Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது குற்றஞ்சாட்டும் காமன்வெல்த்தின் அறிக்கை கசிந்தது'

Featured Replies

இலங்கை மீது குற்றஞ்சாட்டும் காமன்வெல்த்தின் அறிக்கை கசிந்தது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2013 - 14:40 ஜிஎம்டி

131003112603_commonwealth_logo_304x171_c

இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற உள்ள சூழலில், கடந்த ஆண்டு இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே மீது நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தி பதவி இறக்கம் செய்த வழிமுறை,( இம்பீச்மெண்ட்), இலங்கையின் அரசியல் சட்டத்துக்கு முரணானது, மற்றும் காமன்வெல்த் விழுமியங்களுக்கும் முரணானது என்று காமன்வெல்த் நாடுகள் அமைப்பால் சட்டக் கருத்து வழங்கிய பிரிட்டிஷ் வழக்கறிஞர், ஜியாப்ரி ஜோவெல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாக, இணைய தளமொன்றில் செய்தி கசிந்திருக்கிறது.

இந்த அறிக்கையை காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள் காமன்வெல்த்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு தராமல் மறைத்துவிட்டார் என்று முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், காமன்வெல்த்தின் தகவல் தொடர்பாளரான ரிச்சர்ட் உக்கு அவர்கள் இது குறித்து முன்னர் கேட்டபோது, அந்த அறிக்கை அமைப்பின் தலைமைச் செயலாளருக்கு மாத்திரமானது என்றும் அதனை ஏனைய தலைவர்களுக்கு அவர் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இணையதளத்தில் கசிந்திருக்கும் அந்த அறிக்கை குறித்து உக்கு அவர்களிடம் மீண்டும் கேட்டபோது, தமது நடவடிக்கைகளை ஒரு அமைதியான இராஜத்ந்திர நடவடிக்கை என்று அவர் கூறினார்.

அது குறித்த அவரது செவ்வியின் சாரம்சத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/ukuonleakedreport_131029_ukuonleakedreport_au_bb.mp3

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131029_ukuonleakedreport.shtml

  • கருத்துக்கள உறவுகள்

article-0-159D0F53000005DC-868_306x423.j

 

தகவலுக்கு... நன்றி, தயா.
இந்தச் செய்தியை.... வாசிக்கும் போது.
இந்தியர்கள்... எந்தவிதமான, உபயோகமான.. முக்கிய அரச, வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள்.... என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
சிங்கை... பார்க்க‌வே... தெரியுது.
 

எதோ ஆறாவது நாட்டை பாதுகாப்பு சபையில் சேர்க்காவிட்டால் சரி. 

 

BBC தான் ஐ.நாவின் உள்ளக விசாரணை அறிக்கையின் இரகசியத்தன்மையை  உடைத்து இறுதியில் அதை நம்பியாரின் பெயர் மீது கறுப்பு மை அடித்து வெளிவிட வைத்தது. 

எது எப்படி இருந்திருந்தாலும் சிராணியின் பதவி விலக்கல் சம்பந்தமாக நடந்த பொதுநலவாய விசாராசணையில் இலங்கை மீது பாரதூரமான குற்றச் சாட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்திருந்தால் அதை ஒளிப்பது பாரதூரமான குற்றம். இத்தகைய அறிக்ககை வெளியே தெரியவர வேண்டியது சம்பந்த பட்ட அதிகாரிகளின் பொறுப்பு. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ளும் என்பது தவறான விளக்கம். நாடுகள் தங்கள் பாட்டுக்கு நடந்துகொள்ள இது உள்ள நிர்வாகம் மட்டும், அல்லது பொருளாதாரம் போன்ற விடையமல்ல, . இலங்கையில் நடந்தவை சர்வதேச ரீதில் மானிடத்துக்கு எதிரான குற்றமாக கணிக்கப்படுபவை. அவற்றை ஒளிப்பது பொதுநலவாயம் இலங்கைக்குகு குற்றத்தில் உதவுவதற்கு சமன். மிக மோசமான மனித உரிமைகள் மீறபட்ட இடம் இலங்கை. பொது நவாய நாடுகளின் வக்கீல்கள் அமைப்பு ஏற்கனவே இலங்கையில் மகாநாட்டை நடத்த வேண்டாம் என்ற கோரிக்கை சர்மாவின் காரியாலயத்தால் வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டும் இருக்கிறது. பொது நலவாயம், ஐ.நா தனது உள்ளக அறிக்கையில் தான் விட்டதாக  காணப்பட்ட அதே தவறுகளை தானும் விட்டிருந்தால் அது இப்போ ஐ.நா வெளிவிட்ட அறிக்கை பற்றி தனக்கு எந்த பொறுப்பும் கிடயாது என்று பூசி மெழுகாமல் சம்பந்த பட்ட அதிகாரிகள் அதே குற்றத்தை விட்டதற்காக ப்தவி விலக வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.