நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீ காரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய 14-வது …
-
- 0 replies
- 267 views
-
-
உலக பெண்கள் தினம் (1913) தமிழில்: பானுபாரதி அலக்சான்ட்ரா கொலந்தாய் பற்றிய சிறு குறிப்பு: ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1872இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாள வர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொண்டார். 1893ல் தனது மைத்துனரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்ப வாழ்க்கை மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. வீட்டுக்குள்ளே தான் சிறைப்படுத்தப் பட்டதாக உணர்கிறார். ஒரு பெரிய நெசவாலை ஒன்றின் கண…
-
- 0 replies
- 1.7k views
-
-
களத்துக்கு வெளியே குஸ்தி போடும் சீமான் தெய்வீகன் ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் இருப்பு எனப்படுவது, உள்நாட்டில் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்கு அப்பால், வெளிநாட்டு ஆதரவு நிலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையும் தேவையும் ஆகும். முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை முதன்நிலை பேரம் பேசும் சக்தியாகக் கொண்டிருந்த தமிழர் தரப்புக்கு, 2009க்குப் பின்னர், அரசியல் சக்தியே தஞ்சம் என்றாகிவிட்டது. வெளிநாட்டு ஆதரவுப்போக்குகளை இயன்றளவு தம்வசப்படுத்திக் கொள்வதில்தான் கணிசமான முன்னேற்றங்களை சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற தேவையும் ஏற்பட்டிருக்கிறது. தமிழர் தரப்பு, கடந்த ஏழு வருடங்களாக, மக்கள் ஆணையுடன் இந்த வெளிப்படையான …
-
- 0 replies
- 341 views
-
-
தமிழக தேர்தல் நாடகம் அரங்கேற்றம்!; மீண்டும் நடிகை வேடமேற்கும் ஜெயலலிதா! தமிழக சட்டமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த முறை எப்படியாவது அதிமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் திமுக தேசிய காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.மறுபுறம்,நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வை வளைத்துப் போடும் நோக்கில் ஆளுங் கட்சியான பாஜக அக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில்,இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக பல அதிரடி நடவடிக…
-
- 1 reply
- 557 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட் நீண்ட நாட்களாக கைதான இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது திருமணமான முருகன், சாந்தன், ராபட், பயஸ் எப்படி இருக்கிறார்கள் அவர்களை சென்று நேரடியாக பார்த்து வந்து கலக்கத்துடன் விளக்கம் அளிக்கும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன். இவற்றுடன் 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனக் கூறப்பட்ட சூழ் நிலையில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் இன்றைய தினம் விடுதலையாகக் கூடும…
-
- 0 replies
- 318 views
-
-
முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரு…
-
- 0 replies
- 226 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன. கடந்த வாரம் பிர…
-
- 0 replies
- 570 views
-
-
'இணையப் போராளி'களும் போராட்டங்களும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சமூக ஊடக இணையத்தளங்களின் அதிக பிரபலத்தன்மை காரணமாக, இணையம் மூலமான செயற்பாடுகள் என்பன அதிகரித்துவிட்டன. அவற்றில், இணையம் மூலமான போராட்டங்களென்பவை, அண்மைக்காலத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவையாகக் காணப்பட்டன. உலகில் ஏதாவது முக்கியமான விடயமொன்று இடம்பெற்றால், ஊடகங்களால் நிபுணர்கள் எனப் பெயரிடப்படுபவர்கள் மாத்திரம் கருத்துச் சொல்வதை பொதுமக்கள் கேட்கின்ற நிலைமையை, சமூக ஊடக இணையத்தளங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி, தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புக் க…
-
- 0 replies
- 353 views
-
-
மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும் சாட்டை சுற்றியவர்களும்! ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், இணையத்தளமொன்றின்; ஆசிரியருமான இரா.துரைரத்தினம், அண்மையில் 'சாதி' வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் விடுத்திருந்தது. இது தொடர்பில் பேஸ்புக்கில் இடம்பெற்ற விமர்சன உரையாடலொன்றின் போது, ஆடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.துரைரத்தினம், விவாதத்தின் போக்கில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமாரை நோக்கி சாதி வசை பொழிந…
-
- 0 replies
- 291 views
-
-
வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா:- 26 பெப்ரவரி 2016 கடந்த 17 ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டமொன்று நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவிற் கலைப்பீடாதிபதி தமிழ் மக்களின் பண்பாட்டினைப் பேணும் நோக்கத்துடன் சில விதிகளை அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு கோரும் ஆவணம் (அ4 அளவு கொண்டது) ஒன்றிற் கையொப்பமிட்டார். மூச்சை நன்கு உள்ளிழுத்துத் தலையை நிமிர்த்தி கூடியிருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டே அவர் அவ்வாணத்திற் கையொப்பமிட்டதாகவும் ஏனையவர்களும் மெய் சிலிர்த்துக…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள். பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவி…
-
- 2 replies
- 748 views
-
-
உத்தேச அரசியலமைப்பு: அக்கறையற்ற சமூகம் மொஹமட் பாதுஷா புறப்பட்டுப் போய்விட்ட பஸ்ஸுக்குக் கைகாட்டுகின்ற, அதற்குப் பின்னால் நெடுந்தூரம் ஓடிவிட்டுத் திரும்பி வருகின்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களை இலகுவாக அடையாளப்படுத்தலாம். பஸ் தரிப்பிடத்தின் அழகில் மயங்கி, அதற்குள் உறங்கி விடுவதன் மூலம், போகவந்த பயணத்தை மறந்துவிடுகின்ற ஓர் அனுபவமில்லா பயணியை போல, சின்னச் சின்ன விடயங்களில் திளைத்திருக்கின்ற காரணத்தால், பெரிய பெரிய சந்தர்ப்பங்களை முஸ்லிம் சமூகம் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது, தேசிய அரசியலில் பல முக்கிய விடயதானங்கள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பு மீளுருவாக்கம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, வடக்கு - கிழக்கு இணைப்…
-
- 0 replies
- 326 views
-
-
தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள் அல்லர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவை அடுத்து, அவரது நாடாளுமன்ற ஆசனத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக, பலர் பல வாதங்களை முன்வைத்து, எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், தேசியப் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை, அந்தப் பட்டியல் மூலமாக நியமித்தமை சட்ட விரோதமானது எனக் கூறி வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளது. தெரிவிக்கப்பட்டு இருக்கும் எதிர்ப்புக்கள் சில சட்ட அடிப்படையிலானவை. மற்றவை தார…
-
- 0 replies
- 382 views
-
-
கடினமான நிபந்தனையுடன் அரசாங்கத்துக்கு ஹுசைன் வழங்கிய சலுகை நாம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதியில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் இளவரசர் செய்த் ரஅத் அல் ஹ§சைன் தெரிவித்த கருத்துக்கள் சாதகமானவையாகவும் பாதகமானவையாகவும் இருந்தன. இலங்கையின் நீதித்துறை கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட, நடுநிலைமையற்ற, நம்பகத்தன்மையற்ற ஒன்று என்று அவர் தமது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். இலங்கை பொலிஸார் தொடர்ந்தும் எப்போதும் போலவே வன்முறையை பாவிப்பதாகவும் வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அவர் …
-
- 0 replies
- 251 views
-
-
வேலையற்ற பட்டதாரிகள்; அரசின்; தீர்வு?நிருபா குணசேகரலிங்கம்:- 21 பெப்ரவரி 2016 வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரி…
-
- 0 replies
- 373 views
-
-
இந்த ஆங்கில கட்டுரையை என்னால் மொழி பெயர்க்க கூடியளவுக்கு நேரம் போதவில்லை. முடிந்தால் யாரும் மொழியாக்கம் செய்யுங்கள். இது ஒரு சிங்கள முட்டாள் பத்தி எழுத்தளனின் பதிவு மட்டுமே. https://www.colombotelegraph.com/index.php/do-the-jaffna-tamils-have-a-culture/
-
- 3 replies
- 1.1k views
-
-
சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள் மகாவம்சம் என்னும் சிங்களவரின் அபத்தமான காவியம். அங்கே குவேனி என்னும் இளவரசி,அரச குடும்பத்தில் இருந்து தப்பி காட்டினுள் ஓடுகிறாள். ஓடியவள், காட்டில் ஒரு சிங்கத்தினை காண்கிறாள். அது சிங்க முகம் கொண்ட மனிதன் என்றால் பரவாயில்லை, ஆனால்,மனிதரையே அடித்து தின்னும், காட்டு விலங்கு. அதன் மேல் காதல் கொண்டு, இணைந்து, சிங்கபாகு, சிங்கபாலி எனும் இரு குழந்தைகளை பெறுகின்றாள். வளர்ந்த சிங்கபாகு, தங்கையை, தகப்பன் சிங்கத்தின் பாலியல் வன்முறை இருந்து பாதுகாக்க, தந்தை சிங்கத்தினை கொன்று, தனது தங்கை சிங்கபாலி யினை தானே மணந்து, அவர்கள் மூலம் வந்த இனமே சிங்களம். (தலயில அடிக்காதீங்க). தகப்பன் சிங்கம், விவசாயம் செய்து புள்ளை, குட்டியல வளத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 380 views
-
-
ஆசிரியர்களே மாணவர்களை வாழ விடுங்கள் February 7, 2016 - சி.ரமேஸ் மாணவர்கள் என்றும் உங்களின் கைபொம்மைகள் அல்ல. அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுடைய அசட்டையீனத்தால் இன்று ஒரு மாணவியை இழந்து தவிக்கிறோம். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டி என்னும் பெயரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பிஞ்சுகளை வெய்யிலிலும் பனியிலும் போட்டு வருத்தும் இவ்விளையாட்டுப் போட்டி ஒன்று தேவையா என்று எண்ணத் தோன்றுகிறது. வலயங்கள் பாடசாலை விட்ட பின்னர் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த சொல்லிப் பணிப்பதால் பல பாடசாலைகள் பி.பகல் 1மணியிலி இருந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். காலை 7.30 மணிக்கு அணிநடை பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களே பிற்பகலில் விளையாட்டிலும் பயிற்சியிலும்…
-
- 0 replies
- 329 views
-
-
போர்க்குற்ற விசாரணை: பின்வாங்குகிறாரா ஜனாதிபதி? மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன், கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தார். ஹுசைனுக்கு முன்னர் இருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, அதற்கு எதிராகப் பலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இம்முறை ஹுசைனின் விஜயத்துக்கு அவ்வாறான பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. சிறியதோர் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோஷ்டி, அதாவது, அரசாங்கம் செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்க்கட்சி, போர்குற்ற விசாரணை தொடர்பாக ஜனாதிபதி மைத்…
-
- 0 replies
- 270 views
-
-
உண்மையான சுதந்திரம்? மொஹமட் பாதுஷா நமது தேசத்தின் இன்னுமொரு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடியிருக்கின்றோம். தேசிய கீதம் இசைக்க விடப்பட்டது. கொடிகள் பறக்கவிடப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் பிரித்தானியாவில் இருந்தும் வந்து குவிந்தன. மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எல்லாமுமாக 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. ஆனால், உண்மையான சுதந்திர உணர்வுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இந்த சுதந்திர தினத்தை அனுபவித்திருக்கின்றார்களா அல்லது ஓர் அரசாங்க, வர்த்தக விடுமுறை நாளாக இதை உணர்ந்திருக்கின்றார்களா என்ற ஐயப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை நாள், அத்தியாவசிய …
-
- 0 replies
- 511 views
-
-
ராஜபக்சேகளுக்கு வருகிறது மிகப்பெரிய தலைவலி. 2005ம் ஆண்டு நடாந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் மகிந்த ராஜபக்சே. ஆனால் இந்த வெற்றி நேர்மையான முறையில் பெறப்படவில்லை என்பது அன்றிலிருந்து உள்ள குற்றச்சாட்டு. புலிகளுக்கு பெரும் பணம் கொடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுத்ததே குறைந்தளவு வாக்குகளால் வெற்றி அடைந்தமைக்கு காரணம் என்பதே இந்த குற்றச் சாட்டின் அடிப்படை. இதை உறுதி செய்ய மூன்று பகுதியினரால் மட்டுமே முடியும். ஒரு பகுதி ராஜபக்சே தரப்பு. இது ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்தது புலிகள் தரப்பு. இதுவும் ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை, இப்போது களத்திலும் இல்லை. ஆகவே, இங்கே இந்த விடயத்தில் தரகு…
-
- 2 replies
- 473 views
-
-
இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது. பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாட…
-
- 0 replies
- 641 views
-
-
அறுவடைக் காலம் மப்றூக் 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து …
-
- 0 replies
- 348 views
-
-
இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…
-
- 4 replies
- 1k views
-