Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov 2, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்!

உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சித்த பருதியுடன் கூடச் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பொல்லுகள், இரும்புக் கம்பி, வாள் ஆகியவற்றால் பருதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது இவர்கள் அதனைத் தடுத்து அவரைக் காப்பாற்றியுள்ளார்கள். இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவிய சிங்களப் புலனாய்வாளர்கள், தமிழ்த் தேசிய சிதைவுக்கான உச்ச இலக்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்துள்ளனர். அந்த சிங்களச் சதியினை களத்தில் நின்று எதிர்த்துப் போராடும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி, அதிலிருந்து அகற்றும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் முயற்சி நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே, பிரித்தானிய தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் தனம் மீது இதே பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதைவிட, ஜெர்மனியிலும், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள இருவர் தாக்கப்பட்டுள்ளார்கள். பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல் முயற்சியிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் எவையும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, உள் முரண்பாடுகளாலோ இடம்பெற்றவை அல்ல. மாறாக, திட்டமிட்ட வகையில், தகவல்கள் திரட்டப்பட்டு, தாக்குதலுக்குரிய நபரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, வெகு நேர்த்தியாக நடாத்தப்பட்டுள்ளன.

தமிழீழப் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணிகளில் உள்வாங்கப்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்களால் விடுதலைப் புலி உறுப்பினாகள் படுகொலை செய்ததற்கு ஒப்பிடக் கூடியதாக இந்தத் தாக்குதல்களை அடையாளப்படுத்தலாம். புலம்பெயர் தேசங்களிலும், சிங்களப் புலனாய்வாளர்கள் தமிழ்க் கூலிக் குழுக்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்றே நம்பப்படுகின்றது.

இவர்களது இலக்கு, தனி நபர்கள் குறித்தது அல்ல. தமிழ்த் தேசிய தளமே இவர்களது இலக்கு. அந்த இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவாகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீதே தாக்குதல்கள் தொடர்கின்றது. இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கவும், தக்க வைத்துக்கொள்ளவும் தடையாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களது பலத்தைச் சிதைப்பதை நோக்காகக் கொண்டே சிங்கள தேசம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாகவே, மாவீரர் தினம் குறி வைக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதன் மூலம், புலம்பெயர் தமிழர்களது உணர்வுபூர்வமான அணி திரள்தலையும், எழுச்சியையும் வீரியமற்றதாக மாற்ற முடியும் என்று சிங்கள அரசு நம்புகின்றது. இது, மாவீரர் துயிலும் இல்லங்களையும், அவர்களது நினைவு இடங்களையும் அழித்து நிர்மூலமாக்கும் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, மாவீரர் தினத்தை அண்மித்த நாட்களில் இது போன்ற பல தாக்குதல்களும், படுகொலைச் சம்பவங்களும் கூட அரங்கேற்றம் பெறலாம். ஆனாலும், மாவீரர் கனவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்த சிங்களச் சதிகள் அத்தனையையும் முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.

- அகத்தியன்

http://www.pathivu.com/news/19037/57//d,article_full.aspx

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரிவுகளுக்கு இடையில் இன்று எற்பட்டிருக்கும் முரண்பாடு ஒன்றும் பகை முரண்பாடு கிடையாது. அது தீர்க்கப்பட முடியாததும் அல்ல.ஏனெனில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஊடகங்களில் ஆய்வெழுதியும் மேடைகளில் வீரவசனம் பேசியும் உருவாக்கப்பட்டதல்ல.அது 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பாலும் ஈகத்தாலும் உருவாக்கப்பட்டது.விடுதலைப்புலிகளின் வரலாற்றின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மாவிரனின் உயிராலும் இரத்தத்தாலுமே எழுதப்பட்டிருக்கிறது.

போராளிகளுக்குள்ளும் தளபதிகளுக்குள்ளும் முரண்பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் மோதல்களும் இருந்த வரலாறுகள் உலகின் எல்லாவிடுதலை இயக்கங்களிலும் இருந்திருக்கிறது.அது விடுதலைப்புலிகள் இயக்கத்திலும் இருந்தது.அதேவேளை தங்களோடு முரண்பட்ட மோதிய சகபோராளிகளை போர்களத்திலே காப்பாற்றச் சென்று விரச்சாவடைந்த எத்தனையோ மாவிரர்களின் வரலாறு விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இருக்கிறது.

ஓரு விடுதலைப் போராளிக்குரிய முதல் பண்பு சக போராளியை நேசிப்பது.ஒரு போராளிக்கும் சராசரி மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்பதே தன்னை ஒறுப்பது தன்னை அர்ப்பணிப்பது தன்னுடைய தோழனுக்கு தோள் கொடுப்பது என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

'ஓ மரணித்த வீரனே உன் காலணிகளை எனக்குத்தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா! உன் சீருடைகளை எனக்குத் தா ' என்ற பாடலை அல்லது மாவீரர் துயிலும் இல்லப்பாடலை ஒரு சில நிமிடம் கண்கணை மூடிக் கொண்டு கேட்டுப்பாருங்கள்;

ஓரு போராளி மண்ணில் வீரச்சாவை தழுவி விழுகிற போது அடுத்த போராளி அவனது பொறுப்பை எடுத்துக் கொண்டு அவனது இடத்தை நிரப்புகிறான்.இதனால் தான் போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்கிறோம்.

முள்ளிவாய்கால் போர் களத்திலே ஏற்பட்ட தோல்வி என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.அந்த போர்களத்திலே நின்ற போராளிகள் சரணடைந்தது சரியா பிழையா? அவ்வாறு சரணடைந்தபின் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தப்பி வந்தவர்கள் துரோகிகளா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு தேசித்தலைவருக்குத்தான் உண்டு.இது தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபு. விடுதலைப்புலிகளின் எந்த ஒரு போராளியும் எந்த ஒரு பிரிவும் அடுத்த போராளிக்கு அல்லது பிரிவினருக்கு துரோகி என்று முத்திரை குத்தும் உரிமை கிடையாது.

அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கம் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டதே தவிர வேரறுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம் படைத்துறை அரசியல் துறை புலனாய்வுத்துறை நிதித்துறை நீதி நிர்வாகத்துறை காவல்துறை என்ற 6 கட்டமைப்புகளைக் கொண்டது.

இந்த 6 கட்டமைப்பக்களில் காவல்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் நீண்டகாலமாக தாயகத்துக்கு வெளியிலும் இயங்கி வந்தன.அவற்றில் அரசியல் துறையின் ஒரு உப பிரிவான அனைத்துலகத் தொடர்பகம் மட்டும் தான் மக்களுக்கு இனங்காட்டி வேலை செய்த அனுமதிக்கப்பட்டது.

இதிலே இப்போது அனைத்துலகத் தொடர்பகத்துக்கும் விடுதலைப்புலிகளின் ஏனைய பிரிவினரை உள்ளடக்கிய தலைமை செயலகத்துக்குள் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் எற்பட்டிருக்கும் முரண்பாடாகும். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் தேசியத்தலைவர்.தலைமைச்செயலகத்தில் இருப்பவர்களை துரோகி என்று சொல்வதற்கு அனைத்துலக செயலகத்தினரும் அனைத்துலகச் செலகத்தில் உள்ளவர்களை துரோகி என்று சொல்லவதற்கு தலைமை செயலகத்தில் பணி புரிவர்களும் உரிமை கிடையாது.அதை கண்டறிவது விடுதலைப்புலிகளின் புனாய்வுத்துறையின் வேலை. புலனாய்வுத்துறை கண்டுபிடுத்து அறிவித்தபின்னர் அது பற்றி தேசியத் தலைவர் முடிவெடுத்து அறிவித்த பின்னர் தான் ஒரு போராளி துரோகியா துரோகிகளுக்கு துணை போவபனா என்பது மக்களுக்கு அறிவிக்கப்படும். அதையும் அரசியல் துறைதான் அறிவிக்கும்.

ஆனால் இப்போது முள்ளிவாக்காலுக்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது.துரோகிப் பட்டம் கொடுப்பது தான் தேசிய செயற்பாடு என்ற நிலை என்று ஆகிவிட்டது.

உண்மையில் விடுதலைப்பலிகள் இயக்கத்துக்குள் எற்பட்டிருக்கின்ற நட்பு முரண்பாட்டை ஊதிப் பெருக்கி பகை முரண்பாடாக மாற்றும் வேலையை போராளிகள் அல்லாத சிலர் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலோடு முன்னணிக்கு வந்த இவர்கள் போராளிகளை விட அதிகளவு தேசியம் பேசியும் ஊடகங்களில் எழுதியும் இந்த முரண்பாட்டை பகை முரண்பாடாக வளர்த்துவிடுவதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் தங்களுக்குள் தாங்களே மோதிக் கொள்ளும் ஒரு புறச் சூழ்நிலையை திட்டமிட்டு உருவாக்குவது அதை ஊதிப் பெருக்கிவிடுவது என்பது இவர்களது பிரதான நோக்கமாக இருக்கிறது.

உதாரமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கிருபாகரன் அவர்கள் மிக நீண்டகாலமாக வேலைசெய்து வருகிறார்.அதே போல கரன்பார்க்கர் போன்றவர்களும் நீண்டகாலம் வேலை செய்துவருவருகிறார்கள்.ஆனால் அவர்கள் யாரும் அங்கே மோதிக் கொண்டது கிடையாது. பலவிடயங்களில் அவர்கள் இணைந்து தான் வேலை செய்தார்கள். இப்போது புதிதாக இந்தக் கும்பல் அதற்குள் புகுந்து கிருபாகரனை அங்கிருந்து ஓரங்கட்டும் நரிவேலைகளைச் செய்ததுடன் தமிழர் தரப்பினர் ஒத்த கருத்தில்லாமல் பிரிந்து நிற்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை மனித உரிமை ஆர்வலர்களிடம் ஏற்படுத்துவதிலும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஒருங்கிணைந்த செயற்பாட்டை மேற்கொள்வதை தடுப்பதிலும் வெற்றிகண்டிருக்கிறார்கள்

இப்போது மாவீரர்நாளை முன்வைத்து குழப்பங்களையும் மோதல்களையும் ஏற்படுத்துவதிலும் 'தாங்கள் தான் புனிதமான முறையில் மாவிரர்நாளை செய்ப்போகிறோம்; மற்றவர்கள் செய்வது சிறீலங்கா அரசின் மாவிரர் நாள்' என்று தங்களது உச்சகட்ட சக்தியை பயன்படுத்தி பல்வேறு வழிகளிலும் முரண்பாட்டுக்கும் பிளவுக்குமாக வழிகளை கூர்மைப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நபர்களை இனங்காண்பதும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும் இருப்புக்கும் இவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு எற்படுத்துவதும் தேவைப்பட்டால் இந்த நபர்களை ஆதாரத்துடன் சட்ட நடவடிக்கை உட்படுத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும் .இது ஒன்று தான் நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக தங்களை ஆகதியாக்கிய மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையாக வீர வணக்கமாக இருக்கும்

(மாவீரர் நாள் தொடர்பான இன்னொரு பதிவை அடுத்து எழுதுகிறேன்)

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு 1980களில் இருந்தே இன ஒடுக்குதல் தொடர்பான இஸ்ரேலிய யுத்த தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது.. ஜெ.ஆர்.ஜெயவர்தனாவின் மகனான ரவி ஜயவர்த்தனாவின் காலத்தில் வெலிஓயாபோன்ற west bank பாணி குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் பட்டது. கதிர்காமர் காலத்தில் இருந்தே சிங்கள அறிஞர்கள் வெளிநாடுகள், இந்தியா, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவு ஒரு பெருக்கி multiplier யாகச் செயல்படாவிட்டால் போராளிகளால் ஒரு மட்டத்துக்குமேல் ஆட்ய்தப் போராட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது எனக் கணித்திருந்தனர். எங்கள் இராணுவப் புவியியலையும் மனித வலத்தையும் அறிந்த ஒருவர் இந்தக் கணிப்பை இலகுவாக நிராகரித்துவிட முடியாது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து போராளிகளைத் தனிமைப்படுத்தும் முயற்ச்சிகள் 1980 நடுப்பகுதியில இருந்தே ஆரம்பித்தது. முதலில் இந்தியா தொடர்பாகவே இந்த முயற்ச்சி ஆரம்பமானது. கதிர்காமரின் காலத்தில் மேற்க்கு நாடுகளிலும் இலங்கை அரசின் இராசதந்தரிகளும் அறிஞர் குளாமும் இத்தகைய செயல்களை ஆரம்பித்தனர். இதன் உச்சக்கட்டமாக முரன்பாடுகளுடனும் இளம் சிங்கள அறிஞன் தயான் ஜெயதிலகவை இலங்கை அரசு ஜெனிவாவில் ஐ நா பிரதிநிதியாக நியமித்தைக் குறிப்பிடலாம். எங்கள் தரப்பில் “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடும்” ஆற்றல் வெளிப்படவில்லை. எதிரியின் வெற்றிக்கு சரவதேச நாடுகளில் போராளிகளின் அரசியல் கடும்போக்கும் அரசியல் பிரிவுக்கு அதிகாரம் பரவலாக்கப் படாதமையும் அதிகாரம் மையபட்ட top to botum மேலிருந்து கீழ் அணுகுமுறையும் சாதகமான சூழலை ஏற்படுதியது.மேலும் போராளிகள் அமைப்பின் கிழைகள் சில நாடுகளில் வன்முறையையும் ஒரு உதியாக பயன்படுதியது. இலங்கை அரசு தொழில் ரீதியான இராஜதந்திரிகலையும் அறிஞர்களையும் பயன்படுதியபோது போராளிகள் அதற்க்குச் சமனான காய்களை நகர்த்தாமல் அமைப்பின் தீவிர உறுப்பினர்களை மட்டுமே பயன் படுதினர். .இன்றும் இந்த நிலமை பெரிதும் மாற்றமடையவில்லை..

. 0இந்த வகையில் வெளிநாடுகளில் தமிழ் ஆர்வலர்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளும் முனைப்புகள் 1990களில் இருந்ததாக சொல்லப் பட்டது. இன்றைக்கு சிங்கள ராணுவ, சிவில் உளவுத்துறைகள் தீவிரமாகப் பலப் படுத்தப்பட்டு வருதல் புதிய ஆபத்துக்கலை உருவாக்கி உள்ளது. இந்தப் பின்னணியில் தமிழர் அணிகள் பிழபட்டது மட்டுமன்றி தமக்குள் மோதல் நிலையை பேணுதல் புதிய நிலைமையில் முன்னர் போராளிகளுடன் முரண்பட்டிருந்தவர்களோடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் படாதமை போன்றவை இலங்கை அரசு வெளிநடுகளில் மொசாட் பாணி இரகசிய கொலை தக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது.

மேற்க்கு நாடுகளிலும் இந்தியாவிலும் போராளிகளின் முன்னைய இராணுவ அரசியல் உத்திகளை தொடர்ந்தும் ஆதரிக்கும் குழுக்களை வளர்ந்துவிடக்கூடாது என்கிற கருத்தே மேலோங்கி இருக்கிறது. கொடி சின்னம் என்பவற்றைவிட எமது விடுதலை முக்கியம் என்கிறதை கழத்துக்கு வெளியில் நெருகடிகள் இல்லாமல் வாழும் விடுதலை ஆர்வலருக்கு எடுத்துச் சொல்ல முடியும்? இதனால் சில நாடுகளின் உளவுத்துறைகள் சில நடவடிக்கைகளை சிலகாலம் கண்ண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. சர்வதேச சமூகம் இருதரப்பிலும் போர்குற்றத்தை வைதிருக்கும் நிலமையில் புதிய சிந்தனையும் புதிய உத்திகளும் அவசியமல்லவா? நாங்கள் பின்னோடிச் சென்று இணைந்துகொள்ளாவிட்டால் உலகம் நெடுக எங்களுக்காக காத்திருக்காது என்கிற ஆபத்தை கமன்வெல்த் மாநாட்டில் தெனாபிரிக்கா போன்ற நாடுகள் எடுத்த நிலைபாடு புலப்படுத்துகிறது.

இத்தகைய நெருக்கடிகளை கையாளுவதற்க்கு அவசியமான விவாதங்களையோ விமர்சனம் சுய விமர்சனங்களையோ அல்லது பல்வேறுபட்ட கருத்துக் குழுக்களுக்கிடையிலான காங்கிரஸ் மாநாகளையோ இதுவரை யாரும் முன்மொழியக்கூட இல்லை நாடுகடந்த அரசு, ஒருங்கிணைப்புக்குழு போன்ற பலவேறு வெளிவாரி விடுதலை ஆதரவு அமைப்புகள் உருபடியாக ஏதாவது செய்ய விரும்பினால் அவர்கள் முதலில் சிந்திக்கவேண்டியது ஒரு காங்கிரசை மாநாட்டை convention கூடுவது பற்றியே ஆகும். இரண்டாவதாக நாம் வாழும் நாடுகளில்தாக்குதல் ஆபத்து இருப்பதை அம்பலப் படுத்த வேண்டும். இலங்கை தூதரகங்கள் வன்முறைக்கு ஆயுத்தம் ஆவதுபற்றி ஆதாரங்கள் கிட்டினால் அவற்றை சர்வதேச அரசுகலுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் மற்றும் லும் ஐநா அமைப்புகளுக்கும் அவற்றை தெரியப் படுத்துவது அவசியம்.

நாம் முரண்படலாம் பல்வேறு படலாம்.ஆனால் பொது எதிரிக்கு எதிராக நெருக்கடிகளில் ஒன்று சேருதல் அவசியம். புதிய நிலமைகளையும் சவால்களையும் உணர்தலும் அவற்றை எதிர்கொள்ளதக்க புதிய மார்க்கங்களைக் கண்டடைதலுமே இன்றைய முதன்மையான பணி.

நாம் ஒரு அமைப்பாக இயங்குவதல்ல எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டு இயங்குவதே இன்று சாத்தியமும் முக்கியமும் என்பதை உணர்ந்து அதற்கான சூழலை உருவாக்க அனைவரும் உழைப்போம்.

Edited by poet

நன்றி பொயட். தெளிவான ஆழமான கருத்து.

... இதை தமிழ்த்தேசியத்துக்குள்ளோ அல்லது விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்குள் நடைபெறும் பிரட்சனை, தீர்க்கப்படலாம் என எம்மை நாமே ஏமாற்ற வேண்டாம் ... முன்பும் மாத்தயா, கருணா, பிள்ளையான், கேபி என நீண்ட வரலாறு எமக்கு இருக்கிறது. அவ்வாறே ... இதுவும் ... புலத்தில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளில் ஒன்றான சர்வதேச செயலகத்தில் இருந்த/இருக்கின்ற சிலரின் பணம் வரவுகள் சம்பந்தமான முறைகேடுகள் / வெளிப்படைத்தன்மை அற்ற செயற்பாடுகளை பயன்படுத்தி ... அவர்களுடன் கடந்த காலங்களில் முரன்பட்டோரும், தமது கடந்த கால நடவடிக்கைகளை (கணக்கு வழக்குகள் உட்பட) மறைத்து வெளிவர எத்தணிக்கும் சிலரும், சில மர்ம மனிதர்களுடன் இணைந்து ... பல சர்வதேச நாடுகளின் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படுகின்றனர்.

நேற்று வேறொரு தலைப்பில் .. பெருமாள் என்பவர் குறிப்பிட்டது போல் ...

இவர்களின் முகமூடிகள் முற்றிலும் உடைந்து, மக்களுக்கு அடையாளம் தெரிகையில், எம் போராட்டம் இன்னொரு 30 வருடங்கள் பின் நோக்கி நகர்ந்திருக்கும்!!!

மாத்தையா கருணா பிள்ளiயான் விவகாரம் எல்லாவற்றiயும் தலைவர் தானே நேரில் கையாண்டவர். தேசிய வியாபராரிகள் வெளியில் இருந்து இயக்கத்தை கூறு போட்டு விற்க விடேல்லை?கருணா பிரிஞ்ச போது எல்லோரும் அவனை துரோகி எண்;டு சத்தம் போட்டுக் கொண்டு நிற்க அவர் முக்கியமான எல்லா தளபதிகள் மற்றும் வன்னியில் இருந்த ஊடகவியலாளர் எல்லோரையும் கூப்பிட்டுச் சொன்னவர் துரோகிக்கு தண்டனை கொடுக்க எனக்கு தெரியும் விசரனுக்கு என்ன தண்டனை குடக்கிறது என்டு தான் யோசிக்கிறன். அதை நான் பார்த்துக் கொள்ளுறன்; நீங்கள் உங்கடை வேலைய பாருங்கோ எண்டு சொன்னவர்.

புpரச்சனை மர்ம மனிதர்கள் கதையை கட்டமைக்கிற ஊடகவியாபாரிகள் தான்.

மர்ம மனிதர்கள் பற்றி ஊங்களட்டை ஆதரமான தகவல் இருக்கா பகிரங்கமா அவர்களை பற்றி காவல்துறையிலை முறைப்பாடு செய்யுங்கோ. ஆதாரங்களை வெளியிடுங்கோ பாரிசிலை இருந்து கொண்டு ஒருதர் மர்மமனிதர் கதை வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர் -இருக்கிறார்.அவர் பல பேரிலை எழுதிற தேசிய சரக்கை 62 ஊடகங்கள் கொப்பி பேஸ்ட் செய்தவை.என்னைப் பற்றி இரண்டு தடைவை அவர் எழுதிய போது நான் அவர் தொடர்பாக முறைப்பாடு செய்ததிலை 10 வருடங்களுக்கு மேலாக அவர் சிறீலங்கா அரசுடன் தொடர்பில் இருப்பதும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கிற முரண்பாட்டை ஊதிப் பெருக்கிவிட்டு மோதல் சூழ்நிலை ஒன்றை உருவாக்கிவிடுறது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட பணி எண்டதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிரெஞ்சு காவல்துறையிட்டை ஒரு வழக்கம் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு' என்ற கணக்கில் காத்திருந்து கூண்டோட அப்புவார்கள். அப்ப தெரியும் தேசிய வியாபாரம் எவ்வளவு ஜோரா நடந்ததென்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.