனிதன் தன் மண் கடந்து தேசம் கடந்தும் வாழ்…
-
- 0 replies
- 361 views
-
-
கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ! December 10, 20205:38 am (நித்தி மித்திரன்) கிழக்கில் தமிழரசுக்கட்சி, கிழக்கின் தேசியவாதிகள்,கருணா,பிள்ளையான் ஆகிய தரப்பினரை எதிர்கொள்வதை விட டெலோவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தங்களை எதிர்கொள்வதே பெரிய வில்லங்கமாக உள்ளது. குறிப்பாக மட்டு. மாநகரசபை முதல்வர் சரவணபவானை நீக்கி விட்டு உதவி மேயராக உள்ள சத்தியசீலனை நியமிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது டெலோ. கட்சிக்கு அழுத்தம் கொடுத்தாவது பேச்சாளர் பதவியை எடுத்துவிடலாம் எனவும் கனவு காண்கின்றது டெலோ. தூண்டில் போட்டால் மீன் சிக்கலாம். ஆனால் சுறாவே சிக்குமென ஆழம் பார்க்கிறது டெலோ. மட்டு மாநகர சபை பாதீடு இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை சபையில் இது ச…
-
- 0 replies
- 380 views
-
-
சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்.! அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 11 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் 107 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் 38 பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது மட்டுமின்றி சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியபோதும் அவை விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துக் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இரு சிறை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக பிடித்து, சிறையை விட்டுத் தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோ…
-
- 0 replies
- 383 views
-
-
உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வந்திருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140421/Rajinikanth.jpg திரைப்படமொன்றில் (அதன் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது) வாடகைக்கார் வைத்திருக்கும் என்னத்தே கன்னையாவிடம் வடிவேலு ' கார்வருமா? " என்று கேட்க ' வரும்...ஆனா....வராது' என்று சொல்லிவிட்டு வடிவேலுவை ஏற்றிக்கொண்டு முன்னால் வந்த லாரியொன்றுடன் மோதி கார் சின்னாபின்னமாகுவதாக ஒரு காட்சி வருகிறது. சின்னாபி்ன்னமானதை விடுவோம்.....மற்றும்படி உங்கள் அரசியல் பிரவேசம் கன்னையா காரைச் செலுத்துவதற்கு முன்னதாக 'வரும்...ஆனா...வராது என்பது போன்று இருக்கிறது. நீங்கள் இப்போதெல்லா…
-
- 1 reply
- 543 views
-
-
யாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா? சாகடிக்கப்படுகிறதா? ந.லோகதயாளன். November 29, 2020 2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நிற்போர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் . இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலைய 2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. பலாலி விம…
-
- 1 reply
- 618 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகள் நீக்கம்- ஃபேஸ்புக் விளக்கம் 4 Views தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஃபேஸ்புக் மீதான பயனர்களின் குற்றச்சாட்டு மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும…
-
- 2 replies
- 593 views
-
-
-
- 0 replies
- 689 views
-
-
-
- 2 replies
- 466 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். 1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாயநாயக அரசாங்கம், நாட்டில் இறக்குமதிகளைத் தடைசெய்ததோடு, உள்நாட்டு உற்பத்தியையே நாடு முழுமையாக சார்ந்திருக்கும்படி மூடிய பொருளாதாக் கொள்கையைப் பின்பற்றியது. கிழங்கு சாப்பிட்ட மக்கள் இதன…
-
- 0 replies
- 423 views
-
-
சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.? சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாது…
-
- 0 replies
- 411 views
-
-
வடக்கு கிழக்கில் மட்டும் நினைவுகூரலை மறுக்கும் கோட்டாபயவின் கோமாளி அரசு! மனோ கணேசன் சாட்டை 1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டாபய அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கோமாளித்தனமாக சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு மனோ கணேச எம்பி வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது; தொகுப்பாளர்: …
-
- 0 replies
- 778 views
-