Jump to content

கறுப்பு பணம்: பிரிட்டனில் கைதான தமிழர்களுக்கு பிணை

Recommended Posts

பிரிட்டனில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

கடந்த செப்டம்பரில் லண்டனின் செண்ட் பேங்க்ராஸ் சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை பிரிட்டனின் எல்லைப்புற பாதுகாப்பு நிறுவனப் போலிசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் பவுண்டுகள் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் தொடங்கின.
 
இதையடுத்து நடந்த விசாரணைகளில் சர்ரே பகுதியைச் சேர்ந்த வேபிரிட்ஜ் என்ற இடத்தில் வசிக்கும் 63 வயது தமிழர் துரைசாமி பத்மநாபன் மற்றும் ஹரோ பகுதியைச் சேர்ந்த 38 வயதான மயூரன் குகதாசன் ஆகிய இருவரும் குற்ற வழிகளில் சொத்து சேர்ப்பதை தடை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று பிரிட்டிஷ் எல்லைப்புற நிறுவன அறிக்கை ஒன்று கூறுகிறது.

பின்னர் இந்த இருவரும் ரெய்கேட்ஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, வரும் 12ம் தேதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
எதிர்வரும் 12ம் தேதியன்று, அதே நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் ஆஜராகவேண்டும்.
இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வேறு இருவர் மார்ச் முதல் தேதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2012/12/121207_blackmoneytamils.shtml

Link to comment
Share on other sites

தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் நிதி மோசடி தொடர்பில் கைது!

தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பிர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

ஐக்கிய இராஜ்யத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர், சுங்க வரித்திணைக்கள அதிகாரிகள், பல்வேறு பொலிஸ் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது துரை பத்மநாதன் உட்பட மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரெடிங்ரன், வேய்பிறிஜ், எப்சம், ஹரோ ஆகிய லண்டனின் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடிர் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நவம்பர் 30இல் இடம்பெற்ற இத்தேடுதல் வேட்டையின்போது வேய்பிறிஜ்; ரெவென்ஸ்குரொப்ற் றோட்டில் 63 வயதுடைய துரைசாமி பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மைன்ஹெட் றோட்; ஹரோவில் 38 வயதுடைய மயூரன் குகதாசன் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய மற்றுமொரு ஆண் ரெடிங்ரனிலும் 33 வயதுடைய பெண் ஹம்ரன் ஹில் என்ற இடத்தில் உள்ள வர்த்தக முகவரியில் வைத்தும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு ஆவணங்களும், மோபைல் போன்கள், கணணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இவையும் பரிசோதணைக்கும் ஆய்வுக்கும் உட்பட்டு உள்ளது என்றும் கிரிமினல் மற்றும் நிதி விசாரணைகளுக்கு பொறுப்பான எல்லை பாதுகாப்புப் பிரிவின் துணை இயக்குநர் பீற்றர் அவ்ரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவொரு குழப்பமான சிக்கலான நிதி விசாரணை என்றும் பல மில்லியன் பவுண்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்ரம்பரில் சென் பன்கிரியஸ் சர்வதேச ரெயில் நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து £300,000 பணத்தை எல்லை காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய கைதுக்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் துரை பத்மநாதன், மயூரன் குகதாசன் இருவர் மீதும் குற்றப் பொருட்களை மறைத்த, மறுவடிவமைத்த, பரிமற்றம் செய்த, கைமாற்றிய, இல்லாமற் செய்த குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் குற்றச் சட்டம் 2002 இன் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்விருவரும் டிசம்பர் 1இல் ரெட்ஹில் மஜிஸ்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 12இல் நீதிமன்ற விசாரணை வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மற்றைய ஆணும் பெண்ணும் மார்ச் 1 வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கோல்ட் குவஸ்ற் நிறுவனர் விஜய் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது பற்றியும் விஜய் ஈஸ்வரனுக்கும் தீபம் தொலைக்காட்சிக்கும் இருந்த நெருக்கத்தை தேசம்நெற் வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செய்திக்காக துரை பத்மநாதன் தேசம்நெற் இணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக எச்சரிக்கை கடிதமும் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thesamnet.co.uk/?p=42192

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சிக்கு கட்டிய சந்தாப் பணமாக இருக்கும். அல்லது... இலங்கை அரசு, தீபம் தொலைக்காட்சியை கைக்குள் போட, கொடுத்த பணமோ... என்றும், சந்தேகமாய் இருக்குது.

Link to comment
Share on other sites

http://www.thisislocallondon.co.uk/news/10085775.Two_charged_in_multimillion_pound_fraud_investigation/

Two charged in multimillion pound fraud investigation

Two people have appeared in court charged with being part of an alleged multimillion pound money laundering network.

Three men and one woman were arrested after UK Border Agency officers raided properties in Teddington, Weybridge, Epsom and Harrow on Friday, November 30.
 
They also raided business addresses in Hampton Hill and London Docklands, after it was suspected that a company was used to launder criminal cash and transport it illegally across international borders.
 
The investigation began after Border Force officers at St Pancras international station seized about £300,000 in cash from a passenger in September last year.

Peter Avery, assistant director of Border Force Criminal and Financial Investigations, said: “This has been a complex financial investigation into allegations that millions of pounds of criminal money have been laundered.
 
“In addition to making these arrests we have seized documents, mobile phones and computers, and they will now be analysed as part of our investigation.”
 
Thuraisamy Pathmanabhan, 63, of Ravenscroft Road, in Weybridge, and Mayuran Kuhathasan, 38, of Minehead Road, Harrow, have been charged with conspiracy to conceal, disguise, convert, transfer and remove criminal property.
They appeared at Reigate Magistrates’ Court on Saturday, December 1, where they were bailed until Wednesday, December 12, for a committal hearing at the same court.

A 45-year-old man was arrested in Teddington and a 33-year-old-woman was arrested at a business address in Hampton Hill. Both were released on bail until March 1, next year.

Link to comment
Share on other sites

தொலைக்காட்சிக்கு கட்டிய சந்தாப் பணமாக இருக்கும். அல்லது... இலங்கை அரசு, தீபம் தொலைக்காட்சியை கைக்குள் போட, கொடுத்த பணமோ... என்றும், சந்தேகமாய் இருக்குது.

கனடாவில் நடக்க இருந்த இளையராஜா நிகழ்ச்சியில் கூட இவ்வாறான ஒரு கருப்பு பணமே பின்னணியில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் நிதி மோசடி தொடர்பில் கைது!

தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பிர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

ஐக்கிய இராஜ்யத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர், சுங்க வரித்திணைக்கள அதிகாரிகள், பல்வேறு பொலிஸ் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது துரை பத்மநாதன் உட்பட மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரெடிங்ரன், வேய்பிறிஜ், எப்சம், ஹரோ ஆகிய லண்டனின் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடிர் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நவம்பர் 30இல் இடம்பெற்ற இத்தேடுதல் வேட்டையின்போது வேய்பிறிஜ்; ரெவென்ஸ்குரொப்ற் றோட்டில் 63 வயதுடைய துரைசாமி பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மைன்ஹெட் றோட்; ஹரோவில் 38 வயதுடைய மயூரன் குகதாசன் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய மற்றுமொரு ஆண் ரெடிங்ரனிலும் 33 வயதுடைய பெண் ஹம்ரன் ஹில் என்ற இடத்தில் உள்ள வர்த்தக முகவரியில் வைத்தும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு ஆவணங்களும், மோபைல் போன்கள், கணணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இவையும் பரிசோதணைக்கும் ஆய்வுக்கும் உட்பட்டு உள்ளது என்றும் கிரிமினல் மற்றும் நிதி விசாரணைகளுக்கு பொறுப்பான எல்லை பாதுகாப்புப் பிரிவின் துணை இயக்குநர் பீற்றர் அவ்ரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவொரு குழப்பமான சிக்கலான நிதி விசாரணை என்றும் பல மில்லியன் பவுண்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்ரம்பரில் சென் பன்கிரியஸ் சர்வதேச ரெயில் நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து £300,000 பணத்தை எல்லை காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய கைதுக்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் துரை பத்மநாதன், மயூரன் குகதாசன் இருவர் மீதும் குற்றப் பொருட்களை மறைத்த, மறுவடிவமைத்த, பரிமற்றம் செய்த, கைமாற்றிய, இல்லாமற் செய்த குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் குற்றச் சட்டம் 2002 இன் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்விருவரும் டிசம்பர் 1இல் ரெட்ஹில் மஜிஸ்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 12இல் நீதிமன்ற விசாரணை வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மற்றைய ஆணும் பெண்ணும் மார்ச் 1 வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கோல்ட் குவஸ்ற் நிறுவனர் விஜய் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது பற்றியும் விஜய் ஈஸ்வரனுக்கும் தீபம் தொலைக்காட்சிக்கும் இருந்த நெருக்கத்தை தேசம்நெற் வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செய்திக்காக துரை பத்மநாதன் தேசம்நெற் இணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக எச்சரிக்கை கடிதமும் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thesamnet.co.uk/?p=42192

எப்போதிலிருந்து அகூதாவிற்கு தேசத்தில் நம்பிக்கை வந்தது?[உங்களுக்குத் தேவையான செய்தி என்டால் அது எந்த மாற்றுக் கருத்து இணையத்தில் வந்தாலும் எடுத்துக் கொண்டு வந்து போடுவீங்கள் இதே நேரம் தேவையில்லாத செய்தி என்டால் மாற்றுக் கருத்து இணையத்தில் இருந்து செய்தியை இணைக்க வேண்டாம் என கூப்பாடு போடுவீங்கள்.]...தேசத்தை யாழில் தடை செய்யவில்லையா?

அக்கா,

இந்த விடயம் சம்பந்தமாக தேடியபொழுது இந்த ஒரு செய்திதான் வந்தது. உங்களால் முடிந்தால் வேறு செய்திகள் இருந்தால் இணைத்துவிடுங்கள்.

கருப்புப்பணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு வாசிகர்களுக்கு வரட்டுமே என்றுதான். மற்றும் படி இணையத்தளத்தை விளம்பரப்படுத்தவோ இல்லை நியாயப்படுத்தவோ இல்லை.

நன்றிகள்.

நீங்கள் இந்த இணையத்தை விளம்பரபடுத்துகிறீர்கள் என  நான் சொல்லவில்லை...நீங்கள் எல்லாம் கடும் ஆதரவாளார்கள் இப்படியான மாற்றுக் கருத்து இணையத்தில் வந்த செய்தியை  எப்படி நம்பிக் கொண்டு வந்து போட்டீர்கள் என்று தான் கேட்டேன்.

இதே மாதிரி தேசியம் சம்மந்தமான செய்திகள் தேசத்தில் வந்தால் மக்களுக்கு விழிப்பூட்ட என சொல்லி யாழில் கொண்டு வந்து போடலாமோ?

Link to comment
Share on other sites

இதே மாதிரி தேசியம் சம்மந்தமான செய்திகள் தேசத்தில் வந்தால் மக்களுக்கு விழிப்பூட்ட என சொல்லி யாழில் கொண்டு வந்து போடலாமோ?

அதை நீங்கள் என்னிடம் கேட்க கூடாது, நான் நிர்வாகம் அல்ல.

நீங்கள் இந்த இணையத்தை விளம்பரபடுத்துகிறீர்கள் என  நான் சொல்லவில்லை...நீங்கள் எல்லாம் கடும் ஆதரவாளார்கள் இப்படியான மாற்றுக் கருத்து இணையத்தில் வந்த செய்தியை  எப்படி நம்பிக் கொண்டு வந்து போட்டீர்கள் என்று தான் கேட்டேன்.

முதல் செய்தி பி.பி.சி. - மிகவும் நம்பக்கூடிய செய்தி தளம்.

ஆங்கிலத்திலும் ஒன்றை இணைத்தேன்.

இதையும் இணைத்தேன் - காரணம் இது மட்டுமே பல நூறு ஊடகங்கள் இருந்தும் இந்த விடயம் பற்றி இருந்தமையால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் விளங்காத.... ஜேர்மன், பிரான்ஸ், நெதர்லான்ட், இத்தாலி, இந்தியா, ஈழ மக்களுக்காக மூலச் செய்தியை... இணைத்த பின், ரதி குறிப்பிட்ட செய்தியை... அகூதா இணைத்ததில், தவறில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.