Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த களப்பிரர்கள்? பாகம் 03 (களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்)

Featured Replies

களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்

 

800px-Old_Tamil_Inscription.jpg

 

களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது

 
  1. தமிழ் எழுத்துரு மாற்றம்
  2. இலக்கியத் தோன்றல்கள்
தமிழ் பிராமி (தமிழி கி.மு 5 - கி,பி 3 ம் நூற்றாண்டு) எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாற்று வடிவம் பெற்றது களப்பிரர்கள் காலத்தில் தான். அதாவது தமிழ் பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருக்கும். இந்த வட்டெழுத்துகளிலிருந்து தான் நாம் தற்பொழுது பயன் படுத்தும் நவீன  வடிவத்தை தமிழ் எழுத்து முறை பெற்றது என்று கூறுவர். ஆனால் தற்ப்பொழுதுள்ள தமிழ் நவீன எழுத்து முறை வட்டெழுத்துகளிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல அவை தனியாக சோழ மற்றும் பல்லவர்களால் வட்டெழுத்துக்கு பதில் கொண்டுவரப்பட்டது என்றும் கூறுவார்.
 
கோடு கோடான பிராமி எழுத்துகள் கற்க்களில் செதுக்க ஏதுவாக இருப்பதை கவனிக்கவும். பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருப்பதால் அவை ஓலைச் சுவடிகளில் எழுத கடினமாதலால் (கிழிந்து விடுகின்ற) வட்டெழுத்துகளாக தோற்றம் பெற்றன.
 
தமிழ் பிராமி எழுத்து- தமிழ் என்பதை பிராமியில் இப்படித்தான் எழுத வேண்டும்:
 
cz6u.png
தமிழ் எழுத்து முறை வரலாறு :
 
3q4e.jpg
 
 
வட்டெழுத்து வளர்ந்த விதம் :
 
ol3s.gif
 
 
 
இப்போது நாம் வழங்கிக்கொண்டிருக்கும்  பெரும்பான்மையான இலக்கியங்கள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களே ஆகும்.  
 
இன்று நாம் உலகப் பொது மறையாக கூறிக்கொண்டிருக்கும் திருக்குறள் கூட களப்பிரர் காலத்தில் தோன்றிய முக்கியமான நூல் ஆகும். ஆனால் அதற்க்கு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடுவர். ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தான் திருக்குறளுக்கு உண்மையான வடிவம் பெற்றது.
 
கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி, முது மொழிக் காஞ்சி, விளக்கத்தார் உத்து (கூத்து நூல்), நரி விருத்தம், எலி விருத்தம், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள் மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. 
 
அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது தான்.
 
களப்பிரர்கள் காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கியங்களில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.
 
ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.
 
ஆனால் இதில் உள்ள ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களில் களப்பிரர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் களப்பிரர்கள் காலத்திற்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன...
 
ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்கள் பல இருந்தாலும் களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இந்த நூல்களை களப்பிரர்கள் ஆதரித்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயம் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் களப்பிரர்களால் எப்படி தமிழகத்தை முன்னூறு ஆண்டுகள் ஆண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. களப்பிரர்கள் காலத்தில் பல சமூக மாற்றம் ஏற்ப்பட்டதாக கூறுகின்றனர். அதில் விவசாய குடிகளின் நிலை மற்றும் அவர்களின் செல்வாக்கு உயர்ந்ததாகவும், அதே சமயம் பிராமணர்களின் செல்வாக்கு குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல தானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். 
 
திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் கூட சமண சமயத்தை சார்ந்தவர் என்ற வாதமும் களப்பிரர்கள் காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு முக்கியமானது என்பதை காட்டுகிறது. மேலும் அக்காலங்களில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி கூட பவுத்த முனிவரால் இயற்றப்பட்டது என்ற வாதமும் களப்பிரர்கள் ஆதரித்திருப்பர் என்பதையே காட்டுகிறது.
 
ஆனால் களப்பிரர்கள் இதனை ஆதரித்தனர் அல்லது முற்றாக எதிர்த்தனர் என்பதற்கான முறையான சான்றுகள் ஏதும் இல்லை. பிற்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம்.
 
களப்பிரர்களுக்கும் பிராமினர்களுக்கும் இடையில் என்ன நடந்திருக்கலாம், அவர்கள் ஏன் முற்றாக அழிக்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அடுத்து வரும் தொடர்களில் பார்க்கலாம் .
 
தொடரும்

 

நன்றி : இரவின் புன்நகைக்காக வெற்றிவேல்

 

http://iravinpunnagai.blogspot.com/2013/09/blog-post_19.html

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும்.

முற்கால மற்றும் பிற்கால செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவை,

01. இளையன்புதூர் செப்பேடுகள்

 

Ilayanpudur_copper_plates.jpg

02. வேள்விக்குடிச் செப்பேடுகள்
03. திருவரமங்கலத்துச் செப்பேடுகள்

 

Srivaramangalam_grant.jpg
04. சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை)
05. சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
06. பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்
07. சிவகாசிச் செப்பேடுகள்

மேற்கூறப்பட்ட 7 செப்பேடுகளையும் வைத்து பாண்டியர் ஆட்சிக்காலங்கள் (வரிசை) கணிக்கப்பட்டன. அவை,

இளையன்புதூர் செப்பேடுகள் :


செழியன் சேந்தன்
அரிகேசரி

வேள்விக்குடி செப்பேடுகள் :


பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - சங்ககாலம். இதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து,

கடுங்கோன்
அவனி சூளாமணி
செழியன் சேந்தன்
அரிகேசரி
கோச்சடையான்
முதலாம் இராசசிம்மன்
பராந்தகன்

சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை) :

ஜடிலவர்மன்
அரிகேசரி

சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை) :

ஜடிலன்
இரண்டாம் இராசசிம்மன்
வரகுணன்
சீவல்லபன்
இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்
மூன்றாம் இராசசிம்மன்

திருவரமங்கலம் செப்பேடுகள் :


மாறவர்மன்
நெடுஞ்சடையன்

தளவாய்புரம் செப்பேடுகள்
:

பராந்தகன் கோச்சடையான்
சீவல்லபன்
இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்

சிவகாசி செப்பேடுகள் :



தீவிர கோபன்
சீவல்லபன்
மானகுலாசலன்
மானாபரனன்
சுந்தர பாண்டியன் மற்றும் அவன் இளையவன் வீர பாண்டியன்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பகிர்வுக்கு நன்றி கோ. அரிய கருத்துக்களை தொகுத்து தருகிறீர்கள்.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலில் களப்பிரர்கள் தமிழர்களே என்று நிறுவியுள்ளார். அதைப் பற்றிய ஆக்கம் கிடைத்தால் இணையுங்கள்.

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி கோ. அரிய கருத்துக்களை தொகுத்து தருகிறீர்கள்.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலில் களப்பிரர்கள் தமிழர்களே என்று நிறுவியுள்ளார். அதைப் பற்றிய ஆக்கம் கிடைத்தால் இணையுங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிறையனாரே . படிப்பகம் இணையத்தில் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூல் இலவசமாக பீடிப் போர்மற்றில் தரவேற்றப் பட்டுள்ளது .  ஆனால் அதைப் பிரதி செய்ய முடியாதுள்ளது . உங்களுக்காக அதன் இணைப்பைத் தருகின்றேன் .

 

 

http://www.padippakam.com/document/M_Books/m000191.pdf

கோடான கோடி நன்றிகள் கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.