Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குழப்பம் விளைவித்தவர்கள் தயாபரன் ஆதரவுடன் இயங்கும் கும்பலே – தயாபரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மாணம

Featured Replies

கௌரவ சபாநாயகர் அவர்கட்கு ! நாடு கடந்த அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.நாடு கடந்த அரசின் வெளிவிவகார அமைச்சராக திரு தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அரசாங்கத்தின் ஓர் சக்கிவாய்ந்த நபராக வலம் வருகின்றார். வெளிவிவகார அமைச்சு மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் வெளிவிவகார அமைச்சர்கள் ஆற்றும் பணிகளை நாம் கண்ணூடு காண்கின்றோம். ஏன் சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க அயராது பாடு படுவதையும் நாம் காண்கின்றோம். அவ்வாறான ஒரு பதவியில் தாம் வீற்றிருப்பது பொருத்தம் அற்றது என்ப�தனை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களே ஏற்றுக் கொள்வார் என்ற அடிப்படையில் பொருத்தமற்ற ஒருவர் அப்பதவியில் நீடிப்பது தமிழீழத்துக்கு சாபக் கேடாக அமையும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரனையை நான் இந்த மாமன்றின் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நான் கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கொரவ பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளேன். பிரதமர் அவர்கள்: இவ்விடயத்தில் வாழாதிருக்கின்றார் என்ற காரணத்தினால் நான் இந்த மன்றிடம் நீதி கேட்டு இந்த மனுவை சமர்ப்பிக்கின்றேன். அவர்மீது நான் அதிருப்தி கொள்ள பின்வருவன காரணமாக அமைகின்றன�.

பிரித்தானிய தமிழர் இடையே பிளவுகளுக்கு காரணமாகிரார்.

நாடு கடந்த அரசு ஓர் மத்திய அரசு போல செயற்பட வேண்டும் . தமிழீழத்தவர் பரந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வரும் அந்த தேச அமைப்புக்களை நாடு கடந்த அரசாங்கம் முழுமையாக அங்கிகரிக்க வேண்டும் . எமது இலக்கு நாம் வாழும் அந்தந்த தேசங்களின் அரசுகளின் மனங்களை வென்று எமது அரசினை அங்கிகரிக்க வைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழீழத்தில் தனியரசு அமைக்க வேண்டும் அதை விடுத்து ஏலவே இயங்கி வரும் தேச அமைப்புக்களுக்கு ஓர் போட்டிக் கட்சியாக நாடு கடந்த அரசு அமையக் கூடாது. ஆனால் பிரித்தானியாவில் நடப்பது இதுதான். இங்கு நாடு கடந்த அரசு ஓர் போட்டிக் கட்சி மட்டுமே . மற்ற அமைப்புகளோடு இனைந்து பணியாற்ற எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கிய பெருமை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களையே சாரும். தம்மை ஓர் பேரரசின் வெளிவிவகார அமைச்சராக நினைக்கும் இவர் உண்மையில் நாடு கடந்த அரசை ஓர் பெட்டிக்கடைக் கட்சி ஆக்குகின்றார்.

நான் நேரடியாகவே சொல்வது பிரித்தானிய தமிழர் பேரவைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசை இட்டுச் சென்றவர் திரு . தயாபரன் அவர்கள் , நானும் , துனைப் பிரதமர் திரு . சேகர் மற்றும் பலர் எடுத்த சமரச முயற்சிகளை தயாபரன் அவர்கள் தடுத்தார். அதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையினரின் செயற்பாடுகளை நான் வரிக்கு வரி ஆதரிக்கவில்லை . ஆனால் தயாபரன் அவர்களின் குள்ளநரித்தன்மையான அரசியலும் அவரின் அகங்காரமும் ஓர் சுமுக உறவுக்கு பெரும் தடையாகவே இருக்கின்றது. பிரித்தானிய தமிழர் பேரவை , பல பிரித்தானிய பாராளுமன்ற உருப்பினர்களின் மனங்களை வென்று வருகின்றது. அவர்கள் பிரித்தானிய அரசின் போக்கில் மாற்றத்தினை ஏர்படுத்த முயல்கிறார்கள் . இவ்வாறிருக்க இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு கடந்த அரசு ஏன் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தெரியாமல் பின் கதவின் மூலம் சந்தித்து ஓர் கேவலமான அரசியலை நடாத்த வேண்டும் . அதனை செய்வதில் கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் மிகவும் பெயர் போனவர்.

புதிய நண்பர்களை அணி சேர்த்தால் நானும் அவரை போற்ற தயார் ஆனால் மற்றைய அமைப்பினரால் தமிழீழ நண்பர்களாக ஆக்கப்படும் பிரமுகர்களை தம் பக்கம் இழுக்க இவர் நடாத்தும் நாடகம் அசிங்கமானது அருவருப்பானது.

மே 18

பிரித்தானியாவில் மே 18ம் திகதி நடைபெறும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை பிரித்தானியா தமிழர் பேரவையினர் நடாத்தி வருகின்றனர். அந்த நிகழ்வை இம்முறை குழப்புவதற்காக ஒரு கும்பல் முயற்சித்தது. அதன் விளைவாக லண்டன் மேயரின் அழுவலகம் அந்த நிகழ்வை மே 19ல் நடக்க அனுமதித்தனர். இவ்வாறு குழப்பத்தினை ஏற்படுத்தும் கும்பலோடு சேர்ந்து நின்று ஓர் வங்குரோத்து அரசியல் நடாத்தி வருகின்றது. தமது நிகழ்வுக்கு மக்களை வரத்தூண்டுவதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை துண்டுப்பிரசுரத்தினை ஒத்த துன்டுப் பிரசுரத்தை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களின் ஆதரவோடு இயங்கும் கும்பல் வெளியிட்டது. அதில் வேடிக்கை என்ன என்றால் அந்த போலி துன்டுப்பிரசுரசுரத்தினை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களின் ஆதரவுடன் இயங்கும் கும்பல் என்னிடமே தந்தது.

இவ்வாறு கீழ் மட்ட அரசியல் செய்து , பின்னர் அந்த மேடையில் ஓர் கூச்சமும் இல்லாமல் எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் ஏறி நின்றதை அறிந்து வெட்கித்தலை குனிகின்றேன்.

ஆபிரிக்க காங்கிரஸ் மாநாடு.ஆபிரிக்க காங்கிரஸ் மாநாடுக்கு நாம் செல்ல வேண்டும் அங்கு சென்று எமக்கு சர்வதேச அரங்கில் அங்கிகாரம் கிடைக்க வழிவகைகளை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கோடு உலகத்தமிழர் பேரவையினரால் அங்கு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவமோ அறிவோ அற்ற ஒருவர் எமது வெளிவிவகார அமைச்சராக இருப்பது பெரிதும் வேதனைக்குரியது. உண்மையில் திரு தயாபரன் அவர்கள்தான் இப்படியான நிகழ்வுகளுக்கு தாமே முன்னின்று செல்ல வேண்டும் , அனால் மற்றவர்கள் ஏற்படுத்தி தரும் வாய்ப்புக்களைக்கூட பயன்படுத்த தெரியாத ஓர் அரசியல் கத்துக்குட்டி நமது வெளிவிவகார அமைச்சராக இருப்பது எண்ணி ஆற்றொணாத் துயரும் துன்பமும் அடைகின்றேன்.

உலகத்தமிழர் பேரவையினர் ஏறக்குறை மாதம் ஒருமுறை வெளிநாட்டு அமைப்புக்களை சந்திக்கின்றார்கள்.

இதில் எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் எங்கே இருக்கின்றார் , அவரது அமைச்சு எங்கே இருக்கின்றது.கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் அந்த அமைச்சின் பணிகள் எவற்றை எல்லாம் செய்தார். எந்த எந்த வெளிவிவகார அமைச்சர்களோடு உறவை வளர்த்தார் என்ற விபரத்தை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் இந்த மாமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒரு பிரமுகரைத்தானும் சந்தித்தால் உடனே ஊடகங்களுக்கு புகைப்படத்துடன் அறிக்கை விடும் அமைச்சர் இராசதந்திரக் காரணங்களுக்காக தமது பணி விடயத்தை வெளியிடமுடியாது என்று அவர் சொல்வாரானால் அதனை அவை நம்புமென நான் கருதவில்லை.

GTV இலும் குழப்பம்

நாடு கடந்த அரசுக்கு அவர் என்ன செய்தாரோ இல்லையோ அவருக்கு ஓர் முழு நேர வேலை இன்று கிடைத்து விட்டது. எமது போராட்டங்களுக்கு ஓர் ஊடகவியளாளராக துணை நின்றவர் திரு . தினேஸ் , கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் ஜீரிவியில் இணைந்த பின்னர் அனைவரையும் அனைத்துச் செல்ல நினைத்த திரு . தினேஸ் அவர்களுக்கும் தலை வலி தொடங்கியது. பின்னர் அவரும் GTV ல் இருந்து துரத்தப்பட்டு விட்டார். நாடு கடந்த அரசு முதல் மற்றைய அமைப்புக்களின் பணிகளுக்கு ஓர் ஊடக முகம் கொடுத்தவர் திரு தினேஸ் அவர்கள் , அவர் ஆற்றுய பணியை நாம் நன்றியோடு பார்கின்றோம் . அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தவர்கள் கூட அவரின் திறமையையும் நேர்மையையும் புகழ்வார்கள். அப்படி இருக்க அவர் நடாத்திய செளிச்சம் நிகழ்சியில் இன்று எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள். அதற்கு அவர் இருட்டு என பெயரிடலாம்.

அமைச்சர் அவர்கள் தாம் ஆற்றும் பணிகள் மூலம் பிரபல்யமாக வேன்டுமே தவிர , ஊடகத்தை கையகப்படுத்தி இன்னொருவரால் பிரபல்லமாக நிகழ்வுகளில் அமர்ந்துகொண்டு எமது மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதன் மூலம் பிரபல்யமாக முடியாதென்பது எனது முடிந்த முடிவு. இதுவே யதார்த்தமும் கூட. நாம் ஆயிரமாயிரம் தமிழரிரின் ஆன்மாவின் மீது பணியாற்று கின்றோம் . ஆயிரமாயிரம் தமிழரின் அவலத்திலும் கண்னீரிலும் பனியாற்றுகின்றோம். உண்மையில் எம�து மனதில் தமிழீழம் இருக்கும் என்றால் , எமது நிகழ்ச்சி நிரலிம் தமிழீழ மீட்பு இருக்கும் என்றால் நாம் அனைவரையும் நேர்மையான வழியில் அணி சேர்த்து இந்த நாடு கடந்த அரசை பலப்படுத்த வேண்டும். மாறாக ஊடகமேறி மாவீரர் புகழ் பாடி , போராளிகள் தியாகம் பாடி , மக்களின் சோகம் பாடி எமது அரசியல் இருப்பை தக்க வைப்பது வரலாற்றுதுரோகம். இது ஒரு ஈன�ப்பிழைப்பு.

இதில் என்ன சோகம் என்றால் , என்ன விலை கொடுத்தாவது தயாபரன் அவர்களை நாடு கடந்த அரசில் அமர்த்தி இருக்க வேண்டுமென எமது கெளரவ பிரதமர் அவர்கள் நினைக்கிறார் போலும். நடப்பு வழிக்கில் ஒப்பிடுவது என்றால் நித்தியானந்தாவின் பிடியில் சிக்கிய மதுரை ஆதீனம் போல் எமது பிரதமர் தவிக்கும் சோகத்தை நான் உணர்கின்றேன். கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் இந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதும் அவரினால் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தொடர்ச்சியாக அவப்பெயரே ஏற்பட்டு வருகின்றது என்பதனையும் கருத்தில் கொண்டு அவ�ரின் மீது நான் கொண்டு வரும் இந்த நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு அனைவரும் ஏக மனதாக ஆதரனைத் தெரிவித்து இந்த பிரேரனையை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

... உந்த நாகதஅ குழறுபடிகள் அனைத்தையும் தயாபரனில் போட்டு விட்டு ... தயாபரன் என்பவர் செய்த/செய்கின்றவைகள் வேறு ..., நல்ல பிள்ளைகளாக/அமைப்பாக காட்ட எடுக்கும் நடவடிக்கை போலவும் இருக்கிறது.

ஆமா, உதுக்குள் இருந்து ஆட்டும் மனோ கும்பல், சர்வே கும்பல், செல்வின் கும்பல், ... கேபி கும்பல்களை/குப்பைகளை முதலில் களையுங்கள்! ... எல்லோரையும் அரவணையுங்கள், மற்றைய அமைப்புகளுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தில் வந்து ஏதாவது செய்யுங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

1981 இல் இருந்தே இதே கும்பல் கூப்பாடும்.. செயற்பாடும்.. இப்ப போய் முள்ளிவாய்க்காலில் முடிஞ்சிருக்குது. நாகதஅ வுக்கும் விரைஞ்சு.. ஒரு முடிவுரை எழுதும் வரை இவங்க அடங்கமாட்டாங்க போல இருக்கே.

இப்ப தான் விளங்குது ஏன் தலைவர்.. போட வேண்டியதுகளை போட்டார் என்று. இல்ல 1981 இல தொடங்கினதுகள்.. 83 இலேயே முடிச்சிருக்குங்கள்...ஒன்றை ஒன்று குத்தி.. இழுத்து விழுத்தி... ஆளையாள்.. காட்டிக் கொடுத்து..!

இதுகளுக்கு விடுதலை என்பது என்றும் ஒரு கனவே. குடும்பங்களின் வெளிநாட்டு வாழ்க்கைக்கான பிழைப்புவாதம் மட்டுமே..! :lol::D

Edited by nedukkalapoovan

... உந்த நாகதஅ இற்குள் குழப்பம் விளைவிப்பவர்கள் மேல், நாகதஅ இன் தலைமைச்செயலகமாக "றோ" வாக இயங்கும், மேஜர் ஜெனரல் சங்கீதன் தலைமையிலான வீராதி வீரர்கள், எப்போது இராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள்???? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

... உந்த நாகதஅ இற்குள் குழப்பம் விளைவிப்பவர்கள் மேல், நாகதஅ இன் தலைமைச்செயலகமாக "றோ" வாக இயங்கும், மேஜர் ஜெனரல் சங்கீதன் தலைமையிலான வீராதி வீரர்கள், எப்போது இராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள்???? :icon_idea:

நீங்கள்.. நாகதஅ விடம் ஏதேனும் எதிர்பார்த்து தராமல் விட்டிட்டினமோ..??! இல்ல... அது தொடங்கின காலம் தொட்டு.. ஒரு மாதிரியாவே திரியுறீங்க.. பைத்தியம் பிடிச்ச கணக்கா..??!

அவங்க நல்லது செய்தாலும் உங்களுக்கு பொறுக்குதில்ல.. அவங்க ஏதேனும் பிழைவிட்டிட்டா.. அதையே தூக்கிக் கொண்டு.. காட்டிக் கொடுக்கிறதைச் செய்யுறீங்க.. நீங்கள் எல்லாம் இதனால் எதனை தமிழினத்திற்கு சாதிப்பதா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற கறுமத்தையாவது சொல்லி அல்லது எழுதித் தொலையுங்கப்பா..!

உங்களைப் போன்றதுகள் பேசாம டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. சுமந்திரன்.. சம்பந்தனோட இணைஞ்சா.. தயாமாஸ்டர்..கேபி.. கருணாக்கு அடுத்த வரிசையில சிறீலங்கா பார்ளிமென்ரில குந்தலாமே..! இஞ்ச இருந்து இவ்வளவு முக்கிறதுக்கு அது நல்லது..! (இப்படி எழுதிட்டம் என்றதுக்காக என்னை துரோகி என்றான்.. நல்லா சொல்லட்டும்.. என்று.. பில்டப் கொடுக்காம.. உதுகளால என்ன செய்ய முனையுறீங்க மக்களுக்கு என்று நினைச்சிக்கன்னாவே போதும்..!) :lol::D

Edited by nedukkalapoovan

big_skelleton.gifbig_skelleton.gifbig_skelleton.gifbig_skelleton.gif
  • தொடங்கியவர்

... உந்த நாகதஅ இற்குள் குழப்பம் விளைவிப்பவர்கள் மேல், நாகதஅ இன் தலைமைச்செயலகமாக "றோ" வாக இயங்கும், மேஜர் ஜெனரல் சங்கீதன் தலைமையிலான வீராதி வீரர்கள், எப்போது இராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார்கள்???? :icon_idea:

என்ன அண்ணா நீங்கள் அல்லக்கை சங்கீதனுக்கு மேஜர் ஜெனரல் ரேங்க் குடுக்கிரிங்கள்.

நாடு கடந்த தமிழீழ‌ அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.

...

..

.

நன்றி

ச.கவிராச்

வடகிழக்கு இலண்டன்

:lol::D

[media=]

ஒரே சிரிப்புச் சிரிப்பா வருகுது...... உதுக்குள்ள திரு ச.கவிராச் சார்பா சாம் எண்டவரும் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருக்கிறார்..... நா.க.த.அமைப்பில யார் இருக்கிறார்கள் யார் இல்லை எண்டதே தெரியாமல் கிடக்கு.....

நாடு கடந்த அரசுக்கு காசு போட்டு எமது பகுதியில் தேர்தல் நடாத்தினோம். மக்கள் தேர்ந்தெடுக்காத யரோ ஒருவர் பின்னர் எமது பகுதியின் பிரதினிதியாக நியமிக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டோம்.

அதற்குள் இவர்களின் `அமைச்சர்` அமைச்சு என்று காகித அறிக்கைகள். நடக்கும் போராட்டங்களைக் குழப்புவது, ஊடகங்களில் குழப்பம் விழைவிப்பது. எந்த வித போராட்டங்களையோ வேலைத் திட்டங்களையோ செய்யாது, பிறர் செய்யும் வேலைத் திட்டங்களில் தலையைக் காட்டி விட்டு ஊடக அறிக்கை விடுவது. இது தான் நா க அரசின் நிலை இங்கிலாந்தில்.

மற்றைய நாடுகளிலும் இதே நிலமை தான் போல் உள்ளது.

இனி நா க அரசு என்று யாரவது எங்கள் பகுதிக்கு வந்தால் துடைப்பம் கட்டை யால் தான் கிடைக்கும்.

... யாராவது கொஞ்சம் கவலைகளை புலத்தில் மறக்க வேண்டுமாயின் ... நாகதஅ வை நினையுங்கள் ... சிரிப்பு தானாக வரும் ... கொஞ்ச நேரமாவது ...!

உதுக்குள் இருந்து ஆட்டும் மனோ கும்பல், சர்வே கும்பல், செல்வின் கும்பல், ... கேபி ,,,சங்கீதன் தலைமையிலான வீராதி வீரர்கள், கும்பல்களை/குப்பைகளை முதலில் களையுங்கள்! ...

BTF,GTF, ஈ.த எல்லோரையும் அரவணையுங்கள், மற்றைய அமைப்புகளுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தில் வந்து ஏதாவது செய்யுங்கள் ...

நாதஅ விலும் பிரச்சினையா? பிளவா? ஐயோ என்ன குறூப்பா? கும்பலா? என்ன இங்கையுமா? வரே.....வா..... தமிழனா என்ன கொக்கா? நாங்கள் ஒன்றாய் சேர்ந்து இருந்திடுவமா? இல்லை எமக்கு மேலே இன்னொருவன் வரத்தான் விட்டுடுவமா? புடிச்சு இழுத்து விழுத்திடமாட்டம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.